Tamil News | Online Tamil News |
- ராணுவ வாகன ஊழல்: தேஜிந்தர் சிங் கைது : தாத்ரா லாரிகள் ஒப்பந்த விவகாரம்
- மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா : பார்லி., கூட்டத்தொடரில் அறிமுகம்
- சீனிவாசன் கோரிக்கை நிராகரிப்பு : முத்கல் குழுவுக்கு கூடுதல் அவகாசம்
- பிரதமர் நரேந்திர மோடியை புகழ்கிறார் காங்., தலைவர்
- இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பான் தயார்: 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீட்டுக்கு உறுதி
- எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி? நவாஸ் ஷெரீப் - ராணுவ தளபதி சந்திப்பால் பதற்றம்
- ஆசிரியர் தினத்தை அரசியலாக்குவதா? அமைச்சர் ஸ்மிருதி இரானி கொந்தளிப்பு
- டீசல் விலை கட்டுப்பாட்டை கைவிடுகிறது அரசு: பொதுத்துறை நிறுவனங்களின் இழப்பு குறைந்தது
- நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தையும் ரத்து செய்யக்கூடாது : சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வேண்டுகோள்
- வெளிப்படை இல்லாத உள்ளாட்சி இடைத்தேர்தல் : மாநில தேர்தல் கமிஷன் மீது குவியும் புகார்
- விஜயகாந்தின் சிங்கப்பூர் பயண திட்டம்: தே.மு.தி.க.,வில் மீண்டும் பரபரப்பு
- குறைந்த சம்பளம், பணி சுமை காரணம்: ஓட்டம் பிடிக்கும் இளைஞர் காவல் படையினர்: 1,000 பேர் விலகல்?
- சிறு தானியங்கள் உற்பத்தி இனி இருக்குமா? ஊட்டச்சத்து உணவு திட்டத்திற்கு மூடுவிழா
| ராணுவ வாகன ஊழல்: தேஜிந்தர் சிங் கைது : தாத்ரா லாரிகள் ஒப்பந்த விவகாரம் Posted: புதுடில்லி : ராணுவத்திற்கு தாத்ரா லாரிகள் வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக, முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கிற்கு, 14 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முற்பட்ட வழக்கில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தேஜிந்தர் சிங்கின், ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் நேற்று, கைது செய்யப்பட்டார்.1,676 லாரிகள் : தற்போதைய மத்திய அமைச்சரான வி.கே.சிங், முன்னர் ராணுவ தளபதியாக இருந்தார். அப்போது, ராணுவத்திற்கு, தாத்ரா நிறுவனத்திடம் இருந்து, 1,676 லாரிகள் வாங்க தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பான பைலில் கையெழுத்திடுவதற்காக, வி.கே.சிங்கிற்கு, ராணுவ அதிகாரியான அப்போதைய லெப்டினன்ட் ஜெனரல் ... |
| மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா : பார்லி., கூட்டத்தொடரில் அறிமுகம் Posted: புதுடில்லி : ''மோட்டார் வாகனங் கள் தொடர்பான புதிய சட்ட திருத்த மசோதா, பார்லிமென்டின் அடுத்த கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படும்,'' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.டில்லியில், சாலை பாதுகாப்பு தொடர்பான மாநாடு ஒன்றில் பேசிய, கட்காரி கூறியதாவது:சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்றினால், நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளை குறைக்கலாம். அத்துடன், தற்போது அமலில் உள்ள, மோட்டார் வாகனங்கள் சட்டம், 1998க்கு மாற்றாக, மின்னணு நிர்வாக முறையை பயன்படுத்தும், மோட்டார் வாகனங்கள் தொடர்பான, புதிய சட்ட திருத்த மசோதாவை கொண்டு வரவும் ... |
| சீனிவாசன் கோரிக்கை நிராகரிப்பு : முத்கல் குழுவுக்கு கூடுதல் அவகாசம் Posted: புதுடில்லி: ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரிக்க முத்கல் குழுவுக்கு மேலும் இரண்டு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அறிக்கையில் உள்ள விவரங்களை தர வேண்டும் என சீனிவாசன் விடுத்த கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.ஆறாவது ஐ.பி.எல். தொடர் சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. இதன் பரிந்துரையின்படி ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் தலைமையிலான குழு விசாரிக்கிறது.இதன் இடைக்கால அறிக்கையில் இந்திய கிரிக்கெட் போர்டானபி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் கேப்டன் தோனி உள்ளிட்ட 13 பேர் இடம் பெற்றிருப்பதாகசெய்தி வெளியானது. இதுகுறித்து ... |
| பிரதமர் நரேந்திர மோடியை புகழ்கிறார் காங்., தலைவர் Posted: பிரதமர் நரேந்திர மோடியின், ஆக்கப்பூர்வமான அணுகுமுறை, மிகச் சரியானது. வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்பதில், தக்க நடவடிக்கைகளை எடுக்கிறார். பிரதமரின் எதிர்பார்ப்பு நிறைவேற வாழ்த்துகிறேன்," என, காங்., மூத்த தலைவர் பி.சி.சாக்கோ கூறியுள்ளார்.வெளிநாட்டு முதலீடு : ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தொழில் வர்த்தக அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசும்போது, "இந்தியாவின் உள்கட்டமைப்பு துறைகள் அனைத்திலும்,வெளிநாட்டு முதலீடு களை அனுமதிக்க தயாராக உள்ளோம். இதற்கு, எந்த மாதிரியான சட்டத்திருத்தங்கள் தேவையோ, அவற்றை எல்லாம் ... |
| Posted: டோக்கியோ: பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் அபே ஆகியோர் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையே, உள்கட்டமைப்பு, புல்லட் ரயில், நகர மேம்பாடு, ராணுவம் உள்ளிட்ட துறைகளில், முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதன்படி, இந்தியாவில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இரண்டு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, ஜப்பான் உறுதி அளித்துள்ளது.நான்கு நாள் அரசு முறைப் பயணமாக, ஜப்பான் சென்றுள்ள, பிரதமர் நரேந்திர மோடி, முதல் இரண்டு நாட்கள், அங்குள்ள கியோட்டோ நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதையடுத்து, நேற்று, தலைநகர் டோக்கியோவுக்கு வந்த பிரதமர், அங்கு, ஜப்பானைச் ... |
| Posted: இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், எதிர்க்கட்சியினரின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பாக்., ராணுவ தளபதி, ரகீல் ஷரீப், பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார். அப்போது, அவரை உடனடியாக பதவி விலக வலியுறுத்தியதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், பாகிஸ்தானில், எந்த நேரத்திலும், ராணுவம் ஆட்சியை கைப்பற்றலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.பாகிஸ்தானில், பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. கடந்த மாதம், 14ல் ஆரம்பித்த இந்த போராட்டம், பெரும் கலவரமாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகளான, பி.டி.ஐ., தலைவர் இம்ரான் கான் மற்றும் பி.டி.ஏ., ... |
| ஆசிரியர் தினத்தை அரசியலாக்குவதா? அமைச்சர் ஸ்மிருதி இரானி கொந்தளிப்பு Posted: புதுடில்லி : ''மத்திய அரசு அறிவித்துள்ள, 'குரு உத்சவ்' ஆசிரியர் தினத்தன்று நடத்தப்படும் கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு தான். கட்சித் தலைவர்கள், இதில் அரசியல் ஆதாயம் தேட நினைத்தால், அது கண்டிக்கத்தக்கது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி தெரிவித்து உள்ளார்.நேரடி ஒளிபரப்பு:இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:வரும் 5ம் தேதி, கொண்டாடப்பட உள்ள ஆசிரியர் தினத்தன்று, டில்லியில், பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார். மாணவர்களின் கேள்விகளுக்கு, மோடி பதிலளிப்பதை, நாடு முழுவதும் உள்ள பள்ளி ... |
| டீசல் விலை கட்டுப்பாட்டை கைவிடுகிறது அரசு: பொதுத்துறை நிறுவனங்களின் இழப்பு குறைந்தது Posted: புதுடில்லி:டீசலின் உண்மையானவிலைக்கும், சில்லரை விலைக் கும் இடையேயான வேறுபாடு, 8 காசுகளாக குறைந்துள்ளதால், டீசல் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு விரைவில் கைவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.டீசல் விற்பனையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வந்தன. இதையடுத்து, ஒவ்வொரு மாதமும், 50 காசுகள் அளவுக்கு விலையை உயர்த்தி, சர்வதேச விலை நிலவரங்களுக்கு இணையாக, டீசலில் சில்லரை விலை கொண்டுவர, முந்தைய மத்திய அரசு திட்டமிட்டது.அதன்படி, 2013 ஜனவரி முதல், டீசல் விலை ஒவ்வொரு மாதமும், 50 காசுகள் உயர்த்தப்பட்டது. இதுவரை, 19 முறை விலை ... |
| Posted: புதுடில்லி : 'கடந்த, 1993 முதல், 2,000ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தையும் ரத்து செய்யக்கூடாது. அப்படி செய்தால், நாட்டில் மின் வினியோக நிலைமை மோசமாகி விடும். நிலக்கரி உற்பத்தியை துவக்கி விட்ட அல்லது துவக்கும் நிலையில் உள்ள, 46 நிறுவனங்களுக்கான ஒதுக்கீட்டை அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மத்திய அரசு தெரிவித்தது.சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல்: நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால், மத்திய அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, 2012ம் ஆண்டில், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான ... |
| வெளிப்படை இல்லாத உள்ளாட்சி இடைத்தேர்தல் : மாநில தேர்தல் கமிஷன் மீது குவியும் புகார் Posted: உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில், தேர்தல் கமிஷன் வெளிப்படை தன்மை இல்லாமல் நடந்து கொள்வதாக, புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், 1,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல், செப்., 18ம் தேதி நடக்கிறது.மனு தாக்கல் செய்ய கால அவகாசம் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது என்பது உட்பட தேர்தல் கமிஷன் மீது, பல்வேறு காரணங்களை கூறி, இத்தேர்தலை தி.மு.க., புறக்கணிப்பதாக, அக்கட்சித் தலைவர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்து விட்டார். பா.ம.க., - -ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் புறக்கணிப்பு முடிவை அறிவித்துள்ளன.வழக்கமாக ஆளும்கட்சியின் ... |
| விஜயகாந்தின் சிங்கப்பூர் பயண திட்டம்: தே.மு.தி.க.,வில் மீண்டும் பரபரப்பு Posted: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மீண்டும் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி, அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், சோர்ந்து போயிருக்கும் கட்சியினரை உசுப்பிவிடுவதற்காக, கட்சி நிர்வாகிகளை அழைத்து, விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திப்பதற்காக, 'உங்களுடன் நான்' நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இதற்காக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.இந்த நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும்போதே, திடீரென, மனைவி பிரேமலதாவுடன், கடந்த ஜூலை 12ம் தேதி ... |
| குறைந்த சம்பளம், பணி சுமை காரணம்: ஓட்டம் பிடிக்கும் இளைஞர் காவல் படையினர்: 1,000 பேர் விலகல்? Posted: சென்னை: போலீசுக்கு உதவ உருவாக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞர் காவல் படையைச் சேர்ந்தவர்கள், பணி நிரந்தரமின்மை, குறைந்த சம்பளம், மன உளைச்சல் போன்ற காரணங்களால், பணியில் இருந்து விலகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மட்டும், இரண்டு பேர் பணி விலகல் கடிதம் கொடுத்துள்ளதாக, அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.'போலீசாருக்கு பல்வேறு பணிகளில் உதவ, 'தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை' என்ற அமைப்பு உருவாக்கப்படும்; இதில், 2013 - 14ல், தமிழகம் முழுவதும் இருந்து, 10,500 பேர் தேர்வு செய்யப்படுவர்' என, முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு ஏப்ரல், 23ல், சட்டசபையில் ... |
| சிறு தானியங்கள் உற்பத்தி இனி இருக்குமா? ஊட்டச்சத்து உணவு திட்டத்திற்கு மூடுவிழா Posted: உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் சிறு தானியங்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது. ஆனால், அவற்றின் சாகுபடியை அதிகரிக்கும் திட்டத்திற்கு வேளாண் துறை, மூடுவிழா நடத்தியுள்ளது.தமிழர்களின் பாரம்பரிய உணவு பொருளாக, அரிசி மட்டுமின்றி, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, பனிவரகு, சாமை, தினை, வரகு, குதிரை வால் உள்ளிட்ட சிறு தானியங்களும் இருந்தன.விழிப்புணர்வு:இவை, உணவாகவும், மருந்தாகவும், பலவகைகளில், மக்களுக்கு பயன்பட்டு, வந்தன. நாகரிக வளர்ச்சி என்ற பெயரில், உணவு பழக்கத்தை மக்கள் மாற்றியதால், சிறு தானியங்களின் சாகுபடி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 02,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |