Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பிரசாரத்திற்கு சிறுவர்களை பயன்படுத்தினால் அரசியல் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும்

Posted:

மும்பை : 'தேர்தல் பிரசாரத்திற்கோ அல்லது தேர்தல் தொடர்பான பணிகளுக்கோ, சிறுவர்களை, அரசியல் கட்சிகள் ஈடுபடுத்தினால், அந்தக் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மும்பை உயர் நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: அரசியல் கட்சிகளின் பதிவை, தேர்தல் ஆணையம் ரத்து செய்ய முடியாது. ஆனால், சட்டவிதிகளை மீறி செயல்படும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை, தேர்தல் ஆணையம் முடக்க முடியும்; கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியும்.எனவே, தேர்தல் ...

ஒரு இஞ்ச் நிலம் கூட விட்டு கொடுக்க மாட்டோம் : முதல்வர் சித்தராமையா காட்டம்

Posted:

பெங்களூரு : ''மகாராஷ்டிராவுக்கு, ஒரு இஞ்ச் நிலத்தை கூட, விட்டுக்கொடுக்க மாட்டோம்,'' என, முதல்வர் சித்தராமையா காட்டமாக கூறினார். கர்நாடகம் - -மகாராஷ்டிரா எல்லை பிரச்னை வழக்கு தொடர்பாக, சாட்சி ஆதாரங்களை விசாரிக்க, கடந்த, 12ம் தேதி, உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை, மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி, மனு தாக்கல் செய்ய, கர்நாடகா அரசு தீர்மானித்துள்ளது.எல்லை பிரச்னை : கர்நாடகம் - -மகாராஷ்டிரா எல்லை பிரச்னை தொடர்பாக, உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் அடிப்படையில், கர்நாடகா அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றி, எழுத்தாளர்கள், ...

செயல்படாத அரசு நிர்வாகம்: முடுக்கி விடுவாரா முதல்வர்?

Posted:

தற்போதைய தமிழக அரசு நிர்வாகத்தை இயக்குவது, முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வமா, சிறையில் இருக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவா அல்லது அரசுத் துறை உயர்மட்ட அதிகாரிகளா என, தெரியாமல், கடைநிலை அரசு ஊழியர்கள் திணறி வருவதாக கூறப்படுகிறது. இதனால், தமிழக அரசு நிர்வாகம் செயல்படாமல் ஸ்தம்பித்து நிற்கிறது.கோரிக்கை:சொத்து குவிப்பு வழக்கில், ஜெ., குற்றவாளி என, தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த முதல்வர் பதவி பறிபோனது.இதையடுத்து, தமிழக நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், முதல் அமைச்சராக பதவியேற்றுக் ...

இணையதள வசதி இந்திய கிராமங்களில் இலவசம்: வழங்க முன்வருகிறார் பேஸ்புக் தலைவர்

Posted:

புதுடில்லி:இந்தியா கிராமங்களுக்கு இலவசமாக இணையதள சேவை வழங்க, பேஸ்புக் சமூக தொடர்பு இணையதளத்தின் நிறுவனர்களில் முக்கியமானவரான மார்க் சுக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அதிகாரிகளுடன் நடத்தியுள்ள பேச்சில், இதற்கான ஆலோசனை நடைபெற்றதாகவும், விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.பேஸ்புக் என்ற பெயரில், இலவச, சமூக தொடர்பு இணையதளத்தை துவக்கி நடத்தி வருகிறார், 30 வயதே ஆன அமெரிக்கர் மார்க் சுக்கர்பெர்க். அந்நாட்டின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரர் இவர். ...

பவானிசிங் மீது கருணாநிதி பாய்ச்சல்

Posted:

சென்னை: 'ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங், காலையில் எழுதிக் கொடுத்ததற்கும், மாலையில் வாய்மொழியாக கூறியதற்கும் இடையில், நடந்தது என்ன?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளர்.அவரது அறிக்கை:ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், சிறப்பாக வாதிட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தந்ததாக மார்த்தட்டி கொள்ளும் பவானி சிங்கை பற்றி, நீதிபதி குன்ஹா, தன் தீர்ப்பில், 'அரசு வழக்கறிஞர் பவானி சிங், அரசு சாட்சிகளின் முதல் விசாரணையை மட்டும் படித்து விட்டு, தன் வாதங்களை முடித்து விட்டார்' என, ...

குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கு நோபல் பரிசு: பாகிஸ்தான் சிறுமி மலாலாவுடன் பகிர்ந்து கொள்கிறார்

Posted:

ஆஸ்லோ: இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் ராணுவங்களுக்கு இடையே எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவும் நேரத்தில், இரு நாடுகளையும், அமைதிக்கான நோபல் பரிசு மூலம் ஒன்றிணைத்துள்ளது, நார்வே நாட்டின் நோபல் பரிசு கமிட்டி. இந்தியரான, கைலாஷ் சத்யார்த்தி என்ற, 60 வயது சமூகத் தொண்டருக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த, 17 வயது சிறுமி மலாலாவுக்கும் இணைத்து வழங்கப்பட்ட இந்த விருது, இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் அமைந்து உள்ளது.சுவீடன் நாட்டின் கோடீஸ்வரர் ஆல்பிரட் நோபல் பெயரில் வழங்கப்படும், உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, இந்த முறை, இந்திய துணைக் ...

இந்திய வீரர்களின் அதிரடியால் பணிந்தது பாக்.,: எல்லையில் தாக்குதலை குறைத்தது

Posted:

ஜம்மு:கடந்த ஒன்பது நாட்களாக எல்லை பகுதியில் வாலாட்டி வந்த பாக்., ராணுவம், இந்திய வீரர்களின் அதிரடி தாக்குதலாலும், பிரதமர் நரேந்திர மோடியின் எச்சரிக்கையாலும், நேற்று அடக்கி வாசித்தது. எல்லையில், தன் தாக்குதலை பாக்., ராணுவம் குறைத்து கொண்டது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், எல்லை பகுதியில் கடந்த சில நாட்களாக, பாக்., ராணுவ வீரர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். எட்டு பேர் பலி:குறிப்பாக, இந்திய எல்லையோர பகுதிகளில் அமைந்துள்ள, 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் மீது, ...

ஜெயலலிதா ஜாமின் வழக்கை திசை திருப்ப சதி?சிறை மாற்ற வழக்கு குறித்து அ.தி.மு.க., கண்டனம்

Posted:

சென்னை : 'ஜெயலலிதா ஜாமின் வழக்கை திசை திருப்ப, பெங்களூரு சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை, தமிழகத்திற்கு மாற்ற வேண்டும் என, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கும், ஜெயலலிதாவிற்கும், எந்த சம்பந்தமும் இல்லை. இது எதிரிகளின் சதிச் செயல். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்' என, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சரும், அ.தி.மு.க., தலைமை நிலையச் செயலருமான, பழனியப்பன் அறிவித்து உள்ளார்.சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை ஜாமினில், வெளியே கொண்டு வர, ...

சுனந்தா மரணத்துக்கு விஷமே காரணம்: எய்ம்ஸ் அறிக்கையால் மீண்டும் சர்ச்சை

Posted:

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பாக, மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ள, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் விசாரணை குழு, 'சுனந்தாவின் மரணத்துக்கு, விஷமே காரணம்' என, தெரிவித்துள்ளது.காங்., - எம்.பி.,: முன்னாள் மத்திய அமைச்சரும், திருவனந்தபுரம் தொகுதி யின் காங்., - எம்.பி.,யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஜனவரியில், டில்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.முதற்கட்ட விசாரணையில், ...

சசிகலா உள்ளிட்ட மூவரும் ஜாமின் மனு தாக்கல்: வயது, உடல்நிலையை காரணம் கூறி கோரிக்கை

Posted:

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேர் சார்பிலும், ஜாமின் கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஜெயலலிதா கூறியிருந்த அதே வயது மற்றும் உடல்நிலை ஆகியவற்றையே, இவர்களும் தங்களின் மனுவில் காரணங்களாக குறிப்பிட்டுள்ளனர்.சொத்துக்குவிப்பு வழக்கில், அ.தி.மு.க,, பொதுச் செயலர் ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா, அவரின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட், நான்காண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.நிராகரிப்பு:இதையடுத்து, கர்நாடக மாநில ஐகோர்ட்டில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ...

வன்முறையை கைவிட பிரதமர் மோடி வலியுறுத்தல்

Posted:

மும்பை:''நம் நாட்டில் உள்ள இளைஞர்கள், வன்முறை என்ற தவறான பாதைக்கு சென்று விடக் கூடாது. துப்பாக்கிக்கு பதிலாக, கலப்பையை கையில் எடுத்து, தங்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.மகாராஷ்டிர மாநிலத்தில், வரும், 15ல், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், பா.,ஜ., சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., ஆகிய கட்சிகள், தனித் தனியே போட்டியிடுகின்றன.இந்த தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பிரம்மபுரி என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது: ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™