Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தனியார் பள்ளி பேருந்துகள், வேன்கள் எரிப்பு

Posted: 03 Oct 2014 02:02 PM PDT

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தனியார் பள்ளிக்குச் சொந்தமான 5 பேருந்துகள், 2 வேன்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

ரயில் பெட்டிகளைத் தயாரிப்பதில் தன்னிறைவு பெற்றுள்ளது ஐ.சி.எஃப்.

Posted: 03 Oct 2014 02:02 PM PDT

ரயில் பெட்டிகளைத் தயாரிப்பதில் ஐ.சி.எஃப். தன்னிறைவு பெற்றுள்ளதாக தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தெரிவித்தார்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த மக்களைத் திரட்டிப் போராட்டம்: நல்லகண்ணு

Posted: 03 Oct 2014 01:59 PM PDT

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார்.

கடனா நதி பகுதியில் சிறுத்தை சிக்கியது

Posted: 03 Oct 2014 01:56 PM PDT

திருநெல்வேலி மாவட்டம், கடனா நதி அணை அடிவாரப் பகுதியான பெத்தான்பிள்ளை குடியிருப்பில் சில மாதங்களாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வெள்ளிக்கிழமை கூண்டில் சிக்கியது.

மகாராஷ்டிர தேர்தல்: தமிழக பாஜக பிரசாரம்

Posted: 03 Oct 2014 01:51 PM PDT

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தமிழகத் தலைவர்கள் பிரசாரம் செய்யவுள்ளனர்.

மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற தமிழகத்தின் ஒத்துழைப்புத் தேவை: கப்பல் துறைச் செயலாளர் பேட்டி

Posted: 03 Oct 2014 01:51 PM PDT

நீண்ட காலமாகக் கிடப்பில் உள்ள சென்னை துறைமுகம்- மதுரவாயல் உயர்நிலை மேம்பாலத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசுத் திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசின் ஒத்துழைப்பு அவசியமானது என்று கப்பல் துறைச் செயலாளர் டாக்டர் விஸ்வபதி திரிவேதி தெரிவித்தார்.

விவசாய நிலத்தில் புகுந்த யானைகள்

Posted: 03 Oct 2014 01:30 PM PDT

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே ஒப்பதவாடி காட்டுப் பகுதியிலிருந்து 10}க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக உணவு, தண்ணீர்த் தேடி நாட்டறம்பள்ளி தாலுகா வெலக்கல்நத்தம் ஊராட்சிப் பகுதியில் உள்ள செட்டேரி அணைப் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்தன.

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோயில் திருவிழா கொடியேற்றம்

Posted: 03 Oct 2014 01:30 PM PDT

சென்னையை அடுத்த மணலி புதுநகரில் அமைந்துள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

போராட்டங்களில் ஈடுபடும் அதிமுகவினரை முதல்வர் கண்டிக்க வேண்டும்: வைகோ

Posted: 03 Oct 2014 01:27 PM PDT

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அதிமுகவினரை முதல்வர் கண்டிக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் செஸ் இல்லை: ஆர்வலர்கள் ஏமாற்றம்

Posted: 03 Oct 2014 01:26 PM PDT

பள்ளிகள் அளவில் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டியில் இந்த ஆண்டு செஸ் விளையாட்டு இடம்பெறவில்லை. இதனால், செஸ் போட்டியில் ஆர்வமுள்ள மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

புதுகை அதிமுக தொண்டர் மாரடைப்பால் மரணம்

Posted: 03 Oct 2014 01:25 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் புதன்கிழமை இரவு அதிமுக தொண்டர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் இருந்த அதிமுகவினர் மீது கல்வீச்சு

Posted: 03 Oct 2014 01:24 PM PDT

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருந்த அதிமுகவினர் மீது, மதிமுகவினர் கல்வீசித் தாக்கியதால் பதற்றம் நிலவியது. இதனால் அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

திருப்பூரில் பாலியல் வன்கொடுமை: 3 வயது சிறுமி பலி; மாணவன் கைது

Posted: 03 Oct 2014 01:21 PM PDT

திருப்பூரில் பாலியல் வன்கொடுமையால் 3 வயது சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுதொடர்பாக 17 வயது பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் சாவு: உறவினர்கள் போராட்டம்

Posted: 03 Oct 2014 01:21 PM PDT

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் வியாழக்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.

ஒபாமா பரிசு: மோடி மகிழ்ச்சி

Posted: 03 Oct 2014 01:15 PM PDT

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் ஒபாமா, சுவாமி விவேகானந்தரின் உரை அடங்கிய அரிய நூலை பரிசளித்தார்.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.9 ஆயிரம் உதவித்தொகை: ஹரியாணாவில் பாஜக தேர்தல் அறிக்கை

Posted: 03 Oct 2014 01:15 PM PDT

ஹரியாணாவில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் பாஜக அறிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ முதல்வர் அலுவலகத்தில் பணியைத் தொடங்கினார்: சந்திரபாபு நாயுடு

Posted: 03 Oct 2014 01:12 PM PDT

பதவியேற்ற நான்கு மாதங்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை தனது பணிகளைத் தொடங்கினார்.

இந்த நாளில் அன்று (4.10.1973); ஸ்ரீலங்கா தமிழ் இயக்கம்

Posted: 03 Oct 2014 01:08 PM PDT

ஸ்ரீலங்கா தமிழ் இயக்கம்

கை கொடுப்போம் தட்டச்சுக் கல்விக்கு

Posted: 03 Oct 2014 01:06 PM PDT

முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஏதாவது ஒரு வீட்டின் மாடியில் கொட்டகை போட்டிருப்பார்கள்.உள்ளே ஏராளமான தட்டச்சு இயந்திரங்கள் தட்... தட்... என்று ஒலித்துக் கொண்டிருக்கும்.

பொன்னொளிர் பாரதம் படைப்போம்!

Posted: 03 Oct 2014 12:59 PM PDT

மந்திய அரசு இந்தியாவைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுவதும் அதற்கான முயற்சியில் முனைப்போடு ஈடுபடத் தொடங்கியிருப்பதும் செவியில் தேனாய்ப் பாயும் செய்தி.

இறந்தும் வாழ்வார்!

Posted: 03 Oct 2014 12:58 PM PDT

முற்பிறவியில் தவம் செய்தவர்களுக்கும், இந்தப் பிறவியில் ஞானம் பெற்றவர்களுக்கும்தான் அநாயாசமான மரணம் (அனாயாசேன மரணம்) நிகழும் என்பார்கள்.

தசரா கூட்ட நெரிசலில் 32 பேர் பலி: பிகாரில் சோகம்

Posted: 03 Oct 2014 12:49 PM PDT

பிகார் மாநிலம், பாட்னாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தசரா பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உள்பட 32 பேர் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரத்துக்காகவே துப்புரவு இயக்கம்: காங்கிரஸ்

Posted: 03 Oct 2014 12:47 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ள "தூய்மை இந்தியா' பிரசாரத்தை விளம்பரத்துக்காகவே தில்லி மாநகராட்சி மேற்கொள்கிறது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

அரசால் மட்டுமே நாட்டை தூய்மையாக்க முடியாது: பிரணாப்

Posted: 03 Oct 2014 12:46 PM PDT

மக்களின் பங்களிப்பு இல்லாமல், அரசால் மட்டுமே நாட்டைத் தூய்மையாக்க முடியாது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

பெல்லில் தூய்மை இந்தியா இயக்கம் தொடக்கம்

Posted: 03 Oct 2014 12:46 PM PDT

திருச்சி பெல் நிறுவனத்தில் தூய்மை இந்தியா இயக்கம் வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது. பெல் நிறுவன நிர்வாகக் கட்டட முகப்பிலுள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, தூய்மை இந்தியா இயக்கத்தை பெல் செயல் இயக்குநர் ஏ.வி. கிருஷ்ணன் தொடக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியது:

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தொடர் போராட்டங்கள்

Posted: 03 Oct 2014 12:46 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத் தீóர்ப்பின்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திருச்சியில் தொடர் போராட்டங்கள் வெள்ளிக்கிழமையும் நடைபெற்றன.

சர்வதேச அந்தஸ்தை பெற்று மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது திருச்சி விமான நிலையம் அடிப்படை வசதிகளோ கேள்விக்குறி ஓடுதளமும் நீட்டிக்கவில்லை

Posted: 03 Oct 2014 12:46 PM PDT

திருச்சி விமான நிலையம் சர்வதேச அந்தஸ்தை பெற்று இன்றுடன் 2-வது ஆண்டு நிறைவு பெறுகின்றது. மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் வளர்ச்சி மட்டுமே மேம்பட்டுள்ளது ஆனால் அடிப்படை வசதிகள் இன்னும் சர்வதேச அந்தஸ்துக்கு ஏற்ற வகையில் இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்து.

திருச்சி ஜங்ஷனில் நகரும் படிக்கட்டுகள் அமைக்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு திருச்சி சிவா எம்.பி. பரிந்துரை.

Posted: 03 Oct 2014 12:46 PM PDT

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் திட்டத்துக்கு மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்வதாக பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.

பக்ரீத்: மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

Posted: 03 Oct 2014 12:46 PM PDT

பக்ரீத் பண்டிகையான திங்கள்கிழமை (அக்.6) அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்று மக்கள் குறைதீர்க் கூட்டம் நடைபெறாது.

கதர் அங்காடிகளில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.50 கோடி

Posted: 03 Oct 2014 12:46 PM PDT

திருச்சி மாவட்டத்தில் கதர் அங்காடிகளில் தீபாவளி விற்பனை இலக்காக ரூ.1.50 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் நிலையத்தில் தூய்மை பணி கோட்ட் மேலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு

Posted: 03 Oct 2014 12:46 PM PDT

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை நடைபெற்ற தூய்மை பணியில் கோட்ட மேலாளர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

திருச்சியில் வீட்டிலிருந்த சங்கிலி மாயம் வைலைக்கார பெண்மணி கைது

Posted: 03 Oct 2014 12:46 PM PDT

திருச்சியில் வீட்டிலிருந்த 5 பவுன் தங்கச்ங்கிலி மாயமானது, அதனை எடுத்ததாக வீட்டு வைலை செய்யும் பெண்ணை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சியில் சாலைவிபத்தில் பெண் சாவு சாலை மறியல், பேருந்துக்கு தீ வைப்பு தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர்

Posted: 03 Oct 2014 12:46 PM PDT

திருச்சியில் சாலை விபத்தில் பெண் இறந்தார். அடிக்கடி விபத்து நடப்பதாகவும், தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறி பொது மக்கள் சலை மறியல், வாகனங்களின் கண்ணாடி உடைப்பு, பேருந்துக்கு தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.போலீஸார் தடியடிநடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

கதர் பொருள்கள் ஒவ்வொரு வீட்டையும் அடைய வேண்டும்: ஆளுநர் ரோசய்யா

Posted: 03 Oct 2014 12:45 PM PDT

கதர், கிராமத் தொழில் பொருள்கள் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய வேண்டும் என ஆளுநர் ரோசய்யா தெரிவித்தார்.

பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாசாரத்துக்கு எதிரானது: யேசுதாஸ் பேச்சால் சர்ச்சை

Posted: 03 Oct 2014 12:43 PM PDT

"பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாசாரத்துக்கு எதிரானது. பெண்கள் ஜீன்ஸ் அணிவதன் மூலம் மற்றவர்களுக்கு பிரச்னை ஏற்படுத்தக் கூடாது' என்று பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற காந்தி சிலை முன் அதிமுக எம்.பி.க்கள் உண்ணாவிரதம்

Posted: 03 Oct 2014 12:41 PM PDT

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவுக்கு நீதி கேட்டு தில்லியில் நாடாளுமன்ற பிரதான வாயில் முன் அக்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

தன்னம்பிக்கையுடன் நாட்டின் வளர்ச்சிக்கு உழையுங்கள்! வானொலி உரையில் மோடி வேண்டுகோள்

Posted: 03 Oct 2014 12:38 PM PDT

"தன்னம்பிக்கையுடன் நாட்டின் வளர்ச்சிக்கு உழையுங்கள்' என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்கு வங்க மருத்துவமனையில் 14 குழந்தைகள் சாவு

Posted: 03 Oct 2014 12:29 PM PDT

மேற்கு வங்க மாநிலம், பர்த்வானில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 14 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன.

காந்தியின் கொள்கைகள் குறித்த தேர்வு: 92 கைதிகள் எழுதினர்

Posted: 03 Oct 2014 12:29 PM PDT

மும்பை அருகே தலோஜா மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ள 92 கைதிகளுக்கு காந்தியின் கொள்கைகள் குறித்த எழுத்துத் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

சுப்ரதா ராயின் அவசர மனு நிராகரிப்பு

Posted: 03 Oct 2014 12:28 PM PDT

தனது உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜாமீன் கேட்டு சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் தாக்கல் செய்த அவசர மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

ராணுவ ஆய்வகக் கணினிகளில் தகவல் திருடும் முயற்சி முறியடிப்பு

Posted: 03 Oct 2014 12:26 PM PDT

ராணுவ உலோகவியல் ஆய்வகத்தின் கணினிகளுக்குள் ஊடுருவி, தகவல்களைத் திருட நடைபெற்ற முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

வழக்குரைஞரை அறைந்ததாக மேனகா காந்தி மீது புகார்: போலீஸ் விசாரணை

Posted: 03 Oct 2014 12:25 PM PDT

உத்தரப்பிரதேசத்தில் வழக்குரைஞர் ஒருவரை அறைந்ததாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வீடு அருகே கழிவுகளை அகற்றினார் கேஜரிவால்

Posted: 03 Oct 2014 12:24 PM PDT

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் தில்லியில் பிரதமர் இல்லம் அருகே உள்ள பி.ஆர். கேம்ப் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

அக்டோபர் 8-இல் முழு சந்திர கிரகணம்

Posted: 03 Oct 2014 12:20 PM PDT

அக்டோபர் 8-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற கட்சிகளை ஆதரிப்போம்: பவார்

Posted: 03 Oct 2014 12:18 PM PDT

மதச்சார்பற்ற கட்சிகளை தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தொடர்ந்து ஆதரிக்கும் என்று அக்கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ், என்சிபி தேர்தல் அறிக்கைகள் வெளியீடு

Posted: 03 Oct 2014 12:14 PM PDT

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், தங்களது தேர்தல் அறிக்கைகளை வியாழக்கிழமை வெளியிட்டன.

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: 288 தொகுதிகளுக்கு 4,117 பேர் போட்டி

Posted: 03 Oct 2014 12:13 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் 288 தொகுதிகளில் 4,117 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

Posted: 03 Oct 2014 12:10 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியையொட்டிய இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் வெள்ளிக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளம்பெண் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

அரசு அதிகாரிகள் "தூய்மை இந்தியா' உறுதி மொழி ஏற்பு

Posted: 03 Oct 2014 12:10 PM PDT

தூய்மை இந்தியா' திட்டத்தை வலியுறுத்தி தில்லி அரசு, காவல் துறை அதிகாரிகள் வியாழக்க

காஷ்மீர் மக்களின் கருத்துகளை அறிய வாக்கெடுப்பு: பாகிஸ்தான் வலியுறுத்தல்

Posted: 03 Oct 2014 12:09 PM PDT

""காஷ்மீர், சட்டப் பிரச்னைக்கு உள்பட்டது. எனவே, அங்குள்ள மக்களின் கருத்துகளை அறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்'' என்று பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

தூய்மைப் பணியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

Posted: 03 Oct 2014 12:09 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் "தூய்மை இந்தியா' திட்டத்தில் மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்று தில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் தினேஷ் சிங் கேட்டுக் கொண்டார்.

போலீஸாரை துப்பாக்கியால் சுட்ட 3 பேர் கைது

Posted: 03 Oct 2014 12:09 PM PDT

தெற்கு தில்லியில் போக்குவரத்து விதியை மீறிச் சென்றதைத் தடுக்க முயன்ற போலீஸாரை துப்பாக்கியால் சுட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசுத்துறை அலுவலகங்களில் "தூய்மை இந்தியா' உறுதிமொழி ஏற்பு

Posted: 03 Oct 2014 12:09 PM PDT

குடியரசுத் தலைவர் மாளிகைச் செயலகம், பிரதமர் அலுவலகம், மத்திய அரசுத் துறை அலுவலகங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் "தூய்மை இந்தியா' உறுதிமொழியை வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டனர்.

தூர்தர்ஷனில் பாகவத்தின் பேச்சு நேரலையாக ஒரு மணிநேரம் ஒளிபரப்பு: காங்கிரஸ், இடதுசாரிகள் கண்டனம்

Posted: 03 Oct 2014 12:08 PM PDT

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு தூர்தர்ஷனில் ஒரு மணி நேரம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதற்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தீவிரவாதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

Posted: 03 Oct 2014 12:06 PM PDT

தீவிரவாதிகள், நக்ஸலைட்டுகளின் நடவடிக்கைகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் தொழிலாளி மர்மச்சாவு அடித்துக்கொலையா போலீஸார் விசாரணை

Posted: 03 Oct 2014 12:04 PM PDT

திருச்சியில் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தில்லி காவல் நிலையத்தில் பிரதமர் துப்புரவு

Posted: 03 Oct 2014 12:00 PM PDT

தில்லி காவல் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை நண்பகலில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலைய வளாகத்தில் குப்பைகள் இருந்ததைப் பார்த்து அவரே துடைப்பத்தை எடுத்து அப்பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டார்.

தூய்மை திட்டத்தால் "சுகாதார இந்தியா' அமையும்

Posted: 03 Oct 2014 12:00 PM PDT

தூய்மை இந்தியா திட்டத்தால் "சுகாதார இந்தியா' அமையும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இன்று துர்கா சிலை கரைப்பு:விரிவான ஏற்பாடுகள்

Posted: 03 Oct 2014 12:00 PM PDT

தில்லியில் சனிக்கிழமை துர்கா சிலைகள் கரைப்புக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

தில்லி தமிழ்ச் சங்கத்தில் சிறப்புப் பட்டிமன்றம்

Posted: 03 Oct 2014 11:59 AM PDT

தில்லி தமிழ்ச் சங்கத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் "தூய்மை இந்தியா' உறுதிமொழி

Posted: 03 Oct 2014 11:59 AM PDT

தில்லி பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை "தூய்மை இந்தியா' உறுதிமொழியேற்றனர். தூய்மை இந்தியா திட்டத்தை துக்ளகாபாத் ரயில் நிலையத்தில் தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய், தெற்கு தில்லி மக்களவை உறுப்பினர் ரமேஷ் பிதூரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சதீஷ் உபாத்யாய் பேசுகையில், "தூய்மை இந்தியா திட்டத்துக்கு அனைவரும், குறிப்பா

தலைக்கவசம் அணியும் விவகாரம்:சீக்கியப் பெண்களுக்கு விலக்கு ஏன்?

Posted: 03 Oct 2014 11:59 AM PDT

"இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் சீக்கியப் பெண்கள் தலைக்கவசம் அணியாமல் இருக்கும் வகையில், அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது ஏன்?' என்று தில்லி அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டவுன் ஹாலை 15 நாள்களில் சுத்தப்படுத்த மேயர் உத்தரவு

Posted: 03 Oct 2014 11:59 AM PDT

டவுன் ஹாலை 15 நாள்களில் சுத்தப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வடக்கு தில்லி மேயர் யோகேந்திர சந்தோலியா உத்தரவிட்டுள்ளார்.

முதியோர் தினக் கொண்டாட்டம்

Posted: 03 Oct 2014 11:58 AM PDT

தலைநகரில் முதியோர்கள் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது.

கார் மோதி இழுத்து செல்லப்பட்ட இளைஞர் சாவு

Posted: 03 Oct 2014 11:58 AM PDT

வடக்கு தில்லியில் கார் மோதி சுமார் 75 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டதில் இளைஞர் உயிரிழந்தார். தப்பிக்க முயன்ற கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

வங்கிப் பெண் அதிகாரி தற்கொலை

Posted: 03 Oct 2014 11:58 AM PDT

தலைநகர் தில்லியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரிந்து வந்த பெண் அதிகாரி கோனிகா (22) வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

38 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம்

Posted: 03 Oct 2014 11:57 AM PDT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி, மாமல்லபுரம் அருகே உள்ள 38 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிணற்றில் 2 சிறுமிகளின் உடல்கள் மீட்பு

Posted: 03 Oct 2014 11:57 AM PDT

காஞ்சிபுரம் அருகே விவசாயக் கிணற்றில் இருந்து 2 சிறுமிகளின் உடல்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன.

சாலவாக்கத்தில் காந்தி பிறந்த நாள்விழா

Posted: 03 Oct 2014 11:57 AM PDT

உத்தரமேரூரை அடுத்த சாலவாக்கதில் காந்தி பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மேகநாதன் தலைமை வகித்தார். கே. பார்த்திபன், எஸ்.எம்.தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேசிய மாணவர் கருத்தரங்கம்

Posted: 03 Oct 2014 11:56 AM PDT

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் வேதிபொறியியல் துறை, ஏ.சி.இ.டி., ஐ.ஐ.சி.இ. ஆகியவை இணைந்து கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை தேசிய மாணவர் கருத்தரங்கத்தை நடத்தின.

தமிழ்ப் படைப்பாற்றல் போட்டி: மாணவர்களுக்குப் பரிசு

Posted: 03 Oct 2014 11:56 AM PDT

காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

Posted: 03 Oct 2014 11:56 AM PDT

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள விவசாயியின் வீட்டில் இருந்து 5 பவுன் நகை, ரூ. 23 ஆயிரம் பணம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

மது விற்பனை: 4 பேர் கைது

Posted: 03 Oct 2014 11:56 AM PDT

காந்தி ஜெயந்தியன்று மது விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரைப் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

மகளிருக்கு இலவச சிறப்பு அழகு கலைப் பயிற்சி

Posted: 03 Oct 2014 11:55 AM PDT

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு இலவச சிறப்பு அழகுக் கலைப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனம் திருட்டு:இளைஞர் கைது

Posted: 03 Oct 2014 11:55 AM PDT

கும்மிடிப்பூண்டியில் இரு சக்கர வாகனத்தை திருடியதாக இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

குடிநீர் கோரி பேருந்து சிறைபிடிப்பு

Posted: 03 Oct 2014 11:55 AM PDT

குடிநீர் வழங்கக் கோரி, அரசு பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேடசந்தூர் அடுத்துள்ள புளியமரத்துக்கோட்டை ஊராட்சிக்குள்பட்டது கோடாங்கிப்பட்டி. இந்த

பழனி கோயில்களில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு

Posted: 03 Oct 2014 11:54 AM PDT

பழனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதி கோயில்களில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுதலை பெற வேண்டி அக்கட்சியினர் சிறப்பு பூஜைகள், அங்கப்பிரதட்சணம் செய்தனர்.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டம்

Posted: 03 Oct 2014 11:54 AM PDT

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திண்டுக்கல் ரயில் நிலைய வளாகத்தில் 50 தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஜான் கெர்ரியுடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் சந்திப்பு

Posted: 03 Oct 2014 11:54 AM PDT

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கே. தோவல் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இயற்கை வேளாண்மைக் கருத்தரங்கம்

Posted: 03 Oct 2014 11:54 AM PDT

போடி ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் கொட்டகுடி மலை கிராமத்தில் சேவை முகாம் நடைபெற்றது. இதில் போடி விவேகானந்தா சமூக சேவை அறக்கட்டளை சார்பில் இயற்கை வேளாண்மைக் கருத்தரங்கு நடைபெற்றது.

ஹாங்காங்: போராட்டக்காரர்கள், பொதுமக்களிடையே மோதல்

Posted: 03 Oct 2014 11:54 AM PDT

சீன ஆளுகைக்குள்பட்ட ஹாங்காங்கில், ஜனநாயகம் கோரி சாலைகளை ஆக்கிரமித்துள்ள போராட்டக்காரர்களுக்கும், போராட்ட எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது.

கோயிலுக்குள் தஞ்சமடைந்த மயில்

Posted: 03 Oct 2014 11:53 AM PDT

ஆண்டிபட்டி அருகே பிராதுகாரன்பட்டியில் கோயிலுக்குள் காயத்துடன் வந்த மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. பிராதுகாரன்பட்டியில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சுமார் 2 வயதுடைய

கதர் விற்பனை நிலையங்களில் 30 சதவிகிதம் தள்ளுபடி

Posted: 03 Oct 2014 11:53 AM PDT

தேனி மாவட்டத்தில் கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் செயல்பட்டு வரும் கதர் விற்பனை நிலையங்களில் கதர் ஜவுளி ரகங்களுக்கு 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.

விருதுநகரில் மகர்நோன்பு திருவிழா

Posted: 03 Oct 2014 11:53 AM PDT

விருதுநகரில் மகர்நோன்பு திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சமுதாயத்தினரும் ரெட்டை வால் புலிவேஷம் அணிந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர். விருதுநகர் ஸ்ரீசொக்கநாதர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமியை

நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு

Posted: 03 Oct 2014 11:53 AM PDT

தமிழக அரசின் மாநில நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற விருதுநகர் மாவட்ட ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

ஜப்பான் எரிமலைச் சீற்றம்: 47 உடல்கள் மீட்பு

Posted: 03 Oct 2014 11:52 AM PDT

ஜப்பானின் அன்டாகே எரிமலையில் கடந்த சனிக்கிழமை திடீரென ஏற்பட்ட சீற்றத்தால் உயிரிழந்த 47 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சிவகாசியில் தூய பாரதம் திட்டம் தொடக்கம்

Posted: 03 Oct 2014 11:52 AM PDT

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தூய பாரதம் (கிளீன் இந்தியா) திட்டம் சிவகாசியில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

ராஜபாளையத்தில் நவராத்திரி உற்சவம்

Posted: 03 Oct 2014 11:52 AM PDT

ராஜபாளையம் பகுதி கோயில்களில் நவராத்திரி சரஸ்வதி பூஜை,விஜயதசமி விழா விமரிசையாக நடைபெற்றது.

பாகிஸ்தான்: விஷச் சாராயத்துக்கு 17 பேர் பலி

Posted: 03 Oct 2014 11:52 AM PDT

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் விஷ சாராயம் அருந்திய 17 பேர் உயிரிழந்தனர்.

கேபிள் டி.வி. உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தம்

Posted: 03 Oct 2014 11:52 AM PDT

பெங்களூரூ நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சனிக்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்திருப்பதாக அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோபால் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். மீது விமானத் தாக்குதல்: இணைகிறது ஆஸ்திரேலியா

Posted: 03 Oct 2014 11:52 AM PDT

இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தலைமையில் நிகழ்த்தப்படும் வான்வழித் தாக்குதலில் ஆஸ்திரேலியாவும் இணையவுள்ளது.

சுவாமி சிலைகள் திருட்டு

Posted: 03 Oct 2014 11:52 AM PDT

திருவாடானை அருகே ரூ.பல லட்சம் மதிப்புள்ள சுவாமி சிலைகள் திருடப்பட்டதாக திருவாடானை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கல்லூரியில் சூரிய ஆற்றல் கருவிகள்

Posted: 03 Oct 2014 11:51 AM PDT

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில், பல்கலைக்கழக மானிய நிதியுதவியுடன், அறிவியல் வளாகத்தில் சூரிய ஆற்றலால் இயங்கும் வகையில் சூரிய ஆற்றல் மாற்ற கருவிகள்

அஞ்சல் நிலையத்தில் உறுதிமொழி ஏற்பு

Posted: 03 Oct 2014 11:51 AM PDT

கமுதி அஞ்சல் நிலையத்தினர் வியாழக்கிழமை தூய்மையான இந்தியா என்ற உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

ரூ. 60 லட்சம் கதர் விற்பனை இலக்கு

Posted: 03 Oct 2014 11:51 AM PDT

சிவகங்கை மாவட்டத்துக்கு நடப்பாண்டு ரூ. 60 லட்சத்துக்கு கதர் ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் தெரிவித்தார்.

லிபியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 36 ராணுவ வீரர்கள் பலி

Posted: 03 Oct 2014 11:51 AM PDT

லிபியாவின் பெங்காஸி நகர விமான நிலையம் அருகே, ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 36 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

அதிமுக தொழிற்சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

Posted: 03 Oct 2014 11:50 AM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனை முன் வெள்ளிக்கிழமை அண்ணா தொழிற் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

Posted: 03 Oct 2014 11:50 AM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தானிப்பட்டி கிராமத்தில் மூதாட்டியிடம் நகை பறித்தவர் போலீஸாரால் கைது செய்யபட்டார்.

பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் ஆப்கனுக்குத் திடீர் பயணம்

Posted: 03 Oct 2014 11:50 AM PDT

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் ஆப்கானிஸ்தானுக்கு வெள்ளிக்கிழமை திடீர் பயணம் மேற்கொண்டார்.

கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் சாவு

Posted: 03 Oct 2014 11:50 AM PDT

திருப்பத்தூர் அருகே சுவாமி கும்பிட சென்ற இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™