Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கலப்புத் திருமணம் செய்த பெண் மர்ம மரணம்: விசாரிக்க போலீஸாருக்கு இடைக்காலத் தடை

Posted: 10 Oct 2014 01:31 PM PDT

கலப்புத் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக தொடர்ந்து விசாரணை செய்வதற்கு போலீஸாருக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாலை விபத்துகளால் 2.31 லட்சம் பேர் உயிரிழப்பு

Posted: 10 Oct 2014 01:31 PM PDT

சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க, மதுபோதை, கைப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று "தோழன்' எனும் தன்னார்வ அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலக முட்டை தினம்: நாமக்கல்லில் 15,000 முட்டைகள் மக்களுக்கு இலவச விநியோகம்

Posted: 10 Oct 2014 01:30 PM PDT

உலக முட்டை தினத்தையொட்டி, முட்டை சத்தான, சைவ உணவு என்பதை பொதுமக்களிடையே விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல்லில் 15,000 அவித்த முட்டைகள் பொது இடங்களில் விநியோகிக்கப்பட்டன.

கண்ணன் எம்.பி.க்கு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ்

Posted: 10 Oct 2014 01:30 PM PDT

கடந்த மக்க ளவைத் தேர்தலில், ஏன் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படவில்லை என விளக்கம் கேட்டு, கண்ணன் எம்.பி.க்கு காங்கிரஸ் கட்சியின் மேலிடம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஜனவரி 2-ஆவது வாரத்தில் மெட்ரோ ரயில் ஓடும்

Posted: 10 Oct 2014 01:29 PM PDT

சென்னை மெட்ரோ ரயிலின் முதலாவது போக்குவரத்து அடுத்த ஆண்டு, ஜனவரி 2-ஆவது வாரத்தில் தொடங்கப்படும் என்று மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்டமாக, கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

மேற்கு வங்கத்தில் படகு விபத்து: தொழிலாளியைக் காணவில்லை

Posted: 10 Oct 2014 01:19 PM PDT

மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி ஆற்றில் சணல் ஆலைத் தொழிலாளர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தொழிலாளி ஒருவரைக் காணவில்லை.

ஹெராயின் கடத்தல்: பள்ளி மாணவர் கைது

Posted: 10 Oct 2014 01:19 PM PDT

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள லால்கோலா பகுதியில் ரூ. 3 கோடி மதிப்புள்ள ஹெராயினைக் கடத்தியதாக பள்ளி மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

தில்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 6 பேர் சாவு

Posted: 10 Oct 2014 01:18 PM PDT

தில்லியில் ஜசோலா விஹார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள், 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் தாக்குதல் விவகாரம்: ராகுலுக்கு அமித் ஷா பதிலடி

Posted: 10 Oct 2014 01:18 PM PDT

பாகிஸ்தானின் தாக்குதல்களைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ள நிலையில்,

வதேரா நிலப் பரிவர்த்தனை விவகாரம்: மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

Posted: 10 Oct 2014 01:17 PM PDT

ராபர்ட் வதேரா நிலப் பரிவர்த்தனை குறித்து அவதூறான குற்றச்சாட்டுகளைக் கூறியதாக பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை புகார் அளித்தது.

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் தரும் நாடுகளைத் தனிமைப்படுத்த வேண்டும்: மோடி அழைப்பு

Posted: 10 Oct 2014 01:16 PM PDT

பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் தரும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்: தாகூர் முதல் கைலாஷ் வரை...

Posted: 10 Oct 2014 01:14 PM PDT

மகாகவி ரவீந்திரநாத் தாகூருக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1913-இல் வழங்கப்பட்டது. இதுவே இந்தியர் ஒருவருக்குக் கிடைத்த முதல் நோபல் பரிசு.

சாகசத்தில் ஈடுபடுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: இந்தியா

Posted: 10 Oct 2014 01:11 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி, சர்வதேச எல்லைப் பகுதியில் சாகசத்தில் ஈடுபடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

எல்லையில் தாக்குதல் நடத்துவதை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும்: பாகிஸ்தான்

Posted: 10 Oct 2014 01:11 PM PDT

எல்லையில் தாக்குதல் நடத்துவதை இந்தியா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.

பெண் டாக்டர் கொலை வழக்கு: குற்றவாளிகளைப் பிடிக்க ஏடிஎஸ்பி தலைமையில் தனிப் படை

Posted: 10 Oct 2014 12:57 PM PDT

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பெண் டாக்டர் புதன்கிழமை மாலை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் பிடிக்க காவல் துறை ஏடிஎஸ்பி தலைமையில் 3 டிஎஸ்பிக்கள், 7 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிறையிலுள்ள 8 ராமேசுவரம் மீனவர்களுக்கு அக். 24 வரை காவல் நீட்டிப்பு

Posted: 10 Oct 2014 12:57 PM PDT

எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டுச் சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 8 பேருக்கு அக்டோபர் 24-ஆம் தேதி வரை சிறைக் காவலை நீட்டித்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திம்பம் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்தது

Posted: 10 Oct 2014 12:56 PM PDT

திம்பம் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்ததால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சென்னையில் இன்று என்.எல்.சி. தலைவருடன் பேச்சுவார்த்தை

Posted: 10 Oct 2014 12:55 PM PDT

ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், சென்னையில் என்.எல்.சி. தலைவர் பி.சுரேந்திர மோகனை சனிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்

Posted: 10 Oct 2014 12:54 PM PDT

தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

ஆசிரியர்கள் பற்றாக்குறை: மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

Posted: 10 Oct 2014 12:52 PM PDT

காரைக்கால் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாததை கண்டித்து, மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ரூ.22 லட்சம் கையாடல்: செயலர், விற்பனையாளர் கைது

Posted: 10 Oct 2014 12:52 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ரூ. 22.82 லட்சத்தை கையாடல் செய்ததாக 2 பேரை தஞ்சாவூர் வணிக குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்

Posted: 10 Oct 2014 12:52 PM PDT

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு உற்பத்தியாகாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

திருவாரூர் மாவட்டத்தில் நாளை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

Posted: 10 Oct 2014 12:52 PM PDT

 திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (அக்.12) காலை 10 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னையில் நியாய விலைக் கடைப் பணியாளர்கள் மாநாடு

Posted: 10 Oct 2014 12:51 PM PDT

கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் செயல்படுத்தக் கோரி, கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்க மாநாடு சென்னையில் நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

காயங்களுடன் பெண் சடலம்

Posted: 10 Oct 2014 12:51 PM PDT

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த மணி கிராமம் பகுதியில் முள் புதரில் வெள்ளிக்கிழமை காலை ரத்த காயங்களுடன், அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருவெண்காடு காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

Posted: 10 Oct 2014 12:51 PM PDT

சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அக். 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்தார்.

அக்.12-ல் ஊரகதிறனாய்வுத் தேர்வு: 654 பேர் எழுதுகின்றனர்

Posted: 10 Oct 2014 12:51 PM PDT

வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வை கரூர் மாவட்டத்தில் 654 பேர் எழுதுகின்றனர்.

போனஸ் வழங்கக் கோரி தீபாவளியன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Posted: 10 Oct 2014 12:51 PM PDT

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் அக்டோபர் 21-ம் தேதி இரவு முதல் அக்டோபர் 22-ம் தேதி இரவு வரை தீபாவளி தினத்தில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

கொடிக்கம்பம் சேதம்: இரு கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு

Posted: 10 Oct 2014 12:51 PM PDT

கரூர் அருகே கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரு கட்சி நிர்வாகிகள் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் நாளை கிராமசபைக் கூட்டம்

Posted: 10 Oct 2014 12:50 PM PDT

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை (அக். 12) கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

டெங்கு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்: ஆட்சியர்

Posted: 10 Oct 2014 12:50 PM PDT

கரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

பெண்ணிடம் 3 பவுன் பறிப்பு

Posted: 10 Oct 2014 12:50 PM PDT

தோகைமலை பேருந்து நிலையத்தில் பெண்ணிடமிருந்து 3 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கூட்டுறவுச் சங்க முறைகேடு: தனி அதிகாரி உள்ளிட்ட 2 பேருக்கு 5 ஆண்டு சிறை

Posted: 10 Oct 2014 12:49 PM PDT

கூட்டுறவு கட்டடச் சங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், தனி அதிகாரிக்கும், முகவருக்கும் தலா 5 ஆண்டுகள், 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து, பண்ருட்டி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

அக்.12-ல் மாநில அளவிலானகைப்பந்து போட்டிக்குகரூர் மாவட்ட வீரர்,வீராங்கனைகள் தேர்வு

Posted: 10 Oct 2014 12:49 PM PDT

வரும் 12-ம் தேதி கரூரில் மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெற உள்ளது.

பஞ்சமி நில மீட்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted: 10 Oct 2014 12:49 PM PDT

பஞ்சமி நில போராளிகள் ஜான்தாமஸ் - ஏழுமலையான் ஆகியோரின் 20 ஆம் ஆண்டு நினைவாக, பஞ்சமி நில மீட்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் குளித்தலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காளியம்மன் கோயிலில் அதிமுகவினர் வழிபாடு

Posted: 10 Oct 2014 12:49 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி, கரூர் தாந்தோன்றிமலை ஊரணி காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூரில் நில உரிமை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Oct 2014 12:48 PM PDT

கரூரில் நில உரிமை கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று உணவுப்பொருள் குறைகேட்புக் கூட்டம்

Posted: 10 Oct 2014 12:48 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் குறைகேட்பு நாள் கூட்டம் சனிக்கிழமை (அக். 11) 3 இடங்களில் நடைபெறுகிறது.

அதிகாரிகள் - பொதுமக்கள் இடையே தள்ளு முள்ளு:பொக்லைன் இயந்திரத்தின் கண்ணாடி உடைப்பு

Posted: 10 Oct 2014 12:48 PM PDT

அரியலூர் இருசுக்குட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் பொக்லைன் இயந்திரத்தின் கண்

பேருந்தில் பெண்ணிடம் ரூ.1.99 லட்சம் திருட்டு

Posted: 10 Oct 2014 12:47 PM PDT

அரியலூர் அருகே பேருந்தில் சென்ற பெண்ணிடமிருந்து ரூ. 1.99 லட்சம் வியாழக்கிழமை திருட்டுப்போனது. அரியலூர் மாவட்டம், நத்தவெளி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மனைவி அம்சவள்ளி (27). இவர் செம்பருத்தி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ளார்.

புதுவை அருகே பட்டாசுக் கிடங்கு வெடித்து ஒருவர் சாவு

Posted: 10 Oct 2014 12:47 PM PDT

புதுவை அருகே வெள்ளிக்கிழமை பட்டாசுக் கிடங்கு வெடித்துச் சிதறிய விபத்தில் ஒருவர் இறந்தார், 2 பேர் காயமடைந்தனர்.

அரியலூர் பெருமாள் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு யாகம்

Posted: 10 Oct 2014 12:47 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா விடுதலையாக வேண்டி, அரியலூர் ஒன்றிய அதிமுக சார்பில் அரியலூர் கோதண்டராமசாமி கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

கலை, இலக்கியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

Posted: 10 Oct 2014 12:47 PM PDT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கலை, இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வியாழக்கிழமை பரிசு வழங்கிப் பாராட்டினார்.

இளநிலை உதவியாளர்களை பணிவரன்முறை செய்ய வலியுறுத்தல்

Posted: 10 Oct 2014 12:47 PM PDT

அனைத்துத் துறைகளிலும் கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களை, உடனடியாக பணிவரன்முறை செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை கிராமசபைக் கூட்டம்

Posted: 10 Oct 2014 12:46 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (அக். 12) கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மும்பையில் நாளை தமிழிசை பிரசாரம்

Posted: 10 Oct 2014 12:46 PM PDT

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (அக்.12) அக்கட்சியின் தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பிரசாரம் செய்கிறார்.

அஞ்சல்தலைகள் கலாசார, ஒருமைப்பாட்டின் சின்னங்கள்

Posted: 10 Oct 2014 12:46 PM PDT

அஞ்சல் தலைகள் நமது நாட்டின் கலாசார, ஒருமைப்பாட்டின் சின்னங்கள் என்றார் தபால்தலை ஆர்வலர் பாலாசெல்வகுமார்.

புதுகையில் அக். 17-ல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

Posted: 10 Oct 2014 12:46 PM PDT

புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் திட்டங்களை துரிதமாக நிறைவேற்ற அறிவுறுத்தல்

Posted: 10 Oct 2014 12:46 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசின் திட்டங்களைத் துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என்றார் கண்காணிப்பு அலுவலர், தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அரசுச் செயலர் எம். வீரசண்முகமணி.

சாலையில் மாடு குறுக்கீடு: பிஎஸ்என்எல் ஊழியர் சாவு

Posted: 10 Oct 2014 12:45 PM PDT

புதுக்கோட்டை அருகே சாலையில் குறுக்கே வந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பிஎஸ்என்எல் ஊழியர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

அஞ்சல் அட்டைகளின் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தல்

Posted: 10 Oct 2014 12:45 PM PDT

அஞ்சல் அட்டை தட்டுப்பாட்டை நீக்க தபால் துறை அலுவலங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அறந்தாங்கி, பொன்னமராவதியில் அரசு போக்குவரத்துக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Oct 2014 12:45 PM PDT

பொன்னமராவதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழகத்தின் பல்வேறு சங்கங்கள் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு முகாம்

Posted: 10 Oct 2014 12:45 PM PDT

கந்தர்வகோட்டை அருகே கர்ப்பகால உணவுமுறை குறித்த சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கந்தர்வகோட்டை அருகேயுள்ள புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் நிறுவ

சோலார் மின்கம்பம் சாய்ந்ததில் 2 மாணவர்கள் காயம்

Posted: 10 Oct 2014 12:44 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெள்ளிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த 2 பள்ளி மாணவர்கள் மீது சோலார் மின்கம்பம் சாய்ந்ததில் அவர்கள் இருவரும் காயமடைந்தனர்.

தமிழ் வளர்ச்சித் துறை போட்டிகளில் வென்றவர்கள்

Posted: 10 Oct 2014 12:44 PM PDT

புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வென்ற மாணவ, மாணவிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:

"பெண்களுக்கு கல்வியும், ஆளுமைப் பண்பும் அவசியம்'

Posted: 10 Oct 2014 12:44 PM PDT

பெண்களுக்கு படிப்பறிவும், ஆளுமைப் பண்பும் அவசியம் என்றார் தஞ்சாவூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர் டி. மலர் வாலண்டினா. தஞ்சாவூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் சைல்டுலைன் 1098-செட் இந்தியா ஆகியவை இணைந்து நடத்திய, சர்வதேச பெண் குழந்தைகள் தினம்-2014 தஞ்சாவூர் கிறிஸ்துவ பெண்கள் மேல்ந

தமிழ்ப் பல்கலை.யில் செம்மரக் கன்றுகள் நடும் விழா

Posted: 10 Oct 2014 12:43 PM PDT

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மகளிர் விடுதி வளாகத்தில் 100 செம்மரக் கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுக்கூரில் 45.6 மி.மீ. மழை

Posted: 10 Oct 2014 12:43 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுக்கூரில் 45.6 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

மல்லிபட்டினத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Oct 2014 12:43 PM PDT

இரட்டைமடி வலை, சுருக்கு மடிவலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மல்லிபட்டினத்தில் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டிப்பர் லாரியில் மணல் கடத்திய ஓட்டுநர் கைது: லாரி பறிமுதல்

Posted: 10 Oct 2014 12:43 PM PDT

தஞ்சாவூர் அருகே உரிய அனுமதியின்றி மணல் கடத்தியவரை போலீஸார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்பட்ட டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

"மழைநீர் சேகரிப்பு நாளைய சந்ததியினருக்கு சொத்து'

Posted: 10 Oct 2014 12:42 PM PDT

மழை நீரைச் சேகரிப்பது என்பது நாளைய சந்ததியினருக்கான சொத்து என்றார் ஆட்சியர் என். சுப்பையன். தஞ்சாவூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சோழா பன்னாட்டுப் பள்ளி சார்பில் வெள்ளிக்கிழமை

அரசு மகளிர் விடுதியில் சேர அழைப்பு

Posted: 10 Oct 2014 12:42 PM PDT

அரசு மகளிர் விடுதியில் சேர அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:

விழிப்புணர்வு முகாம்

Posted: 10 Oct 2014 12:42 PM PDT

ஒரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு பெண்கள் கல்லூரி சார்பில் பெண்களின் மனநலம் பற்றிய செய்திகள் குறித்த விழிப்புணர்வு முகாம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் நாளை கிராம சபைக் கூட்டம்

Posted: 10 Oct 2014 12:41 PM PDT

நாகை மாவட்டத்தில் உள்ள 434 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (அக். 12) நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட

ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்

Posted: 10 Oct 2014 12:41 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் கடைவீதியில் அனுமதியின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

நாகையில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Oct 2014 12:41 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மற்றும் எல்.பி.எப். சார்பு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக சிஐடியு மற்றும் எல்.பி.எப். ஊழியர் சங்கங்கள் சார்பில் நாகை பணிமனை முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போக்குவரத்து தொழிலாளர்கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Oct 2014 12:41 PM PDT

தீபாவளிக்கு தாமதமின்றி முன்பணம் வழங்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை மன்னார்குடி அரசுப் போக்குவரத்து கழக கிளை அலுவலகம் முன்பு அனைத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலங்குடியில் மனுநீதி நாள் முகாம்

Posted: 10 Oct 2014 12:40 PM PDT

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், கடலங்குடி ஊராட்சியில் வெள்ளிக்கிழமை மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

காரைக்காலில் சூப்பர் ஸ்பெஷாலிட்டிமருத்துவமனை அமைய நடவடிக்கை

Posted: 10 Oct 2014 12:40 PM PDT

காரைக்காலில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைய அரசு நடவடிக்கை எடுக்கும் என புதுவை முதல்வர் என். ரங்கசாமி தெரிவித்தார்.

தமிழிசையுடன் மீனவப் பிரதிநிதிகள் சந்திப்பு

Posted: 10 Oct 2014 12:35 PM PDT

இலங்கைக் கடற்படை கைப்பற்றியுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மீனவப் பிரதிநிதிகள் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்தனர்.

மனைவி சுனந்தா மரணம் குறித்த புதிய தகவல்: பதிலளிக்க முன்னாள் அமைச்சர் சசி தரூர் மறுப்பு

Posted: 10 Oct 2014 12:34 PM PDT

சென்னை தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்க வந்த மத்திய முன்னாள் அமைச்சர் சசி தரூர், தனது மனைவி சுனந்தாவின் மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த புதிய அறிக்கை குறித்த கேள்விக்குப் பதிலளிக்க மறுத்து, கடும் தள்ளுமுள்ளுக்கிடையே அங்கிருந்து வெளியேறிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுகவை பவானி சிங் குறை சொல்லலாமா?: கருணாநிதி கேள்வி

Posted: 10 Oct 2014 12:34 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையைத் தாமதம் செய்த அரசு தரப்பு வழக்குரைஞர் பவானி சிங், திமுகவைக் குறை சொல்லலாமா என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

நடுக்கடலில் தவித்த 5 மீனவர்கள் மீட்பு

Posted: 10 Oct 2014 12:33 PM PDT

புதுச்சேரி அருகே வெள்ளிக்கிழமை கடலில் தவித்த, வீராம்பட்டினம் மீனவர்கள் 5 பேரை இந்திய கடலோரக் காவல்படையினர் மீட்டனர்.

அக்டோபர் 20-இல் பருவமழை: தயார் நிலையில் இருக்க அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தல்

Posted: 10 Oct 2014 12:32 PM PDT

வடகிழக்குப் பருவமழை இம்மாதம் 20-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதால், துறைமுகம், தேசிய பேரிடர் மீட்புக் குழு உள்பட 40-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளை தயார் நிலையில் இருக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நாளில் அன்று (11.10.1975); நமது தேர்தல் முறையில் உள்ள ஒரு ""கோணல்''

Posted: 10 Oct 2014 12:29 PM PDT

நமது தேர்தல் முறையில் உள்ள ஒரு ""கோணல்''

மாற்றம் நல்லது

Posted: 10 Oct 2014 12:24 PM PDT

முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி கொலையுண்ட நாளன்று, என் நண்பர் ஒருவர், பிரசவ வலி எடுத்துவிட்ட தன் கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்க ஒரு ஆட்டோ கூடக் கிடைக்காமல் தவித்த தவிப்பை இன்றும் படபடப்போடு எடுத்துரைப்பார்.

தெய்வமும் உண்டுகொல்?

Posted: 10 Oct 2014 12:23 PM PDT

அண்மையில் தில்லி மாநகரத்திலே வெள்ளைப் புலி ஒன்று, ஓர் இளைஞரைக் குற்றுயிரும் கொலையுயிருமாகச் சாகடித்த செய்தி, நம்முடைய ரத்தத்தை எல்லாம் ஒரு கணம் உறைய வைத்தது.

குப்பையோ குப்பை!

Posted: 10 Oct 2014 12:22 PM PDT

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னக அமர்வு, குப்பைக் கூளங்களை மதுரவாயல் அருகே கூவம் ஆற்றின் கரையில் கொட்டுவதற்குத் தடை விதித்திருக்கிறது.

நாளை கிராம சபைக் கூட்டம்

Posted: 10 Oct 2014 12:19 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும், ஞாயிற்றுக்கிழமை (அக்.12) கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி

Posted: 10 Oct 2014 12:19 PM PDT

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வேடசந்தூரில் கல்லூரி மாணவர்கள் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.

பணம் வாங்க சென்ற இளைஞர் மாயம்

Posted: 10 Oct 2014 12:19 PM PDT

பழனியை அடுத்த பாலசமுத்திரம் உச்சிக்காளியம்மன் தெருவை சேர்ந்தவர் சின்னக்கண்ணு என்ற சின்னச்சாமி(47). இவர் செங்கல்சூளை வைத்துள்ளார். இவரது மகன் வீரக்குமார்(19). 10ம் வகுப்பு முடித்து விட்டு

மாற்றுத்திறனாளிகள் தொழில் துவங்க கடனுதவி

Posted: 10 Oct 2014 12:18 PM PDT

பழனி அருகே கள்ளிமந்தயத்தில் மாற்றுத்திறனாளிகள் தொழில்துவங்க கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சித் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

Posted: 10 Oct 2014 12:18 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

நகராட்சி அலுவலகத்தில் குளிர்சாதன வசதி

Posted: 10 Oct 2014 12:18 PM PDT

தேனி அல்லிநகரம் நகராட்சி புதிய அலுவலகத்தில் ரூ. 18 லட்சம் செலவில் குளிர்சாதன வசதி செய்வதற்கு நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

விடுதியில் இளைஞர் தற்கொலை

Posted: 10 Oct 2014 12:17 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சியை அடுத்துள்ள பிள்ளையார்நத்தத்தைச் சேர்ந்த பிச்சை மகன் சரவணக்குமார்(31). இவர் வியாழக்கிழமை மாலை ஒட்டன்சத்திரத்தில பழனி சாலையில் உள்ள விடுதியில்

"சீல்' வைக்கப்பட்ட குடோனில் பட்டாசு மாயம்:காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

Posted: 10 Oct 2014 12:17 PM PDT

சிவகாசியில் போலீஸாரால் "சீல்' வைக்கப்பட்டிருக்கும் லாரி செட் குடோனில் இருந்த பட்டாசுகள் மாயமான வழக்கில், போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 சப்- இன்ஸ்பெக்டர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவிழாவில் இரு பிரிவினர் மோதல்: 57 பேர் மீது வழக்கு

Posted: 10 Oct 2014 12:17 PM PDT

ராஜபாளையம் அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவத்தில், இரு தரப்பைச் சேர்ந்த 57 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சீனப் பட்டாசு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Posted: 10 Oct 2014 12:16 PM PDT

சீனப் பட்டாசு வைத்திருப்போர் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஜி. அபிரூபன் வலியுறுத்தியுள்ளார்.

தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு

Posted: 10 Oct 2014 12:16 PM PDT

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார். சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த விவசாய தொழிலாளி கோட்டாறு (45). இவரது மகன்

புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கக் கோரிக்கை

Posted: 10 Oct 2014 12:16 PM PDT

காரியாபட்டி பகுதியில் பழைய டிரான்ஸ்பார்மரை மாற்றிவிட்டு புதியடிரான்ஸ்பார்மரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரியாபட்டியில் கலச ஊர்வலம்

Posted: 10 Oct 2014 12:16 PM PDT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பாக வேள்விபூஜை, ஆடிப்பூரகஞ்சி, கலச ஊர்வலம் நடைபெற்றது.

மகளை மிரட்டியதாக தந்தை மீது வழக்கு

Posted: 10 Oct 2014 12:15 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சொத்துப் பிரச்னையில் மகளை மிரட்டியதாக தந்தை மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விபத்தில் கிராம நிர்வாக அலுவலர் சாவு

Posted: 10 Oct 2014 12:15 PM PDT

சாத்தூர் அருகே சாலை விபத்தில் கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்தார். 2 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து அம்மாபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பள்ளியில் பல் பாதுகாப்பு முகாம்

Posted: 10 Oct 2014 12:15 PM PDT

சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், ரிசர்வ் லயனில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பல் பாதுகாப்பு முகாம் நடைபெற்றது. ஆசிரியர் திவாகர் தலைமை வகித்தார்.

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கணிதத்திறன் வளர் பயிற்சி

Posted: 10 Oct 2014 12:14 PM PDT

பரமக்குடி வட்டார வளமையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கணித திறன் மேம்படுத்தும் முகமாக அவர்களுக்கு பயிற்சியளிக்க ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு செய்முறையுடன் கூடிய பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அபிராமம் முஸ்லீம் பள்ளி என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு

Posted: 10 Oct 2014 12:14 PM PDT

கமுதி அருகே அபிராமம் முஸ்லீம் மேனிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். திட்ட மாணவர்களின் 7 நாள் சிறப்பு சேவை முகாம், வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

மேலச்செல்வனூரில் "அம்மா' திட்ட முகாம்

Posted: 10 Oct 2014 12:14 PM PDT

கடலாடி அருகே மேலச்செல்வனூரில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் உத்தரவின் பேரில் கடலாடி அருகே மேலச்செல்வனூர் கிராமத்தில்

திருவாடானை ஒன்றிய குழுக் கூட்டம்

Posted: 10 Oct 2014 12:14 PM PDT

திருவாடானை ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை ஒன்றிய குழு தலைவர் முனியம்மாள் ராஜேந்திரன் தலைமயிலும், துணைத் தலைவர் ராமகிருஷ்ணன்,ஆணையாளர் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் மாறன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

சாயல்குடி வீரமாகாளி கோயில் பொங்கல் விழா

Posted: 10 Oct 2014 12:13 PM PDT

சாயல்குடி வீரமாகாளி கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சிகளில் நாளை கிராம சபைக்கூட்டம்: ஆட்சியர் தகவல்

Posted: 10 Oct 2014 12:13 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளில் அக். 2 காந்தி ஜயந்தி அன்று நடைபெறவேண்டிய கிராம சபைக்கூட்டம் சரஸ்வதி பூஜையையொட்டி ஒத்திவைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (அக். 12) காலை 11 மணியளவில் நடத்தப்பட உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™