மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- விடுமுறை கால நீதிபதி விசாரிக்க மறுப்பு: ஜெயலலிதா ஜாமின் மனு மீண்டும் தள்ளிவைப்பு
- ஜெயலலிதா விடுதலை ஆவாரா?: ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
- உ.பி.யில் ராணுவ ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து 3 பேர் பலி
- ஐபிஎல் சூதாட்ட வழக்கு: தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் தேடப்படும் குற்றவாளிகள்
- சிறுவனை நாய் கூண்டுக்குள் அடைத்த விவகாரம்: தனியார் பள்ளியை மூட கேரள அரசு உத்தரவு
- உ.பி.யில் ரெயில்கள் மோதல்: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு
- கேரளாவில் அரசியல் கொலைகளுக்கு பா.ஜனதாவினரே காரணம்: ராஜ்நாத்சிங்கிற்கு உம்மன்சாண்டி பதில்
- மோடியின் ஐந்து நாள் அமெரிக்க பயணம் நிறைவடைந்தது: இந்தியா புறப்பட்டார்
- விவாகரத்து வழக்குகளை ஆறு மாதத்தில் முடிக்கவேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
- ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?: பெங்களூர் போலீஸ் கமிஷனர் மறுப்பு
- மகாராஷ்டிராவில் கரையும் ஆம் ஆத்மி கட்சி: கட்சியிலிருந்து இரு முக்கிய தலைவர்கள் விலகல்
- மத்திய அரசில் நீடிப்பது பற்றி பிரதமருடன் பேசி முடிவு எடுப்போம்: உத்தவ் தாக்கரே அறிவிப்பு
- ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடுமையான தண்டனை: நீதிபதி குன்கா விளக்கம்
- மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனாவுக்கு 22 தொகுதிகள் தான் கிடைக்கும்: நாராயண் ரானே பேச்சு
- அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வரவேற்கப்படுகின்றன: மோடி-ஒபாமா சந்திப்பில் முடிவு
- சொத்து குவிப்பு மேல்முறையீடு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நியமனம்
- மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மை பெறும்: ஜவடேகர்
- பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசுகள் குறைப்பு: இன்று நள்ளிரவு முதல் அமல்
- நீதி கிடைக்க 21 ஆண்டுகள் காத்திருந்த குஜராத் நீதிபதி
- அசாம் மக்களை சந்திப்பதில் பாரபட்சம் காட்டுகிறார் மோடி: முதல்வர் கோகாய் வருத்தம்
| விடுமுறை கால நீதிபதி விசாரிக்க மறுப்பு: ஜெயலலிதா ஜாமின் மனு மீண்டும் தள்ளிவைப்பு Posted: 30 Sep 2014 10:37 PM PDT அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 27–ந்தேதி முதல் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஜாமின் மனு தாக்கல் செய்ய முடியவில்லை. கர்நாடக ஐகோர்ட்டுக்கு 5–ந்தேதி வரை தசரா விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நேற்று முன்தினம் விடுமுறை கால நீதிமன்றம் முன் ஜாமின் மனு தாக்கல் |
| ஜெயலலிதா விடுதலை ஆவாரா?: ஜாமீன் மனு மீது இன்று விசாரணை Posted: 30 Sep 2014 10:09 PM PDT பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த சனிக்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது. இதேபோல், அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. |
| உ.பி.யில் ராணுவ ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து 3 பேர் பலி Posted: 30 Sep 2014 10:06 PM PDT உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் விமானப்படை பயிற்சி முகாம் உள்ளது. இங்கு இன்று காலை ஹெலிகாப்டரில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அதில் விமானப்படை அதிகாரிகள், வீரர்கள் உள்பட 6 பேர் பயணம் செய்தனர். அந்த ஹெலிகாப்டர் நகாதா ஆற்றின் மீது பறந்து சென்றபோது திடீர் என்று விபத்துக்குள்ளாகி ஆற்றுக்குள் விழுந்தது. இதில் 3 ராணுவ அதிகாரிகள் பலியானார்கள். பைலட் |
| ஐபிஎல் சூதாட்ட வழக்கு: தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் தேடப்படும் குற்றவாளிகள் Posted: 30 Sep 2014 08:12 PM PDT ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள ஐ.பி.எல். என்னும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆண்டு சூதாட்டம் நடைபெற்றதாக வெளியான தகவல்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதில் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சாண்டிலா மற்றும் தரகர்கள் சிக்கினர். அந்த 3 கிரிக்கெட் வீரர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். அவர்களுக்கு கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| சிறுவனை நாய் கூண்டுக்குள் அடைத்த விவகாரம்: தனியார் பள்ளியை மூட கேரள அரசு உத்தரவு Posted: 30 Sep 2014 04:56 PM PDT திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதியான குடப்பனகுன்னு என்னுமிடத்தில் தனியார் மழலையர் பள்ளியில் 4 வயது சிறுவன் ஒருவன் யு.கே.ஜி. படித்து வந்தான். கடந்த மாதம் 25–ந் தேதி அவன் வகுப்பு நேரத்தில் அருகில் இருந்த மற்ற குழந்தைகளிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த வகுப்பு ஆசிரியை அந்த சிறுவனை பள்ளிக் கூடத்தில் இருந்த நாய் கூண்டுக்குள் 3 மணி நேரம் அடைத்து வைத்தார். |
| உ.பி.யில் ரெயில்கள் மோதல்: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு Posted: 30 Sep 2014 04:51 PM PDT வாரணாசி– கோரக்பூர் இடையே செல்லும் கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு வாரணாசியில் இருந்து கோரக்பூர் சென்று கொண்டு இருந்தது. அந்த ரெயில் இரவு 10.45 மணிக்கு கோரக்பூரை நெருங்கிக் கொண்டு இருந்தது. அப்போது முன்னால் சென்ற பராவுனி எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னலுக்காக கோரக்பூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பின்னால் வந்த கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் தொடர்ந்து செல்ல சிக்னல் கொடுக்கப்படவில்லை. |
| கேரளாவில் அரசியல் கொலைகளுக்கு பா.ஜனதாவினரே காரணம்: ராஜ்நாத்சிங்கிற்கு உம்மன்சாண்டி பதில் Posted: 30 Sep 2014 04:08 PM PDT கேரள மாநில முதல்-மந்திரி உம்மன்சாண்டி நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜெயலலிதா மீதான தீர்ப்பு மற்றும் தண்டனை குறித்து கருத்து கூற விரும்பவில்லை. கேரள மாநிலத்தில் பூரண மதுவிலக்கு திட்டத்தை |
| மோடியின் ஐந்து நாள் அமெரிக்க பயணம் நிறைவடைந்தது: இந்தியா புறப்பட்டார் Posted: 30 Sep 2014 04:08 PM PDT பாரதப் பிரதமர் ஐந்து நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். முதலில் அந்நாட்டின் நியூயார்க் நகரத்திற்கு சென்ற அவர், அங்கு நடைபெற்ற ஐ. நா. மன்ற கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அவரது பேச்சு பல்வேறு நாட்டு தலைவர்களையும் ஈர்த்ததாக தகவல்கள் வெளியானது. ஐ.நா. தலைமை அலுவலகத்தில் வங்களாதேசம், இலங்கை மற்றும் நேபாள நாட்டின் தலைவர்களை மோடி சந்தித்து பேசினார். |
| விவாகரத்து வழக்குகளை ஆறு மாதத்தில் முடிக்கவேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 30 Sep 2014 03:28 PM PDT இந்து திருமண சட்டத்தின்படி தாக்கல் செய்யப்படும் விவாகரத்து வழக்குகளை கால தாமதம் செய்யாமல் ஆறு மாதத்தில் வழக்கை முடிக்கவேண்டும் என்று கீழ் நீதிமன்றங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது வரை எந்த நீதிமன்றத்திலும் விவாகரத்து வழக்கு தொடர்பாக சீரான நடைமுறைகளும், செயல்முறைகளும் பின்பற்றப்படவில்லை |
| ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?: பெங்களூர் போலீஸ் கமிஷனர் மறுப்பு Posted: 30 Sep 2014 03:23 PM PDT பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் ஒரு சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இதை பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி மறுத்துள்ளார். |
| மகாராஷ்டிராவில் கரையும் ஆம் ஆத்மி கட்சி: கட்சியிலிருந்து இரு முக்கிய தலைவர்கள் விலகல் Posted: 30 Sep 2014 03:02 PM PDT மகாராஷ்டிரா மாநில ஆம் ஆத்மி கட்சியின் இரு முக்கிய தலைவர்கள் தாங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறியுள்ளனர். தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தர விரும்புவதாக கூறியுள்ள அஞ்சலி தமானியா மற்றும் ப்ரீத்தி ஷர்மா ஆகியோர் தங்கள் கட்சிப்பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதே சமயம் கட்சிக்கு தங்கள் ஆதரவு என்றும் இருக்கும் என அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். |
| மத்திய அரசில் நீடிப்பது பற்றி பிரதமருடன் பேசி முடிவு எடுப்போம்: உத்தவ் தாக்கரே அறிவிப்பு Posted: 30 Sep 2014 01:58 PM PDT மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 25 ஆண்டு கால சிவசேனா- பா.ஜனதா கூட்டணி முறிந்தது. அந்த கட்சிகள் தனித்து தேர்தல் களத்தை சந்திக்கின்றன. ஆனால் மத்தியில் நரேந்திர மோடி அரசில் சிவசேனாவை சேர்ந்த கனரக தொழில் மந்திரி ஆனந்த் கீதே பதவி நீடித்து வருகிறார். |
| ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடுமையான தண்டனை: நீதிபதி குன்கா விளக்கம் Posted: 30 Sep 2014 12:52 PM PDT ரூ.66 கோடியே 65 லட்சம் சொத்து குவித்ததாக ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்துள்ளது. இதுதொடர்பாக நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா அளித்த தீர்ப்பின் முழு விவரம் வெளியாகி உள்ளது. தீர்ப்பில் அவர் கூறி இருப்பதாவது:- |
| மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனாவுக்கு 22 தொகுதிகள் தான் கிடைக்கும்: நாராயண் ரானே பேச்சு Posted: 30 Sep 2014 11:44 AM PDT மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் 15-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு கடந்த பல ஆண்டுகளாக கூட்டணியாக இருந்து வந்த பா.ஜ.க.வும், சிவசேனாவும், காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதனால் அங்கு பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. |
| அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வரவேற்கப்படுகின்றன: மோடி-ஒபாமா சந்திப்பில் முடிவு Posted: 30 Sep 2014 11:01 AM PDT அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார். சந்திப்புக்கு பின் பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்தார். அதன் பின் அவர் அறிவித்த அறிவிப்புகள் கீழ்வருமாறு; இன்றைய சந்திப்பு இயற்கையாகவே இரு நாடுகளும் நட்புறவு நாடுகள் என்பதை பறைசாற்றுகின்றன. |
| சொத்து குவிப்பு மேல்முறையீடு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நியமனம் Posted: 30 Sep 2014 10:25 AM PDT ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் ஆஜராகி வாதாடினார். இந்த நிலையில், பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. |
| மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மை பெறும்: ஜவடேகர் Posted: 30 Sep 2014 09:08 AM PDT மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி தனி மெஜாரிட்டி பெறும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்தார். நாசிக்கில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரகாஷ் ஜவடேகர், நிருபர்களிடையே பேசியதாவது:- |
| பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசுகள் குறைப்பு: இன்று நள்ளிரவு முதல் அமல் Posted: 30 Sep 2014 08:17 AM PDT பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 65 காசுகள் குறைக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய எண்ணை நிறுவனங்கள் விலை நிர்ணயம் |
| நீதி கிடைக்க 21 ஆண்டுகள் காத்திருந்த குஜராத் நீதிபதி Posted: 30 Sep 2014 08:01 AM PDT குஜராத் மாநிலத்தின் ஆனந்த் நகர நீதிமன்றத்தில் முதல் வகுப்பு நீதிபதியாக ஆர்.கே.திவ்யேஷ்வர் என்பவர் கடந்த 1991ஆம் ஆண்டு பணியாற்றி வந்தார். அந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதியன்று பெட்லட் என்ற இடத்தில் வசித்துவந்த தனது சக பெண் நீதிபதியான எஸ்.சி.ஸ்ரீவத்சவா வீட்டிற்கு இவர் எந்தவித அழைப்புமின்றி சென்றுள்ளார். |
| அசாம் மக்களை சந்திப்பதில் பாரபட்சம் காட்டுகிறார் மோடி: முதல்வர் கோகாய் வருத்தம் Posted: 30 Sep 2014 07:33 AM PDT அசாமில் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டபோது மக்களை சந்திப்பதில் பிரதமர் மோடி பாரபட்சம் காட்டியதாக முதலமைச்சர் தருண் கோகாய் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |