Tamil News | Online Tamil News |
- நிலக்கரி சுரங்க உரிமங்கள் ரத்து: கேள்விக்குறியாகும் வெளி மாநில மின்சாரம்
- ஓ.பி.எஸ்., போட்டார் பிள்ளையார் சுழி: ஆயுத பூஜை வாழ்த்து, பிரதமருக்கு கடிதம்
- தமிழக சிறைக்கு மாற்ற ஆலோசனை? ஜெ., அனுமதித்தால் நடவடிக்கை
- மும்பையில் மட்டும் மூன்று பேரணிகள்: நரேந்திர மோடியின் 'மும்பை ஆபரேஷன்' திட்டம்
- வெளியே வர வேண்டாம்!'கருணாநிதிக்கு தடை போட்ட என்.எஸ்.ஜி.,
- ஜெ.,யின் ஸ்ரீரங்கம் தொகுதியில் அரசு திட்டங்களை துரிதப்படுத்த உத்தரவு: இடைத்தேர்தலில் 'கோட்டை' விடாமல் இருக்க அ.தி.மு.க., தீவிரம்
- தேங்க் யூ அமெரிக்கா: சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி நன்றி
- அரசியல் கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி: வங்கி மூலம் வரவு - செலவுக்கான உத்தரவு அமல்
- ஜாமின் கிடைக்காததால் ஜெயலலிதாவுக்கு நெருக்கடி: 7ம் தேதி வரை சிறைவாசம் கட்டாயம்
- மகாராஷ்டிராவின் தங்க முக்கோண பகுதிகளில் வெற்றி யாருக்கு?
- மூட நம்பிக்கை சட்டம்: முதல்வர் திடீர் அதிருப்தி
| நிலக்கரி சுரங்க உரிமங்கள் ரத்து: கேள்விக்குறியாகும் வெளி மாநில மின்சாரம் Posted: நிலக்கரி சுரங்க உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெளி மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்து, ஒப்பந்தப்படி, 2,000 மெகாவாட் மின்சாரம் கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில், மின் தேவை உற்பத்தியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. இதனால் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, மின் தடை, மின் கொள்முதல் போன்ற நடவடிக்கைகளில், தமிழ்நாடு மின் வாரியம் ஈடுபட்டு வருகிறது.அதன்படி, இந்து பாரத் 500; மகாநதி 500; ஐ.எப்.எல்.எஸ்., 540; கோஸ்டல் எனர்ஜி 558; ஜிண்டால் 400; டி.பி.பவர் 208; பால்கோ 200; பாரிவேல் 100; அதுனிக் 100; ஜி.எம்.ஆர்., 150; ஒ.பி.ஜி., 74 ஆகிய தனியார் நிறுவனங்களிடம் ... |
| ஓ.பி.எஸ்., போட்டார் பிள்ளையார் சுழி: ஆயுத பூஜை வாழ்த்து, பிரதமருக்கு கடிதம் Posted: சென்னை: தலைமைச் செயலகத்தில் நேற்று, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமிக்கு வாழ்த்து தெரிவித்து, பணியை துவக்கினார். மேலும், மீனவர் பிரச்னை தொடர்பாக, பிரதமர் மோடிக்கு கடிதமும் அனுப்பி உள்ளார்.புதிய முதல்வராக பதவி யேற்றுள்ள, ஓ.பன்னீர்செல்வம், நேற்று காலை 11:30 மணிக்கு, தலைமைச் செயலகம் வந்தார். தான் ஏற்கனவே இருந்த, நிதி அமைச்சர் அறைக்கு சென்று பணிகளை துவக்கினார்.வெற்றி நிச்சயம்:முதல் பணியாக, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை ஒட்டி, பொது மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து செய்தியில் அவர் கூறியிருப்பதாவது: ... |
| தமிழக சிறைக்கு மாற்ற ஆலோசனை? ஜெ., அனுமதித்தால் நடவடிக்கை Posted: பெங்களூரு சிறையில் இருக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி, ஆலோசனை நடந்துள்ளது. இதற்கு, ஜெயலலிதா அனுமதிக்கும் பட்சத்தில், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில், அடைக்கப்பட்டுள்ளனர்.ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் தாக்கல் செய்த, ஜாமின் மனுக்கள் மீதான விசாரணையை, வரும், 7ம் தேதிக்கு, கர்நாடகா உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. ... |
| மும்பையில் மட்டும் மூன்று பேரணிகள்: நரேந்திர மோடியின் 'மும்பை ஆபரேஷன்' திட்டம் Posted: மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில், நீண்டகால கூட்டணி கட்சியான சிவசேனா இல்லாமல், முதன்முறையாக, தனக்கென ஓட்டு கேட்டு பிரசாரம் துவக்கி உள்ளது பா.ஜ., இதற்காக, பிரதமரான பிறகு, முதன்முறையாக அம்மாநிலத்திற்கு செல்லும் நரேந்திர மோடி, மும்பையில் மட்டும், மூன்று தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசவுள்ளார்.மறைந்த தலைவர்கள் பால் தாக்கரேயும், பிரமோத் மகாஜனும் இணைந்து, மகாராஷ்டிராவில் உருவாக்கிய, பா.ஜ., - சிவசேனா கூட்டணி, 25 ஆண்டுகளாக நீடித்து வந்தது. மோடி அலை:ஆனால், தற்போது நடைபெறவுள்ள, சட்ட சபைத் தேர்தலில், தொகுதி உடன்பாடு ... |
| வெளியே வர வேண்டாம்!'கருணாநிதிக்கு தடை போட்ட என்.எஸ்.ஜி., Posted: ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருவதால், 'எந்த நிகழ்ச்சிகளிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, தேசிய பாதுகாப்பு படை அதிகாரி (என்.எஸ்.ஜி.,) ஆலோசனை கூறியுள்ளார்.சென்னை, கோபாலபுரம் இல்லத்தில், கருணாநிதியை நேற்று முன்தினம் மதியம், என்.எஸ்.ஜி., படையின் எஸ்.பி., சந்தித்து, 'தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில், தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. அதனால், நிலைமை ... |
| Posted: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதால், காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ., பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில், அத்தொகுதியை மீண்டும் அ.தி.மு.க.,வே கைப்பற்ற மும்முரம் காட்டுகிறது. அரசு சிறப்பு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, உயர் அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது.ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., வாக இருந்தவர், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா. இதனால், ஸ்ரீரங்கம் தொகுதி முக்கியத்துவம் பெற்றது. 5,200 ... |
| தேங்க் யூ அமெரிக்கா: சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி நன்றி Posted: வாஷிங்டன் :ஐந்து நாள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரதமர் மோடி, இருநாடுகளின் வர்த்தக குழு கூட்டத்தில் பேசும் போது, ''இந்தியாவுக்கு விரைந்து வந்து வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்று கொள்ளுங்கள். பல நாடுகள் இதில் போட்டி போட்டுக் கொண்டுள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்,'' என, அமெரிக்க தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.மேலும், ''என் அமெரிக்க சுற்றுப்பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. என்னுடன் நீண்ட நேரம் செலவிட்ட அதிபர் ஒபாமாவுக்கு நன்றி,'' எனவும், பிரதமர் மோடி பெருமிதமாக கூறினார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ... |
| அரசியல் கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி: வங்கி மூலம் வரவு - செலவுக்கான உத்தரவு அமல் Posted: புதுடில்லி: அரசியல் கட்சிகளின் பண வரவு - செலவு மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளில், ஒளிவு மறைவற்ற தன்மைக்கு தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் படி, அரசியல் கட்சிகள் வங்கிகளில் கணக்கு துவக்கி, அதன் வரவு - செலவுகளை வங்கிகள் மூலமே மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு, நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால், அரசியலில் பண முதலைகளின் ஆதிக்கம் குறையும் என, எதிர்பார்க்கலாம்.அரசியல் அமைப்பு சட்டத்தின், 324வது பிரிவின் படி, தேர்தல் கண்காணிப்பு, தேர்தல் நடைமுறை மற்றும் கட்டுப்பாடு குறித்து, கடந்த ஆகஸ்ட் 29ல், தேர்தல் கமிஷன் உத்தரவு ஒன்றை ... |
| ஜாமின் கிடைக்காததால் ஜெயலலிதாவுக்கு நெருக்கடி: 7ம் தேதி வரை சிறைவாசம் கட்டாயம் Posted: பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேரின் ஜாமின் மனுக்களை உடனடியாக விசாரிக்க, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் விடுமுறைகால நீதிபதி மறுத்து விட்டார். ஜாமின் மனுக்கள் மீதான விசாரணை, அக்., 7ம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் வரை, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் ஜாமின் மனுக்களை, அவசர மனுவாக விசாரிக்க கோரி, ... |
| மகாராஷ்டிராவின் தங்க முக்கோண பகுதிகளில் வெற்றி யாருக்கு? Posted: புதுடில்லி: மகாராஷ்டிராவில், அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ஐந்துமுனை போட்டி நிலவுகிறது. ஆனாலும், மாநிலத்தின் தங்க முக்கோண பகுதி என, அழைக்கப்படும் பகுதிகளில், அதிக இடங்களைப் பெறும் கட்சியே, ஆட்சியைப் பிடிக்கும் என, அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.மூன்று அணிகள்:மகாராஷ்டிராவில், அடுத்த மாதம் 15ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ் - தேசியவாத காங்., மற்றும் சிவசேனா - பா.ஜ., கூட்டணிகளும் மற்றும் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என, மூன்று அணிகளே, பிரதானமாக தேர்தலை சந்திக்கும் என, ... |
| மூட நம்பிக்கை சட்டம்: முதல்வர் திடீர் அதிருப்தி Posted: பெங்களூரு:மூடநம்பிக்கை, மாயமந்திரங்களை தடை செய்து மத்திய அரசு சட்டம் வடிவமைத்துள்ள போதிலும் அச்சட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை,'' என முதல்வர் சித்தராமையா அதிருப்தி தெரிவித்தார்.மங்களூருவில்,அறிவியல் மையத்தை, நேற்று துவக்கி வைத்து, நிருபர்களிடம், முதல்வர் சித்தராமையா கூறியதாவது: மக்களை ஏமாற்றி பிழைக்கும் மோசடி பேர்வழிகள், இப்போதும் இருப்பது வருத்தத்தக்கது. மத்திய அரசு, அரசியல் சட்டம், 51ல், திருத்தம் கொண்டு வந்து, 'ஏ அண்ட் எப்' விதிமுறைகளை சேர்த்துள்ளது. இதன்படி, மூடநம்பிக்கை, மாய மந்திரங்கள் செய்வது சட்டப்படி குற்றம். ஆனால், இந்த சட்டம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 02,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |