Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 50வது படம் விஜய் படம்!

Posted:

வசந்தபாலன் இயக்கிய, ‛‛வெயில்'' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். ஏ.ஆர்.ரஹ்மானின், சகோதரியின் மகனான ஜி.வி., குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இசையமைப்பாளராக மட்டுமல்லாது, தயாரிப்பாளராகவும், நடிகராகவும் மாறியிருக்கும் ஜி.வி.பிரகாஷ், இப்போது நடிப்பு, இசையமைப்பு என பிஸியாக ...

ஒரே படத்தில் விஷால், ஆர்யா, கார்த்தி, ஜீவா, ஜெயம் ரவி

Posted:

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான விஷால், ஆர்யா, கார்த்தி, ஜீவா, ஜெயம் ரவி ஆகியோர் ஒரே படத்கதில் சேர்ந்து நடிக்க போகிறார்களாம். அதுவும் சம்பளம் வாங்காமல் நடிக்க போகிறார்களாம்.

இவர்கள் நடிக்கும் இந்த படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக புதிய கட்டிடம் அமைப்பதற்கு தர உள்ளனராம். இது பற்றி விஷால் ...

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக ராதிகா தேர்வு: குஷ்பு பொதுச் செயலாளர்

Posted:

தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று (அக் 11) நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் ராதிகா சரத்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2014- 2016ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சங்கத்தின் தலைவராக ராதிகா சரத்குமாரே மீண்டும் போட்டியின்றி ...

மீண்டும் உயிர் பெறுகிறது களவாடிய பொழுதுகள்: நாளை பாடல்கள் ரிலீஸ்

Posted:

தங்கர் பச்சான் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள படம் களவாடிய பொழுதுகள், பிரபுதேவா, பூமிகா, சத்யராஜ், பிரகாஷ்ராஜ், கஞ்சா கருப்பு நடித்துள்ளனர். பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் கே.கருணாமூர்த்தி, சி.அருண்பாண்டியன் தயாரித்தனர்.
ஒன்பது ரூபாய் நோட்டு படத்திற்கு பிறகு தங்கர் பச்சான் இயக்கிய படம் இது. படம் ...

ராய் லட்சுமிக்காக படம் தயாரிக்கிறது மும்பை நிறுவனம்

Posted:

ராய் லட்சுமி கடந்த 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் பெயர் சொல்லும்படி அவருக்கு படங்கள் அமையவில்லை. அஜீத், ஜெயம் ரவியுடன் நடித்தும் அவருக்கு அது கைகொடுக்கவில்லை.
சமீபத்தில் இரும்பு குதிரை, அரண்மனை படங்களில் நடித்தார். மலையாளத்தில் மம்முட்டியுடன் 3வது படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ராய் லட்சுமி ...

நடிகர் பாலா மீது வீடு புகுந்து தாக்குதல்

Posted:

அன்பு, காதல் கிசுகிசு படங்களில் நடித்தவர் பாலா. கடைசியாக அவரது அண்ணன் சிவா இயக்கிய வீரம் படத்தில் அஜீத்துடன் நடித்தார். பாலாவுக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் மலையாளத்தில் பிசியான நடிகர். இதுவரை 60 படங்களில் நடித்துள்ளார்.
பாலாவுக்கும் மலையாள பின்னணி பாடகி அம்ருதாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ...

இளமை தோற்றத்திற்கு மாறிய கமல்

Posted:

மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த த்ரிஷியம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தின் சூட்டிங்கில் தீவிரமாக இறங்கி உள்ளார் கமல்.

பாபநாசம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புக்கள் நெல்லை மாவட்டத்தின் பல இடங்களில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் சிறிது நாட்கள் இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் இப்படத்தின் சூட்டிங் ...

விளம்பர படத்திற்காக உடல்எடையை குறைத்த அர்ஜூன் கபூர்

Posted:

நடிகர் அர்ஜூன் கபூர் சமீபத்தில் லிக்கர் பிராண்ட் விளம்பரம் ஒன்றின் சூட்டிங்கிற்காக வந்திருந்தார். இந்த குறிப்பிட்ட விளம்பரத்திற்காக அவர் ரொம்பவே பயிற்சி மேற்கொண்டிருந்தது தெரிந்தது. அத்துடன் அவற்றின் முதுமை தோற்றம் மறைந்து புதிய அவதாரம் எடுத்தது போன்று இருந்தார். அவரின் புதிய தோற்றம் முற்றிலும் வித்தியாசமானதாகவும், ...

விஷாலின் 'பூஜை'...தெலுங்கில் புதிய சாதனை...

Posted:

தீபாவளிக்கு விஜய், சமந்தா நடிக்கும் 'கத்தி', விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'பூஜை' ஆகிய படங்கள் மட்டுமே வருகின்றன. இந்த இரண்டு படங்களுமே தெலுங்கில் 'டப்பிங்' செய்யப்பட்டு வெளியாக உள்ளது. 'கத்தி' படம் கேரளாவில் மட்டும் 200 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு புதிய சாதனை படைக்க உள்ள நிலையில், 'பூஜை' படம் ஆந்திரா மற்றும் ...

காஜல் அகர்வாலைக் கிண்டலடித்த 'கோட்டா'...

Posted:

"சாமி, திருப்பாச்சி, கொக்கி, சத்யம், கோ, தாண்டவம், சமீபத்தில் வெளிவந்த அரண்மனை" உட்பட பல தமிழ்ப் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்தவர் தெலுங்கு நடிகர் கோட்டா சீனிவாசராவ். இவர் மீது இங்கிருந்து தெலுங்குத் திரையுலகிற்கு நடிக்கச் செல்லும் பல தமிழ் நடிகர்கள் குற்றச்சாட்டுக்களை வைப்பார்கள். தமிழ் நடிகர்கள் ...

தெலுங்குத் திரையுலகில் புதிய பிரச்சனை...

Posted:

தமிழோ, தெலுங்கோ திரையுலகத்தினருக்கிடையே பல பிரச்சனைகள் சமீப காலமாக எழுந்து வருகின்றன. இதில் சமீபத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது தெலுங்குத் திரையுலகம்தான். சில வாரங்களுக்கு முன் வெளிவந்த ஜுனியர் என்டிஆர் நடித்த 'ரபாஸா' தெலுங்குப் படமும், மகேஷ் பாபு நடித்த 'ஆகாடு' திரைப்படமும் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு பல கோடி ...

குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹேப்பி நியூ இயர் டீம்

Posted:

கபில்தேவ் நடத்தும் காமெடி நைட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஹேப்பி நியூ இயர் படத்தை புரோமோட் செய்த அப்படக் குழுவினர் சமீபத்தில் அமிதாப் பச்சன் நடத்தும் கவுன் பனேகா குரோர்பதி சீசன் 8 நிகழ்ச்சி நடைபெற்ற செட்டிற்கு விசிட் அடித்துள்ளனர். ஹேப்பி நியூ இயர் படத்தை புரோமோட் செய்வதற்காக நடத்தப்பட்ட இந்த சிறப்பு எபிசோட்டில் ...

கத்தி படத்திற்கு யு சான்றிதழ்

Posted:

தீபாவளிக்கு ரிலீசாகும் படங்களின் போட்டியில் முன்னணியில் இருப்பது விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் கத்தி படம். பல தடைகளை கடந்து தற்போது ரிலீசிற்கு காத்திருக்கும் இந்த படம் நேற்று சென்சார் போர்டின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கத்தி படத்துடன் தீபாளிக்கு ரிலீசாக உள்ள விஷால் நடித்த பூஜை ...

2 நாட்களில் ஐ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

டைக்டர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்-எமி ஜாக்சன் நடித்துள்ள ஐ படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த நிலையில், அடுத்த மாதம் படத்தை வெளியிடப் போவதாக கூறப்பட்டு வருகிறது.

ஐ படம் தீபாவளிக்கு ரிலீசாகாமல் தள்ளிப் போகும் காரணம் குறித்து தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறுகையில், தெலுங்கிலும் ...

ஸ்ரீதேவிக்கு பதிலளிக்காத ராம்கோபால் வர்மா...

Posted:

ராம்கோபால் வர்மா தயாரித்து வரும் 'ஸ்ரீதேவி' படத்தின் போஸ்டர்கள் பலத்த சர்ச்சையை கிளப்பியதை அடுத்து, அந்தப் படத்திற்கு தன்னுடைய பெயரை பயன்படுத்தக் கூடாதெனவும், மூன்று நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் நடிகை ஸ்ரீதேவி இரண்டு நாட்களுக்கு முன்பே ராம்கோபால் வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். ஊர் பிரச்சனை எதுவானாலும் ...

ஆக்ஷன் ஜாக்சனில் புதிய தோற்றத்தில் சோனாக்ஷி

Posted:

பிரபுதேவா இயக்கத்தில் அஜய்தேவ்கன் நடிக்கும் ஆக்ஷன் ஜாக்சன் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சோனாக்ஷி. இந்த படம் தொடர்பான தனது ஃபஸ்ட்லுக் போட்டோ ஒன்றை அவர் தனது சமூக வலைதள பகுதியில் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இதில், கவர்ச்சிகரமாகவும் ஸ்டைலாகவும் சோனாக்ஷி போஸ் கொடுத்துள்ளார். தனது ரசிகர்களின் அறிவுரைப்படியே தனது தோற்றத்தை ...

ஹேப்பி நியூ இயரில் ஷாருக்கான் மகன் ஆப்ரம்

Posted:

ஷாருக்கான் நடித்து வெளிவர இருக்கும் ஹேப்பி நியூ இயர் படத்தில் குழந்தையாக இருக்கும் அவரது மகன் ஆப்ரமும் நடித்துள்ளாராம். ஆப்ரமுடன் அவரது அம்மாவும் (ஷாருக்கானின் மனைவி) இந்த படத்தில் நடித்துள்ளாராம். ஷாருக்கானும், ஹேப்பி நியூ இயர் படத்தின் டைரக்டரான ஃபரக் கானும் வலியுறுத்தியதன் பேரில் இந்த படத்தில் நடிப்பதற்கு ஷாருக்கானின் ...

இயக்குனராகும் நடிகர் பிரசன்னா!

Posted:

பைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா. அதையடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் படங்கள் எதுவுமே வெற்றி பெறாததால் மார்க்கெட்டில் பின்தங்கிய அவர், பின்னர் கேரக்டர் நடிகராக மாறினார். 2012ல் சினேகாவை திருமணம் செய்து கொண்டவர், அதன்பிறகாவது தனது திரைவாழ்வில் மாற்றம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்தார்.

ஆனால், ...

சோனியா அகர்வாலுக்கு நம்பிக்கை கொடுத்த பாலக்காட்டு மாதவன்!

Posted:

ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்திற்கு பிறகு பாலக்காட்டு மாதவன், பொய் சொல்லாதேடி, அச்சமென்ன ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சோனியா அகர்வால். இதில் பாலக்காட்டு மாதவன் படத்தில் மடிசார் மாமியாக நடிக்கிறார் சோனியா. இதற்கு முன்பு தான் கதாநாயகியாக நடித்த படங்களில் இருந்து மாறுபட்டு பக்கா குடும்ப பெண்ணாக நடித்திருக்கும் இந்த படம் ...

சங்குதேவன் படத்திலிருந்து விஜயசேதுபதி விலகியது ஏன்?

Posted:

வழக்கமான ஹீரோ கதைகளில் இருந்து மாறுபட்டு வித்தியாசமான கோணத்தில் கதைகளை செலக்ட் பண்ணி நடித்து வரும் விஜயசேதுபதி, சங்குதேவன் என்ற படத்திலும் வித்தியாசமான கதையில் நடித்தார். அந்த கதை தன்னை வெகுவாக பாதித்ததாகவும் அப்போது சொன்னார். அதன்காரணமாக, அதுவரை படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த விஜயசேதுபதி, அந்த கதைக்காக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™