Tamil Star |
- கர்நாடகா, ஆந்திரா பேருந்து இயக்கம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
- ஆவின் பால் கலப்பட வழக்கு: வைத்தியநாதன் அக்.13 வரை சிறையில் அடைப்பு.
- ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.
- மரத்தில் தோன்றிய ஜீசஸ் உருவம்..!
- உலகின் மிகச்சிறிய புத்தகம். கனடா இளைஞர்கள் கின்னஸ் சாதனை.
- மாவீரன் பகத் சிங்கின் இளைய சகோதரி கனடாவில் காலமானார்
- ஊவா மாகாண முதலமைச்சராக இரண்டாவது முறையாகவும் பதவியேற்ற ராஜபக்ஸ
- யாழில் தனியார் கிணற்றில் இருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்பு
- தரம் – 5 புலமைப் பரிசிலில் சம்மாந்துறை வலய முதல் மாணவனாக நிகாஷ் ஸேஹான்
| கர்நாடகா, ஆந்திரா பேருந்து இயக்கம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. Posted: 30 Sep 2014 04:09 AM PDT
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 27-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் கடந்த 2 நாட்களாக கடையடைப்பு, மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பதற்றமான சூழல் நிலவியதால் பேருந்து போக்குவரத்து தடைபட்டது. நேற்று முன்தினம் குறைவான எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டது. கர்நாடக அரசுப் பேருந்துகள் மாநில எல்லை வரை இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயங்கவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இயல்பு நிலை திரும்பியது. இதையடுத்து அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில அரசுப் பேருந்துகளும் வழக்கம் போல் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து சென்றன. பேருந்து நிலையப் பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆவின் பால் கலப்பட வழக்கு: வைத்தியநாதன் அக்.13 வரை சிறையில் அடைப்பு. Posted: 30 Sep 2014 04:06 AM PDT
ஆவின் பாலில் கலப்படம் செய் தது தொடர்பாக சென்னையை சேர்ந்த வைத்தியநாதனை சிபிசிஐடி போலீஸார் கைது செய் தனர். கடலூர் சிறையில் அடைக் கப்பட்டிருந்த அவரை 6 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீ ஸார் விசாரணை நடத்தினர். விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்தது. விசாரணை முடிந்த நிலையில் வைத்திய நாதனை நேற்று விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத் தில் சிபிசிஐடி போலீஸார் ஆஜர்ப்படுத்தினர். அவரை வருகிற 13-ம் தேதி வரை கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி குமார் சரவணன் உத்தர விட்டார். இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக் கப்பட்டார். விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 25-ம் தேதி வைத்தியநாதன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி குமாரசரவணன் அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறி விசாரணையை வருகிற அக்டோபர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 30 Sep 2014 04:04 AM PDT
ஐஎஸ்ஐஎஸ்-ன் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம்: ஒபாமா அதிரடி அறிவிப்பு. பிரபல செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டியளித்த ஒபாமா கூறுகையில், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியை அமெரிக்கா குறைத்து மதிப்பிட்டு தவறிழைத்து விட்டது. தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், ஈராக் ராணுவத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்து விட்டோம் என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க தற்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் இடையேயான மோதலை தடுக்க அரசியல் ரீதியிலான அணுகுமுறை அவசியமாகும். ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க 50 நாடுகளின் கூட்டுப்படை தாக்குதல் நடத்தி வந்தாலும் ஐஎஸ் அமைப்புக்கு வெளியில் இருந்து வரும் நிதி ஆதாரத்தை முடக்க வேண்டும். இதன் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதியின் அளவு சுருங்கி விடும். மேலும், உலகில் எந்த நாடுகளில் தீவிரவாதிகளால் பிரச்னை ஏற்பட்டாலும் முதலில் அமெரிக்காவை தான் அணுகுகின்றனர் என்றும் ரஷ்யாவையோ, சீனாவையோ யாரும் அணுகுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மரத்தில் தோன்றிய ஜீசஸ் உருவம்..! Posted: 30 Sep 2014 03:58 AM PDT
அமெரிக்காவில் நபர் ஒருவர் வெட்டிய மரத்தில் கிறிஸ்துவ கடவுள் ஏசு நாதரின் உருவமிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் வசிக்கும் டேனியல் டர்பிவில்லி என்ற நபர் மரக்கடை வைத்திருக்கிறார். இவர் மரம் ஒன்றை அறுத்துக் கொண்டிருந்தபோது, அதன் தண்டு பகுதியில் இறைவன் ஏசு கிறிஸ்துவின் உருவத்தை பார்த்ததால் திடீரென திகைப்பில் ஆழ்ந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்துவின் உருவம் தனக்குத்தான் இப்படித் தெரிகிறதா? இல்லை மற்றவர்களுக்கும் தெரிகிறதா? என்பதனை கண்டுபிடிக்க பார்வையாளர்களை அழைத்து வந்து அந்த மரத்தை காட்டியுள்ளார். இச்செய்தி அப்பகுதியில் காட்டுத் தீயாய் பரவவே, அங்குள்ள 70 சதவீதம் பேர் மரத்தில் ஏசு கிறிஸ்து தெரிவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். ஏசு நாதரின் உருவம் கொண்ட இந்த மரத்தை பல்வேறு நபர்கள் விலைக்குக் கேட்டும் அதனை கொடுக்காமல் தேவலாயம் ஒன்றிற்கு வழங்கியுள்ளார். -This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலகின் மிகச்சிறிய புத்தகம். கனடா இளைஞர்கள் கின்னஸ் சாதனை. Posted: 30 Sep 2014 03:40 AM PDT
கனடாவில் உள்ள இரண்டு சகோதரர்கள் உலகிலேயே மிகச்சிறிய புத்தகம் ஒன்றை உருவாக்கி உலக சாதனை செய்துள்ளனர். இவர்களுடைய சாதனையை கின்னஸ் சாதனை நிறுவனம் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு சான்றிதழை அளித்துள்ளது. கனடாவில் உள்ள Turnip Town, என்ற பகுதியை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் 70 மைக்ரோ மீட்டர் அகலமும் 100 மைக்ரோமீட்டர் நீளமும் கொண்ட உலகின் மிகச்சிறிய புத்தகம் ஒன்றை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இந்த புத்தகத்தை உருவாக்க இந்த சகோதரர்களுக்கு $15,000 செலவாகியது என்பது குறிப்பிடத்தக்கது. 30 பக்கங்கள் கொண்ட இந்த சிறிய புத்தகத்தில் உள்ள எழுத்துக்களை சாதாரண கண்களால் படிக்க முடியாது. மைக்ரோஸ்கோப் உதவியுடன் மட்டுமே படிக்க முடியும். மனிதனின் தலைமுடியை விட இந்த புத்தகத்தின் அகலம் குறைவு என்பது அதிசயத்தக்கது ஆகும். இந்த புத்தகம் தற்போது Simon Fraser University, in British Columbia, என்ற பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை காண பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புத்தகத்தை எழுதியவர் Malcolm Douglas Chaplin என்றும் இந்த புத்தகத்தை crystalline silicon என்ற பொருளின் உதவியால் புத்தக வடிவமாக்கியவர் இவருடைய சகோதரர் Robert என்றும் கூறப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மாவீரன் பகத் சிங்கின் இளைய சகோதரி கனடாவில் காலமானார் Posted: 30 Sep 2014 03:38 AM PDT
சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்க்கின் இளைய சகோதரி பிரகாஷ் கவுர், கனாடாவில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 96. பகத் சிங் தலைமுறையில் இவரே கடைசி நபர் ஆவார். பிரகாஷ் கவுர் மறைந்த செய்தியை, பஞ்சாபின் ஹோஷியார்பூரில் வசிக்கும் அவரது மருமன் ஹர்பஜன் திங் தத் தெரிவித்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான வீரராகப் போற்றப்படுபவர் பகத் சிங். லாகூரில் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை கொன்றதற்காக 1931-ஆம் ஆண்டு பகத் சிங்கிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி, பகத் சிங் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஊவா மாகாண முதலமைச்சராக இரண்டாவது முறையாகவும் பதவியேற்ற ராஜபக்ஸ Posted: 30 Sep 2014 03:36 AM PDT
ஊவா மாகாண முதலமைச்சராக இரண்டாவது முறையாகவும் பதவியேற்ற ராஜபக்ஸ ஊவா மாகாண முதலமைச்சராக சசீந்ர ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளார். மேலும் ஊவா மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| யாழில் தனியார் கிணற்றில் இருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்பு Posted: 30 Sep 2014 03:34 AM PDT
யாழ்ப்பாணம் பளை பகுதியிலுள்ள தனியார் காணியிலுள்ள கிணற்றில் இருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளது. கிணற்றை நேற்றைய தினம் துப்பரவு செய்யும் போது, 4 ஆர்.பி.ஜி குண்டுகள் மற்றும் 94 கைக்குண்டுகள் மீட்கப்பட்டன. மேற்படி கிணற்றில் இருந்து 28ம் திகதி 10 ஆர்.பி.ஜி. குண்டுகள் மற்றும் 23 கைக்குண்டுகள் மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தொடர்ந்து அக் கிணற்றிலிருந்து குண்டுகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட அனைத்து குண்டுகளும் இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் மூலம் செயலிழக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தரம் – 5 புலமைப் பரிசிலில் சம்மாந்துறை வலய முதல் மாணவனாக நிகாஷ் ஸேஹான் Posted: 30 Sep 2014 03:30 AM PDT
சம்மாந்துறை வலயத்திலுள்ள சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவன் மொகமட் சபீர் மொகமட் நிகாஷ் ஸேஹான் 187 புள்ளிகளைப் பெற்று வலயத்தில் முதல் மாணவனாக தெரிவாகியுள்ளான். அதேவேளை அம்பாறை மாவட்ட நிலையில் 5 ஆம் நிலையிலுள்ளார் என வித்தியாலய அதிபர் திருமதி கைறூன்நிஷா கலீல்அகமட் தெரிவித்தார். இப்பாடசாலையில் 31 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளதாக அதிபர் திருமதி கைறூன் நிஷா கலீல் அகமட் தெரிவித்தார். வலயத்தில் இம்முறை சித்தியெய்திய 120 மாணவர்களுள் முதன்மை மாணவனாக ஸேஹான் தெரிவு செய்யப்பட்டுள்ளான். சர்வதேச சிறுவர் தினமான இன்று கௌரவிக்கப்படவுள்ளார். சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.சபீர் எம்.ஜ.பாத்திமா றயிசா தம்பதிகளின் புதல்வன் நிகாஷ் ஸேஹான் என்பது குறிப்பிடத்தக்கது. கற்பித்த ஆசிரியை திருமதி எ.யு.பரீதா மற்றும் அதிபர் திருமதி கே.கே.அகமட் ஆகியோரையும் பெற்றோரையும் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ_துல் நஜீம் பாராட்டியுள்ளார். அண்மையில் அதிபராக திருமதி கே.கே.அகமட் கடமையேற்றபின் கிடைக்கப் பெற்ற சிறந்த பெறுபேறு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
















