Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


யார் கேட்பது?

Posted: 07 Sep 2014 01:30 PM PDT

ஆம்னி பேருந்துக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது; கட்டணத்தை அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் தவிர்க்க முடியாத இரண்டு கேள்விகள் எழுகின்றன:

என்.ஆர். காங்கிரஸ் முறைகேடுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் புகார்: நாராயணசாமி

Posted: 07 Sep 2014 01:20 PM PDT

என்.ஆர்.காங்கிரஸ் அரசின் மக்கள் விரோதப் போக்கு, முறைகேடுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்படும் என்று மத்திய முன்னாள் அமைச்சர் வி.நாராயணசாமி கூறினார்.

வேட்புமனு நிராகரிப்பு குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார்: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted: 07 Sep 2014 01:16 PM PDT

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, மாநிலத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய கனரக, தொழில்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தல்: பாஜக வேட்பாளர் கடத்தப்பட்டதாக பொய்ப் புகார்: தேர்தல் ஆணையம் விளக்கம்

Posted: 07 Sep 2014 01:15 PM PDT

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர் கடத்தப்பட்டதாகப் பொய்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

சீனப் பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும்

Posted: 07 Sep 2014 01:14 PM PDT

உள்ளூர் பட்டாசுத் தொழிலாளர்களைப் பாதிக்கும் சீனா உள்ளிட்ட வெளிநாட்டுப் பட்டாசுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

காங்கிரஸைவிட்டு வாசன் வெளியே வர வேண்டும்

Posted: 07 Sep 2014 01:12 PM PDT

காங்கிரஸ் கட்சியைவிட்டு ஜி.கே. வாசன் வெளியே வர வேண்டும் என்று காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் கேட்டுக் கொண்டார்.

புதுவை சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

Posted: 07 Sep 2014 01:11 PM PDT

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கள்கிழமை செப். 8, துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

மத்திய அமைச்சர் ஜாவடேகருடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு

Posted: 07 Sep 2014 01:10 PM PDT

தெலங்கானாவில் இரு தெலுங்கு தொலைக்காட்சி சேனல்கள் முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லியில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.

சிகாகோ - தில்லி விமானத்தில் திடீர் கோளாறு

Posted: 07 Sep 2014 01:10 PM PDT

சிகாகோ - தில்லி இடையே இயக்கப்படும் ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக டொரான்டோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மீண்டும் டீசல் மொத்த கொள்முதல் நடைமுறை

Posted: 07 Sep 2014 01:09 PM PDT

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மீண்டும் இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் (ஐஓசி) டீசலை மொத்தமாகக் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளன.

இத்தாலி கப்பல் வழக்கு: பக்கவாத பாதிப்புக்குள்ளான வீரரை திருப்பி அனுப்ப இந்தியாவிடம் கோரிக்கை

Posted: 07 Sep 2014 01:06 PM PDT

இந்திய மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்றது தொடர்பான வழக்கை இத்தாலிய சரக்குக் கப்பல் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் எதிர்கொண்டு வரும் நிலையில், அவர்களில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுள்ளதால், அதற்கு சிகிச்சை அளிப்பதற்காக இத்தாலிக்கு கொண்டு செல்ல உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

ஜயங்கொண்டத்தில் அறிவியல் கல்வி விழிப்புணர்வுப் பயிலரங்கம்

Posted: 07 Sep 2014 01:01 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உடையார்பாளையம் மற்றும் தா.பழூர் லயன்ஸ் சங்கங்கள் இணைந்து நடத்திய 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் கல்வி விழிப்புணர்வு பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்படுமா?

Posted: 07 Sep 2014 01:00 PM PDT

பெரம்பலூர் நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, ஒருவழிப்பாதையை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் .

கழிவுநீர் கால்வாய்களைத் தூர்வார வலியுறுத்தல்

Posted: 07 Sep 2014 01:00 PM PDT

பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர்க் கால்வாய்களைத் தூர்வார வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இளைஞரிடம் செல்போனை பறித்து சென்றவர் கைது

Posted: 07 Sep 2014 01:00 PM PDT

திருவாரூரில் சனிக்கிழமை கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடமிருந்து செல்போனை பறித்து சென்றவரை போலீஸார் கைது செய்தனர்.

கோவிலில் பெண்ணிடம் நகை திருட்டு

Posted: 07 Sep 2014 12:59 PM PDT

பாபநாசம் அருகே சனிக்கிழமை கோவிலுக்குச் சென்ற பெண்ணிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

சாலை விபத்தில் முதியவர் சாவு

Posted: 07 Sep 2014 12:59 PM PDT

தஞ்சாவூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். தஞ்சாவூர் அருகே நீலகிரி தெற்குத் தோட்டம் ரியாஸ் நகரைச் சேர்ந்தவர் பி. முகமது இஸ்மாயில் (70).

இளவயது திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted: 07 Sep 2014 12:59 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 32 வயது இளைஞருக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்த பெற்றோர்கள், உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து தஞ்சாவூர் சைல்டு லைன் அமைப்புக்கு

ரயிலில் அமர்ந்திருந்தபெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 07 Sep 2014 12:58 PM PDT

கும்பகோணத்தில் சனிக்கிழமை இரவு ரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இரு சக்கர வாகனங்கள் மோதல்: ஒருவர் சாவு

Posted: 07 Sep 2014 12:58 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் முதியவர் உயிரிழந்தார்.

இரு பேருந்தில் பயணிகளிடம் 12 பவுன் நகைகள் திருட்டு

Posted: 07 Sep 2014 12:58 PM PDT

தஞ்சாவூரில் இரு வேறு பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுமார் 12 பவுன் நகைகளைத் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தமிழக மாணவர்கள் 41 பேர் பங்கேற்கின்றனர்

Posted: 07 Sep 2014 12:58 PM PDT

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்ற 41 மாணவர்களும், அக்டோபர் 6, 7-ல் தில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான கண்காட்சியில் தமிழகம் சார்பில் பங்கேற்க உள்ளனர்.

உய்யக்கொண்டானில் கரை உடைப்பு

Posted: 07 Sep 2014 12:57 PM PDT

திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் தீரன்நகர் பின்பகுதியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட உடைப்பால் அப்பகுதியிலுள்ள காலியிடங்களில் தண்ணீர் நிரம்பியது.

திருவாரூர் - நாகை சாலையில் ஆட்சியர் ஆய்வு

Posted: 07 Sep 2014 12:57 PM PDT

திருவாரூர் - நாகை சாலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மையப் பகுதியிலுள்ள ரயில்வே மேம்பாலம் அருகே திருவாரூர் - நாகப்பட்

தீக்காயமடைந்தவர் சாவு

Posted: 07 Sep 2014 12:57 PM PDT

திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகேயுள்ள வடகரை மாத்தூரைச் சேர்ந்தவர் அன்பழகன் (55). மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதில்

சாக்கடையாக மாறிவரும் ஓடம்போக்கி ஆறு

Posted: 07 Sep 2014 12:56 PM PDT

திருவாரூர் நகருக்குள் பாயும் ஓடம்போக்கி ஆறு சாக்கடையாக மாறி வருவதுடன் சுகாதார கேட்டை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சுய உதவிக் குழுவினருக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி

Posted: 07 Sep 2014 12:56 PM PDT

நாகை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம் தரங்கம்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது

குழாய்கள் திருட்டு: பழைய இரும்பு வியாபாரி கைது

Posted: 07 Sep 2014 12:56 PM PDT

கரூர் அருகே இரும்புக் குழாய்களை திருடிய பழைய இரும்பு வியாபாரியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

குளித்தலை கிளைச் சிறையில் நீதிபதி விசாரணை

Posted: 07 Sep 2014 12:56 PM PDT

கரூர் மாவட்டம், குளித்தலை கிளை சிறையிலுள்ள கைதிகளிடம், குளித்தலை சார்பு நீதிமன்ற நீதிபதி கே. அய்யப்பன்பிள்ளை ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.

தலைமை ஆசிரியருக்குப் பாராட்டு

Posted: 07 Sep 2014 12:55 PM PDT

நல்லாசிரியர் விருது பெற்ற புன்னம்சத்திரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு சனிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு விதை விநியோகம்

Posted: 07 Sep 2014 12:55 PM PDT

மத்திய தீவன உற்பத்தி செயல் விளக்கப் பயிற்சிக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்பட்டன.

தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் செய்ய முடிவு

Posted: 07 Sep 2014 12:54 PM PDT

வரும் அக்.15 முதல் நவ.15 வரை தமிழகம் முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் ஆம்புலன்ஸ் மோதி மூதாட்டி சாவு

Posted: 07 Sep 2014 12:54 PM PDT

பொன்னமராவதி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது தனியார் ஆம்புலன்ஸ் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார்.

தஞ்சையில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள்

Posted: 07 Sep 2014 12:54 PM PDT

: தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உள்பட்ட கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான நீச்சல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சை அருகேசாலை விபத்தில் முதியவர் சாவு

Posted: 07 Sep 2014 12:54 PM PDT

தஞ்சாவூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். தஞ்சாவூர் அருகே நீலகிரி தெற்குத் தோட்டம் ரியாஸ் நகரைச் சேர்ந்தவர் பி. முகமது இஸ்மாயில் (70).

கல்வியே நல்ல சமுதாயத்தை உருவாக்கும்

Posted: 07 Sep 2014 12:53 PM PDT

கல்வியே நல்ல சமுதாயத்தை உருவாக்கும் என்றார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரமணியம். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிறுவாச்சூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி

"ஊரகப் பகுதி வீடுகளில் 68 ஆயிரம் கழிப்பறைகள்'

Posted: 07 Sep 2014 12:53 PM PDT

ஊரகப் பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 68,435 தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெரம்பலூரில் கால்நடை மருத்துவ முகாம்

Posted: 07 Sep 2014 12:53 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் செப். 1 முதல் 21-ம் தேதி வரை கால்நடை பராமரிப்புத் துறையினரால் கால், வாய் நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தேமுதிக சார்பில் வேட்டி, சேலை

Posted: 07 Sep 2014 12:52 PM PDT

தேமுதிக 10 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

ஆமை வேகத்தில் அரியலூர் புதைசாக்கடைப் பணி

Posted: 07 Sep 2014 12:52 PM PDT

அரியலூர் நகரில் தொடங்கப்பட்ட புதைசாக்கடைத் திட்டப் பணிகள் 3 ஆண்டுகளாகியும் நிறைவு பெறாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கொலையான தம்பதியின் சடலங்களை வாங்க மறுத்து போராட்டம்

Posted: 07 Sep 2014 12:52 PM PDT

அரியலூர் அருகே வெள்ளிக்கிழமை கொலையான தம்பதியின் சடலங்களை வாங்க மறுத்து உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை ஜயங்கொண்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூரில் திமுக உள்கட்சி தேர்தலுக்கு வேட்புமனு

Posted: 07 Sep 2014 12:51 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் திமுகவின் நகர மற்றும் ஒன்றியப் பொறுப்புகளுக்கு போட்டியிட நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மாவட்ட வில் வித்தைப் போட்டி

Posted: 07 Sep 2014 12:51 PM PDT

கும்பகோணத்தில் தமிழ்நாடு வில் வித்தைக் கழகம் சார்பில், மாவட்ட அளவிலான வில்வித்தைப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

"நேரடி நெல் விதைப்பில் ரூ. 5,000 சேமிக்கலாம்

Posted: 07 Sep 2014 12:51 PM PDT

நேரடி நெல் விதைப்புக் கருவி மூலம் விதைத்தால் ஆரம்பக் கட்டச் செலவில் ரூ. 5,000 வரை சேமிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

மக்கள் நீதிமன்றத்தில் 3 கைதிகள் விடுதலை

Posted: 07 Sep 2014 12:50 PM PDT

கும்பகோணம் கிளைச் சிறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

காளியம்மன் கோயில் குடமுழுக்கு

Posted: 07 Sep 2014 12:50 PM PDT

மயிலாடுதுறை வட்டம், மறையூர் ஊராட்சிக்குட்பட்ட ஊர்குடி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருமக்கோட்டையில்பண்ணைக் குட்டை மீன் வளர்ப்புப் பயிற்சி

Posted: 07 Sep 2014 12:50 PM PDT

: நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டையில் செப். 10-ம் தேதி தொடங்கப்படும் பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்புப் பயிற்சி முகாமில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

"ஹிமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் துமல் எம்எல்ஏ பதவியை விட்டு விலக வேண்டும்'

Posted: 07 Sep 2014 12:50 PM PDT

ஹிமாசலப் பிரதேசத்தில் நில ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், அந்த மாநில முன்னாள் முதல்வரும், பாஜக எம்.எல்.ஏ.வுமான பி.கே.துமலும், அவரது மகனும், எம்.பி.யுமான அனுராக் தாக்குரும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயக முறையில்நடத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 07 Sep 2014 12:49 PM PDT

உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைபடி நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ஐ.வி. நாகராஜன். நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

குறுவை வைக்கோலை உரமாக்கும் வழிமுறை: வேளாண் அலுவலர் யோசனை

Posted: 07 Sep 2014 12:49 PM PDT

குத்தாலம் பகுதியில் தற்போது குறுவை நெல் அறுவைடைப் பணிகள் இயந்திரம் மூலம் அதிகளவு நடந்து வருகிறது. இதில் கிடைக்கும் வைக்கோல் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்த முடியாத அளவிற்கு

முசாஃபர்நகர் கலவரம்: மேலும் 61 பேரிடம் வாக்குமூலம் பதிவு

Posted: 07 Sep 2014 12:49 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட மேலும் 61 பேர், விசாரணை ஆணையத்திடம் வாக்குமூலம் அளித்தனர்.

பாதுகாப்பற்ற நிலையில் செயல்படும் ஏடிஎம் மையம்

Posted: 07 Sep 2014 12:49 PM PDT

: நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் போதிய பாதுகாப்பு இல்லாமல் செயல்பட்டு வருகிறது ஏ.டி.எம். மையம்.

மத போதகரை நாடு கடத்த பரிந்துரை

Posted: 07 Sep 2014 12:49 PM PDT

அமெரிக்காவில் 14வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த மத போதகரை அந்நாட்டிடம் ஒப்படைக்குமாறு தில்லி நீதிமன்றம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

இளைஞரிடம் செல்போனை பறித்து சென்றவர் கைது

Posted: 07 Sep 2014 12:48 PM PDT

திருவாரூரில் சனிக்கிழமை கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடமிருந்து செல்போனை பறித்து சென்றவரை போலீஸார் கைது செய்தனர். திருவாரூர் அருகேயுள்ள பள்ளிவாரமங்கலத்தைச் சேர்ந்தவர் சித்திவிநாயகம் மகன் தியாகராஜன் (26). இவர் சனிக்கிழமை தனது நண்பர்கள் மதன்ராஜ், சரவணன் ஆகியோருடன் திருவாரூர் ரயி

மின்சாரம் பாய்ந்து பேரூராட்சி தாற்காலிக பணியாளர் பலத்த காயம்

Posted: 07 Sep 2014 12:48 PM PDT

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ். (35). இவர் முத்துப்பேட்டை பேரூராட்சியில் தாற்காலிக மின் பணியாளராக பணியாற்றி வருகிறார். சனிக்கிழமை

பிகார் அரசில் ஆர்ஜேடி, காங்கிரஸூக்கு இடமா? முதல்வர் மாஞ்சி பதில்

Posted: 07 Sep 2014 12:48 PM PDT

பிகாரை ஆளும் ஐக்கிய ஐனதா தள அரசில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடம் அளிப்பது குறித்து மூன்று கட்சித் தலைவர்களும் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று அந்த மாநில முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி கூறினார்.

ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம்

Posted: 07 Sep 2014 12:48 PM PDT

திருவண்ணாமலை எஸ்.கே.பி. கல்விக் குழுமத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

ஆசிரியர்களுக்குப் பயிற்சி

Posted: 07 Sep 2014 12:47 PM PDT

அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எளிமைபடுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல், வலுவூட்டல் பயிற்சி செங்கம் அருகேயுள்ள மேல்பள்ளிப்பட்டு தொகுப்பு கருத்தாய்வு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியில் ஆசிரியர்களுக்குப் பாராட்டு

Posted: 07 Sep 2014 12:47 PM PDT

: வந்தவாசி சித்தார்த்தா சமூக நலக்கல்வி அறக்கட்டளை சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா தூய நெஞ்ச மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

ராதாபுரத்தில் இன்று திமுக பொதுக் கூட்டம்

Posted: 07 Sep 2014 12:47 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த ராதாபுரத்தில் அண்ணா நூற்றாண்டு வளைவு அருகே திங்கள்கிழமை மாலை நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில், பேராசிரியர் அன்பழகன் பங்கேற்கிறார்.

கிராமக் கல்விக் குழு கணக்குகள் தணிக்கை

Posted: 07 Sep 2014 12:46 PM PDT

செங்கம் வட்டார வள மையத்தில், கிராமக் கல்விக் குழுக்களின் கணக்கு தணிக்கை அண்மையில் நடைபெற்றது

செப்டம்பர் 9 மின் தடை

Posted: 07 Sep 2014 12:46 PM PDT

செங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரச் சிறப்புப் பராமரிப்பு பணி நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியச் செயற்பொறியாளர் பூ.காளிமுத்து தெரிவித்துள்ளார்.

போளூர் சிறையில் ஆய்வு

Posted: 07 Sep 2014 12:46 PM PDT

போளூரில் உள்ள கிளை சிறையை சிறைத் துறையின் கட்டுப்பாட்டு கண்காணிப்பாளர் கருப்பண்ணன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

கார் கடத்தல்: இளைஞர் கைது

Posted: 07 Sep 2014 12:45 PM PDT

ஆரணி அருகே காரை கடத்தியதாக, இளைஞர் கைது செய்யப்பட்டார்.

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 07 Sep 2014 12:45 PM PDT

வந்தவாசியை அடுத்த மஞ்சப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீமும்மூர்த்தி ஸ்வாமி மற்றும் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

தண்ணீர்த் தொட்டியில் விழுந்து சிறுவன் சாவு

Posted: 07 Sep 2014 12:45 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த பெரிய கோலாப்பாடி கிராமத்துக்குள்பட்ட இந்திரா நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் மகன் லோகேஷ்வரன் (8), தண்ணீர்த் தொட்டியில் விழுந்து இறந்தார்.

பாஜகவில் இணைந்தார் என்சிபி முன்னாள் அமைச்சர்

Posted: 07 Sep 2014 12:45 PM PDT

மகாராஷ்டிர மாநில முன்னாள் மருத்துவக் கல்வித் துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) பிரமுகருமான விஜயகுமார் கவிட்சனிக்கிழமை பாஜகவில் இணைந்தார்.

செயல்வழிக் கற்றல் வலுவூட்டல் பயிற்சி

Posted: 07 Sep 2014 12:45 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி தொகுப்பு கருத்தாய்வு மையத்தில், எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் வலுவூட்டல் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கப் பலகை அமைப்பு தொடக்கம்

Posted: 07 Sep 2014 12:44 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த சாவல்பூண்டி கிராமத்தில் சங்கப் பலகை அமைப்பின் தொடக்க விழா நடைபெற்றது.

நிலச்சரிவுகளை முன்கூட்டியே கண்டறிய புதிய முறை

Posted: 07 Sep 2014 12:44 PM PDT

கணிதத்தைப் பயன்படுத்தி இமயமலைப் பகுதியில் நிலச்சரிவுகளால் ஏற்படக்கூடிய அழிவை முன்கூட்டியே விரைவாகக் கணக்கிடும் முறையை மத்திய நதிநீர் ஆணையம் உருவாக்கி வருகிறது.

சத்துணவு ஊழியர் சங்கக் கூட்டம்

Posted: 07 Sep 2014 12:44 PM PDT

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தண்டராம்பட்டு ஒன்றியப் பேரவைக் கூட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

பெண் தற்கொலை

Posted: 07 Sep 2014 12:44 PM PDT

திருவண்ணாமலை, வேங்கிக்கால், குளத்து மேட்டுத் தெருவைச் சேர்ந்த தொழிலாளி சண்முகம் மனைவி செல்வி (40), தற்கொலை செய்துகொண்டார். இவர்களுக்கு 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்

சாரதா நிதி நிறுவன மோசடி: மம்தாவின் சகாக்கள் சிறைக்கு அனுப்பப்படுவர்: அமித் ஷா

Posted: 07 Sep 2014 12:44 PM PDT

""சாரதா நிதி நிறுவன மோசடியில் தொடர்புடைய மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் சகாக்களைக் கைது செய்து, சிறைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன'' என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி சர்க்கரை ஆலைகள் முற்றுகையிடப்படும்

Posted: 07 Sep 2014 12:43 PM PDT

முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2 தனியார் சர்க்கலை ஆலைகள் முன் திட்டமிட்டபடி முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

போளூரில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி

Posted: 07 Sep 2014 12:43 PM PDT

போளூர் வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

210 பேர் ரத்த தானம்

Posted: 07 Sep 2014 12:43 PM PDT

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில், 210 பேர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

மர்ம பெட்டிகளால் பரபரப்பு

Posted: 07 Sep 2014 12:43 PM PDT

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே, வேலூர் சாலையின் ஓரம் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை பெரிய அளவிலான 2 மர்ம அட்டைப் பெட்டிகள் கேட்பாரற்றுக் கிடந்தன.

கல்லூரியில் கருத்தரங்கம்

Posted: 07 Sep 2014 12:42 PM PDT

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, செய்யாறு பாலிடெக்னிக் கல்லூரியில் மேலாண்மை கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

செய்யாறில் ரத்த தான முகாம்

Posted: 07 Sep 2014 12:42 PM PDT

செய்யாறு சனிக்கிழமை நடைபெற்ற 2 ரத்த தான முகாம்களில், 170 பேர் ரத்த தானம் செய்தனர்.

செய்யாறு

Posted: 07 Sep 2014 12:40 PM PDT

ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கை: மோடி தெளிவுபடுத்துவார்: கேரள பாஜக

Posted: 07 Sep 2014 12:36 PM PDT

மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம்களை தலித்துகள் பட்டியலில் சேர்ப்பதற்கு பரிந்துரை செய்துள்ள ரங்கநாத் மிஸ்ரா குழுவின் அறிக்கை தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி தெளிவு படுத்துவார் என்று கேரள பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சமத்துவமின்மை நீடிக்கும் வரை இட ஒதுக்கீடு தேவை: ஆர்எஸ்எஸ்

Posted: 07 Sep 2014 12:36 PM PDT

"சமூகத்தில் சமத்துவமின்மை நீடிக்கும் வரை இட ஒதுக்கீடு தேவை' என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறினார்.

அரசு ஒப்பந்தப் பணியாளருக்கு பிஎஃப், ஓய்வூதியச் சலுகைகள் கிடையாது: மத்திய அரசு விளக்கம்

Posted: 07 Sep 2014 12:35 PM PDT

சில அரசுத் துறைகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தனியார் நிறுவனங்களிடமிருந்து "அவுட்சோர்ஸ்' முறையில் பணியில் அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிராவிடண்ட் ஃபண்ட்), ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களின் கீழ் எந்தச் சலுகையும் வழங்கப்படுவதில்லை என்று மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உ.பி. கலவரம்: மோடி, அமித் ஷா மீது சமாஜவாதி குற்றச்சாட்டு

Posted: 07 Sep 2014 12:33 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நிகழ்ந்த வகுப்புக் கலவரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும்தான் காரணம் என்று ஆளும் கட்சியான சமாஜவாதி குற்றம்சாட்டியுள்ளது.

மாவோயிஸ்ட் தாக்குதல் அபாயம்: ஒடிஸா: 4 மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு

Posted: 07 Sep 2014 12:31 PM PDT

ஒடிஸாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான, இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) அமைப்பு தொடங்கப்பட்ட தினம், இம்மாதம் 21ஆம் தேதி வருவதையொட்டி, அந்த மாநிலத்தின் 4 மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள்: விசாரணையை விரைவுபடுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

Posted: 07 Sep 2014 12:30 PM PDT

எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிப்பதற்கான வாய்ப்புள்ள குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

குமரி: குளங்கள், கால்வாய்களில் தொடரும் ஆக்கிரமிப்பு

Posted: 07 Sep 2014 12:28 PM PDT

குமரி மாவட்டத்தில் உள்ள குளங்கள், கால்வாய்கள் போதிய பராமரிப்பு இன்றியும், ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாலும், நெல் விவசாயம் படிப்படியாக குறைந்து வருவதாக விவசாயிகள்

பராமரிப்பின்றி இயக்கப்படும் கன்னியாகுமரி விரைவு ரயில்

Posted: 07 Sep 2014 12:28 PM PDT

பெங்களுரூ ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் சென்னை செல்லும் கன்னியாகுமரி விரைவு ரயிலாக மாற்றம் செய்து இயக்கப்படுவதால் பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பயணிகளிடையே எழுந்துள்ளது.

செப்டம்பர் 9 மின் தடை

Posted: 07 Sep 2014 12:28 PM PDT

பள்ளியாடி, இனயம் பகுதிகளில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (செப். 9) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநாடு

Posted: 07 Sep 2014 12:27 PM PDT

நாகர்கோவிலில் கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநாடு நடைபெற்றது.

கார்- பைக் மோதல்: சகோதரர்கள் காயம்

Posted: 07 Sep 2014 12:27 PM PDT

திருவட்டாறு அருகே ஞாயிற்றுக்கிழமை பைக் மீது கார் மோதியதில் சகோதரர்கள் பலத்த காயமடைந்தனர். மேக்காமண்டபத்தைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன்களான அசின் (20), ஆன்றோ (18) ஆகியோர்

குமரி மாவட்டத்தில் 720 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

Posted: 07 Sep 2014 12:27 PM PDT

குமரி மாவட்டத்தில் 10 மையங்களில் இந்து முன்னணி சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 2,000 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஞாயிற்றுக்கிழமை கடலில் விசர்ஜனம்

தெற்கு குளப்புரவு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு

Posted: 07 Sep 2014 12:27 PM PDT

சுசீந்திரம் தெற்கு குளப்புரவு விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கோலாகலம்

Posted: 07 Sep 2014 12:26 PM PDT

குமரி மாவட்டம், குலசேகரம் பகுதிகளில் ஓணம் பண்டிகை கோலாகலமாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

குமரியில் வாழைப் பூ விற்பனை அமோகம்

Posted: 07 Sep 2014 12:26 PM PDT

கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் காய்கனிகள் வரிசையில் அண்மைக்காலமாக வாழைப்பூவும் இடம் பிடித்துள்ளது.

நீண்டகாலமாக சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகள்: நீதிபதிகள் ஆய்வு

Posted: 07 Sep 2014 12:26 PM PDT

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை ஆகிய சிறைகளில் நீண்டகாலமாக இருக்கும் விசாரணைக் கைதிகளிடம் ஞாயிற்றுக்கிழமை நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

குழிவிளை தூய அலங்கார அன்னை ஆலய விழா இன்று தொடக்கம்

Posted: 07 Sep 2014 12:26 PM PDT

களியக்காவிளை அருகேயுள்ள குழிவிளை தூய அலங்கார அன்னை தேவாலய குடும்ப விழா திங்கள்கிழமை தொடங்கி 7 நாள்கள் நடைபெறுகிறது.

பிணைக் கைதிகள் மீட்பு: கமாண்டோக்களுக்கு பயிற்சி

Posted: 07 Sep 2014 12:21 PM PDT

வனப் பகுதிகளில் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்படுபவர்களை மீட்பதற்கான பயிற்சி, தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) வீரர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஜம்மு-காஷ்மீர் வெள்ளம்: பலி 138ஆக உயர்வு

Posted: 07 Sep 2014 12:20 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மழை, வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 138-ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

Posted: 07 Sep 2014 12:18 PM PDT

தூத்துக்குடியில் ஓணம் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை அத்தப்பூ கோலம் வரைந்து கொண்டாடப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™