Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ்.,: அரசு அறிவித்த திட்டங்கள் தொடருமா?

Posted:

ஜெயலலிதாவின் முதல்வர் பதவி மற்றும் எம்.எல்.ஏ., பதவி ரத்தானதால், சட்டசபை அ.தி.மு.க., தலைவராக, ஓ.பன்னீர்செல்வம் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்று, தமிழக முதல்வராக பொறுப்பேற்கலாம் எனத் தெரிகிறது. இதையடுத்து, 'அம்மா' திட்டங்கள் தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்புக்குப் பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதை அடுத்து, தமிழகத்தின் அடுத்த முதல்வர் பதவிக்கான ஆலோசனை, நேற்று, சென்னையில் நடந்த எம்.எல்.ஏ., கூட்டத்தில் நடந்தது.கூட்டத்தில், அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன், 'ஜெயலலிதா, ஒரு தீர்மானம் ...

மருந்து சீட்டில் முதல்வர் முடிவு!

Posted:

அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து, ஜெயலலிதாவின் முடிவை அறிய முயன்ற அமைச்சர்களுக்கு, மருந்து சீட்டும், மாத்திரைகளும் கை கொடுத்தன என்ற, சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம், ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததை அமைச்சர்கள் யாரும் எதிர்பார்க்காத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து திக்குத் தெரியாமல் திணறிக் கொண்டு இருந்தனர். அதனால், நீதிமன்ற வளாகத்தை விட்டு அவர்கள் நகரவே இல்லை. அன்று மாலை 6:30 மணிக்கு, ஜெயலலிதாவை, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்த பின்னும் அவர்கள் அங்கிருந்து கிளம்பவில்லை. சிறையில் ...

அமைச்சர்கள் கையில் அதிகாரம்: கோப்புகள் தேக்கத்திற்கு விடிவு வருமா?

Posted:

இதுவரை, ஜெயலலிதாவின் தலைமையில் செயல்பட்ட, அமைச்சர்கள், இனி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், செயல்பட உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அமைச்சர்கள், இனிமேலாவது, தங்களது துறை சம்பந்தப்பட்ட முடிவுகளை, சுயமாக எடுப்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஜெயலலிதா முதல்வராக இருந்த வரையில், அமைச்சர்களின் சுமையையும், அவரே தாங்கினார். அனைத்து துறை சம்பந்தப்பட்ட, எல்லா கோப்புகளையும், அவரே பார்த்தார். எந்த முடிவாக இருந்தாலும், அவரே எடுத்தார். அதற்கு காரணம், சுயமாக முடிவெடுக்க முடியாத அளவுக்கு, சில அமைச்சர்கள் திறம்படச் செயல்படவில்லை எனக் கூறப்பட்டது. அதுமட்டுமல்ல, ...

ஜெ., தண்டனைக்கு கருத்தில்லை: தி.மு.க., மவுனத்தின் பின்னணி 2ஜி?

Posted:

சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இந்த வழக்கின் தீர்ப்பை வரவேற்று, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், தி.மு.க., தரப்பு, இந்த விஷயத்தில் மவுனமாக உள்ளது.இது தொடர்பாக, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு விவகாரத்தில், தி.மு.க., தரப்பு இரட்டை வேடம் போடுகிறது. வழக்கை சுப்ரமணியன் சாமி தாக்கல் செய்திருந்தாலும், ஆரம்ப காலம் தொட்டு, இந்த வழக்கில், அப்போதைய தி.மு.க., அரசு தான், தீவிர கவனம் செலுத்தி நடத்தி ...

ஜெயலலிதாவுக்கு ஜாமின் கோரி இன்று மனு தாக்கல்: வழக்கறிஞர் குமார் தகவல்

Posted:

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை பெற்றுள்ள, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கக் கோரியும், அவரை குற்றவாளி என, அறிவித்ததற்கும், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கும் தடை விதிக்கக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், இன்று அவரின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.பெங்களூரு தனி நீதிமன்றத்தில், ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி வந்த, அவரின் வழக்கறிஞர் பி.குமார் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது: ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், இன்று மனு தாக்கல் செய்யப்படும். மேலும், ...

ஜெ.,வின் 2வது நாள் சிறைவாசம்: காலை 5:30க்கு நடைபயிற்சி; 7:30க்கு டிபன்

Posted:

பெங்களூரு:சொத்து குவிப்பு வழக்கில், சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதா, நேற்று இரண்டாவது நாளை சிறையில் கழித்தார்.பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில், பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு, கைதிக்குரிய எண்ணாக, 7,402 வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, சிறை அதிகாரிகள், அவருக்கு, சப்பாத்தி, குருமா வழங்கியும், அதை சாப்பிட மறுத்து, பழங்களையே சாப்பிட்டார். வெளியிலிருந்து உணவு கொண்டு வர சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில், தலையணை மற்றும் பெட்ஷீட்கள் வழங்கப்பட்டன.அதிகாலை, 5:30 மணிக்கு எழுந்த அவர், சிறை வளாகத்திலேயே நடைபயிற்சி மேற்கொண்டார். பின், ...

உங்கள் தொழில் நுணுக்கங்களை எங்களுடன் பகிருங்கள்! அமெரிக்க இளைஞர்களுக்கு மோடி அழைப்பு

Posted:

நியூயார்க்: நியூயார்க் நகரின் சென்ட்ரல் பார்க்கில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய உரை, அங்குள்ள இளைஞர்களை நெகிழ வைக்கும் விதமாக அமைந்தது.அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நியூயார்க் சென்ட்ரல் பார்க்கில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் உரையாற்றி, அவர்களை உற்சாகப்படுத்தினார்.பலத்த கரவொலி:மோடியை, பிரபல நடிகர் ஹக் ஜாக்மேன் அறிமுகம் செய்தார். இளைஞர்கள் மத்தியில் அமைதியை வலியுறுத்தும் வகையில் பேசிய மோடி, 'இளைஞர்கள் தான் எதிர்கால சொத்து' என்றார். ...

கூடங்குளத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்: மின் தடை நேரம் அதிகரிக்க வாய்ப்பு

Posted:

கூடங்குளம் முதல் அணு உலையில், மின் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டதால், தமிழகத்தில், மின் தடை நேரம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஒதுக்கீடு:மத்திய அரசு, ரஷ்ய நாட்டு உதவியுடன், தமிழகத்தின், நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில், தலா, 1,000 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட, இரண்டு அணு உலைகள் அமைத்துள்ளது.கூடங்குளத்தில், தமிழகத்திற்கு, முதல் அணு உலையில் இருந்து, 562; இரண்டாவது, 463 என, மொத்தம், 1,025 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.தற்போது, முதல் அணு உலையில், சோதனை முறையில் மின் உற்பத்தி செய்யப்படுவதில், தமிழகத்திற்கு, ...

வன்முறையில் 2 பஸ்கள் எரிப்பு; 63 பஸ்கள் சேதம்: பஸ்கள் ஓடத் துவங்கியும் பயணிகள் இல்லை

Posted:

தமிழகத்தில் திடீரென வெடித்த வன்முறையில், இரண்டு அரசு பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், 63 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. 53 இடங்களில் ரயில் மறியல் செய்யப்பட்டுள்ளது.நேற்று, பஸ்கள் இயக்கம் படிப்படியாக துவங்கிய போதிலும், பதற்றம் காரணமாக பயணிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்தது.சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு நேற்று முன்தினம் தண்டனை வழங்கப்பட்டதும், தமிழகம் முழுவதும், பஸ் எரிப்பு, கண்ணாடிகள் உடைப்பு, வாகன மறியல் என, வன்முறை வெடித்தது. இதனால், பஸ் போக்கு வரத்து முழுமையாக முடங்கியது.சென்னை கோயம்பேடு, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™