Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இந்த நாளில் அன்று (22.9.1970); தயார் நிலையில் அனைத்து அமெரிக்கப் படைகள்; ஜோர்டானிலிருந்து யு.எஸ். பிரஜைகளை வெளியேற்ற ஏற்பாடு
- கலைக்கோயிலைச் சிதைக்கலாமா?
- குண்டு மழை பொழிந்த செண்பகராமன்!
- ஸ்காட்லாந்து வழிகாட்டுகிறது!
- 2ஜி: அமலாக்கத் துறை நிரந்தரப் பணிக்கு ராஜேஷ்வர் சிங்கை நியமித்தது மத்திய அரசு
- ஊழலைத் தடுக்க தமிழகத்திலும் லோக் ஆயுக்த சட்டம்
- ஊழலைத் தடுக்க தமிழகத்திலும் லோக் ஆயுக்த சட்டம்
- மீனவர் பிரச்னை: ராஜபட்சவுடன் பிரதமர் மோடி பேச வேண்டும்
- கூட்டுறவு நிறுவன உதவியாளர் பணிக்கு நேர்காணல்
- தொலைநிலைக் கல்வி எம்.பி.ஏ. தேர்வு முடிவு இன்று வெளியீடு
- தொழில் தொடங்க கடனுதவி : பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்
- அரியலூர் அரசு சிமென்ட் ஆலையைச் சீரமைக்க வலியுறுத்தல்
- 15 பவுன் நகை கொள்ளை
- பொது இடங்களில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை தேவை
- இளைஞரிடம் 40 பவுன் நகைகள் திருட்டு
- ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்
- பொது கழிப்பறைகளின்றி லாடபுரம் மக்கள் அவதி
- யோகாசனப் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பாராட்டு
- புதுகை புறநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?
- காவிரி, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரிக்கை
- பொன்னமராவதிக்கு அரிமா சங்க மாவட்ட ஆளுநர் வருகை
- அணு உலைத் திட்டச் செயல்பாட்டை விவாதிக்க நாடாளுமன்ற நிலைக் குழு தேவை
- குளத்தூர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயமளிப்பு விழா
- மினிவேன்-அரசுப் பேருந்து மோதல்: ஓட்டுநர் பலி
- செப். 25-ல் வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சி
- குடந்தையில் புகைப்படகலைஞர்கள் நலச் சங்க ஆண்டு விழா
- ஒரத்தநாடு: புதை சாக்கடை பணி,வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
- மாவட்ட நலவாரிய அலுவலகத்தை தஞ்சைக்கு மாற்ற கோரிக்கை
- செப். 26-ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்
- ரேஷன் அரிசி பதுக்கல்:இளைஞர் கைது
- செப்டம்பர் 23 மின் தடை
- கால்நடை ஆய்வாளர் பணியிடங்களுக்கான பதிவுமூப்புப் பட்டியல் வெளியீடு
- வேதாரண்யத்தில்சம்பா சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி
- பால் உற்பத்தியாளர் சங்க பேரவைக் கூட்டம்
- சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: சிபிஐ விசாரணையா? நளினி சிதம்பரம் மறுப்பு
- கூத்தாநல்லூரை தனி வட்டமாக அறிவிக்க வலியுறுத்தி செப். 25}ல் உண்ணாவிரதம்
- விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
- கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- செப்டம்பர் 23மின் தடை
- ஓஎன்ஜிசி பள்ளியில் விளையாட்டு பயிற்சி முகாம் தொடக்கம்
- சென்னை அரசு மருத்துவமனைகளில் "அம்மா' உணவகங்கள்
- வதந்தியால் பரபரப்பு
- வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்
- பெரம்பலூரில்விஷம் குடித்து விவசாயி தற்கொலை
- பிரசவத்தின்போது பெண் சாவு :உறவினர்கள் சாலை மறியல்
- மரத்தில் பேருந்து மோதி 26 பேர் காயம்
- 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வு
- இதுவரை 9,178 நிலங்களில் மண் பரிசோதனை
- அரியலூர் அருகே சிமென்ட் ஆலை காவலாளி சாவு : மறியல்
- "ஆந்திரத்துக்கு இடம்பெயரும் தொழில்களால் தெலங்கானாவில் வரி ஆதாரங்கள் குறையும்'
- நிலவர அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு
- பகல்கனவு காண்கிறார் பிலாவல்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
- எல்என்ஜேபி மருத்துவமனை குடியிருப்பில் செவிலியர் மர்மச் சாவு: விசாரணை தீவிரம்
- குமரி அரசு பழப் பண்ணையில் தோட்டக்கலை அதிகாரிகள் ஆய்வு
- ஜப்பான் பிரதமருக்கு மோடி வாழ்த்து
- கல்லூரி மாணவர்களுக்கு திறன் வளர்த்தல் பயிற்சி முகாம்
- பூரண மதுவிலக்கு கோரி குமரியில் ஏ.பி.வி.பி. கையெழுத்து இயக்கம்
- சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 30 ஆண்டு சிறை
- சாமிதோப்பில் புரட்டாசி ஞாயிறு கொண்டாட்டம்
- திருவனந்தபுரம் நவராத்திரி விழா தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் புறப்பாடு
- சரஸ்வதி அம்மன் புறப்பாடு: தமிழக, கேரள மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் விழா
- ஆசியாவின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் 4 இந்திய நகரங்கள்: சர்வதேச ஆய்வில் தகவல்
- புனித அல்போன்சா திருத்தல வெள்ளி விழா
- நாகர்கோவிலில் வள்ளலார் ஞான எழுச்சி மாநில மாநாடு
- மகளிர் கல்லூரியில் முத்தமிழ் விழா
- இடைத் தேர்தல் முடிவுகளைக் கொண்டு பிகார் தேர்தலைக் கணிக்கக் கூடாது: ராம்விலாஸ் பாஸ்வான்
- சாலைகளை மேம்படுத்த விளவங்கோடு தொகுதிக்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு
- மாவட்ட காங்கிரஸ் விவசாய அணிக் கூட்டம்
- சீட்டு நிதி மோசடி: 2 பங்குத் தரகர்கள் கைது
- குமரியில் 84 ஆவது சர்வதேச கலங்கரை விளக்க தினம் கடைப்பிடிப்பு
- கனுபாரி தொகுதி இடைத் தேர்தல்: பாஜக வேட்பாளர் அறிவிப்பு
- குமரியில் உலக அமைதி நாள் பிரசாரம்
- கூட்டுறவு உதவியாளர் பணியிடம்: இன்று முதல் நேர்முகத் தேர்வு
- குழித்துறை பழைய பாலத்தில் கொட்டப்படும் கழிவுகள்
- முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டவர்களுக்கும் வாக்குரிமை உண்டு: தேர்தல் ஆணையம்
- சைக்கிள் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
- பொறியியல் கல்லூரியில் புகைப்படப் போட்டி
- இலங்கையில் சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக 7 இந்தியர்கள் கைது
- உ.பி.யில் 4 பேர் கொலை எதிரொலி: பதற்றம் நீடிப்பு
- ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டுக் கட்சி தொண்டர் சுட்டுக் கொலை
- பிகார்: மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
- 24-ல் இறுதி சுற்றுவட்டப் பாதையை அடையும் "மங்கள்யான்'
- பாகிஸ்தான் முன்னாள் எம்.பி. சட்டவிரோதமாக நுழைந்தது குறித்து விசாரணை
- கடற்கரையை சுத்தம் செய்த கடலோரக் காவல் படையினர்
- குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி
- புரட்டாசி சனிக்கிழமை: தூத்துக்குடி மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு
- காயல்பட்டினம் மகளிர் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு
- தூத்துக்குடியில் விசைத்தறி உற்பத்தி துணிகள் கண்காட்சி தொடக்கம்
- திருச்செந்தூரில் தீத்தடுப்பு செயல்விளக்கம்
- பராமரிப்புப் பணி: கச்சனாவிளை, குரும்பூர் ரயில்வே கேட் 2 நாள்கள் மூடல்
- குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞர் கைது
- தென் மண்டல இறகுப்பந்து போட்டிகர்நாடகம், தெலங்கானா அணிகள் வெற்றி
- கத்திக் குத்தில் காயமடைந்தவர் சாவு
- கடன் குறியீடுகளை வங்கிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும்: ஆட்சியர்
- திருச்செந்தூரில் பிலாவல் புட்டோ உருவ பொம்மை எரிப்பு
- தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய மேயர் யார்?
- கமலாவதி பள்ளியில் மத நல்லிணக்க விழா
- அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள்
- மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி
| Posted: 21 Sep 2014 01:24 PM PDT தயார் நிலையில் அனைத்து அமெரிக்கப் படைகள்; ஜோர்டானிலிருந்து யு.எஸ். பிரஜைகளை வெளியேற்ற ஏற்பாடு |
| Posted: 21 Sep 2014 01:16 PM PDT உலகிலே மிகப் பிரம்மாண்டமான கோயில்; 1000 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் புதுப்பொலிவுடன் திகழ்கின்ற தஞ்சைப் பெரியக் கோயிலைப் பற்றி விரிவாக ஏதும் கூறத்தேவையில்லை. காரணம், அக்கோயிலின் பெருமை சொல்லுக்கடங்காதவை. |
| குண்டு மழை பொழிந்த செண்பகராமன்! Posted: 21 Sep 2014 01:15 PM PDT முதல் உலக மகாயுத்த நேரம். வானத்திலிருந்து எப்போது ஜெர்மானியரின் யுத்த விமானம் குண்டுகளை வீசும் என்று எப்போதும் பயந்து கொண்டிருந்த காலம். |
| Posted: 21 Sep 2014 01:14 PM PDT ஆங்கிலேயர்கள் எதிலுமே வித்தியாசமானவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். பிரிந்து போவதா, சேர்ந்திருப்பதா என்பதைக்கூட, போராட்டம் நடத்தாமல், வன்முறையில் ஈடுபடாமல், ஒருவரை ஒருவர் வசை பாடாமல், உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ இல்லாமல், வாக்கெடுப்பின் மூலம் கூடத் தீர்மானிக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தி இருக்கிறார்கள் பிரிட்டிஷார்! |
| 2ஜி: அமலாக்கத் துறை நிரந்தரப் பணிக்கு ராஜேஷ்வர் சிங்கை நியமித்தது மத்திய அரசு Posted: 21 Sep 2014 01:05 PM PDT 2ஜி அலைகற்றை முறைகேடு உள்பட பல முக்கிய வழக்குகளை விசாரித்து வரும் ஐபிஎஸ் அதிகாரியும், மத்திய அமலாக்கத் துறையின் துணை இயக்குநராகப் பணியாற்றி வருபவருமான ராஜேஷ்வர் சிங்கை அத்துறையில் நிரந்தரப் பணியில் நியமித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. |
| ஊழலைத் தடுக்க தமிழகத்திலும் லோக் ஆயுக்த சட்டம் Posted: 21 Sep 2014 12:57 PM PDT தமிழகத்தில் ஊழல் முறைகேடுகளைக் களைய தமிழக அரசு லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் தலைவர் தொல். திருமாவளவன் கேட்டுக் கொண்டார். |
| ஊழலைத் தடுக்க தமிழகத்திலும் லோக் ஆயுக்த சட்டம் Posted: 21 Sep 2014 12:52 PM PDT தமிழகத்தில் ஊழல் முறைகேடுகளைக் களைய தமிழக அரசு லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் தலைவர் தொல். திருமாவளவன் கேட்டுக் கொண்டார். |
| மீனவர் பிரச்னை: ராஜபட்சவுடன் பிரதமர் மோடி பேச வேண்டும் Posted: 21 Sep 2014 12:51 PM PDT மீனவர் பிரச்னை தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகப் பேச வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறினார். |
| கூட்டுறவு நிறுவன உதவியாளர் பணிக்கு நேர்காணல் Posted: 21 Sep 2014 12:48 PM PDT கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்திற்கு கரூரில் ஞாயிற்றுக்கிழமை நேர்காணல் நடைபெற்றது. |
| தொலைநிலைக் கல்வி எம்.பி.ஏ. தேர்வு முடிவு இன்று வெளியீடு Posted: 21 Sep 2014 12:48 PM PDT சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் எம்.பி.ஏ. படிப்புகளுக்கான 2014 ஜூன் மாதத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (செப்.22) வெளியிடப்பட உள்ளன. |
| தொழில் தொடங்க கடனுதவி : பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் Posted: 21 Sep 2014 12:48 PM PDT அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினர் தொழில் தொடங்க கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| அரியலூர் அரசு சிமென்ட் ஆலையைச் சீரமைக்க வலியுறுத்தல் Posted: 21 Sep 2014 12:47 PM PDT அரியலூர் அரசு சிமென்ட் ஆலையை சீரமைத்து உற்பத்தியைப் பெருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரியலூர் வளர்ச்சிக் குழுத் தலைவர் பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள |
| Posted: 21 Sep 2014 12:47 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை கிராமத்தில் வீட்டின் உரிமையாளரைத் தாக்கி 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| பொது இடங்களில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை தேவை Posted: 21 Sep 2014 12:47 PM PDT நங்கவரம் பேரூராட்சிக்குள்பட்ட பொது இடங்களில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| இளைஞரிடம் 40 பவுன் நகைகள் திருட்டு Posted: 21 Sep 2014 12:47 PM PDT தஞ்சாவூர் அருகே ஞானம் நகரைச் சேர்ந்தவர் வடுகநாதன் மகன் ராமநாதன் (32). |
| ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம் Posted: 21 Sep 2014 12:47 PM PDT ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் நடுக்கடலில் வைத்து விரட்டினர். |
| பொது கழிப்பறைகளின்றி லாடபுரம் மக்கள் அவதி Posted: 21 Sep 2014 12:46 PM PDT பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் ஊராட்சியில் பொது கழிப்பறைகளின்றி கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். |
| யோகாசனப் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பாராட்டு Posted: 21 Sep 2014 12:46 PM PDT மாநில அளவிலான யோகாசனப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| புதுகை புறநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா? Posted: 21 Sep 2014 12:46 PM PDT புதுக்கோட்டை புறநகர் பகுதியான மாலையீடு பாரி நகரில் கழிவுநீர் கால்வாய் வசதி அமைக்க வேண்டுமென அப்பகுதிமக்கள் எதிர்பார்க்கின்றனர். |
| காவிரி, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரிக்கை Posted: 21 Sep 2014 12:46 PM PDT காவிரி, குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை மாவட்ட பாஜக அமைப்பு சாரா அணி கோரிக்கைவிடுத்துள்ளது. |
| பொன்னமராவதிக்கு அரிமா சங்க மாவட்ட ஆளுநர் வருகை Posted: 21 Sep 2014 12:45 PM PDT பொன்னமராவதியில் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் வருகை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| அணு உலைத் திட்டச் செயல்பாட்டை விவாதிக்க நாடாளுமன்ற நிலைக் குழு தேவை Posted: 21 Sep 2014 12:45 PM PDT அணு உலைத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பாதுகாப்பு, வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில், அதுகுறித்து விவாதிப்பதற்கு நாடாளுமன்ற நிலைக் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளரும், சமூக ஆர்வலருமான எஸ்.பி.உதயகுமார் வலியுறுத்தினார். |
| குளத்தூர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயமளிப்பு விழா Posted: 21 Sep 2014 12:45 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் ராயல் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| மினிவேன்-அரசுப் பேருந்து மோதல்: ஓட்டுநர் பலி Posted: 21 Sep 2014 12:45 PM PDT திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே மினிவேனும் அரசுப் பேருந்தும் ஞாயிற்றுக்கிழமை மோதி கொண்ட விபத்தில் மினிவேன் ஓட்டுநர் உயிரிழந்தார். |
| செப். 25-ல் வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சி Posted: 21 Sep 2014 12:44 PM PDT தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி, ஆய்வு மையத்தில் வெள்ளாடு வளர்ப்பு, முதலுதவி மூலிகை மருத்துவப் பயிற்சி வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளது. |
| குடந்தையில் புகைப்படகலைஞர்கள் நலச் சங்க ஆண்டு விழா Posted: 21 Sep 2014 12:44 PM PDT தஞ்சை மாவட்ட விடியோ, போட்டோ, எடிட்டிங் கலைஞர்கள் முன்னேற்ற நலச் சங்க ஆண்டு விழா கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஒரத்தநாடு: புதை சாக்கடை பணி,வளர்ச்சிப் பணிகள் ஆய்வு Posted: 21 Sep 2014 12:44 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பேரூராட்சியில் ரூ.18 கோடியே 25 லட்சத்தில் நடைபெறும் புதை சாக்கடை திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் அண்மையில் ஆய்வு செய்தார். |
| மாவட்ட நலவாரிய அலுவலகத்தை தஞ்சைக்கு மாற்ற கோரிக்கை Posted: 21 Sep 2014 12:44 PM PDT கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்கு மாவட்டத் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை மாற்ற வேண்டும் என்று தாய்த் திருநாடு கட்டட உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| செப். 26-ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் Posted: 21 Sep 2014 12:43 PM PDT தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் செப். 26 காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. |
| ரேஷன் அரிசி பதுக்கல்:இளைஞர் கைது Posted: 21 Sep 2014 12:43 PM PDT தஞ்சாவூர் அருகே ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 21 Sep 2014 12:43 PM PDT தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் விநியோகம் இருக்காது. |
| கால்நடை ஆய்வாளர் பணியிடங்களுக்கான பதிவுமூப்புப் பட்டியல் வெளியீடு Posted: 21 Sep 2014 12:43 PM PDT தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் கால்நடை ஆய்வாளர் பணியிடங்களுக்கான பதிவுமூப்புப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. |
| வேதாரண்யத்தில்சம்பா சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி Posted: 21 Sep 2014 12:42 PM PDT சிக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேட்டில் சம்பா நெல் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| பால் உற்பத்தியாளர் சங்க பேரவைக் கூட்டம் Posted: 21 Sep 2014 12:42 PM PDT நீடாமங்கலத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க திருவாரூர் மாவட்ட பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: சிபிஐ விசாரணையா? நளினி சிதம்பரம் மறுப்பு Posted: 21 Sep 2014 12:42 PM PDT சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், உச்ச நீதிமன்ற வழக்குரைஞருமான நளினி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் சனிக்கிழமை சந்தித்தனர். |
| கூத்தாநல்லூரை தனி வட்டமாக அறிவிக்க வலியுறுத்தி செப். 25}ல் உண்ணாவிரதம் Posted: 21 Sep 2014 12:42 PM PDT கூத்தாநல்லூரை தனி தாலுகாவாக அறிவிக்க வலியுறுத்தி, செப். 25-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சியினர் வரும் 25ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. |
| விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை Posted: 21 Sep 2014 12:41 PM PDT மன்னார்குடி அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சலவைத் தொழிலாளி விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். |
| கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் Posted: 21 Sep 2014 12:41 PM PDT திருவாரூர் அருகே பூந்தோட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை |
| Posted: 21 Sep 2014 12:41 PM PDT குடவாசலில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் விநியோகம் இருக்காது. |
| ஓஎன்ஜிசி பள்ளியில் விளையாட்டு பயிற்சி முகாம் தொடக்கம் Posted: 21 Sep 2014 12:40 PM PDT காரைக்கால் ஓஎன்ஜிசி பொதுப் பள்ளியில் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களுக்கான விளையாட்டுப் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. |
| சென்னை அரசு மருத்துவமனைகளில் "அம்மா' உணவகங்கள் Posted: 21 Sep 2014 12:40 PM PDT சென்னையில் உள்ள 4 முக்கிய அரசு மருத்துவமனைகளில் "அம்மா' உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (செப்.22) தொடங்கி வைக்கிறார். |
| Posted: 21 Sep 2014 12:40 PM PDT பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை கொலை நடந்ததாக பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர்- வடக்குமாதவி சாலையில் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் (45), தச்சுத் |
| வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல் Posted: 21 Sep 2014 12:39 PM PDT பெரம்பலூரை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென, பாஜக விவசாய அணி செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| பெரம்பலூரில்விஷம் குடித்து விவசாயி தற்கொலை Posted: 21 Sep 2014 12:39 PM PDT பெரம்பலூரில் விவசாயி விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். |
| பிரசவத்தின்போது பெண் சாவு :உறவினர்கள் சாலை மறியல் Posted: 21 Sep 2014 12:39 PM PDT பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி அவரது உறவினர்கள் சனிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| மரத்தில் பேருந்து மோதி 26 பேர் காயம் Posted: 21 Sep 2014 12:39 PM PDT பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மரத்தில் அரசுப் பேருந்து மோதி 26 பயணிகள் பலத்த காயமடைந்தனர். |
| 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வு Posted: 21 Sep 2014 12:38 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. |
| இதுவரை 9,178 நிலங்களில் மண் பரிசோதனை Posted: 21 Sep 2014 12:38 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தின் மூலம், இதுவரை 9,178 விவசாய நிலங்களில் மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| அரியலூர் அருகே சிமென்ட் ஆலை காவலாளி சாவு : மறியல் Posted: 21 Sep 2014 12:38 PM PDT அரியலூர் அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிமென்ட் ஆலை காவலாளி இறந்ததால் அவரது உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| "ஆந்திரத்துக்கு இடம்பெயரும் தொழில்களால் தெலங்கானாவில் வரி ஆதாரங்கள் குறையும்' Posted: 21 Sep 2014 12:27 PM PDT தெலங்கானா மாநிலம் உதயமானதில் இருந்து தொழில் வணிக நிறுவனங்கள் ஆந்திரத்தை நோக்கி படையெடுத்துச் செல்வதால், தெலங்கானாவில் வரி ஆதாரங்கள் குறையும் என்று அந்த மாநில அரசு கவலை தெரிவித்துள்ளது. |
| நிலவர அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு Posted: 21 Sep 2014 12:26 PM PDT தில்லியில் உள்ள இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் மீதான பாலியல் தொந்தரவு புகாரில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்யும்படி தில்லி காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| பகல்கனவு காண்கிறார் பிலாவல்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் Posted: 21 Sep 2014 12:26 PM PDT காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பேன் என்று கூறியுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் புட்டோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ""பாகிஸ்தானில் இருக்கும் பகல் கனவு காணும் நபர்களில் பிலாவலும் ஒருவர்'' என விமர்சித்துள்ளது. |
| எல்என்ஜேபி மருத்துவமனை குடியிருப்பில் செவிலியர் மர்மச் சாவு: விசாரணை தீவிரம் Posted: 21 Sep 2014 12:25 PM PDT தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (எல்என்ஜேபி) மருத்துவமணைக் குடியிருப்பில் தங்கியிருந்த செவிலியர் மர்மமான முறையில் சனிக்கிழமை உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். |
| குமரி அரசு பழப் பண்ணையில் தோட்டக்கலை அதிகாரிகள் ஆய்வு Posted: 21 Sep 2014 12:25 PM PDT கன்னியாகுமரி அரசு பழப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் செடிகள், மரக்கன்றுகள் தரமான முறையில் உள்ளனவா என்பது குறித்து தேசிய தோட்டக்கலை வாரிய ஆலோசகர் வி.பொன்னுசாமி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். |
| ஜப்பான் பிரதமருக்கு மோடி வாழ்த்து Posted: 21 Sep 2014 12:25 PM PDT ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
| கல்லூரி மாணவர்களுக்கு திறன் வளர்த்தல் பயிற்சி முகாம் Posted: 21 Sep 2014 12:25 PM PDT அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான திறன் வளர்த்தல் பயிற்சி முகாம் நாகர்கோவிலில் நடைபெற்றது. |
| பூரண மதுவிலக்கு கோரி குமரியில் ஏ.பி.வி.பி. கையெழுத்து இயக்கம் Posted: 21 Sep 2014 12:24 PM PDT தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பில், கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. |
| சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 30 ஆண்டு சிறை Posted: 21 Sep 2014 12:24 PM PDT உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. |
| சாமிதோப்பில் புரட்டாசி ஞாயிறு கொண்டாட்டம் Posted: 21 Sep 2014 12:24 PM PDT சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் புரட்டாசி முதல் ஞாயிறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு வாகன பவனி நடைபெற்றது. |
| திருவனந்தபுரம் நவராத்திரி விழா தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் புறப்பாடு Posted: 21 Sep 2014 12:24 PM PDT கேரள மாநிலம், திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் வளாக அரண்மனையில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, முத்துக்குடை பிடிக்கப்பட்ட யானை மீது தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் புறப்பாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| சரஸ்வதி அம்மன் புறப்பாடு: தமிழக, கேரள மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் விழா Posted: 21 Sep 2014 12:24 PM PDT தமிழக, கேரள மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் வகையில், திருவனந்தபுரம் நவராத்திரி பூஜையில் பங்கேற்க பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி அமைந்துள்ளது என, |
| ஆசியாவின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் 4 இந்திய நகரங்கள்: சர்வதேச ஆய்வில் தகவல் Posted: 21 Sep 2014 12:23 PM PDT ஆசியாவில் 10 முன்னணி சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இந்தியாவின் ஆக்ரா, ஆமதாபாத், கொச்சி, பனாஜி ஆகிய 4 நகரங்கள் இடம்பெற்றுள்ளதாக ஒரு சர்வதேச ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| புனித அல்போன்சா திருத்தல வெள்ளி விழா Posted: 21 Sep 2014 12:23 PM PDT நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல வெள்ளி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| நாகர்கோவிலில் வள்ளலார் ஞான எழுச்சி மாநில மாநாடு Posted: 21 Sep 2014 12:23 PM PDT நாகர்கோவிலில் வள்ளலார் ஞான எழுச்சி 13ஆவது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மகளிர் கல்லூரியில் முத்தமிழ் விழா Posted: 21 Sep 2014 12:23 PM PDT நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் முத்தமிழ் விழா நடைபெற்றது. |
| இடைத் தேர்தல் முடிவுகளைக் கொண்டு பிகார் தேர்தலைக் கணிக்கக் கூடாது: ராம்விலாஸ் பாஸ்வான் Posted: 21 Sep 2014 12:23 PM PDT பிகார் இடைத் தேர்தல் முடிவுகளைக் கொண்டு, அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவைக் கணிக்கக் கூடாது என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார். |
| சாலைகளை மேம்படுத்த விளவங்கோடு தொகுதிக்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு Posted: 21 Sep 2014 12:22 PM PDT விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 10 கோடியில் சாலைப்பணிகள் நடைபெற உள்ளதாக எஸ். விஜயதரணி எம்எல்ஏ தெரிவித்தார். |
| மாவட்ட காங்கிரஸ் விவசாய அணிக் கூட்டம் Posted: 21 Sep 2014 12:21 PM PDT கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் விவசாய அணிக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆர்.எஸ். ராஜன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் போஸ்கோ |
| சீட்டு நிதி மோசடி: 2 பங்குத் தரகர்கள் கைது Posted: 21 Sep 2014 12:21 PM PDT சீட்டு நிதி மோசடி புகாருக்குள்ளாகி சி.பி.ஐ. விசாரணையில் சிக்கியிருக்கும் அர்த்த தத்வா குழுமத்தின் பணத்தை கையாடல் செய்தது தொடர்பாக பங்குத் தரகர்கள் இருவரை சிபிஐ ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. |
| குமரியில் 84 ஆவது சர்வதேச கலங்கரை விளக்க தினம் கடைப்பிடிப்பு Posted: 21 Sep 2014 12:20 PM PDT கன்னியாகுமரியில் 84 ஆவது சர்வதேச கலங்கரை விளக்க தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலங்கரை விளக்க தலைமை காப்பாளர் வி.மதனகோபா |
| கனுபாரி தொகுதி இடைத் தேர்தல்: பாஜக வேட்பாளர் அறிவிப்பு Posted: 21 Sep 2014 12:20 PM PDT அருணாசலப் பிரதேசம் கனுபாரி மக்களவைத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில், பாஜக சார்பில் ரோங்னய் மஹாம் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. |
| குமரியில் உலக அமைதி நாள் பிரசாரம் Posted: 21 Sep 2014 12:20 PM PDT உலக அமைதி நாளை முன்னிட்டு, கோயம்புத்தூர் தியான பொதுசேவை மையம் சார்பில், கன்னியாகுமரியில் இருந்து பிரசார பயணம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| கூட்டுறவு உதவியாளர் பணியிடம்: இன்று முதல் நேர்முகத் தேர்வு Posted: 21 Sep 2014 12:20 PM PDT குமரி மாவட்டத்தில் கூட்டுறவு உதவியாளர் பணியிடங்களுக்கு திங்கள்கிழமை (செப்.22) முதல் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. இதுகுறித்து குமரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள |
| குழித்துறை பழைய பாலத்தில் கொட்டப்படும் கழிவுகள் Posted: 21 Sep 2014 12:20 PM PDT வெட்டுவெந்நி அருகே குழித்துறை பழைய பாலத்தின் கீழ் பகுதியில் கொட்டப்படும் கழிவுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். |
| முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டவர்களுக்கும் வாக்குரிமை உண்டு: தேர்தல் ஆணையம் Posted: 21 Sep 2014 12:20 PM PDT முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தேர்தலில் வாக்களிக்க உரிமை உண்டு என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. |
| சைக்கிள் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு Posted: 21 Sep 2014 12:19 PM PDT அண்ணா பிறந்தநாளையொட்டி நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற சைக்கிள் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. |
| பொறியியல் கல்லூரியில் புகைப்படப் போட்டி Posted: 21 Sep 2014 12:19 PM PDT மஞ்சாலுமூடு நாராயணகுரு பொறியியல் கல்லூரியில் மின்னணு ஊடகத் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி மற்றும் புகைப்பட போட்டிகள் நடைபெற்றன. |
| இலங்கையில் சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக 7 இந்தியர்கள் கைது Posted: 21 Sep 2014 12:15 PM PDT இலங்கையில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருந்து, சட்ட விரோதத் தொழில் செய்ததாக 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். |
| உ.பி.யில் 4 பேர் கொலை எதிரொலி: பதற்றம் நீடிப்பு Posted: 21 Sep 2014 12:14 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், மைன்புரி மாவட்டத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக அங்கு பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. |
| ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டுக் கட்சி தொண்டர் சுட்டுக் கொலை Posted: 21 Sep 2014 12:13 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர் ஒருவர் தீவிரவாதிகளால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| பிகார்: மருத்துவர்கள் வேலைநிறுத்தம் Posted: 21 Sep 2014 12:12 PM PDT பிகார் மாநிலம், தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் சுமார் 200 இளநிலை மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். |
| 24-ல் இறுதி சுற்றுவட்டப் பாதையை அடையும் "மங்கள்யான்' Posted: 21 Sep 2014 12:11 PM PDT செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, இந்தியாவால் அனுப்பப்பட்ட "மங்கள்யான்' விண்கலம் அதன் இறுதி சுற்றுவட்டப் பாதையை வரும் 24ஆம் தேதி அடையவுள்ளது. |
| பாகிஸ்தான் முன்னாள் எம்.பி. சட்டவிரோதமாக நுழைந்தது குறித்து விசாரணை Posted: 21 Sep 2014 12:11 PM PDT பாகிஸ்தான் முன்னாள் எம்.பி. ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலத்தின் கிராமத்துக்குள் சட்டவிரோதமாக வந்து சென்றது குறித்து அந்த மாநில உளவுப் பிரிவு போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| கடற்கரையை சுத்தம் செய்த கடலோரக் காவல் படையினர் Posted: 21 Sep 2014 12:06 PM PDT தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் கடலோரக் காவல் படை அதிகாரிகள், வீரர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் சுத்தம் செய்தனர். |
| குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 21 Sep 2014 12:06 PM PDT கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி வேதியியல் துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது. |
| புரட்டாசி சனிக்கிழமை: தூத்துக்குடி மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு Posted: 21 Sep 2014 12:06 PM PDT புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| காயல்பட்டினம் மகளிர் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு Posted: 21 Sep 2014 12:06 PM PDT காயல்பட்டினம் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியின் 27ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பட்டமளிப்பு விழா ஆகியவை இரு நாள்கள் நடைபெற்றன. |
| தூத்துக்குடியில் விசைத்தறி உற்பத்தி துணிகள் கண்காட்சி தொடக்கம் Posted: 21 Sep 2014 12:05 PM PDT தூத்துக்குடியில் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகளின் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| திருச்செந்தூரில் தீத்தடுப்பு செயல்விளக்கம் Posted: 21 Sep 2014 12:05 PM PDT திருச்செந்தூரில் சமையல் எரிவாயு விநியோகிக்கும் பணியாளர்களுக்கு தீத்தடுப்பு குறித்த ஆலோசனை மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. |
| பராமரிப்புப் பணி: கச்சனாவிளை, குரும்பூர் ரயில்வே கேட் 2 நாள்கள் மூடல் Posted: 21 Sep 2014 12:05 PM PDT பராமரிப்புப் பணிக்காக கச்சனாவிளை, குரும்பூர் ரயில்வே கேட் திங்கள்கிழமை மற்றும் புதன்கிழமை மூடப்படுகிறது. இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞர் கைது Posted: 21 Sep 2014 12:04 PM PDT ஏரல் அருகே குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞரை போலீஸார் கைது செய்தனர். ஏரல் சேர்மன் கோயில் ஆற்றங்கரை தெருவைத் சேர்ந்தவர் மு. தனுஷ்கோடி (26). வேன் ஓட்டுநரான இவர் மீது ஏரல், ஆழ்வார்திருநகரி, குரும்பூர் காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். |
| தென் மண்டல இறகுப்பந்து போட்டிகர்நாடகம், தெலங்கானா அணிகள் வெற்றி Posted: 21 Sep 2014 12:04 PM PDT தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய அகில இந்திய தென் மண்டல அளவிலான இறகுப்பந்துப் போட்டியில் கர்நாடகம், தெலங்கானா, கேரள அணிகள் வெற்றி பெற்றன. |
| கத்திக் குத்தில் காயமடைந்தவர் சாவு Posted: 21 Sep 2014 12:04 PM PDT தூத்துக்குடியில் கல்லூரி மாணவியை கேலிசெய்ததை தட்டிக் கேட்டதால் கடந்த 16 ஆம் தேதி கத்தியால் குத்தப்பட்டவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். |
| கடன் குறியீடுகளை வங்கிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும்: ஆட்சியர் Posted: 21 Sep 2014 12:04 PM PDT அரசின் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் கடன் குறியீடுகளை வங்கிகள் விரைந்து செயல்படுத்தவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் தெரிவித்தார். |
| திருச்செந்தூரில் பிலாவல் புட்டோ உருவ பொம்மை எரிப்பு Posted: 21 Sep 2014 12:03 PM PDT திருச்செந்தூரில் இந்து முன்னணியினர் பாகிஸ்தான் மக்கள் கட்சித்தலைவர் பிலாவல் புட்டோவின் உருவபொம்மையை எரித்தனர். |
| தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய மேயர் யார்? Posted: 21 Sep 2014 12:03 PM PDT தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய மேயர் யார் என்பது திங்கள்கிழமை (செப். 22) நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது முற்பகல் 11 மணியளவில் தெரியவரும். |
| கமலாவதி பள்ளியில் மத நல்லிணக்க விழா Posted: 21 Sep 2014 12:03 PM PDT சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் மத நல்லிணக்க விழா நடைபெற்றது. |
| அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் Posted: 21 Sep 2014 12:03 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர். |
| மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா Posted: 21 Sep 2014 12:02 PM PDT திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 23 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் பதினெட்டாம்படியான் |
| மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி Posted: 21 Sep 2014 12:02 PM PDT உலக அமைதி தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளி மாணவர், மாணவிகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |