Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஈசிஆரில் பிரமாண்டமாக தயராகிறது விஜய் படத்துக்கான தர்பார் செட்..!

Posted:

கத்தி படத்தை முடித்துவிட்ட விஜய், அப்படத்தின் ரிசல்ட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். படம் தியேட்டருக்கு வருவதற்குள் பலமுனைகளிலிருந்தும் கத்தி படத்துக்கு பல்வேறு பிரச்னைகள் வந்து கொண்டு இருப்பதால் கொஞ்சம் டென்ஷன் உடன் இருக்கிறார்கள் விஜய் உள்ளிட்ட கத்தி படக்குழுவினர். இருந்தாலும் அவற்றை எல்லாம் தகர்த்து எறிந்துவிட்டு ...

புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிபோகும் ரன்பீர் கபூர்-கத்ரீனா!

Posted:

பாலிவுட்டின் நீண்டநாள் காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும். தற்போது, ''பேங் பேங்'' படத்தின் ஹிட்டால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் கத்ரீனா. அதேசமயம் அவரது காதலரான ரன்பீர் கபூர், தொண்டையில் ஆபரேஷன் செய்து கொண்டு ஓய்வில் இருக்கிறார். தற்போது அவரால் அதிகம் பேச முடியாது, உணவும், ...

தனுஷின், 'காக்கா முட்டை'யில் சிம்பு!

Posted:

வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிகண்டன் இயக்கி இருக்கும் படம் காக்க முட்டை. அடுத்த மாதம் வெளிவருகிறது. அதற்குள் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை அள்ளிக் கொண்டிருக்கிறது. சென்னை பகுதியில் உள்ள சேரி சிறுவர்களின் வாழ்க்கைதான் கதை. அவர்கள் சேரியில் வாழ்ந்தாலும் அந்த சூழ்நிலைக்குள்ளும் சந்தோஷமாக ...

தானு வெட்ஸ் மானு இரண்டாம் பாகத்தில் மாதவன்-கங்கனா மீண்டும் நடிக்கிறார்கள்!

Posted:

மாதவன், கங்கனா ரணாவத் நடித்து 2011ம் ஆண்டு வெளிவந்த படம் தானு வெட்ஸ் மானு. ஆனந்த் எல்.ராய் இயக்கி இருந்தார். பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுக்கிறார்கள். அதிலும் மாதவன், கங்கனா ரணாவத்தே நடிக்கிறார்கள்.

லண்டன் டாக்டரான மாதவன் திருமணம் செய்து கொள்ள இந்தியா வருகிறார். கான்பூரில் கங்கனாவை பெண் ...

தெலுங்கில் கவர்ச்சியில் கலக்கும் ரகுல் ப்ரீத்தி சிங்!

Posted:

தெலுங்கில் இப்போது கவர்ச்சி கனவு கன்னியாக வளர்ந்து நிற்கிறவர் ரகுல் ப்ரீத்தி சிங். கவுதம் கார்த்திக் நடித்த என்னமோ ஏதோவில் நடித்திருந்தார். ஆனால் அது அவருக்கு முதல் படம் அல்ல. செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த 7ஜி ரெயின்போ காலனியில் சோனியா அகர்வாலின் தோழியாக நடித்திருக்கிறார். தடையறத் தாக்க படத்தில் இரண்டாவது நாயகியாக ...

70 அடி உயரத்தில் பறந்து பறந்து நடித்த பிரயஹா!

Posted:

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கி வரும் படம் பிசாசு. இயக்குனர் பாலா தயாரிக்கிறார். நாகா என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். லண்டன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்து முடித்து விட்டு நடிகராகியிருக்கிறார். கொச்சியை சேர்ந்த நடன கலைஞர் மற்றும் மாடல் அழகியான பிரயஹா இதில் ஹீரோயினாக ...

கத்தி டீசருக்காக காப்பியடித்த அனிருத்!

Posted:

ஒருகாலத்தில் சினிமாவுக்கு இசையமைப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக இருந்தது. இன்றைக்கு நிலைமை தழைகீழாகிவிட்டது. ஒரு கீபோர்டும், கம்ப்யூட்டரும் இருந்தால் போதும்.. யார் வேண்டுமானாலும் இசையமைப்பாளர்கள் ஆகிவிடலாம் என்ற சூழல் உருவாகிவிட்டது. டிஜிட்டல் சினிமா, சில லட்சங்களில் படம் எடுப்பது போன்ற காரணங்களால் புதுமுக ...

கோடம்பாக்கத்தில் மீண்டும் ஜே.கே.ரித்தீஷ்!

Posted:

பவர் ஸ்டாருக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கியவர் ஜே.கே.ரித்தீஷ்!
ராமநாதபுரத்திலிருந்து கோடம்பாக்கம் வந்த முகவை குமார், தன் பெயரை ஜே.கே.ரித்தீஷ் என்று மாற்றிக் கொண்டு கானல் நீர் என்ற படத்தை தயாரித்தார்!
அந்தப்படத்தில் அவரும் ஒரு ஹீரோவாக நடித்தார்.
தொடர்ந்து, நாயகன் என்ற படத்தை தயாரித்து ஸோலோ ஹீரோவானார். அதுவரை ...

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: நளினி அணி வெற்றி!

Posted:

தென்னிந்திய சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். அந்த வகையில் 2014-2017ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று (அக் 12) நடந்தது. சென்னை விருகம்பாக்கம் ஏ.கே.ஆர் திருமண மண்டபத்தில் நடந்த தேர்தலில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை வாக்களித்தனர். மொத்தமுள்ள 1300 உறுப்பினர்களில் 700க்கும் மேற்பட்டோர் ...

கமல், விக்ரம் வழியில்... கரு.பழனியப்பன்! கெட்டப் ரகசியம் காக்கிறாராம்!

Posted:

பார்த்திபன் கனவு படத்தில் இயக்குநராக அறிமுகமான கருபழனியப்பன் விஷயமுள்ள இயக்குநர் என்று பெயர் எடுத்தாலும், வெற்றிப்பட இயக்குநர் என்ற பெயரை எடுக்கவில்லை. அவரரது முதல் படமான பார்த்திபன் கனவு வர்த்தக வெற்றியைப்பெற்றாலும், அடுத்தடுத்து இயக்கிய சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை, சதுரங்கம், ஜன்னல் ஓரம் ஆகிய ...

பூல் அவுர் கான்தே-2-ல் அஜய் தேவ்கான் இல்லை!

Posted:

1991-ம் ஆண்டு அஜய் தேவ்கான் நடிப்பில் வெளியான படம் பூல் அவுர் கான்தே. இக்பால் துரானி கதை அமைப்பில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருக்கிறது. சுமார் 7 வருடங்களுக்கு பிறகு பாலிவுட்டிற்கு திரும்பியுள்ள இக்பால் துரானி, இந்த இரண்டாம் பாகத்திற்கு திரைக்கதை ...

தனக்கு கிடைத்துள்ள புகழை சல்மானுக்கு அர்பணித்த ஜாக்லின்

Posted:

பாலிவுட்டின் கவர்ச்சியான நடிகையான ஜாக்லின் பெர்னாண்டசிற்கு டுவிட்டரில் உள்ள ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டி உள்ளது. இலங்கையைச் சேர்ந்தவரான ஜாக்லின், 2009ம் ஆண்டு டுவிட்டரில் இணைந்தார்.
தற்போது தனக்கு ஒரு மில்லியன் ரசிகர்கள் கிடைத்துள்ளது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஜாக்லின், இந்த புகழை நடிகர் சல்மான் ...

19 வருடங்களாக ஓடும் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தை தொடர்ந்து திரையிட முடிவு!

Posted:

கடந்த சில வருடங்களாக தியேட்டர்களில் படங்கள் ஓடும் நாட்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. படங்களின் எண்ணிக்கையும், ரிலீஸ் சென்டர்களின் எண்ணிக்கையும் அதிகமானதால் ஏற்பட்ட மாற்றம் இது. கடந்த காலங்களில் 100 நாட்கள் படங்கள் ஓடுவதும், 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடுவதும் வழக்கத்தில் இருந்தது. சமீபகாலங்களில் இந்தநிலை ...

கத்தி தீபாவளிக்குத்தான்...! தயாரிப்பாளர் திட்டவட்டமான அறிவிப்பு!

Posted:

கத்தி படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க அப்படத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு நிச்சயமாக பிரஷர் அதிகமாகி இருக்கும். ஜெயலலிதாவின் சிறைவாசத்தினால் அரசாங்கத்தினால் படத்துக்கு சிக்கல் வராது என்கிற நம்பிக்கையில், திட்டமிட்டபடி கத்தி படத்தை திரைக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று ஏ.ஆர்.முருகதாஸும், லைகா புரொடக்ஷனும் ...

தில் 2 படத்திற்கு அமிர்கான் பொருத்தமாக இருக்க மாட்டார்

Posted:

மாதுரி தீட்சித் மற்றும் அமீர் கான் நடித்த தில் படத்தை இயக்கிய இந்திரா குமார், தற்போது அதனை ரீமேக் செய்து அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளதாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. புது படம் ஒன்றை இயக்குவதற்காக கதை தேடிக் கொண்டிருந்த இந்திரா குமாருக்கு, தில் படத்தின் கதையையே ரீமேக் செய்தால் என்ன என்ற ஐடியா வந்ததாம்.
ஆனால் ...

கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு தடை கோரி வழக்கு - நீதிபதி தள்ளுபடி!

Posted:

கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை தடை செய்ய கோரி, மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை, நீதிபதி தள்ளுபடி செய்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் கத்தி. இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரண் தயாரித்துள்ளார். இவர் இலங்கை அதிபர் ராஜபக்ஷே உடன் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இதனால் இப்படத்தை தடை செய்ய ...

நடிகர் சங்கத்துக்கான படத்தை சுந்தர்.சி இயக்குகிறாரா? குஷ்பூ விளக்கம்!

Posted:

பூஜை படத்தை அடுத்து சுந்தர்.சி. இயக்கத்தில் ஆம்பள திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஷால். அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கும் ஆம்பள படத்தில், மதுரிமா, மாதவி லதா, ரம்யாகிருஷ்ணன், கிரண் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரும் நடித்து வருகின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி உள்பட ஐந்து இசையமைப்பாளர்கள் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர். ஆம்பள ...

ஒரே பாடலில் சமந்தா, சார்மி நடனம்...!

Posted:

சிலம்பரசன் நாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சார்மி. அதன் பின் "ஆஹா எத்தனை அழகு, காதல் கிசு கிசு" ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். இங்கு அவருக்கு பெரிய வரவேற்பு இல்லாததால் தொடர்ந்து தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தினார். அங்கு ஏறக்குறைய எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். தற்போது ...

மணிரத்னம் இயக்கும் லோபட்ஜெட் படம்!

Posted:

பெரிய பட்ஜெட்டில் இயக்கிய ராவணன், கடல் ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வி அடைந்ததால் கடும் நெருக்கடியில் இருந்தார் மணிரத்னம். எனவே அடுத்த படத்தை சின்ன பட்ஜெட்டில் எடுக்க மணிரத்னம் திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது. அதற்காகவே தான் எற்கனவே இயக்கிய மௌனராகம் படத்தை ரீமேக் செய்வது என்ற முடிவுக்கு வந்தாராம் மணிரத்னம். அவர் ...

'ஐ' நவம்பரில் வந்து விடுமா ?

Posted:

பெரிய படங்கள் என்றாலே ஏதாவது பிரச்சனை வந்து விடுகிறது. 'ஐ' படத்தின் இசை வெளியீட்டிற்கு முன்னதாகவே அந்தப் படம் தீபாவளியன்று திரைக்கு வந்துவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போதுதான் படத்தின் டப்பிங் பணிகள் தமிழில் முடிந்து மற்ற மொழிகளுக்கும் நடந்து வருகிறது. ஏ.ஆர். ரகுமானும் பின்னணி இசை சேர்ப்பு வேலைகளில் பணியாற்றி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™