Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மாநில ஜூனியர் தடகளப் போட்டி தஞ்சையில் இன்று தொடக்கம்

Posted: 28 Sep 2014 01:27 PM PDT

தஞ்சாவூரில் 28-ஆவது மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கி, வரும் அக். 1 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

மாநில கைவினைக் கலைப்பயிற்சி முகாம்

Posted: 28 Sep 2014 01:27 PM PDT

தஞ்சாவூரில் தொடங்கிய கைவினை கலைப் பயிற்சி முகாமில் மாநிலம் முழுவதுமிருந்து 100 மாணவர்கள், 10 கலை ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

மோடி அழைப்பு: அமெரிக்க நிறுவனங்கள் உற்சாகம்

Posted: 28 Sep 2014 01:27 PM PDT

இந்தியாவில் மனித வள மேம்பாடு, தொழில் முனைவோருக்கான பயிற்சி, வணிகக் கல்விப் பயிற்சி ஆகிய துறைகளில் முதலீடு செய்ய வருமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்புக்கு, அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆலங்குடி பகுதியில் இயல்பு நிலை திரும்பியது

Posted: 28 Sep 2014 01:27 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அதிமுகவினர் சாலை மறியல், கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் ஆலங்குடியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

குறைவான பேருந்துகள் இயக்கம்: பொதுமக்கள் அவதி

Posted: 28 Sep 2014 01:26 PM PDT

முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை பிற்பகலில் நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை காலையிலும் குறைவாக இருந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

மாணவர்களிடம் தொற்றா நோய்கள் விழிப்புணர்வு தேவை

Posted: 28 Sep 2014 01:26 PM PDT

மாணவர்களிடம் தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வு வேண்டும் என்றார் காரையூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன்.

தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

Posted: 28 Sep 2014 01:26 PM PDT

தமிழகத்தில் அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்க மாநிலம் முழுவதும் 38 கம்பெனி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பயிற்சி பெற்றவர்களுக்கு தென்னை மரம் ஏறும் கருவிகள்

Posted: 28 Sep 2014 01:25 PM PDT

சென்னை தென்னை வளர்ச்சி வாரியமும், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய தென்னை மரம் ஏறும் பயிற்சி முடித்தவர்களுக்கு கருவிகள் அளிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதிமுகவினர் மீது தாக்குதல்: கருணாநிதி, ஸ்டாலின் மீது 5 பிரிவுகளில் வழக்கு

Posted: 28 Sep 2014 01:25 PM PDT

அதிமுகவினர் தாக்கப்பட்டச் சம்பவத்தில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் மீது 5 பிரிவுகளில் சென்னை ராயப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஆரியூர் செவிலியர் கல்லூரியில் இருதய நாள் விழா

Posted: 28 Sep 2014 01:25 PM PDT

உலக இருதய தினத்தையொட்டி ஆரியூர் மகாத்மா கல்லூரி செவிலியர் கல்லூரியில் உலக இருதய நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

திருந்திய நெல் சாகுபடி முறையை மேற்கொள்ள அறிவுறுத்தல்

Posted: 28 Sep 2014 01:24 PM PDT

புதுக்கோட்டை வட்டாரத்தில் திருந்திய நெல் சாகுபடி மேற்கொள்ள வேண்டுமென வேளாண் துறையினர் அறிவுறுத்தினர்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் ஆணை

Posted: 28 Sep 2014 01:24 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்ட சனிக்கிழமை (செப்.27) முதல் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து, வரும் 6-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலுப்பூர், அன்னவாசலில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

Posted: 28 Sep 2014 01:24 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், அன்னவாசலில் அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

ராப்பூசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்எஸ்எஸ் முகாம் தொடக்கம்

Posted: 28 Sep 2014 01:24 PM PDT

இலுப்பூர் அருகே ராப்பூசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

அம்மா பண்ணை மகளிர் மேம்பாட்டுக்குழு உறுப்பினர்கள் தேர்வு

Posted: 28 Sep 2014 01:23 PM PDT

பொன்னமராவதி ஒன்றியம் கண்டியாநத்தம், நெறிஞ்சிக்குடி ஊராட்சிகளில் அம்மா பண்ணை மகளிர் மேம்பாட்டுக்குழுக்கள் அமைக்க உறுப்பினர்கள் தேர்வு அண்மையில் நடைபெற்றது.

வீட்டுக் கதவை உடைத்து பித்தளை பொருள்கள் திருட்டு

Posted: 28 Sep 2014 01:23 PM PDT

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் வீட்டுக் கதவை உடைத்து பித்தளைப் பொருள்களை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனர்.

இலங்கைக் கடற்படையினர் மீண்டும் அட்டுழியம்: ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சிறை பிடிப்பு

Posted: 28 Sep 2014 01:23 PM PDT

ராமேசுவரம் பகுதியிலிருந்து சென்ற படகு, 4 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கச்சத்தீவு கடல் பகுதியில் சிறை பிடித்துச் சென்றனர்.

வெறிச்சோடியது தஞ்சாவூர்; பதற்றப் பகுதிகளுக்கு பேருந்து இல்லை

Posted: 28 Sep 2014 01:23 PM PDT

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமையும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, மாநகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது.

அதிமுக தொண்டர் தற்கொலை முயற்சி

Posted: 28 Sep 2014 01:22 PM PDT

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பைக் கேட்டு மனம் உடைந்த அதிமுக தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.

85 கிராமங்களைத் தத்தெடுத்த என்எஸ்எஸ் மாணவர்கள்!

Posted: 28 Sep 2014 01:22 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தின் 85 கிராமங்களில் விழிப்புணர்வு மற்றும் தூய்மைப் பணி மேற்கொள்வதற்காக அக்கிராமங்களை 85 அரசு மேல்நிலைப்பள்ளிகளின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தத்தெடுத்துள்ளனர்.

டி.ஆர்.பி. தேர்வில் எம்.சி.எஸ். பட்டதாரிகளை புறக்கணிக்கக் கூடாது

Posted: 28 Sep 2014 01:22 PM PDT

முதுநிலை நிறுவனச் செயலர் பட்டம் பெற்ற பட்டதாரிகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் புறக்கணிப்பதாக சென்னைப் பல்கலைக்கழகக் கழக கல்விக் குழுக் கூட்டத்தில் பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு

Posted: 28 Sep 2014 01:22 PM PDT

தமிழகத்தில் உள்ள 100 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி தமிழக அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

தஞ்சையில் இன்று மாநில ஜூனியர் தடகளப் போட்டிகள் தொடக்கம்

Posted: 28 Sep 2014 01:21 PM PDT

தஞ்சாவூரில் 28-ஆவது மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கி, வரும் அக். 1 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்: ஆளுநரிடம் விஜயகாந்த் மனு

Posted: 28 Sep 2014 01:21 PM PDT

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டி, அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவிடம், எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மனு கொடுத்தார்.

என்எஸ்எஸ் முகாம்

Posted: 28 Sep 2014 01:21 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் சிறப்பு முகாம் தொடக்க விழா நெடுவாக்கோட்டை கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.

மாணவர்கள் படிப்புக்கு பெற்றோர் உதவுகின்றனரா?

Posted: 28 Sep 2014 01:21 PM PDT

வீடுகளில் மாணவர்களின் படிப்புக்கு பெற்றோர் எந்தளவுக்கு உதவி செய்கின்றனர் என்பதை கல்வித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்கின்றனர்.

பூண்டி புஷ்பம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

Posted: 28 Sep 2014 01:21 PM PDT

பூண்டி புஷ்பம் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான வேதியியல் விஞ்ஞானிகள் கருத்தரங்கில், பெங்களுரூ இந்திய அறிவியல் கழகத்தின் மூத்த அறிவியல் விஞ்ஞானி சீனிவாச சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாலக்கரை காவிரியாற்றுக்கு தாற்காலிக இரும்புப் பாலம் தேவை

Posted: 28 Sep 2014 01:20 PM PDT

கும்பகோணம் பாலக்கரை காவிரியாற்றில் தாற்காலிக இரும்புப் பாலம் அமைத்துத் தர வேண்டும் என குடந்தை அனைத்து வணிகர் சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மாநில கைவினை கலைப்பயிற்சி முகாம்

Posted: 28 Sep 2014 01:20 PM PDT

தஞ்சாவூரில் தொடங்கிய கைவினை கலைப் பயிற்சி முகாமில் மாநிலம் முழுவதுமிருந்து 100 மாணவர்கள், 10 கலை ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

திருவாரூரில் குறைந்த அளவில் இயக்கப்பட்ட பேருந்துகள்

Posted: 28 Sep 2014 01:18 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தைவிட குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன.

காரைக்காலில் 2-வது நாளாக பேருந்துகள் இயங்கவில்லை

Posted: 28 Sep 2014 01:18 PM PDT

காரைக்காலில் 2-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேருந்துகள் இயங்கவில்லை.

வீட்டுக் கதவை உடைத்துபித்தளை பொருள்கள் திருட்டு

Posted: 28 Sep 2014 01:17 PM PDT

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் வீட்டுக் கதவை உடைத்து பித்தளைப் பொருள்களை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனர்.

திருமலைராஜனாறு பால கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

Posted: 28 Sep 2014 01:17 PM PDT

காரைக்கால் அருகே ரூ. 12 கோடியில் நடைபெற்று வரும் திருமலைராஜனாறு பால கட்டுமானப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகளை காரைக்கால் வளர்ச்சி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.

காலி மனையில் வேலி அமைப்பதில் தகராறு: 4 பேர் மீது வழக்கு

Posted: 28 Sep 2014 01:17 PM PDT

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பெரிய கொற்கையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் சிந்தன் (24). அதே பகுதியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (50). இருவரும் உறவினர்கள். இருவருக்கும் பொதுவான காலிமனை அருகே உள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து பதவியேற்றார்

Posted: 28 Sep 2014 01:11 PM PDT

உச்ச நீதிமன்றத்தின் 42ஆவது தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து (63) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

ஹரியாணா முதல்வர் பெயரில் மற்றொரு வேட்பாளர்!

Posted: 28 Sep 2014 01:04 PM PDT

ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா போட்டியிடும் தொகுதியில் அதே பெயருடைய மற்றொரு நபர் போட்டியிடுகிறார்.

பெண்களை அர்ச்சர்களாக நியமிக்க பரிசீலனை: சித்தராமையா

Posted: 28 Sep 2014 01:03 PM PDT

கர்நாடக மாநிலத்திலுள்ள அரசு கோயில்களில் அர்ச்சகர்களாக பெண்களை நியமித்து குறித்து பரிசீலிக்கப்படும் என்று மாநில முதல்வர் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

எனது மகள் அரசியலுக்கு வரமாட்டார்

Posted: 28 Sep 2014 01:01 PM PDT

"எனது மகள் ஹர்ஷிதா அரசியலுக்கு வரமாட்டார்' என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கொலை வழக்கை விசாரிக்க சிபிஐக்கு பரிந்துரைப்பதா?

Posted: 28 Sep 2014 12:59 PM PDT

கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி மனோஜ் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா பரிந்துரை செய்ததற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பினராயி விஜயன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

"தீவிரவாதத் தலைவரின் நேபாள சொத்துகளை முடக்க நடவடிக்கை'

Posted: 28 Sep 2014 12:59 PM PDT

அஸ்ஸாமை மையமாகக் கொண்டு செயல்படும் வடகிழக்கு மாநிலத் தீவிரவாத அமைப்புத் தலைவரின் நேபாள சொத்துகளை முடக்கும் முயற்சியில் இந்தியப் புலனாய்வு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

லோக்பால் நியமனத்தில் விதிகளின்படி செயல்படுவோம்: ராஜ்நாத் சிங்

Posted: 28 Sep 2014 12:58 PM PDT

லோக்பால், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உள்ளிட்ட சட்டப்பூர்வ அமைப்புகளுக்கான நியமனங்களில் மத்திய அரசு விதிமுறைகளின்படி செயல்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

குறுந்தொழில்களை மேம்படுத்தக் குழு

Posted: 28 Sep 2014 12:56 PM PDT

சிறு, குறுந்தொழில்களை மேம்படுத்தவும், தொழில்முனைவோரின் பொருளாதார பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் மத்திய நிதி அமைச்சகம், குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வீட்டில் தாய்மொழியில் பேசுங்கள்: வெங்கய்ய நாயுடு

Posted: 28 Sep 2014 12:56 PM PDT

வீட்டில் குழந்தைகள் தாய்மொழியில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார்.

கையூட்டுச் செய்தி வெளியிடுவோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையர்

Posted: 28 Sep 2014 12:47 PM PDT

கையூட்டுச் செய்தி வெளியிடுவது என்பது மக்கள் பிரதிநிதிகளைத் தகுதிநீக்கம் செய்வதற்கான குற்றமாக்கப்பட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

பெண் தற்கொலை

Posted: 28 Sep 2014 12:47 PM PDT

குத்தாலம் வட்டம், நக்கம்பாடி கிராமம் மேல அய்யனார்குடியைச் சேர்ந்தவர் குளஞ்சியப்பன் (30). இவருக்கும் மயிலாடுதுறை அருகேயுள்ள முளப்பாக்கத்தை சேர்ந்த அருள்மொழி (24) என்பவருக்கும் கடந்த

நீடாமங்கலத்தில் இன்று விழிப்புணர்வு முகாம்

Posted: 28 Sep 2014 12:47 PM PDT

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக இருதய தினத்தை முன்னிட்டு உலக இருதய தின விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை (செப். 29) நடைபெறவுள்ளது.

ஆபத்சகாயேஸ்வரர்கோயிலில் நவராத்திரி விழா

Posted: 28 Sep 2014 12:47 PM PDT

நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சுக்கிர வார அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நாள்தோறும் நடைபெறுகிறது.

நாகையில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு

Posted: 28 Sep 2014 12:47 PM PDT

முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தைத் தொடர்ந்து, 2-ம் நாளாக ஞாயிற்றுக்கிழமை நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன

கரூர் மாவட்டத்தில் 3 பேர் மாரடைப்பால் சாவு

Posted: 28 Sep 2014 12:46 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட செய்தியைக் கேட்ட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் மாரடைப்பால் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு குழு விளையாட்டுப் போட்டிகள்

Posted: 28 Sep 2014 12:46 PM PDT

நாகை மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் அக். 8-ம் தேதி நடைபெறுகிறது

ஹுரியத் தலைவர்களை எங்கள் தூதர்சந்தித்தது சரியான நேரம் அல்ல: பாகிஸ்தான் ஒப்புதல்

Posted: 28 Sep 2014 12:46 PM PDT

ஹுரியத் தலைவர்களை எங்கள் தூதர் சந்தித்தது சரியான நேரம் அல்ல என்று பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.

குத்தாலத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கூட்டம்

Posted: 28 Sep 2014 12:46 PM PDT

 குத்தாலத்தில் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அண்ணையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரச் செயலர் எம்.சி. பாலு தலைமை வகி

கருணாநிதி உருவ பொம்மை எரிப்பு

Posted: 28 Sep 2014 12:45 PM PDT

நாகை மாவட்டம், பொறையாறு பகுதியில் அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை கருணாநிதியின் உருவ பொம்மை எரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில்,

அனுமதியின்றி மதுபானம் விற்ற 7 பேர் கைது

Posted: 28 Sep 2014 12:45 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்ற 7 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

தஞ்சாவூர்

Posted: 28 Sep 2014 12:44 PM PDT

புதுக்கோட்டை

Posted: 28 Sep 2014 12:44 PM PDT

நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்கம்

Posted: 28 Sep 2014 12:44 PM PDT

வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் 7 தின சிறப்பு முகாம் வந்தவாசி ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை தொடங்கியது.

மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த கல்வி கருத்தரங்கு

Posted: 28 Sep 2014 12:44 PM PDT

திருவண்ணாமலையில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த 2 நாள் கல்வி கருத்தரங்கு நடைபெற்றது.

ஐ.நா. அமைதி முயற்சியில் இந்தியப் பங்களிப்புக்கு நன்றி

Posted: 28 Sep 2014 12:42 PM PDT

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி முயற்சியில் தொடர்ந்து இந்தியா பங்களித்து வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடியிடம் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் நன்றி தெரிவித்தார்.

வதோதராவில் மீண்டும் வன்முறை: 100 பேர் கைது

Posted: 28 Sep 2014 12:42 PM PDT

குஜராத் மாநிலம், வதோதராவில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, மீண்டும் வன்முறை நிகழ்ந்ததால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

"சார்க்' அமைப்பை வலுப்படுத்தும் முயற்சி: ராஜபட்ச, ஹசீனா, கொய்ராலாவுடன் மோடி பேச்சு

Posted: 28 Sep 2014 12:39 PM PDT

அண்டை நாடுகளுடனான நல்லுறவுக்கு முன்னுரிமை என்ற தனது கொள்கையின் அடுத்தகட்ட முயற்சியாக, சார்க் நாடுகளான இலங்கை, வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

காஷ்மீர் தொடர்பான கொள்கையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது: ராஜ்நாத் சிங்

Posted: 28 Sep 2014 12:37 PM PDT

காஷ்மீர் தொடர்பாக முழுமையான கொள்கையை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உருவாக்கி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பேரவைத் தேர்தல்: அடுத்த மாதம் முடிவு?

Posted: 28 Sep 2014 12:36 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கடுமையான வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்: 7,000 வேட்பு மனுக்கள் தாக்கல்

Posted: 28 Sep 2014 12:34 PM PDT

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பியது

Posted: 28 Sep 2014 12:18 PM PDT

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இச்சூழ்நிலை மாறி, இயல்புநிலை திரும்பியது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள்

Posted: 28 Sep 2014 12:18 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியருக்கான பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் அக்டோபர் 1, 9 ஆம் தேதிகளில்

பெரியபுராண பேச்சரங்கம் நிறைவு

Posted: 28 Sep 2014 12:17 PM PDT

வந்தவாசி சைவ சமயப் பேரவை சார்பில் 3 தின பெரியபுராணப் பேச்சரங்கம் வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை நிறைவடைந்தது.

இலக்கிய வழக்காடு மன்றம்

Posted: 28 Sep 2014 12:17 PM PDT

வந்தவாசி வட்டத் தமிழ்ச் சங்கம் சார்பில் இலக்கிய வழக்காடு மன்றம் வந்தவாசியில் அண்மையில் நடைபெற்றது.

இஞ்சிமேடு வரதராஜப் பெருமாள் கோயிலில் யாக வேள்வி பூஜை

Posted: 28 Sep 2014 12:17 PM PDT

பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு வரதராஜப் பெருமாள் கோயிலில் யாக வேள்வி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

தேர்வுக் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்: இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

Posted: 28 Sep 2014 12:17 PM PDT

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அண்மையில் உயர்த்திய தேர்வுக் கட்டண உயர்வை, வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாரடைப்பில் அதிமுக பிரமுகர் சாவு

Posted: 28 Sep 2014 12:16 PM PDT

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை என்ற செய்தியை டி.வி.யில் பார்த்த அதிமுக பிரமுகர், மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

இரு சக்கர வாகனம் எரிப்பு

Posted: 28 Sep 2014 12:16 PM PDT

போளூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த டூவீலரை மர்ம நபர்கள் தீயிட்டு எரித்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிறுபான்மையின மாணவ-மாணவியர் கவனத்துக்கு...

Posted: 28 Sep 2014 12:16 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவியர் பள்ளி மேற்படிப்புக்கான கல்வி உதவித் தொகை பெற அக்டோபர் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

Posted: 28 Sep 2014 12:15 PM PDT

திண்டுக்கல் பகுதியில் 5 ஆவது நாளாக பலத்த மழை

Posted: 28 Sep 2014 12:15 PM PDT

திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொடர்ந்து 5ஆவது நாளாக பலத்த மழை பெய்ததால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருமணம் ஆகாத இளைஞருக்கு கருத்தடை சிகிச்சை

Posted: 28 Sep 2014 12:15 PM PDT

திருமணம் ஆகாத இளைஞருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அவரது உறவினர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

பேருந்துகள் இயக்கம், கடைகள் திறப்பு

Posted: 28 Sep 2014 12:15 PM PDT

பழனியில் இயல்புநிலை திரும்பியதைத் தொடர்ந்து கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. பேருந்துகளும் இயக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சென்றனர்.

ஒட்டன்சத்திரம் சந்தைக்கு காய்கறி வரத்து குறைவு

Posted: 28 Sep 2014 12:15 PM PDT

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு காய்கறிகளின் வரத்து வழக்கத்தை விட குறைவாக வந்தது. ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை ஒன்றியத்துணைத் தலைவர் உதயம் ராமசாமி, நகராட்சி துணைத்தலைவர்

இலக்கியச் சங்கமம்

Posted: 28 Sep 2014 12:10 PM PDT

மாணவர் பொது நலத் தொண்டியக்கம் நடத்தும் திங்கள் பாவரங்கம். பங்கேற்பு: கு.அ.தமிழ்மொழி, இரா.இளமுருகன், சி.வெற்றிவேந்தன், வே.கி.புவியரசு, வசீகரன், கு.அ.அறிவாளன்; அறிவாளன் அகம், 1, முருகன் கோயில் தெரு, சண்முகாபுரம், புதுச்சேரி; 29.9.14 மாலை 6.30.

மகான் ஷைகு சாஅதி

Posted: 28 Sep 2014 12:10 PM PDT

மகான் ஷைகு சாஅதி - ஆர்.பி.எம். கனி; பக் 184; ரூ. 100; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை; 044-2834 3385.

மறைக்காட்டில் ஒரு மாணிக்கம்

Posted: 28 Sep 2014 12:09 PM PDT

மறைக்காட்டில் ஒரு மாணிக்கம் -பகீரதன்; பக்.261; ரூ.250; கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம், வேதாரண்யம்-614810.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்

Posted: 28 Sep 2014 12:09 PM PDT

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - டாக்டர் சங்கர சரவணன்; ரூ.195; பக்.480; விகடன் பிரசுரம், சென்னை -2; 044-4263 4283.

ம.கோ.களஞ்சியம் (பண்டித ம.கோபாலகிருஷ்ண ஐயர் படைப்புகள்)

Posted: 28 Sep 2014 12:08 PM PDT

ம.கோ.களஞ்சியம் (பண்டித ம.கோபாலகிருஷ்ண ஐயர் படைப்புகள்) - பதிப்பாசிரியர்: உஷா மகாதேவன்; பக்.816; ரூ.800; காவ்யா, சென்னை - 24; )044-2372 6882.

என் ஆசிரியப்பிரான்

Posted: 28 Sep 2014 12:07 PM PDT

என் ஆசிரியப்பிரான் - கி.வா. ஜகந்நாதன்; பக்.192; ரூ.145; எùஸன்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கோயம்புத்தூர்; )0422-2323228.

மகனைப் பிரிந்த பெண் தற்கொலை

Posted: 28 Sep 2014 12:07 PM PDT

சின்னமனூரில் குடும்ப பிரச்னையில் பெண் தற்கொலை செய்து கொண்டார். ராயப்பன்பட்டி பானுமதி மகள் தேவி. இவரது கணவர் குணசேகரன். இவர்கள் குடும்ப பிரச்னை

தேனி மருத்துவக் கல்லூரியில் துணை இயக்குநர் ஆய்வு

Posted: 28 Sep 2014 12:06 PM PDT

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர்.

கம்பம்: கொலை வழக்கில் 2 பேர் கைது

Posted: 28 Sep 2014 12:06 PM PDT

கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி மகன் இளங்கோவன் (37). கஞ்சா விற்றது தொடர்பாக சிலருடன் தகராறு ஏற்பட்டதாம்.

கல்லூரியில் கருத்தரங்கம்

Posted: 28 Sep 2014 12:06 PM PDT

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் கிளவுட் கம்ப்யூட்டிங் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் எஸ்.கண்மணி தலைமை வகித்தார். துறைத்தலைவர் ஜ

ராஜபாளையத்துக்கு ஆப்பிள் வரத்து அதிகரிப்பு

Posted: 28 Sep 2014 12:05 PM PDT

ராஜபாளையம் பகுதிக்கு ஆப்பிள் வரத்து அதிகமிருந்தாலும் விலையும் அதிகமாக உள்ளது.

சுற்றுலா வார விழா: மாணவர்களுக்கு போட்டி

Posted: 28 Sep 2014 12:05 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் கொண்டாடப்படும் சுற்றுலா வார விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் அக்.9 ஆம் தேதி நடைபெற உள்ளன.

மகளிர் கல்லூரியில் இலக்கிய மன்றக்கூட்டம்

Posted: 28 Sep 2014 12:05 PM PDT

சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் இலக்கிய மன்றக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துறைத் தலைவர் பா.பொன்னி தலைமை வகித்தார். உதவிப்பேராசிரியர் நா.கவிதா

மண்டல அளவிலான இறகுப் பந்து போட்டி:பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி வெற்றி

Posted: 28 Sep 2014 12:04 PM PDT

அண்ணா பல்கலைக் கழக மண்டல அளவிலான பெண்கள் இறகுப் பந்து போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி முதலிடம் பெற்றது.

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

Posted: 28 Sep 2014 12:04 PM PDT

ராஜபாளையம் ந.அ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மாணவ- மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித்

அருப்புக்கோட்டை: பேருந்துகள் ஓடத் துவங்கின

Posted: 28 Sep 2014 12:04 PM PDT

முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதும் அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் பேருந்துகள் ஓட வில்லை.

பள்ளிகள் பற்றிய விவரம் சேகரிக்க

Posted: 28 Sep 2014 12:04 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் பற்றிய முழு தகவல்களை சேகரித்து அனுப்பி வைப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை (செப். 29) நடைபெற உள்ளது.

செங்கோட்டை- சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

Posted: 28 Sep 2014 12:03 PM PDT

வரும் கார்த்திகை மாதம் ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக செங்கோட்டை- சென்னை ஆகிய இருமார்க்கங்களிலும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும் என சிவகாசி நகராட்சி பாஜக முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஜி. ஆறுமுகச்சாமி மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம்

மகளிர் கல்லூரியில் சிறப்பு நிகழ்ச்சி

Posted: 28 Sep 2014 12:02 PM PDT

கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை இலக்கிய மன்றத்தின் சார்பாக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுமையா தலைமை வகித்தார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் விசாலாட்சி வரவேற்புரையாற்றினார். மதுரை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநரும்

நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

Posted: 28 Sep 2014 12:02 PM PDT

கடலாடி தாலுகாவில் உள்ள சிறைக்குளம் ஊராட்சி ஆய்க்குடி கிராமத்தில் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் ரமேஷ்பாபு

கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம்

Posted: 28 Sep 2014 12:02 PM PDT

கடற்கரை தூய்மைப்படுத்தும் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டத்தின் சார்பில் கடற்கரையோரம் சுத்தம் செய்தனர்.

பரமக்குடியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

Posted: 28 Sep 2014 12:02 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™