Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அக்ஷ்ய் குமார்

Posted:

பாலிவுட்டின் பிஸி நடிகர் அக்ஷ்ய் குமார். தொடர்ந்து படங்களின் ஷூட்டிங் இருந்ததால், அவரால் தனது குடும்பத்தாருடன் சரியாக பொழுதை கழிக்க முடியவில்லை, இதனால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் 5 நாள் சுற்றுபயணமாக சிங்கப்பூர் சென்றார் அக்ஷ்ய். அங்கு தனது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாய் பொழுதை கழித்தார். இடையில் தீபவாளி பண்டிக்கைக்காக ...

ஹிருத்திக்கிற்கு காயம் - மொகஞ்சதரோ படப்பிடிப்பு தள்ளிவைப்பு!

Posted:

பேங் பேங் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஹிருத்திக் ரோஷன் மொகஞ்சதரோ என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை அசுதோஸ் கெளரிகர் இயக்குகிறார். முகமூடி படத்தின் ஹீரோயின் பூஜா, முதன்முறையாக பாலிவுட் படத்தில், அதுவும் முதல்படத்திலேயே ஹிருத்திக் ரோஷன் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் ...

தெலுங்கு குயின்-ஆன ஹூமா குரேசி!

Posted:

கங்கனா ரணாவத்திற்கு பெரிய பெயரை பெற்று தந்த படம் குயின். இப்படம் திரையுலகில் அவரை புதிய பாதைக்கு கொண்டு சென்றுள்ளது. இப்படத்தை பல்வேறு மொழிகளில் ரீ-மேக் செய்ய கடும் போட்டி நிலவி வருகிறது, நடிகைகளும் இப்படத்தின் ரீ-மேக்கில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கில் இப்படம் ரீ-மேக் ஆக இருக்கிறது, முதலில் இப்படத்தில் ...

சொத்து பிரச்னை - வீட்டை விட்டு வெளியேறினார் கார்த்திக் - போலீசில் புகார்

Posted:

அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். அதன்பின்னர் முன்னணி நடிகராக உயர்ந்து தமிழ் சினிமாவின் நவரசநாயகனாக வலம் வந்தார். இப்போது அவரது மகன் கெளதம் கார்த்திக் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். தற்போது அப்பாவும், மகனும் சினிமாவில் நடித்து ...

3வது திருமணம் செய்கிறார் யுவன் ஷங்கர் ராஜா - முஸ்லிம் பெண்ணுடன் நிச்சயம் முடிந்தது

Posted:

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா 3வது திருமணம் செய்ய இருக்கிறார், அவருக்கு கீழக்கரையை சேர்ந்த முஸ்லிம் பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது. அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. இசைஞானி இளையராஜாவின் வாரிசான இவர், தொடர்ந்து படிப்படியாக முன்னேறி முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். சமீபத்தில் ...

அசோக் செல்வன் - பிந்துமாதவி நடிக்கும் சவாலே சமாளி!

Posted:

நடிகர் அருண்பாண்டியன் வழங்கும் ஏ அண்ட் பி குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதா பாண்டியன், எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்கும் படத்திற்கு " சவாலே சமாளி " என்று பெயரிட்டுள்ளனர். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சவாலே சமாளி. அந்த தலைப்பு இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால் இப்பெயர் சூட்டியதாக ...

மகேந்திரன் - மனிஷாஜித் நடிக்கும் “விந்தை“

Posted:

காதல் 2014 படத்தையடுத்து, அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ஆர்.எல்.யேசுதாஸ் ஆர்.ஒய்.ஆல்வின், ஆர்.ஒய்கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு " விந்தை " என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். இவர் கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ...

விமலை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றி இருக்கிறேன்: கண்ணன் சொல்கிறார்

Posted:

மஞ்சப்பை படத்திற்கு பிறகு விமல் நடித்திருக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் வருகிற 7ந் தேதி ரிலீசாகிறது. இதில் அவருக்கு காமெடி ஜோடியாக சூரியும், காதல் ஜோடியாக ப்ரியா ஆனந்தும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் விமலை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றி இருக்கிறேன் என்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன்.

அவர் மேலும் கூறியதாவது: ஒரு ஊர்ல ரெண்டு ...

லண்டன் மியூசியத்தில் கத்ரினா கைப்க்கு மெழுகு சிலை!

Posted:

லண்டனில் உள்ள மேடம் டுசாட் மியூசியத்தில் உலக தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களின் மெழுகு சிலை வைக்கப்பட்டு வருகிறது. உலகின் பிரபலங்களை தேர்வு செய்ய ஒரு குழு செயல்படுகிறது. அந்த குழு பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி சிபாரிசு செய்பவர்களின் மெழுகு சிலை அங்கு வைக்கப்படும்.

இந்தி திரை நட்சத்திரங்களில் ...

தண்ணீர் லாரி டிரைவராக நடிக்கிறார் பாலாஜி

Posted:

காதல் சொல்ல வந்தேன் படத்தில் அறிமுகமானவர் பாலாஜி. அதன் பிறகு ஒரு ஊர்ல என்ற படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்தார். இப்போது நகர்வலம் படத்தில் தண்ணீர் லாரி டிரைவராக நடிக்கிறார். சென்னை நகரில் தண்ணீர் சப்ளை செய்யும் லாரி டிரைவருக்கும், அடுக்குமாடி காலணியில் வசிக்கும் பள்ளி மாணவிக்கும் இடையில் வரும் காதலும், அதைத் தொடர்ந்து ...

முந்தானை முடிச்சுக்கு வருகிறார் தேவி கிருபா

Posted:

தென்றல், உறவுகள் சங்கமம் தொடர்களில் நடித்து வந்த தேவி கிருபா, தற்போது முந்தானை முடிச்சு தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இதற்கு முந்தைய சீரியல்களில் சேலை கட்டி அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித்தேன். வயதை மீறிய தோற்றத்துடன் நடித்தேன். முந்தானை முடிச்சில் மார்டன் டிரஸ் அணியும் பெண்ணாக ...

போர்குதிரையில் உசிலம்பட்டி காதல்!

Posted:

ஸ்ரீபிரவீன் என்ற புதுமுகம் இயக்கி வரும் படம் போர்க்குதிரை. சைதன்ய கிருஷ்ணன் என்பவர் ஹீரோ. சாந்தினி ஹீரோயின். நாகி நீடு என்பவர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இது சுப்பிரமணியபுரம் பாணியிலான நேட்டிவிட்டி கதை. 1980 களில் உசிலம்பட்டி பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட திரைக்கதை.

"அன்பும், காதலும் ...

சின்னத்திரையிலிருந்து வரும் இன்னொரு ஹீரோ

Posted:

சந்தானம், சிவகார்த்திகேயன், ம.பா.கா.ஆனந்த் வரிசையில் சின்னத்திரையிலிருந்து வந்திருக்கும் இன்னொரு ஹீரோ முரளி ராம். இவர் பழம்பெரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஜி.என்.ரங்கராஜனின் பேரன். மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்த முரளி ராம், அவ்வப்போது படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்து வந்தார். பொறியாளன், போங்கடி நீங்களும் உங்க ...

50 ஆயிரம் கதை எழுதிய சிறுவர்கள்

Posted:

குறும்பட இயக்குனர் எஸ்.கல்யாண் தனது நண்பர் ஜே.ஜெயகிருஷ்ணனுடன் இணைந்து தயாரித்து, இயக்கும் படம் ''கத சொல்லப் போறோம்''. ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, காளி, பசங்க சிவகுமாருடன். 4 குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குழந்தைகளின் மனரீதியான பிரச்னைகளை அணுகும் படம். குழந்தைகளுக்கு கதை சொல்லி வளர்த்த காலம் மறைந்து விட்டது. அதனால் ...

டென்மார்க் தமிழர்கள் உருவாக்கிய உயிர்வரை இனித்தாய்

Posted:

வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்போது சினிமா தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொரு நாட்டில் உள்ள தமிழர்கள் இணைந்து அவர்களே நடித்து, இயக்கி தயாரிக்கும் படங்கள் வெளிவரத் தொடங்கி உள்ளது. மலேசிய தமிழர்கள் பல ஆண்டுகளாக படம் எடுத்து வருகிறார்கள். சமீபகாலமாகத்தான் அது தமிழ் நாட்டில் வெளியாகிறது. கடந்த மாதம் ...

உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு விஜய் 3 லட்சம் உதவி

Posted:

விஜய் நடித்த கத்தி படம் தீபாவளி அன்று ரிலீசானது. அன்றைய தினம் விஜய் ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழாவாக கொண்டாடினார்கள். கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். அங்குள்ள வடக்கன்சேரி என்ற ஊரைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்ற ரசிகர் விஜய் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தபோது தவறி விழுந்து இறந்தார். கத்தி படத்தின் வெற்றி ...

அம்மாவுக்கு கோவில் கட்டுகிறார் ராகவா லாரன்ஸ்!

Posted:

இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தீவிர ரஜினி ரசிகர். அதனால் ரஜினியின் குருவான ஸ்ரீராகவேந்திரருக்கு கோவில் கட்டி உள்ளார். இது தவிர ஆதரவற்ற, மாற்று திறனாளி குழந்தைகளுக்காக இல்லம் நடத்துகிறார். இப்போது தன் தாய் கண்மணிக்கு கோவில் கட்டுகிறார். இதற்காக பூந்தமல்லி அருகே உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் இடம் தேர்வு செய்துள்ளார். ...

டிசம்பர் மாதம் 25ஆம் தேதி வருகிறது கயல்

Posted:

மைனா, கும்கி வெற்றிப்படங்களைத் தொடர்ந்து புதுமுகங்களை வைத்து கயல் என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரபுசாலமான்.
இப்படத்தில் கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். இவர் பொறியாளன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். ஆனால், அவர் முதலில் நடிக்க ஒப்பந்தமானது பிரபுசாலமன் படத்தில்தான்.
ஆனந்திக்கு ஜோடியாக சந்திரன் என்ற புதுமுக நடிகர் ...

சர்வதேச திரைப்பட விழாவில் மெட்ராஸ் திரைப்படம்

Posted:

ஒவ்வொரு வாரமும் குறைந்தது நான்கு படங்களாவது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ரசிகர்களுக்குப் பிடித்த படங்கள் விமர்சகர்களுக்குப் பிடிப்பதில்லை. விமர்சகர்களுக்குப் பிடித்த படங்களை ரசிகர்கள் விரும்புவது இல்லை.
ரசிகர்களையும், விமர்சகர்களையும், நல்ல சினிமாவை விரும்புகிறவர்களையும் ஒருசேர திருப்திப்படுதும் படங்கள் ...

யட்சன் படத்தில் கௌரவ வேடத்தில் அஜித்..! உண்மையா..வதந்தியா?

Posted:

ஆர்யாவை வைத்து அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், ஆரம்பம் ஆகிய நான்கு படங்களை இயக்கியவர் இயக்குநர் விஷ்ணுவர்தன்.
தற்போது யட்சன் என்ற படத்தின் மூலம் இயக்குநர் விஷ்ணுவர்தன் ஆர்யா உடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார்.
யுடிவி தயாரிக்கும் யட்சன் படத்தில் இன்னொரு நாயகனாக விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணாவும் நடிக்கிறார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™