Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எந்த நாள்... உகந்த நாள்? வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

Posted: 06 Oct 2014 03:23 PM PDT

எந்த நாள்... உகந்த நாள்? வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் இந்து சாஸ்திரத்தில், மனிதன் ஒருவன் பிறப்பதற்கு முன்பிருந்தே பல்வேறு சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. இறப்புக்குப் பின்னும் அவை தொடரும். இதுபோன்ற சடங்குகளையும், நாம் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் விஷயங்கள், வீடு கட்டுவது, தொழில் துவக்கம் முதலான நற்காரியங்களையும் உரிய நாட்களைத் தேர்வு செய்து அன்று ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன ஞான நூல்கள். அவை தரும் விளக்கங்களின்படி, எந்தெந்த விஷயங்களை எந்தெந்த நாட்களில் நிகழ்த்தலாம் என்பது ...

ஊழல் செய்தவர்கள் ஆதரவு தேவையில்லை: மோடியின் பேச்சுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு !

Posted: 06 Oct 2014 11:59 AM PDT

ஊழல் செய்தவர்கள் ஆதரவு தேவையில்லை: மோடியின் பேச்சுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு ! 'ஊழல் வழக்கில் தண்டனை அடைந்து சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை' என, அரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி பேசியிருப்பது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அரியானா மாநில சட்டசபை தேர்தல், வரும் 15ம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தல் பிரசாரம் அம்மாநிலத்தில் உச்சகட்டத்தில் இருக்கிறது. மாநிலத் தலைவர்களும் தேசியத் தலைவர்களும் அரியானாவில் தீவிர ...

இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., அதிரடி உத்தரவு !

Posted: 06 Oct 2014 11:58 AM PDT

இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., உத்தரவால் அவசரமாய் திரும்பிய அமைச்சர்கள் ! சிறையில் இருக்கும் ஜெயலலிதாவிடம் இருந்து வந்த அதிரடி உத்தரவை அடுத்து, பெங்களூரில் முகாமிட்டிருந்த, தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அத்தனை பேரும், நேற்று, அவசரமாக சென்னை திரும்பினர். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட பின், அவரை சந்திப்பதற்காக, தினமும் அ.தி.மு.க.,வினர், அங்கு குவிந்து ...

இந்தியாவை கிண்டலடித்து கார்ட்டூன் வெளியீடு: மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை!

Posted: 06 Oct 2014 11:47 AM PDT

புதுடில்லி: அமெரிக்காவின் பிரபல நாளிதழ்களில் ஒன்றான, 'நியூயார்க் டைம்ஸ் இன்டர்நேஷனல்' பத்திரிகையில் வெளியான, இந்தியாவுக்கு எதிரான கார்ட்டூனுக்கு, பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அந்தப் பத்திரிகை மன்னிப்பு கேட்டுள்ளது. கடந்த வாரம், இந்த பத்திரிகையின், தலையங்கம் பகுதியில், செவ்வாய் கிரக ஆய்வு குறித்த கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. அதில், பணக்கார, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள், செவ்வாய் கிரக வீட்டினுள் இருப்பது போன்றும், இந்திய விவசாயி ஒருவர், மாட்டுடன், அந்த வீட்டின் கதவை தட்டுவது ...

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Posted: 06 Oct 2014 11:36 AM PDT

நலம் 360' - 1 மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான் குந்தா மலைக்கிராமத்தின் சாலையோரத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பு, என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணத்தைப் பரிசளித்தது! ''எனக்கு 71 வயசு. 40 வருஷ விகடன் வாசகன். 'ஆறாம்திணை' முடிஞ்சிருச்சுனு படிச்சப்ப, மனசு பாரமாயிடுச்சு. நெஜமா சொல்றேன் தம்பி... கண்ணீர் வந்திருச்சு! ரெண்டு வருஷத்துல என் வீடே வேற மாதிரி ஆகிருக்கு. எல்லாரும் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறாங்க. உளுந்தங்களி திரும்ப வந்திருக்கு. மருமக முடக்கறுத்தான் ...

நவராத்திரி - கொத்துக்கடலை சுண்டல்

Posted: 06 Oct 2014 11:29 AM PDT

நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய 'புரோட்டீன்' இருக்கு இதில். மேலும் 'சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ' என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம். சுண்டல் இல் கார சுண்டல் மட்டும் அல்ல ...

கவிதைகள்

Posted: 06 Oct 2014 11:17 AM PDT

வாழ்க தமிழ்
இருளில் ஒளிரும் சுடராய், உலகிற்க்கு
தாயாக வந்த தமிழை வணங்குகிறேன்
வாழ்க தமிழ்.....

ஆவின் அதிர்ச்சி! பலே பால் கொள்ளை

Posted: 06 Oct 2014 10:50 AM PDT

ஆவின் அதிர்ச்சி! பலே பால் கொள்ளை பாரதி தம்பி படங்கள்: க.தனசேகரன், பா.சரவணக்குமார், த.ஸ்ரீநிவாசன் மாநிலத்தில் கலவர நிலவரம் என்றாலோ, பேரிடர் இழப்பு தருணங்களிலோ, பால் கிடைக்காவிட்டால் பரிதவித்துப்போவார்கள் மக்கள். பால் இல்லாமல், பொழுது விடியாது... பொழுது முடியாது. அதிலும் தமிழக அரசின் ஆவின் பாலுக்கு, 'கோமாதா... குலமாதா...' அளவுக்கு முக்கியத்துவம் உண்டு. ஆவின் பால் இல்லாவிட்டால்தான், தனியார் பால் பக்கம் கவனம் திருப்புவார்கள் தமிழக மக்கள். ஆனால், கடந்த வாரம் வெளியான ஆவின் பால் மோசடி, ஒட்டுமொத்த ...

பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட்

Posted: 06 Oct 2014 10:08 AM PDT

பி.ஏ.சி.எல் - ஒரு அலர்ட் ரிப்போர்ட் நீரை.மகேந்திரன், ஓவியம்: ஹாசிப்கான், படங்கள்: வீ.நாகமணி, எம்.புண்ணியமூர்த்தி இதுவரை இந்தியாவில் நடந்ததிலேயே பிரமாண்டமான நிதி மோசடி இதுதான்' என்கிறார்கள். 'ஐந்து கோடி இந்தியர்களிடம் இருந்து சுமார் 49,000 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கிறது' என்றும் சொல்கிறார்கள். 'அரசாங்க அனுமதியோ, கண்காணிப்போ இல்லாமல் இத்தனை பெரிய தொகை எப்படி வசூலிக்கப்பட்டது?' எனப் பொருளாதார நிபுணர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். இந்தியா முழுக்க அதிர்வு அலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது ...

தூத்துக்குடி கேசரி - சிறுகதை

Posted: 06 Oct 2014 09:35 AM PDT

தூத்துக்குடி கேசரி - சிறுகதை ஜீவகரிகாலன், ஓவியங்கள்: ஸ்யாம் அருள் என்கிற அருள் முருகன், விதிவசத்தால் எனக்குக் கிட்டிய நண்பன். வீட்டின் வெளியே இருக்கும் உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும் முதல் சக பயணி, நண்பன்தானே! என் பெற்றோரைத் தாண்டி இருக்கும் மனிதர்கள், வேலைகள், விவசாயம், கிணறு, சினிமா, ஹோட்டல், கடை, பெண்கள், படிக்கட்டுப் பயணம்... என எல்லாம் அவனால்தான் அறிமுகம் ஆனது. அவன் ஒரு கோயில் பூசாரியாக இருந்ததால், அவனை 'நல்லவன்' என என் தாய் நம்பினார். ஆகவே, அவனோடு சேர்ந்து ஊர்சுற்றக் கிளம்புவது ...

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா.. பயம் வேண்டாம் !

Posted: 06 Oct 2014 09:28 AM PDT

(ப்ரீ -Pre ) டயாபடீஸா.. பயம் வேண்டாம் டாக்டர் கருணாநிதி உலக அளவில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். (ப்ரீ) டயாபட்டீஸ் என்று சொல்லப்படும் 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை'யில் இருப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும்  7.72 கோடிப் பேர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில். (ப்ரீ) டயாபடீஸ் பற்றிய பல்வேறு சந்தேகங்களை சர்க்கரை நோய் நிபுணர் கருணாநிதியிடம் கேட்டோம். 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை என்றால் ...

இந்த வார சிரிப்பு

Posted: 06 Oct 2014 09:25 AM PDT

பளிச்சென முகம் பிரகாசிக்க..

Posted: 06 Oct 2014 09:22 AM PDT

பளிச்சென முகம் பிரகாசிக்க.. மு.ரமேஷ் 'கல்யாணப் பொண்ணு... இப்படியா களையிழந்து இருக்கிறது?' என்று கேட்கும் அளவுக்கு வாழ்க்கைமுறை, சுற்றுச்சூழல், வேலைப்பளு, உணவுப் பழக்கங்கள் போன்றவை இன்றைய இளைய தலைமுறையினரைப் பாதிக்கிறது. சருமத்தை சோர்வில்லாமல் எப்போதும் பொலிவுடன்வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்று அழகுக் கலைஞர் சுமதி சக்தியும், சருமப் பராமரிப்புக்கான விஷயங்களை அரசு மருத்துவர் ஹேமானந்தும், இங்கே விரிவாகத் தருகின்றனர். உணவு தினசரி மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதன் மூலமும் உடல் ...

பெரிய’ பலன் தரும் சின்ன வெங்காயம்

Posted: 06 Oct 2014 09:18 AM PDT

`பெரிய' பலன் தரும் சின்ன வெங்காயம் டாக்டர் ச.இளங்கோ, சித்த மருத்துவர், வேலூர் தினமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர். உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்காயம் அதிக மருத்துவக் குணங்களைக்கொண்டது. சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது எண்ணெயில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம். உடல் சூட்டைக் குறைக்கவல்லது ...

வாழ வைக்கும் வாழைக்கு ஜே!

Posted: 06 Oct 2014 09:06 AM PDT

வாழ வைக்கும் வாழைக்கு ஜே! டாக்டர் பத்மபிரியா வாழைக்கும் தமிழர்களுக்குமான உறவு, வாழையடி வாழையாகத் தொடர்வது. இலை, தண்டு, பூ, காய், பழம் என ஒவ்வொரு பாகத்திலும் மருத்துவப் பலன்களைப் பொதித்து வைத்திருக்கும் அற்புதமான தாவரம் வாழை. இவை ஒவ்வொன்றின் சத்துக்கள் பற்றியும் யார் யார் சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் சென்னை சித்த மருத்துவர் பத்மபிரியா விளக்குகிறார். வாழைப்பூ வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதைத் தொடர்ந்து உண்டுவந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கைத் ...

நல்லதுக்கு காலமில்லை – வெ.இறையன்பு

Posted: 06 Oct 2014 09:05 AM PDT


-

-
வெ.இறையன்பு, இ.ஆ.ப
நன்றி: குமுதம்

தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது?

Posted: 06 Oct 2014 09:00 AM PDT

தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது? பிரேமா நாராயணன், பு.விவேக் ஆனந்த், படங்கள்: எம்.உசேன், மாடல்: ஸ்ரீனிகா மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துமே ரசாயனக் கலப்பாகிவிட்டது. வீட்டில் காய்ச்சி ஆறிய தண்ணீரைக் குடித்துவிட்டு வேறு இடங்களுக்கோ, விசேஷங்களுக்கோ செல்லும்போது அங்குள்ள தண்ணீரைக் குடித்தால், அடுத்த நாளே சளிபிடித்துவிடுகிறது. மினரல் ...

எப்படி சரி செய்வது

Posted: 06 Oct 2014 08:49 AM PDT

என்னுடைய கம்ப்யூட்டர் விண்டோஸ் 7 ஸ்டாண்டர்ட் கிபோர்ட் வொர்க் ஆகவில்லை அதே கிபோர்ட் வேறு கம்புடேரில் வேலை செய்யுது எப்படி சரி செய்வது

பீர்பால் வீடு எது?

Posted: 06 Oct 2014 07:59 AM PDT

நண்பர் ஒருவருடைய வீட்டுக்குப் பீர்பால் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒருவர் அவரைப்பார்த்து, 'அமைச்சர் பீர்பால் வீடு எது?'' என்று கேட்டார். அந்த மனிதர் பீர்பாலை பார்த்ததே இல்லை. ஆனால், அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். ஏதோ அவசர காரியமாக அவரிடம் ஆலோசிப்பதற்கு விரும்பினார். பீர்பால் அவரைப் பார்த்தார். பிறகு, 'அதோ தெரிகிறதே மாடி வீடு, அதுதான் பீர்பால் இல்லம்' எனச் சுட்டிக்காட்டினார். அந்த மனிதர் பீர்பாலுடைய வீட்டுக்குச் சென்றார். ஆனால், அங்கே பீர்பால் இல்லை, வெளியில் சென்றிருப்பதாகவும் ...

தீபாவளி பலகாரங்கள் ! - ' வால்நட் ஹல்வா '- மோஹன் தால்'

Posted: 06 Oct 2014 07:27 AM PDT

தீபாவளி பலகாரங்கள் ! தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு கார வகை பலகாரங்களை பார்க்கலாம். செய்முறை எளியது ஆனால் சுவை அபாரம. நீங்களும் உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் இடத்து பலகரங்களின் செய் முறைகளை பகிர்ந்து கொள்ளவும்.

7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!!

Posted: 06 Oct 2014 07:10 AM PDT

பெரும்பாலானவர்களுக்கு தங்களுடைய வங்கி கணக்கிலுள்ள பணத்தை பராமரிப்பது தலைவலியாக உள்ளது. ஏனெனில் வங்கிகள் எதிர்பாரா வங்கி கட்டணங்களை உங்களுடைய கணக்கிலிருந்து வசூல் செய்து விடுகின்றன. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து பல்வேறு வழிகளில் கட்டணத்தை வசூல் செய்கின்றன. இதில் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு போகாதவையும் கூட சில அடங்கும். இது சிறு சிறு கட்டணமாக இருந்தாலும் பெரிய தொகையாக சேர்ந்து விடும்.' வங்கி கட்டணத்தை தவிர்க்க உங்கள் வங்கியின் கட்டண சேவையை முன் கூட்டியே அறிவது அவசியமாகும். ...

எவ்வளவு சுலபமாக காரை திருடிக்கொண்டு போகிறார்கள் என்று பாருங்கள்.

Posted: 06 Oct 2014 06:49 AM PDT

எவ்வளவு சுலபமாக காரை திருடிக்கொண்டு போகிறார்கள் என்று பாருங்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

‘மரியாதையா சாப்பிட வா’. -

Posted: 06 Oct 2014 06:41 AM PDT

- வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் குழந்தைகள் நன்றாகப் பேசுவதில்லை என்ற வருத்தத்திற்கான தீர்வை பார்ப்போம். ஒரு பையன் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது விருந்தினர் ஒருவர் வீட்டிற்கு வந்தார். பையன் எதுவும் பேசாமல் டிவியை அணைத்துவிட்டு அவன் அறைக்குள் மறைந்தான். - இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அவன் அப்பாவுக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. இப்படியா விருந்தினரை அலட்சியம் செய்வது என்று வருத்தத்தோடு போய் மகனிடம் கோபமாக, 'ஏன் வந்திருக்கிறவங்ககிட்ட இரண்டு வார்த்தை பேசினா குறைஞ்சா ...

உங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா?

Posted: 06 Oct 2014 06:41 AM PDT

தண்ணீர், தண்ணீர்' என்ற ஒரு தமிழ் சினிமாவில் அத்திப்பட்டுங்கிற கிராமத்தை காட்டி இருப்பார்கள். அதே போல தண்ணீர் பிரச்னையால் வாடும் ஒரு கிராமம் இஸ்ஸாபூர். இது டெல்லிக்கும், ஹரியானாவுக்கும் நடுவில் இருக்கிறது. இந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் பெரும்பாலானோர் திருமண வயதைத் தாண்டியும் முதிர் கண்ணன்களாக சோகத்துடன் திரிகிறார்கள். இவர்களுக்கு சொத்து பத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை இருந்தாலும்... அப்படி என்னதாங்க பிரச்னை? தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்தான் பிரச்னை. பொதுவா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ...

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Posted: 06 Oct 2014 06:37 AM PDT

அன்புள்ள ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள். அடிக்கடி இங்கு வர முடியாத நிலையில் உள்ளேன். இன்னும் இரண்டே மாதங்களில் நான் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். அதன்பின்பு, நான் முழுமையாக ஈகரையில் இயங்குவேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நிற்க, எனக்கு சமீபத்தில் புது தில்லியில் இருந்து "பாரத் ஜோதி விருது" கிடைத்துள்ளது என்பது ஒரு மகிழ்வான செய்தியாகும். அங்கு நடந்து முடிந்த ஒரு மாநாட்டில் கலந்துகொண்டு நான் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிடுவதாக இருந்தது. அந்த மாநாடு முடிவு விழாவில் ...

அலைந்து கொண்டிருக்கும் பட்டாம் பூச்சி

Posted: 06 Oct 2014 06:36 AM PDT




--

உன் மௌன நொடிகளை நிமிடங்களாக்கி
என்னை கேலி செய்கிறது காலம்
பெரும்பாலான இருக்கைகள்
காலியாக இருந்த பேருந்திலும்
தனக்கான இடம் தேடி
அலைந்து கொண்டிருந்தது
பட்டாம்பூச்சி ஒன்று.

-

---------------------
- ரா. பிரசன்னா, மதுரை
நன்றி: கல்கி

அக்டோபர் 6 முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு .

Posted: 06 Oct 2014 06:35 AM PDT

- தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - ஒரே ஆண்டில் 4வது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. - அரசின் ஆவின் பாலில் கலப்படம் செய்ததாக ஆளும்கட்சியினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மக்கள் தனியார் பால்கள் மீது விருப்பத்தை திருப்ப ஆரம்பித்தனர். இந்நிலையில் விலையேற்றம் அவர்களுக்கு சுமையாக மாறியுள்ளது. - ------------------------------------

சாமியைக் காட்டிலும்.......

Posted: 06 Oct 2014 06:28 AM PDT

ஊர்த் திருவிழாவில் சாமி பார்க்க அப்பாவின் பின் கழுத்தில் அமர்ந்து இரு தோள்களின்கீழ் கால்கள் தொங்கவிட்டு தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து அசைந்து நடக்கும் அப்பாவின் நடையில் ஆனந்தப் பாட்டு! "சாமி தெரியுதா' என்று தன் கால் உயர்த்தி எக்கி நின்று காட்டுகையில் சாமியைக் காட்டிலும் உயர்ந்து நின்றார் அப்பா! - ---------------------------- - மு. மகேந்திரபாபு, பருப்பாயூரணி நன்றி: கல்கி

உள்ளங்கையில் ஓர் உலகம்..! -

Posted: 06 Oct 2014 06:15 AM PDT

- மாநகர தெரு விளக்குகள் - விடிந்தும் அணைய மறுக்கும் மஞ்சள் நிலவுகள்..! - ---------------------- - காக்கை (ரகம்) ராகம் - கரைவதும் ஒரு சுகம் அதில் நனைந்திடும் பிணைக்கு..! - ---------------------- - அலை பேசி - கை மடக்கி, திறந்து பார்த்தேன் - உள்ளங்கையில் ஓர் உலகம்..! - -------------------- - காரணம் - ஊமையையும் பேச வைக்கும் உலகமதை சுற்றிக்காட்டும் ஊற்றில்கிடைக்காத நீர்..! - ---------------------- >ராம்குமார் கோபால்

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Posted: 06 Oct 2014 05:40 AM PDT

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் 1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். 2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார். 3. அநாகரீகமான வார்த்தைகள் ...

விநாயகர் வழிபாடு வந்தது எப்படி?

Posted: 06 Oct 2014 05:39 AM PDT

விநாயகர் வழிபாடு வந்தது எப்படி? என்று படித்தேன். நாம் காட்டு வாசிகளை போல் வாழ்ந்து வந்த போது கூன் போட்டு மிருகங்களைப்போல் நடந்து கொண்டிருந்தோம். யானை தோன்றிய பின்னர் அது நடக்கும் போது நமக்கு நிமிர முடியாமல் தடையாக இருந்த மரங்களையும் முட்செடிகளையும் களைந்து வழி உருவாக்கித்தந்தது. அன்று முதல் யானையை வழிபடத் தொடக்கினோம். அதுவே விநாயகர் வழிபாடாக மலர்ந்தது.
மா. அருள்நம்பி.

பழைய செருப்பு கடிக்கும்!

Posted: 06 Oct 2014 05:11 AM PDT



-

பரணைக் காலி செய்தபோது
பார்த்த பழைய செருப்பு
தேய்ந்துபோன அப்பாவின் செருப்பு
எத்தனை வயல்கள் எத்தனை வரப்புகள்
பாதத் தடம் இங்கே.. பாதங்கள் எங்கே...
பழைய செருப்பு கடிக்கும் மனத்தை!
[/color]
-
---------------------
- நாகேந்திர பாரதி
நன்றி: கல்கி

உன் அனிச்சையான அலட்சியங்கள்

Posted: 06 Oct 2014 05:08 AM PDT




என்றைக்காவது ஒருநாள்
எனக்கான புரிதல்
உனக்குள் வருமென்ற நம்பிக்கையில்
இன்று ரசிக்க முயல்கிறேன்
உன் அனிச்சையான அலட்சியங்களை.

-
---------------------
- பிரசன்ன வெங்கடேஷ், தேனி.
நன்றி: கல்கி

நீலவானமாக்கியபடி...(கவிதை)

Posted: 06 Oct 2014 04:24 AM PDT

- விரிந்து கிடந்த வெளியை நீல வானமாக்கி பச்சை தரையாக்கி அப்படியும் இப்படியுமாய் விழி பிரித்து நோக்கிய ஆடி சாரல் துளிகளாய் மழையை இறக்கினான்..! - சட்டென இலைகளும் கிளைகளுமாய் நெடுந்துயர் சுழிகளை நண்டு பட்சிகளுக்கு இடமளித்தவனிடம் இருக்கையும் போடு என்றேன்..! - மறுத்தவன் வண்ண வண்ண பூக்களை விதைத்து விட்டு காடு எனப்பெயரிட்டு அழுத்தமாய் அடிக் கோடிட்டான்..! - பூங்கா பார்த்தே புழங்கிய நான் இப்படியா இருக்கும் காடு என்றேன் இப்படியும் இருக்கும் என்றான் விரிந்து கிடந்த வெளியை நீலவானமாக்கியபடி...! - ----------------------------------------- >மு.கோபி ...

அன்பின் நிறம் - கவிதை

Posted: 06 Oct 2014 04:04 AM PDT

- கருநீல மேகம் தரையிறங்கி நின்றதைப்போல் அவள் நின்றாள் பொன்மாலை மஞ்சள் நிற வெயிலாய் அவன் அவளை அணைத்து நின்றான் - அன்பறியா அறிவீலிகள் சிலர் நிறம் பேசித் தூற்றிச் சென்றனர் அந்தக் காதலர்களின் அன்பின் நிறம் வெண்மை என்பதை அறியாமல்...! - ------------------------- >ராம்க்ருஷ் நன்றி: கல்கி

நேசத்தின் சில்லுகள் - கவிதை

Posted: 06 Oct 2014 03:46 AM PDT

---- - துரோகத்தின் சுவடுகள் அரூபமாய்த் தொடர்கிறது எப்போதும் உதிரம் கசியும் ரணத்துக்கு அமிலம் கொண்டு களிம்பு பூசுகிறாய்! - நீளும் இப்பயணத்தில் நட்பின் பெயராலும் அன்பின் பெயராலும் முதுகில் சுமக்கப் போகும் சிலுவைகளைக் கணக்கிட இயலாது போகுமோ..? - நீ சிதறடித்த என் நேசத்தின் சில்லுகளை சிட்டுக் குருவிகளுக்கு உணவாக்கி விட்டு வேடிக்கை பார்க்கிறேன் விழியோரம் கசியும் நீரை புறங்கைகளில் துடைத்தபடி - --------------------- >தேவிப்ரியா    , அறந்தாங்கி நன்றி: கல்கி

தொடத் தொடத் தொல்காப்பியம் (319)

Posted: 06 Oct 2014 12:40 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™