Tamil Star |
- மின்னல் வேகத்தில் இயந்திரத்தை ட்ராக்கில் ஏற்றும் அற்புதமான காட்சி!
- எலியை வேட்டையாடும் நரியின் படு சுவாரஸ்யக் காட்சி!
- போன் இழப்பின் கவலை மற்றும் விளைவுகள்!
- ஆஸ்திரேலியாவை அமுக்கிய ஜிம்பாப்வே!
- ஐஎஸ் தீவிரவாதிகள் வசம் ட்ரோன்..!
- நாடுகளை ஒரு மாதத்திற்குள் தீவிரவாதிகள் தாக்கும் அபாயம்- சவுதி மன்னர் எச்சரிக்கை!
- இலங்கைக்கு நானே அறிவுறுத்தினேன்: சுப்பிரமணியன் சுவாமி கருத்து
- சமையல்காரர் வீட்டுத் திருமணத்தால்… சர்ச்சையில் ஒபாமா?
- ஆண்களும் குழந்தை பெறலாம்! பிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி சாதனை!
- கனடா டொராண்டோவில் களைகட்டிய கனேடிய தேசிய கண்காட்சி!
- சிங்கள ராஜபக்ச தமிழ் நாட்டில் படம் எடுக்க முடியாது! சீமான் ஆவேசம்!
- விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகி ஐவர் கொல்லப்பட்டனர்!
| மின்னல் வேகத்தில் இயந்திரத்தை ட்ராக்கில் ஏற்றும் அற்புதமான காட்சி! Posted: 01 Sep 2014 06:39 AM PDT |
| எலியை வேட்டையாடும் நரியின் படு சுவாரஸ்யக் காட்சி! Posted: 01 Sep 2014 06:36 AM PDT |
| போன் இழப்பின் கவலை மற்றும் விளைவுகள்! Posted: 01 Sep 2014 06:29 AM PDT
ஸ்மார்ட் போன்களின் செல்வாக்கும் ஆதிக்கமும் நவீன வாழ்க்கையில் அதிகரிக்கும் நிலையில் அவற்றின் பாதிப்புகளும், பக்க விளைவுகளும் இப்போது கவனம் பெறத் தொடங்கியிருக்கின்றன. இதில் சமீபத்திய வரவு ஸ்மார்ட் போன் கவலை. எப்போதும் ஸ்மார்ட் போனை இறுகப் பற்றியிருக்கிறீர்களா? அடிக்கடி ஸ்மார்ட் போன் இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ளும் பழக்கம் இருக்கிறதா? எனில் நீங்கள் ஸ்மார்ட் போன் இழப்பு கவலையால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது ஸ்மார்ட் போன் தொலைந்தால் ஏற்படப்போகும் இழப்புகள் பற்றிய கவலை. விலை மிக்க போனைப் பறிகொடுப்பது மட்டும் அல்ல, போனில் சேமிக்கப்பட்டிருக்கும் விலை மதிப்பில்லாத தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முக்கியத் தகவல்களை இழக்க நேரும் ஆபத்து. ஸ்மார்ட் போன்களின் செயல்திறன் காரணமாக அவற்றில் செய்யக்கூடிய பணிகளும் அதிகரித்துள்ளன. அவற்றில் சேமித்து வைக்கக்கூடிய ஆவணங்களும் அதிகரித்துள்ளன. ஆக ஸ்மார்ட் போன் தொலையும் பட்சத்தில் இந்தத் தகவல்கள் தவறான கைகளில் சிக்கிப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் அதிகரித்துள்ளன. இதனை (smartphone-loss anxiety disorder) என்கின்றனர். மேலும் ஸ்மார்ட் போன் பயனாளிகள் பலரும் போன் தொலைந்தால் அதில் உள்ள தகவல்களைப் பாதுக்காக்கத் தேவையான வழிகள் பற்றி அறியாமல் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். போனில் உள்ள தகவல்களை என்கிரிப்ட் செய்து வைப்பது, குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் தகவல்கள் மறைந்து போகச்செய்யும் டைம்பாம் வழி, தொலைவில் இருந்து லாக் செய்வது என இதற்குப் பல வழிகள் இருக்கின்றன. அதன் மூலம் அதில் உள்ள தகவல்களைப் பாதுகாக்கும் வழிகளை அறிந்து கொள்வது நன்கு என்று சொல்கிறார்கள்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆஸ்திரேலியாவை அமுக்கிய ஜிம்பாப்வே! Posted: 01 Sep 2014 06:17 AM PDT
ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் பெரும் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். இருக்காதே பின்னே... 31 வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் போட்டி ஒன்றில் அவர்கள் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளனரே.. அந்த உற்சாகம்தான்! ஒரு நாள் போட்டிகளில் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவுடன் நடந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டியில், ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசரடித்துள்ளது. அந்த அணியின் எல்டன் சிகும்பரா அரை சதம் அடித்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமலும் இருந்தார். ஹராரேவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே. கடைசியாக 1983ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது ஜிம்பாப்வே. அந்தத் தொடரில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையைத் தட்டிச் சென்றது என்பது நினைவிருக்கலாம். சிகும்பரா 52 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரும் பிராஸ்பர் உத்சயாவும் இணைந்து 55 ரன்களைக் குவித்தனர். முன்னதாக 210 என்ற வெற்றி இலக்கை ஜிம்பாப்வே துரத்தியது. கடைசி 2 ஓவர்கள் மீதம் இருக்கையில் ஜிம்பாப்வே 7 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றியை சுவைத்தது. இந்தத் தோல்வி காரணமாக நாளை தென் ஆப்பிரிக்காவுடன் நடைபெறும் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றாக வேண்டும். அப்படி ஜெயித்தால்தான் அது சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐஎஸ் தீவிரவாதிகள் வசம் ட்ரோன்..! Posted: 01 Sep 2014 06:03 AM PDT
ஈராக்கின் மிகக் கொடூரமான தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ், தற்போது நவீன ரக ட்ரோன்களையும் பெற ஆரம்பித்திருப்பது உலக நாடுகளைக் கவலை கொள்ள செய்துள்ளது. தற்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம் ஒரே ஒரு ட்ரோன் உள்ளதாம். ஆனால் அதில் ஏவுகணை எதுவும் பொருத்தப்படவில்லை. மாறாக கேமராவைப் பொருத்தியுள்ளனர். இந்த ட்ரோன் ஆனது, அமெரிக்கா பயன்படுத்தி வந்த ட்ரோன் ஆகும். இந்த ட்ரோனை தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பெற்றிருப்பது அதிர்ச்சித் தகவலாக உள்ளது. ஏற்கனவே ரக்கா நகரில் உள்ள சிரிய விமான தளத்தை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அதற்கு இந்த அதி நவீன கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன்தான் உதவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலிபான் தீவிரவாதிகளை அழிக்க தற்போது அமெரிக்கப் படையினர் ட்ரோன்களை ஏவித்தான் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனால் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களுக்குக் கிடைத்துள்ள ட்ரோனை வைத்து அதில் கேமராவைப் பொருத்தி உளவு பார்க்க பயன்படுத்துகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஏற்கனவே தொழில்நுட்ப வசதிகளையும் முறையாகப் பயன்படுத்தி தங்களது வீச்சையும், வீரியதைதயும் உலகுக்கு எடுத்துக் காட்டி வருகின்றனர். டிவிட்டர், யூடியூப் என சகல தொழில்நுட்பங்களையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே ட்ரோன் அவர்கள் கைவசப்பட்டிருப்பதில் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள். மேற்கத்திய நாடுகள் பலவும் ட்ரோன்களை பல காலமாக பயன்படுத்தி வருகின்றனர். ட்ரோன் என்பது ஆளில்லாத உளவு விமானங்கள். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதில் ஏவுகணைகளைப் பொருத்தி தாக்குதலுக்கும் பயன்படுத்துகின்றன. ஆனால் இந்த தீவிரவாத அமைப்பிடம் ட்ரோன்களின் இருப்பு அதிகமாகும்போது என்ன மாதிரியான பாதிப்புகள், அபாயங்கள் விளையும் என்பதைக் கணிக்க முடியவில்லை. ஆனால் நிச்சயம் அபாயகரமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நாடுகளை ஒரு மாதத்திற்குள் தீவிரவாதிகள் தாக்கும் அபாயம்- சவுதி மன்னர் எச்சரிக்கை! Posted: 01 Sep 2014 05:57 AM PDT
இங்கிலாந்துக்கு திரும்பும் போராளிகளை தடுக்க விமான பயணிகளின் பட்டியலை சரிபார்க்கும் அதிகாரம் அந்நாட்டு உளவுத்துறைக்கு வழங்கப்பட உள்ளது. மேற்கத்திய நாடுகளை ஒரு மாதத்திற்குள் தீவிரவாத அமைப்புகள் தாக்கும் என்று சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கவனிக்காமல்விட்டால் ஒரு மாதத்திற்குள் தீவிரவாதம் ஐரோப்பாவை அடையும். அடுத்த மாதத்தில் அமெரிக்காவை அடையும். தீவிரவாத்ததை வேகம், படை ஆகியவற்றை வைத்து போராட வேண்டும் என்று சவுதி மன்னர் தெரிவித்தார். இங்கிலாந்துக்குள் போராளிகள் நுழைவதை தடுக்க விமான பயணிகளின் பட்டியலை சரிபார்க்கும் அதிகாரம் அந்நாட்டு உளவுத்துறைக்கு வழங்கப்பட உள்ளது. இஸ்லாமிய போராளிகளுடன் சேர்ந்து போராட சென்ற இங்கிலாந்து குடிமகன்கள் நாடு திரும்ப தற்காலிக தடை விதிக்கப்பட உள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கைக்கு நானே அறிவுறுத்தினேன்: சுப்பிரமணியன் சுவாமி கருத்து Posted: 01 Sep 2014 05:41 AM PDT
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை கைப்பற்றிக் கொண்டு, மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு நானே ஆலோசனை வழங்கினேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பது வழமையாகிவிட்டது. இதனை தடுக்கக் கோரி தமிழக மீனவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டாலும் அவர்களின் படகுகளை இலங்கை அரசு விடுவிக்கவில்லை. தங்களது படகுகளை விடுவிக்கக் கோரி இராமேஸ்வர மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து சுப்பிரமணியன் சுவாமி, இந்திய தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, நான் கடைசியாக இலங்கை சென்றிருந்த போது தமிழக மீனவர்களுக்காக பேசினேன். மீனவர்கள் என்பவர்கள் தொழிலாளர்கள். அவர்களை கைது செய்தால் உடனடியாக விடுவித்து விடுங்கள். ஆனால், அவர்களுக்கு படகுகள் அளிக்கும் உரிமையாளர்கள், பணக்காரர்கள். தமிழக மீனவர்கள், தங்கள் கடல் எல்லையில் மீன்வளம் குன்றிவிட்டதாலேயே எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். இதனை யாழ்ப்பாண தமிழர்களும் கூறுகின்றனர். எனவே, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவ தொழிலாளர்களை விட்டு விடுங்கள், ஆனால் அவர்களது பணக்கார முதலாளிகளின் படகுகளை சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என இலங்கைக்கு ஆலோசனை வழங்கினேன். அதைத்தான் அவர்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சமையல்காரர் வீட்டுத் திருமணத்தால்… சர்ச்சையில் ஒபாமா? Posted: 01 Sep 2014 05:25 AM PDT
அமெரிக்க அதிபர், பராக் ஒபாமா – மிச்செலி தம்பதியின் நீண்ட கால சமையல்காரர் திருமண விழாவில், அதிபரும், குடும்பத்தினரும், ஆறு மணி நேரம் தங்கியிருந்து சிறப்பித்தனர். இது, அந்நாட்டில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குடும்பத்தினருக்கு பல ஆண்டுகளாக சமையல்காரராக இருந்து வரும் சாம் காஸ் என்பவர், இந்த தம்பதி, வெள்ளை மாளிகைக்கு இடம்பெயர்ந்த பின், வெள்ளை மாளிகையின் தலைமை சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார். சாம் காஸ், 34, 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளினி, அலெக்ஸ் வாக்னர், 36, என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி, நியூயார்க், மன்ஹாட்டன் பகுதியில் உள்ள, 'புளூ ஹில்' என்ற பிரபல ஓட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்க, நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்கூட்டியே தன் மனைவி மிச்செலி, மகள், மலியா, சாஷா ஆகியோருடன் வந்த அதிபர் ஒபாமா, ஆறு மணி நேரம் இந்த நிகழ்ச்சியில் நேரத்தை செலவிட்டார். அங்கு அவருக்கு வேறு வேலை எதுவும் இல்லை. மணமக்களை வாழ்த்தி, விருந்து அருந்தி விட்டு செல்ல வேண்டியவர், ஆறு மணி நேரம் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போல், சில நாட்களுக்கு முன், சாம் காஸ் வீட்டுக்கு சென்ற ஒபாமா, அங்கு, ஐந்து மணி நேரம் தங்கியிருந்தார். இது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 'அதிபருக்கு எவ்வளவோ வேலைகள் உள்ள நிலையில், தனி மனிதர் ஒருவர் வீட்டில், ஐந்து மணி நேரம் இருப்பதா அவரின் திருமணத்தில், தேவையே இல்லாமல், ஆறு மணி நேரம் இருப்பதா' என பலரும் அதிருப்தி தெரிவித்தனர். எனினும், அதிபர் வட்டாரங்கள் இது பற்றி கூறுகையில், 'அதிபர், ஓய்வில் இருக்கும் நேரத்தில் தான் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனால் அவரின் அன்றாட பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆண்களும் குழந்தை பெறலாம்! பிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி சாதனை! Posted: 01 Sep 2014 04:36 AM PDT
பிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படைத்துள்ளார் 17 வயது நிரம்பிய மாணவி 250க்கு மேலான சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக செய்த்துள்ளார் ! ஆண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் கண்டு பிடித்துள்ளார் ! இவருக்கு பிரான்ஸ் அரசாங்கம் பல விதமான ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்து உள்ளது ! எமது உறவான இம் மாணவியின் திறமையை பலரும் வியக்கத் தக்க வகையில் உள்ளமையில் குறிப்பிடத் தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடா டொராண்டோவில் களைகட்டிய கனேடிய தேசிய கண்காட்சி! Posted: 01 Sep 2014 04:12 AM PDT
கனேடிய தேசிய கண்காட்சி (Canadian National Exibition) ஆனது ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறுகின்றது. கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமான நிகழ்வுகள் National Ethnic press and media council of canada இன் அனுசரணையுடன் ஆரம்பமானது. அந்த சாவடியில் கனடாவின் பல்லின கலாச்சார பத்திரிகைகள், பலதரப்பட்ட இணையத்தளங்களின் தொகுப்புக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வுக்கு NEPMCC இன் தலைவர் Mr. Thomas Saras தலைமை தாங்க ரொறன்ரோ துணை மேயர் Mr Norm Kelly, துணை பொலிஸ்மா அதிபரான (Deputy Chief) Peter Sloly ஆகியோர் சமூகமளித்து நிகழ்வை சிறப்பித்தார்கள்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிங்கள ராஜபக்ச தமிழ் நாட்டில் படம் எடுக்க முடியாது! சீமான் ஆவேசம்! Posted: 01 Sep 2014 03:42 AM PDT
எப்போதும் தமிழ்நாட்டில் ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தொடர்ந்துகொண்டே இருக்கும், செல்வாக்குச் செலுத்த முடியாது, அவரை நாம் என்றும் அனுமதிக்க மாட்டோம், என சீமான் ஆவேசத்துடன் தெரிவித்தார். அன்றும் இன்றும் தமிழ் சினிமா ஈழத் தமிழருக்கு எதிராக அமையாது, தமிழருடைய மொழி கலாச்சாரத்தை எந்தப் படம் காயப்படுத்தினாலும் அதை நாம் அனுமதிக்க மாட்டோம். புத்த பிக்குவை வழிபட்டுவிட்டே திரும்பிச் செல்ல திண்டாடும் சிங்களம் சினிமாவில் எப்படி நுழைய முடியும்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசை நிகழ்ச்சியில் கேள்விThis posting includes an audio/video/photo media file: Download Now |
| விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகி ஐவர் கொல்லப்பட்டனர்! Posted: 01 Sep 2014 03:38 AM PDT
அமெரிக்காவில் டென்வர் என்னும் இடத்தில் ஐந்து பேர்கள் பயணம் செய்த விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகியதில் விமானத்தில் இருந்த அனைவரும் கொல்லப் பட்டுள்ளனர் என தேசிய போக்கவரத்து சபை பேச்சாளர் தெரிவித்துள்ளார். Piper PA-46 என்ற விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 11.50-மணியளவில் விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்து நடந்த சிறிது நேரத்தில் அவ்விடத்திலேயே மூவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார். விமானம் தரையிறங்கிய சமயம் விபத்து ஏற்பட்டதா அல்லது புறப்படும் போது விபத்து ஏற்பட்டதா என்பது தெரியவரவில்லை . விமானம் புல்தரையில் விழுந்து நொருங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |











