Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பதவி பறிபோகுமோ என தமிழக அமைச்சர்கள் கலக்கம்: உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிப்பு

Posted:

தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று(22ம் தேதி- திங்கட்கிழமை) வெளியாகின்றன. ஆளுங்கட்சியை எதிர்த்து பா.ஜ., மட்டுமே களத்தில் உள்ளது. வெற்றி உறுதி என்றாலும், கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் ஓட்டுகள் குறைவாக பெற்றால், தங்கள் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், தமிழக அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.தமிழகத்தில், காலியாக இருந்த, 1,000த்திற்கும் மேற்பட்ட, உள்ளாட்சி இடங்களுக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், நெல்லை மேயர் உட்பட, பல பதவிகளுக்கு, அ.தி.மு.க.,வினர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.துாத்துக்குடி, ...

சிதம்பரம் மனைவி நளினியிடம் சி.பி.ஐ., விசாரணை

Posted:

புதுடில்லி: சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சிதம்பரத்தின் மனைவி நளினியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, சாரதா நிதி நிறுவனம் என்ற சிட்பண்ட் நிறுவனம் செயல்பட்டு வந்தது.இந்த நிறுவனம், ஏராளமான மக்களிடம் முதலீட்டை பெற்று, அவற்றின் முதிர்வு தொகையை தராமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில், ஆளும் திரிணமுல் காங்., கட்சியைச் சேர்ந்த முக்கிய ...

மோடியை வரவேற்க அமெரிக்கா ரெடி

Posted:

நியூயார்க்: அமெரிக்கா வரும், இந்திய பிரதமர், நரேந்திர மோடிக்கு, தலைநகர் வாஷிங்டன் மற்றும் ஐ.நா., தலைமையகம் அமைந்துள்ள நியூயார்க் நகரில் விமரிசையான வரவேற்பு அளிக்க, அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய அமைப்புகள் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளன.உலக நாடுகளின் ஒற்றுமை அமைப்பான, ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர பொதுச்சபை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, ஐ.நா., தலைமையகத்தில், இம்மாதம் 24ல், துவங்குகிறது.அதில் கலந்து கொள்ள உள்ள பிரதமர் மோடி, 27ம் தேதி, ஐ.நா.,வில், கன்னி உரையாற்ற உள்ளார். இதற்காக, 27ல், அமெரிக்கா ...

கூட்டணியை இறுதி செய்ய பா.ஜ., - சிவசேனா தீவிரம்: காங்., - தேசியவாத காங்., கூட்டணியிலும் இழுபறி

Posted:

புதுடில்லி : மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்த லில், அரசியல் கட்சிகளுக்கு இடையி லான தொகுதிப் பங்கீட்டில் முடிவு எட்டப்படாததால், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியில் இழுபறிநீடிக்கிறது. கூட்டணி முறிவை தவிர்க்க, பா.ஜ., - சிவசேனா தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.மகாராஷ்டிராவில், காங்., - தேசியவாத காங்., கூட்டணி அரசின் ஐந்து ஆண்டு ஆட்சி காலம் நிறைவடைவதால், அடுத்த மாதம், 15ல், சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.மத்தியில், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை இழந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் ...

ஜனநாயகம் எங்களின் பெரிய சொத்து: பிரதமர் மோடி பெருமிதம்

Posted:

புதுடில்லி : ''ஜனநாயகம் எங்களின் மிகப்பெரிய சொத்து; அது எங்களின், டி.என்.ஏ., மூலக்கூறிலேயே உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.அமெரிக்காவின், தனியார் ஆங்கில, 'டிவி'க்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டி யில் கூறியுள்ளதாவது:பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பிற்கு, எங்கள் அரசு, அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் பெண்களின் கண்ணியத்தை பாதுகாப்பது கூட்டு முயற்சி. இதை அரசியல் ஆக்குகின்றனர்; இது, அரசியல் ஆக்கப்படக் கூடிய பிரச்னையே இல்லை.பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவும், சீனாவும் சம அளவிலேயே உள்ளன. இந்த ...

காற்றில் கரைந்த வெள்ளை அறிக்கை கோரிக்கை: கருணாநிதி

Posted:

சென்னை : 'மின்சாரம் தொடர்பாக, ராமதாஸ் கேட்ட வெள்ளை அறிக்கை கோரிக்கை, அ.தி.மு.க., ஆட்சியில் காற்றில் கரைந்து போனது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுதொடர்பான, அவரது அறிக்கை:அ.தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன் நடந்த தேர்தல் பிரசாரங்களில், 'ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில், மின்வெட்டு இல்லாமல் செய்வோம்' என, தெரிவித்தனர்.ஆட்சிக்கு வந்தவுடன், 2011ம் ஆண்டின், கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு, சட்டசபையில் பதிலளித்து, முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, 'தற்போதுள்ள மூன்று மணி நேர மின்வெட்டை, இரண்டு மணி நேரமாக குறைப்போம்; ஜூலை மாதம் முதல், தமிழகத்தில் மின் ...

ஆவின் பால் கொள்ளை: 'மாஜி' அமைச்சர் மீது வழக்கு பாயுமா? முகாந்திரம் இருப்பதாக போலீஸ் தகவல்

Posted:

ஆவின் பால் டேங்கர் லாரியில் இருந்து, தினமும், 2,000 லிட்டர் பால் திருடப்பட்ட விவகாரத்தில், 'மாஜி' அமைச்சர் மீது வழக்கு பாயுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.சென்னையில் உள்ள ஆவின் பால் பதனிடும் நிலையத்திற்கு, தமிழகத்தில் உள்ள கூட்டுறவு ஒன்றியங்களில் இருந்து, பால் கொள்முதல் செய்யப்பட்டு, டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து சேர்க்கப்படுகிறது.அரசியல்வாதிகள் அடாவடி: 'டாஸ்மாக்' கடைகளில், பார்களை ஏலம் எடுக்க, அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் அடாவடி செயல்களில் ஈடுபடுவார்களோ, அதற்கு சற்றும் குறையாத வகையில், ஆவின் பால் டேங்கர் லாரி ...

தீபாவளிக்கு பரிசு கொடுக்க வேண்டாம்: வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் உத்தரவு

Posted:

புதுடில்லி: 'தீபாவளி பண்டிகைக்காக, அதிகாரிகளுக்கு பரிசுப் பொருட்கள் எதையும் வழங்க வேண்டாம்' என, பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.சிக்கன நடவடிக்கை:பொதுத்துறை வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களின் போது, உயர் அதிகாரிகளுக்கு, விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்குவது வழக்கம். இந்தாண்டும், அதற்கான ஏற்பாடுகள் நடந்தன.ஆனால், தற்போதைய பா.ஜ., அரசு, சிக்கன நடவடிக்கையை பின்பற்றி வருகிறது. மேலும், இலவசம், சலுகை, பரிசு என்ற பெயரில், யாருக்கும், எந்த பொருட்களை யும் வழங்கக் கூடாது ...

ரூ.70 ஆயிரம் கோடி ஊழல்: துணை முதல்வரிடம் விசாரணை?

Posted:

மும்பை: மகாராஷ்டிர மாநில, நீர்வளத் துறையில் நடந்துள்ள, 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கு தொடர்பாக, அம்மாநில துணை முதல்வரும், நிதி அமைச்சருமான அஜித் பவாரிடம் விசாரணை நடத்த, உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் அனுமதி வழங்கி உள்ளார்.குற்றச்சாட்டு:மகாராஷ்டிராவில், காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்., கட்சியின் பிருத்விராஜ் சவான், முதல்வராகவும், தேசிய வாத காங்., கட்சியின் அஜித் பவார், துணை முதல்வராகவும் பதவி வகிக்கின்றனர். மகாராஷ்டிராவில், நீர்வளத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட, முக்கிய திட்டங்களில், 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை ...

மத்திய அரசு பணியிடங்களில் வடகிழக்கு மாநிலத்தவர்கள்: புதிய நடைமுறையால் தமிழகத்தில் பெரும் குழப்பம்

Posted:

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டாலும், மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் (ஸ்டாப் செலக்சன் கமிஷன்) புதிய நடைமுறையால், பணிகள் முடங்கி உள்ளன.வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தமிழகப் பணிக்கு வந்தவர்கள், சொந்த மாநிலங்களுக்கு பணி மாறுதல் கேட்பதால், தமிழகத்தில் மீண்டும் காலி பணியிடங்கள் ஏற்படும் என தெரிகிறது.9 மண்டலங்கள்:மத்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை, வருமான வரித் துறை, சுங்கத் துறை, கலால் துறை உள்ளிட்ட மத்திய அரசு துறைகளுக்கு, மத்திய பணியாளர் தேர்வு ஆணையம், ஊழியர்களை தேர்வு செய்கிறது. ...

கைதானவர்களும் ஓட்டளிக்கலாம்: தேர்தல் ஆணையம் புது உத்தரவு

Posted:

புதுடில்லி:'முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கைது செய்யப்பட்டவர்களுக்கும், ஓட்டளிக்கும் உரிமை உண்டு. அவர்களை அதிகாரிகள் ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும்' என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் நடக்கவுள்ளது. அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையர்களுக்கு, தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ளன.இது தொடர்பாக, மகாராஷ்டிரா, அரியானா மாநில தலைமைச் செயலர்களுக்கு, தேர்தல் ...

அரசியல் கட்சியில் சேரும் எண்ணம் இல்லை: முன்னாள் தணிக்கை அதிகாரி பரபரப்பு தகவல்

Posted:

புதுடில்லி:''அரசியல் கட்சியில் சேரும் எண்ணம் இல்லை. ஆனால், தொடர்ந்து, பொது பிரச்னைகளை பற்றி பேசும் நபராக இருப்பேன். யாருக்காவது என் வழிகாட்டுதல் தேவைப்பட்டால், அவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன்,'' என, முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி, வினோத் ராய் கூறிஉள்ளார்.புத்தகம்:முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, வினோத் ராய், தன் பதவி காலத்தில் நடந்த முக்கியமான விஷயங்களை தொகுத்து, புத்தகமாக எழுதியுள்ளார். அதில், '2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு விவகாரம் தொடர்பான அனைத்து விவரங்களும், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரியும். ஆனால், அவர், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™