Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


19 ஆண்டுகளாக தியேட்டரில் திரையிடப்பட்டு வந்த ஷாரூக்-கஜோல் படத்தை நிறுத்த முடிவு!

Posted:

இன்றைய காலக்கட்டத்தில் தியேட்டரில், ஒரு படம் ஒருவாரம் ஓடுவதே பெரிய விஷயம், ஆனால் ஒருபடம் 19 ஆண்டுகளாக ஒரு தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா.? ஆமாம், உண்மை தான், ஒரு படம் இன்னும் ஓடிக் கொண்டு இருக்கிறது. காலத்தால் அழிக்க முடியாத படங்கள் பல உண்டு, அதில் ஷாரூக்-கஜோல் நடித்த காதல் காவியம், ‛‛தில்வாலே ...

கஜோலுக்கு பதில் கரீனா!

Posted:

ராம் மாத்வானி இயக்கும் புதிய படத்தில் கஜோல் நடிப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் படத்திற்கு ஏற்பட்ட பணப்பிரச்னை மற்றும் இயக்குநருக்கும், கஜோலுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் இப்படம் துவங்கப்படாமல் இருந்தது. மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கஜோலின் கணவரும், நடிகருமான அஜய் தேவ்கான் ...

நவ., 16-ல் சல்மானின் தங்கை அர்பிதா திருமணம்!

Posted:

நடிகர் சல்மான் கானின் தங்கை, அர்பிதா கானுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. தனது பாய்பிரண்டான டில்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆயூஷ் சர்மாவை தான் அர்பிதா திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களது திருமணம் நவ 16-ல் நடக்கிறது. தனது தங்கையின் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார் சல்மான். தற்போதே திருமணத்திற்கான வேலைகளை ...

தன் வாழ்க்கை படத்திற்கு தயாரிப்பாளராகிறார் தோனி.?!

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில், தோனி என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. நீரஜ் பாண்டே இப்படத்தை இயக்குகிறார். சுசாந்த சிங் ராஜ்பட், தோனியாக நடிக்கிறார். அடுத்தாண்டு இப்படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று எண்ணியுள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. ...

பேங் பேங் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது!

Posted:

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி இருக்கும் பேங் பேங் படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. ஹாலிவுட்டில் வெளியான நைட் அண்ட் டே படத்தை இந்தியில் பேங் பேங் என்று ரீ-மேக் செய்தார் இயக்குநர் சித்தார்த் ஆனந்த். ஹிருத்திக், கத்ரீனா நடித்த இந்தப்படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகி இருந்தது. அக்டோபர் 2ம் தேதி, காந்தி ...

ஷாகித் கபூரின் நடிப்பை புகழ்ந்த சோனாக்ஷி!

Posted:

ஷாகித் கபூர் நடிப்பில், கடந்தவாரம் வெளியான படம் ஹைடர். இந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஷாகித் கபூரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தை பார்த்து அமிதாப் பச்சன், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் ஷாகித்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது பாலிவுட் ...

ஷாரூக்கானுக்கு லண்டனில் விருது

Posted:

ஷாரூக்கான் தனது ஹேப்பி நியூ இயர் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் அமெரிக்காவில் சுற்றுபயணத்தை முடித்த ஷாரூக்கான் உள்ளிட்ட ஹேப்பி நியூ இயர் படக்குழு, தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டு ஸ்லாம் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஷாரூக்கானின் இந்த ஸ்லாம் நிகழ்ச்சியை பாராட்டி, பிரிட்டன் ...

என்னைப்பற்றி வெளியான காதல் செய்தி ஒரு கட்டுக்கதை! -இலியானா

Posted:

தமிழில், கேடி படத்தில் அறிமுகமானவர் இலியானா. இதே படத்தில்தான் தமன்னாவும் அறிமுகமானவர். மும்பையில் இருந்து தமிழுக்கு இறக்குமதியான இந்த இரண்டு பேரில் தமன்னாவுக்கு தொடர்ந்து தமிழில் படங்கள கிடைத்ததால் இங்கேயே தங்கி விட்டார். ஆனால் இலியானாவுக்கு ஆந்திரா சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது. அதனால் ஐதராபாத்தில் முகாமிட்டு நடித்து ...

மீடியாக்கள் மீது அனுஷ்கா கோபம்...!

Posted:

ஒருவர் ஹீரோயினாக அறிமுகமாகி சில வருடங்கள் ஆன பிறகு அவர்களிடம் மீடியாக்கள் கேட்கும் கேள்விகளில் 'உங்களுக்கு எப்ப கல்யாணம்' என்பதுதான் அதிகமாக இருக்கும். ஒரு சில முறை கேட்கும் போது மட்டும் சுவாரசியமாக பதில் சொல்லும் ஹீரோயின்கள் அதன் பின் கோபமாக மாறிவிடுவார்கள். கேட்பதையே திரும்பத் திரும்பக் கேட்டால் அவர்கள் என்னதான் ...

'ஐ' படத்திற்கு ஷாரூக்கான் பாராட்டு....!

Posted:

ஷாரூக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட ஹிந்தி நடிகர்கள் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற 'ஹேப்பி நியூ இயர்' படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டனர். அப்போது சில பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஷாரூக்கான் மிகவும் மனம் விட்டுப் பேசினாராம். சொன்ன நேரத்தில் ஷாரூக் வராமல் போக அதனால் கோபமடைந்த பத்திரிகையாளர்கள் ...

ஆண்' கார்த்திகா...'பெண்' நரேஷ்...??

Posted:

தெலுங்குத் திரையுலகில் சமீபத்தில் வெளியான 'பிரதர் ஆப் பொம்மலி' என்ற படத்தின் போஸ்டர் தற்போது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நரேஷ், கார்த்திகா, மோனல் கஜ்ஜார் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை சின்னி இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. ...

மோகன்லால் மகனைப் பாராட்டும் கமல்ஹாசன்

Posted:

மலையாளத் திரையுலகின் திறமையான நடிகர்களில் ஒருவரான மோகன்லாலின் மகன் பிரணவ் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் 'பாபநாசம்' படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வருகிறார். சிறு வயதில் சில திரைப்படங்களில் நடித்த பிரணவ், நாயகனாகத்தான் அறிமுகமாவார் என மலையாளத் திரையுலகில் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் தற்போது உதவி ...

நடிகர் சங்கத்துக்காக இணையும் ஐவர் கூட்டணி!

Posted:

இன்றைய இளவட்ட ஹீரோக்கள் மத்தியில் ஈகோ என்பது துளியும் இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. அதனால்தான் ஒருவர் நடிக்க வேண்டிய படத்தை இன்னொருவர் நடிக்க சிபாரிசு செய்கிறார்கள். நல்ல கதைகள் கிடைத்தால் தங்கள் நண்பர்களை அந்த கதையில் நடிக்க வைக்கிறார்கள். இப்படி ஆர்யா, விஷால், ஜெயம்ரவி போன்ற நடிகர்கள் செயல்பட்டு ...

திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்வதாக நான் சொல்லவே இல்லை? - செம ஹாட்டான ஸ்ருதிஹாசன்

Posted:

இந்திய அளவில் இப்போது ஸ்ருதிஹாசன்தான் செம ஹாட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தி, தெலுங்கு சினிமாக்களில் உள்ள கவர்ச்சி நடிகைகளே ஸ்ருதிஹாசன் வருகிறார் என்றால் ஒதுங்கி நிற்கும் அளவுக்கு அவர்களையெல்லாம ஓவர் டேக் செய்து ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார் ஸ்ருதி..

இந்த நிலையில், தற்போது பூஜை படத்தில் ...

புரட்சி திலகம்தான் எனக்கு பிடிக்கும்! - சரத்குமார் பேட்டி

Posted:

சுப்ரீம் ஸ்டார் பிடிக்குமா? இல்லை புரட்சி திலகம் பிடிக்குமா? என்று சரத்குமாரைக்கேட்டால், புரட்சி திலகம்தான் எனக்கு பிடித்திருக்கிறது என்கிறார். நான் நிழல் என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது அப்போது அப்படத்தில் அன்வர்அலி என்ற ஒரு இன்வென்ஸ்டிகேசன் ஆபீசராக நடித்துள்ள சரத்குமார் தனது கேரக்டர் பற்றி ...

பிரகாஷ்ராஜ் - இயக்குனர் சீனு வைட்லா சமசர முயற்சி!

Posted:

தெலுங்குத் திரையுலகில் கடந்த இரண்டு நாட்களாக நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குனர் சீனு வைட்லா மோதல் பற்றித்தான் பரபரப்பாக பேசி வருகிறார்கள். சீனு வைட்லா இயக்கி 'ஆகாடு' படப்பிடிப்பில் ஆரம்பமான சண்டையைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜை அந்தப் படத்திலிருந்து நீக்கினார் இயக்குனர் சீனு வைட்லா. அதன் பின் பிரகாஷ்ராஜுக்கு நடிக்கத் தடை போடும் ...

மெட்ராஸ் படத்துக்கு எவிடென்ஸ் விருது

Posted:

கார்த்தி, கேத்ரினா தெரசா நடித்து சமீபத்தில் வெளியான படம் மெட்ராஸ். அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கி இருந்தார். ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். வட சென்னை மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்த படம். நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்துக்கு மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு ...

50 நாளை கடந்தது க.தி.க.வ.இ: பார்த்திபன் மகிழ்ச்சி

Posted:

நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம், கடந்த ஆகஸ்ட் 15 அன்று வெளிவந்தது. இந்தப் படம் சென்னை சத்யம் காம்பளக்சில் மட்டும் 50 நாளை கடந்தது. தமிழ் நாடு முழுவதும் மற்ற தியேட்டர்களில் செகண்ட் ஷிப்டிங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதில் அறிமுகமான சந்தோஷூம், அகிலாவும் அடுத்தடுத்த படங்களில் ...

இளம் பெண் இசை அமைப்பாளரின் இசை ஆல்பம் வெளியீடு

Posted:

ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர், கம்போஸர் மரியா ரோஸ் வின்சென்ட். அமெரிக்காவில் உள்ள போஸ்டன் பெர்க்லி இசை கல்லூரியில் படித்து விட்டு வந்து இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். உலக புகழ்பெற்ற இசை வடிவங்களின் உரிமத்தை வாங்கி தமிழ் படங்களில் பயன்படுத்தி வருகிறார்.

மரியா ரோஸ் தமிழில் ...

ஆம்பள படத்திலிருந்து யுவன் வெளியேறினார்

Posted:

அரண்மனை படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள. விஷால், ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண், மெலும் இரண்டு தெலுங்கு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வந்தது. இதுவரை 40 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட படிப்பிடிப்புகள் ஊட்டியில் நாளை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™