Tamil News | Online Tamil News |
- மம்தாவுக்கு நெருக்கமானவர்கள் முறைகேட்டில் தொடர்பு: அமித் ஷா
- மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு : காங்கிரசில் அதிருப்தி
- அமைச்சர் கவுடாவுக்கு 'நோட்டீஸ்:' மிரட்டல் விடுப்பதாக நடிகை புகார்
- தமிழ் வாசிப்பில் தடுமாறும் மாணவர்கள்: கற்பித்தலில் மாற்றம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
- பிரசாரத்திற்கு போங்க; பிரச்னை வந்தா ஒதுங்குங்க: தே.மு.தி.க.,வினருக்கு ரகசிய உத்தரவு
- 'ஜோதிபாசுவை போல கருணாநிதி ஓய்வு பெற வேண்டும்': தா.மோ.அன்பரசன் ராஜினாமா கடிதம்?
- கிரிமினல் மக்கள் பிரதிநிதிகள்: மத்திய அரசு கிடுக்கிப்பிடி
- முதல்வர் மம்தா மீது அவரது கட்சி எம்.பி. எம்.பி., 'பகீர்' புகார்
- காஷ்மீர் வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதி
- எதிர்க்கட்சி தலைவர் இல்லாமல் முக்கிய பதவிகளுக்கு நியமனம்: லோக்பால், சி.வி.சி., நிர்வாகிகளை நிரப்ப மத்திய அரசு திடீர் முடிவு
- தமிழக சிறைகளில் இருந்து கைதிகள் விடுதலை: சிறப்பு அதாலத்தில் நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு
| மம்தாவுக்கு நெருக்கமானவர்கள் முறைகேட்டில் தொடர்பு: அமித் ஷா Posted: கோல்கட்டா :''மேற்கு வங்கத்தில், லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பணத்தை கொள்ளையடித்த, 'சாரதா சிட்பண்ட்' முறைகேட்டில், முதல்வர், மம்தா பானர்ஜிக்கு நெருக்கமான பலர் தொடர்பு கொண்டுள்ளனர்; அவர்களை சிறையில் தள்ளுவோம்,'' என, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா கூறினார்.மேற்கு வங்கத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, கட்சியினருடன் ஆலோசனை செய்ய கோல்கட்டா வந்த அமித் ஷா, அங்கு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாவது:சிங்குரிலும், நந்திகிராமிலும், 2,000 விவசாயிகள் பாதிக்கப்பட்டதை பெரிய விவகாரமாக எழுப்பி, போராட்டங்கள் நடத்தி, ... |
| மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு : காங்கிரசில் அதிருப்தி Posted: பெங்களூரு: ஒன்பது ஆண்டுகளுக்கு பின், ஆட்சிக்கு வந்த காங்., அரசில், கட்சிக்கு நேர்மையாக இருப்பவர்களை விட, மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு, அதிக வாய்ப்பு கிடைக்கிறது என்ற அதிருப்தி எழுந்துள்ளது.கார்ப்பரேஷன், வாரியங்கள் நியமனத்தில், இதேபோன்று, கட்சி மாறி வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தால், கட்சி மேலிடத்தின் முன், போராட்டம் நடத்த வேண்டி வரும், என, காங்கிரசில் சிலர் எச்சரித்துள்ளனர்.புதுப்புது பதவிகள்முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசில், புதுப்புது பதவிகள் உருவாக்கப்படுகிறது. அவைகளில், கட்சி தாவி வந்த தலைவர்கள் ... |
| அமைச்சர் கவுடாவுக்கு 'நோட்டீஸ்:' மிரட்டல் விடுப்பதாக நடிகை புகார் Posted: பெங்களூரு: மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன், கார்த்திக் கவுடா மீது, நடிகை மைத்ரியா கொடுத்த புகாரின் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகும்படி, போலீசார் அனுப்பிய, 'நோட்டீசை' அமைச்சர் கவுடா நேரில் பெற மறுத்ததால், போலீசார் அதை அமைச்சரின் 'இ-மெயில்' முகவரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கார்த்திக்கை தப்ப வைக்க போலீசார் முயற்சிப்பதாகவும், அமைச்சர் குடும்பத்தினரிடம் இருந்து, தனக்கு கொலை மிரட்டல் அதிகரித்துள்ளதாகவும் நடிகை மைத்ரியா பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.ரயில்வே அமைச்சர்கர்நாடகாவை சேர்ந்த, மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த ... |
| தமிழ் வாசிப்பில் தடுமாறும் மாணவர்கள்: கற்பித்தலில் மாற்றம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு Posted: கோவை:தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மொழிப்பாடங்களில் பின்தங்கி இருப்பதாக, கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. 'இத்தகைய குறைபாடுகளை களைய, கற்பித்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும், அரசு, அரசு உதவிபெறும் நிலையில், 28 ஆயிரத்து 591 துவக்க மற்றும் 9,259 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் கல்வித்திறன், மொழி உச்சரிப்பு, பாடங்களை உள்வாங்கிக் கொள்ளும் விதம் ஆகியவற்றை கண்காணிக்க, கல்வித்துறை இணை இயக்குனர் ... |
| பிரசாரத்திற்கு போங்க; பிரச்னை வந்தா ஒதுங்குங்க: தே.மு.தி.க.,வினருக்கு ரகசிய உத்தரவு Posted: உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக, பா.ஜ., தரப்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பிரசாரத்துக்கு செல்லுங்கள்; அப்போது, பிரச்னை ஏற்பட்டால், சாதுர்யமாக ஒதுங்க வேண்டும்' என, தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, கட்சித் தலைமை ரகசிய உத்தரவு பிறப்பித்து உள்ளது.தமிழகத்தில், காலியாகவுள்ள, 2,130 உள்ளாட்சி பதவிகளுக்கு, 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலை, தே.மு.தி.க., புறக்கணித்தாலும், பா.ஜ.,வுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.முழு வேகத்தில்:வேட்பு மனுத்தாக்கல் முடிந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க., ... |
| 'ஜோதிபாசுவை போல கருணாநிதி ஓய்வு பெற வேண்டும்': தா.மோ.அன்பரசன் ராஜினாமா கடிதம்? Posted: 'தி.மு.க., தலைமை பொறுப்பை, ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும். அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என, அந்தக் கட்சியின், 17 மாவட்ட செயலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை வலியுறுத்தி, ராஜினாமா செய்யவும் தயாராகி வருகின்றனர்.தாரை வார்ப்பு: இதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க.,வில், அடுத்த தலைவர் யார் என்ற சர்ச்சை நீடிக்கிறது. உட்கட்சி தேர்தல் முடிந்ததும், கட்சியின் தலைமை பொறுப்பை, மீண்டும் கருணாநிதி ஏற்பாரா அல்லது ஸ்டாலினுக்கு அந்தப் பதவியை தாரை வார்த்து கொடுப்பாரா என்ற கேள்வி, ஸ்டாலின் ஆதரவாளர் கள் மத்தியில் ... |
| கிரிமினல் மக்கள் பிரதிநிதிகள்: மத்திய அரசு கிடுக்கிப்பிடி Posted: புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி, குற்றப் பின்னணி உடைய எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களை தகுதி நீக்கம் செய்ய ஏதுவாக, அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மாநில அரசு மற்றும் மாநில தலைமை செயலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: குற்றப் பின்னணி உடைய, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்குகளை விசாரிக்க போதுமான அளவு நீதிபதிகளை நியமித்து, ... |
| முதல்வர் மம்தா மீது அவரது கட்சி எம்.பி. எம்.பி., 'பகீர்' புகார் Posted: கோல்கட்டா:''மேற்கு வங்க மாநிலத்தின், 'சாரதா சிட்பண்ட்' முறைகேட்டில், மாநில முதல்வர், மம்தா பானர்ஜிக்கு தொடர்பு உள்ளது,'' என, ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அதிருப்தி எம்.பி., குணால் கோஷ் தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.மேற்கு வங்கத்தில், 34 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிய, திரிணமுல் காங்கிரஸ் தலைவர், மம்தா பானர்ஜி, 2011 முதல், மாநில முதல்வராக உள்ளார்.அவர் ஆட்சிக்கு நெருக்கமாக இருந்த, சுதிப்தா சென் என்பவர் தலைமையிலான, சாரதா சிட்பண்ட், 17 லட்சம் வாடிக்கையாளர்களின், 1,200 கோடி ரூபாயை ... |
| காஷ்மீர் வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதி Posted: ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு அதிகரித்து, நகரங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மாநிலத்தின் பாதிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. வெள்ள சேதத்தை நேற்று பார்வையிட்ட பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீர் பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவித்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால், மாநிலத்தின் பல பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர், அனந்த்நாக், பாரமுல்லா, ஜம்மு, ... |
| Posted: புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமலேயே முக்கிய பதவிகளை நிரப்ப, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி, காலியாக உள்ள மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷனர் (சி.வி.சி.,), தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவர் (என்.எச்.ஆர்.சி.,) மற்றும் லோக்பால் பதவிகளை நிரப்ப முடிவு செய்துள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலியாக இருப்பதால், அரசியல் அமைப்புச் சட்டத்தின், முக்கியமான மூன்று அமைப்புகளுக்கு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் தாமதமாகி வந்தது.குறிப்பாக, மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷனர், தேசிய மனித ... |
| தமிழக சிறைகளில் இருந்து கைதிகள் விடுதலை: சிறப்பு அதாலத்தில் நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு Posted: உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில், விசாரணை கைதிகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக நேற்று, 'சிறப்பு அதாலத்' நடத்தப்பட்டு, விசாரணைக்குப் பின், 2,500 விசாரணை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.'நாடு முழுவதும் உள்ள சிறைகளில், விசாரணை கைதிகளாக ஏராளமானவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் குற்றச் செயலுக்காக எவ்வளவு தண்டனை கிடைக்குமோ, அதில் பாதியளவு தண்டனை காலத்தை, அவர்கள் நிறைவு செய்திருந்தால் விடுதலை செய்யலாம்' என, கடந்த வெள்ளிக்கிழமை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். இரண்டு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 08,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |