Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கிளிமஞ்சாரோ மலையில் ஏறி 12 வயது ஆந்திர சிறுமி சாதனை

Posted: 04 Oct 2014 10:57 PM PDT

ஆப்பிரிக்கா நாட்டில் தான்சானியா மாவட்டத்தில் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரத்து 891 மீட்டர் உயரத்தில் உள்ளது. மலையின் உயரம் 19 ஆயிரத்து 349 அடி ஆகும். எந்த மலையுடன் ஒட்டாத உலகிலேயே உயரமான மலையாக கிளிமஞ்சாரோ திகழ்கிறது. இந்த மலையின் சிகரத்தில் 12 வயது இந்திய சிறுமி ஏறி சாதனை படைத்து உள்ளார். அந்த சிறுமியின் பெயர் ஜாஸ்னவி. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆதிவாசி பெண்.

அசாமில் என்கவுன்டர்: இரு தீவிரவாதிகள் பலி

Posted: 04 Oct 2014 10:31 PM PDT

அசாமில் இன்று அதிகாலை நடைபெற்ற என்கவுன்டரில் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். அம்மாநிலத்தில் உள்ள கோல்புரா மாவட்டத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற என்கவுன்டரில் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியை சேர்ந்த காமாண்டர் நிலையில் உள்ள தீவிரவாதியையும், கரோ தேசிய விடுதலை முன்னணியை சேர்ந்த ஒரு தீவிரவாதியையும் பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

கேரளாவில் மதுக்கடைகளுக்கு ஞாயிறு விடுமுறை இன்று முதல் அமல்

Posted: 04 Oct 2014 09:43 PM PDT

கேரளாவில் 10 ஆண்டுகளுக்குள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு செய்து உள்ளது. மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் விதமாக புதிய மது பார்களுக்கு லைசென்சு வழங்கப்பட வில்லை. மேலும் 418 மது பார்களுக்கான லைசென்சு ரத்து செய்யப்பட்டு மது பார்கள் மூடப்பட்டன.

பீகார்: தசரா விழாவில் 33 பேர் பலியான தள்ளுமுள்ளுக்கு காரணம் வதந்தியா?

Posted: 04 Oct 2014 05:20 PM PDT

பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று முன்தினம் இரவு தசரா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர். பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெற்ற தசரா பண்டிகை கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இரவு 7 மணியளவில் 'ராவண வதம்' நிகழ்ச்சி முடிந்ததும், மைதானத்தை விட்டு மேற்கு பகுதி நுழைவுவாயில் வழியாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூட்டம்கூட்டமாக வெளியேறினர்.

காஷ்மீரில் மீண்டும் அத்துமீறல்: பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் படுகாயம்

Posted: 04 Oct 2014 05:05 PM PDT

காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோரப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த சில தினங்களாக திடீர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்முவில் ஆர்னியா செக்டரில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் உள்ள பிட்டல் மற்றும் டெண்ட் கார்டு பகுதிகளை குறி வைத்து நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதேபோல், ஷினாஸ், ஜெபோவல், பட்வார் மற்றும் சேவே ஆகிய நிலைகளில் விட்டுவிட்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

எண்ணெய் மில்லில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாப பலி

Posted: 04 Oct 2014 04:49 PM PDT

ஆந்திர மாநில தலைநகர் ஐதரபாத்தின் ககன்பஹாட் பகுதியில் உள்ள ஒரு எண்ணெய் மில்லில் கடந்த சில நாட்களாக பராமரிப்பு மற்றும் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த மில்லில் உள்ள எண்ணெய் குளிர்விக்கும் இயந்திரத்தில் அடைந்து கிடக்கும்கழிவுகளை அகற்றுவதற்காக நேற்று 3 தொழிலாளிகள் அந்த இயந்திரத்தினுள் இறங்கி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத வகையில்

பாராளுமன்ற வளாகத்தில் கொடி காத்த குமரனுக்கு சிலை அமைக்கக்கோரி வீதி நாடகம்

Posted: 04 Oct 2014 04:36 PM PDT

கொடி காத்த குமரனுக்கு பாராளுமன்ற வளாகத்தில் சிலை அமைக்கக் கோரி திருப்பூர் கொடி காத்த குமரன் இளைஞர் பேரவை சார்பில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று காலை வீதி நாடகம் நடத்தப்பட்டது. திருப்பூர் குமரன் கலைக்குழுவை சார்ந்த கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் குமரனின் இறுதிக் கால நிகழ்வுகளை வீதி நாடகமாக

எல்லைக்கோடு வழியாக பாகிஸ்தானில் இருந்து கடத்த முயன்ற ரூ.10 கோடி ஹெராயின் பறிமுதல்

Posted: 04 Oct 2014 03:55 PM PDT

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதைப்பொருள் கடத்தும் முயற்சியை முறியடித்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை கைப்பற்றியுள்ளனர். இப்பகுதியின் ஷீலா என்ற இடத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டு புறக்காவல் முகாமில் நேற்று முன்தினம் நள்ளிரவு வழக்கம்போல் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பீகாரில் வாலிபர் அடித்துக் கொலை: போலீஸ் நிலையம் சூறை - ஜீப்கள் எரிப்பு

Posted: 04 Oct 2014 03:30 PM PDT

பீகார் மாநிலத்தின் நவாடா மாவட்டத்தில் உள்ள யாதவ தோலா பகுதியைச் சேர்ந்த மித்து சவுகான்(25) என்பவர் அடையாளம் தெரியாத சில நபர்களால் நேற்று அடித்துக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சிட்டாமார்ஹி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஊர் மக்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

பக்ரீத் பண்டிகையை கொண்டாடப் போவதில்லை: நஜ்மா ஹெப்துல்லா அறிவிப்பு

Posted: 04 Oct 2014 03:23 PM PDT

காஷ்மீரில் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும், பாட்னாவில் நேற்று தசரா விழா நெரிசலில் சிக்கி பலியான துயரச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பக்ரீத் பண்டிகையை கொண்டாடப் போவதில்லை என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி நஜ்மா ஹெப்துல்லா இன்று அறிவித்தார்.

மோடியை எதிர்த்து மோதல் போக்கை கடைபிடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிறையில் அடைப்பு

Posted: 04 Oct 2014 03:12 PM PDT

குஜராத் மாநில முதல்-மந்திரியாக நரேந்திர மோடி பதவி வகித்தபோது அம்மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர் பிரதீப் சர்மா. மோடியின் உத்தரவின் பேரில், இளம்பெண்ணை போலீசார் உளவு பார்த்த விவகாரம் கடந்த ஆண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பிரதீப் சர்மாவின் பெயரும் இணைத்துப் பேசப்பட்டது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நில அபகரிப்பு குற்றச்சாட்டு உள்பட 5 குற்ற வழக்குகளை பிரதீப் சர்மா மீது

வாரணாசியில் பாரதியார் தங்கி இருந்த வீட்டை தேசிய சின்னமாக அறிவிக்க தருண் விஜய் வேண்டுகோள்

Posted: 04 Oct 2014 02:40 PM PDT

தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும், திருக்குறளுக்கும் குரல் கொடுத்த உத்தரகாண்ட் மாநில எம்.பி. தருண் விஜய் கூறியதாவது:- மகாகவி பாரதியார் தன்னுடைய இளமை காலத்தில் வாரணாசியில் ஒரு வீட்டில் தங்கியிருந்ததை அறிந்து கடந்த வாரம் அந்த வீட்டை சென்று பார்த்தேன். தற்போது அங்கு தங்கியுள்ள மகாகவியின் சந்ததியினருக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் அந்த வீட்டை தேசிய பாரம்பரிய

காஷ்மீரில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

Posted: 04 Oct 2014 01:48 PM PDT

காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள சுக்னி நாலா பகுதியில் லஸ்கர் இ-தொய்பா தீவிரவாதிகளின் பதுங்கு குழி இருப்பதாக ராணுவத்தினருக்கும், மாநில போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் விரைந்து சென்று அந்த பகுதியில் பதுங்கு குழி இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் அதற்குள் சென்று ராணுவத்தினர் சோதனையிட்டபோது, அந்த பதுங்கு குழி ஒரு ஆயுதக் கிடங்கு போல் காட்சியளித்தது.

125 கோடி மக்கள் எனக்கு அளித்த ஆதராவால் தான் இந்தியாவை அமெரிக்கா திரும்பிப் பார்த்தது: மோடி பேச்சு

Posted: 04 Oct 2014 01:43 PM PDT

மராட்டிய மாநில சட்டசபைக்கு வரும் 15-ம் தேதி தேர்தல் நடைபெறுகின்றது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து அவுரங்காபாத், பீட் மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் நேற்று சூறாவளி பிரசாரப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசியதாவது:- கடந்த 15 ஆண்டு காலமாக இங்கு நடைபெற்ற காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மாநிலமே நாசமாகிப் போய்விட்டது. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள்,

இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்போம் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி குறித்து சோனியா தாக்கு

Posted: 04 Oct 2014 01:34 PM PDT

அரியானா மாநிலத்தில் 15-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி அங்கு பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர், காங்கிரஸ் 60 ஆண்டுகால ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார். பிரதமர் பிரசாரம் செய்த ஒரு மணி நேரத்தில் அந்த மாநிலத்தில் மேஹம் என்ற இடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தல் பிரசாரத்தில்

மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் சேர்ந்தது குறித்து முன்னாள் மத்திய மந்திரி சசி தரூர் விளக்கம்

Posted: 04 Oct 2014 12:57 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டை இன்னும் 5 ஆண்டுகளில் தூய்மையானதாக மாற்றுவதற்காக 'தூய்மை இந்தியா' என்னும் திட்டத்தை அறிவித்து, அதை தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தில் தொடங்கிவைத்தார். மேலும், இந்த திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம்

திருப்பதி கோயில் பிரம்மோற்சவ வசூல் ரூ. 20.18 கோடி

Posted: 04 Oct 2014 12:55 PM PDT

திருப்பதி-திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவம் எனப்படும் 9 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இவ்வாண்டு பிரம்மோற்சவ விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த விழாவைக் காண நாடெங்கிலும் இருந்து சுமார் 10 லட்சம்

பஞ்சாப்: ராணுவ வாகனத்தில் ரூ.200 கோடி ஹெராயின் பிடிபட்டது

Posted: 04 Oct 2014 11:56 AM PDT

பஞ்சாப் மாநில தொழில் நகரமான லூதியானா வழியாக ஹெராயின் கடத்தப்படுவதாக மாநில போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. உடனடியாக களமிறங்கிய அதிகாரிகள், லூதியானா-பெரோஸ்பூர் சாலை வழியாக சென்ற வாகனங்களை எல்லாம் முல்லான்பூர் அருகே நேற்று தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது, அவ்வழியாக 'ராணுவ பணிக்காக' என்ற வாசகத்துடன் வந்த வாகனத்தையும் சந்தேகத்தின்பேரில் மடக்கினர்.

ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு மாற்ற வேண்டும்: முன்னாள் பிரதமர் வலியுறுத்தல்

Posted: 04 Oct 2014 10:40 AM PDT

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவேகவுடா தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் வி.ஐ.பி. கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.

காஷ்மீர் எல்லையில் கண்ணிவெடி வெடித்ததில் ராணுவ வீரர் பலி

Posted: 04 Oct 2014 10:20 AM PDT

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இன்று பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நிலத்திற்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்த வெடிகுண்டை தீவிரவாதிகள் வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™