மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஆந்திரா–தெலுங்கானாவில் பலத்த மழை: 100 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது
- மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 27370 புள்ளிகளாக அதிகரிப்பு
- சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹா பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
- 19 சிறுமிகளை கொன்றவனை தூக்கில் போட தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- ஜப்பான் உதவியுடன் விசாகப்பட்டினம்– சென்னை இடையே புல்லட் ரெயில்: ஆந்திர அரசு பரிசீலனை
- ரசாயன உரங்களுக்கு வங்கி கணக்கு மூலம் விவசாயிகளுக்கு மானியம்: மத்திய அரசு முடிவு
- பத்மநாபசாமி கோவிலில் சுப்ரீம் கோர்ட்டு பிரதிநிதி ஆய்வு
- சிறுமி கற்பழிப்பு வழக்கில் தேடப்படும் தமிழக பாதிரியாரை நாடு கடத்த டெல்லி கோர்ட்டு உத்தரவு
- எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு
- பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலையில் முக்கிய பதவிகளுக்கு நியமனங்களை செய்ய மத்திய அரசு முடிவு
- இந்தியாவில் குறைந்த விலை 3ஜி, 4ஜி நோக்கியா ஸ்மார்ட்போன்கள்
- டெல்லியில் ஆட்சி அமைப்பது பற்றி பா.ஜனதா நாளை முடிவு
- குஜராத்தில் வினாயகர் சிலை கரைப்பின் போது ஆற்றில் மூழ்கி 5 பேர் பலி
- போனி கைதியை தூக்கிலிட ஆவலுடன் காத்திருக்கும் மீரட் சிறை கொலையாளி
- பஞ்சாப்பில் ஏ.டி.எம். மையத்தில் ரூ.25 லட்சம் கொள்ளை
- காஷ்மீர் நிலச்சரிவுக்கு 7 பேர் பலி: 20 பேர் கதி என்ன?
- பண்டிகை காலத்தின் போது டெல்லி மீது தாக்குதல்: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் திட்டம் அம்பலம்
- காஷ்மீர் மழை, வெள்ளத்துக்கு 150 பேர் பலி: ரூ. ஆயிரம் கோடி நிவாரண நிதி ஒதுக்கி பிரதமர் உத்தரவு
- ரேஷன் கடைகளில் செல்போன் ரீசார்ஜ், பஸ் டிக்கெட் எடுக்கலாம்
- பாகிஸ்தானில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகளுக்கு உதவ தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு
| ஆந்திரா–தெலுங்கானாவில் பலத்த மழை: 100 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது Posted: 07 Sep 2014 10:54 PM PDT வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ள நிலையில் வங்க கடலில் ஆந்திரா அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி கடலோர ஆந்திர–தெலுங்கானாவில் பலத்த மழை பெய்து வருகிறது. தெலுங்கானாவில் ஐதராபாத், வரங்கல், கரீம் நகர், அகிலாபாத், நிஜாமாபாத், மெடக் ஆகிய மாவட்டங்களில் கனமழை |
| மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 27370 புள்ளிகளாக அதிகரிப்பு Posted: 07 Sep 2014 10:46 PM PDT மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த வருடத்தில் 27 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டு சாதனைப் படைத்தது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையும் நிப்டி 8000 ஆயிரம் புள்ளிகளாக உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 204 புள்ளிகள் உயர்ந்து 27370 புள்ளிகளை தொட்டது. இதேபோல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 58 புள்ளிகள் |
| சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹா பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு Posted: 07 Sep 2014 10:25 PM PDT இந்தியாவை உலுக்கிய 2ஜி வழக்கில் பலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சி.பி.ஐ. இயக்குனராக இருக்கும் ரஞ்சித் சின்ஹா பலமுறை சந்தித்து பேசியுள்ளார் என்று பிரபல வழக்கறிஞர் பிரசார்ந் பூஷன் உச்சநீதிமன்றத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹா, பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. |
| 19 சிறுமிகளை கொன்றவனை தூக்கில் போட தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 07 Sep 2014 10:18 PM PDT டெல்லி அருகே உள்ள நித்தாரி கிராமத்தில் கடந்த 2005 மற்றும் 2006–ம் ஆண்டுகளில் 19 சிறுமிகள் கற்பழித்து கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் தொழில் அதிபர் மொகிந்தர் சிங், அவரது வீட்டு வேலைக்காரர் சுரேந்தர் கோலி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த இருவருக்கும் காசியா பாத் சிறப்பு கோர்ட்டு 2009–ம் ஆண்டு பிப்ரவரி |
| ஜப்பான் உதவியுடன் விசாகப்பட்டினம்– சென்னை இடையே புல்லட் ரெயில்: ஆந்திர அரசு பரிசீலனை Posted: 07 Sep 2014 10:12 PM PDT ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகர் விஜயவாடா அருகே அமைக்கப்படும் என்று முதல்– மந்திரி சந்திர பாபுநாயுடு சட்டசபையில் அறிவித்தார். அதோடு மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் புதிதாக தொடங்க இருக்கும் திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார். விஜயவாடா, சென்னை இடையே புல்லட் ரெயில் விடும் திட்டம் குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக ஆந்திர சாலை போக்குவரத்து மந்திரி ராகவ்ராவ் தெரிவித்தார் அவர் கூறியதாவது:– |
| ரசாயன உரங்களுக்கு வங்கி கணக்கு மூலம் விவசாயிகளுக்கு மானியம்: மத்திய அரசு முடிவு Posted: 07 Sep 2014 09:55 PM PDT மத்திய ரசாயனத்துறை மந்திரி அனந்தகுமார் கர்நாடக மாநிலம் குல்பர்காவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும் ரசாயன உரங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கப்படுகிறது. தற்போது, இதற்கு மட்டும் ஆண்டுக்கு 77 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக கொடுக்கப்படுகிறது. |
| பத்மநாபசாமி கோவிலில் சுப்ரீம் கோர்ட்டு பிரதிநிதி ஆய்வு Posted: 07 Sep 2014 08:53 PM PDT கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வந்தனர். கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் பல லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் இருப்பதாகவும், இதனை மன்னர் குடும்பத்தினர் அபகரிப்பதாகவும் புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு |
| சிறுமி கற்பழிப்பு வழக்கில் தேடப்படும் தமிழக பாதிரியாரை நாடு கடத்த டெல்லி கோர்ட்டு உத்தரவு Posted: 07 Sep 2014 08:20 PM PDT அமெரிக்காவின் மின்னசோட்டா நகரில் உள்ள 3 கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதிரியாராக பணியாற்றியவர் ஜோசப் பழனிவேல் ஜெயபால். தமிழகத்தைச் சேர்ந்த இவர் 2004-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை மின்னசோட்டாவில் தங்கியிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு தேவாலயத்துக்கு வந்த 14 வயது சிறுமி ஒருவரை அவர் கற்பழித்ததாகவும், 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை அவரை |
| எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு Posted: 07 Sep 2014 04:40 PM PDT பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நாளில் இருந்து ஒரு வருடத்திற்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. |
| Posted: 07 Sep 2014 03:38 PM PDT 543 எம்.பி.க்களை கொண்ட பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு 44 எம்.பி.க்களே உள்ளனர். எம்.பி.க்களின் மொத்த எண்ணிக்கையில் 10 சதவீதத்தை (55 எம்.பி.க்கள்) பாராளுமன்றத்தில் ஒரு கட்சி கொண்டிருந்தால் மட்டுமே அக்கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கிடைக்கும். ஆனால் காங்கிரசுக்கு 11 எம்.பி.க்கள் குறைவாக உள்ளனர். என்றாலும் தங்கள் கட்சிக்கே எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை அளிக்கவேண்டும் என்ற காங்கிரசின் கோரிக்கையை பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிராகரித்து விட்டார். |
| இந்தியாவில் குறைந்த விலை 3ஜி, 4ஜி நோக்கியா ஸ்மார்ட்போன்கள் Posted: 07 Sep 2014 03:02 PM PDT ஒரு நேரத்தில் இந்தியாவில் மொபைல் போன்கள் சந்தையின் ஜாம்பவானாக திகழ்ந்த நோக்கியா அந்த அந்தஸ்தை 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு தென் கொரிய நிறுவனமான சாம்சங்கிடம் பறிகொடுத்துவி்ட்டது. இப்போது, மைக்ரோசாஃப்ட் வசமிருக்கும் நோக்கியா இழந்த அந்தஸ்தை மீண்டும் பெற திட்டமிட்டிருக்கிறது. இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி வேகமாக இருந்தாலும், 3ஜி மற்றும் 4ஜி இண்டர்நெட் வசதி |
| டெல்லியில் ஆட்சி அமைப்பது பற்றி பா.ஜனதா நாளை முடிவு Posted: 07 Sep 2014 02:31 PM PDT டெல்லி மாநில முதல்–மந்திரியாக இருந்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகியதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 17–ந்தேதி டெல்லி சட்டசபை முடக்கப்பட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் டெல்லி மாநில துணை நிலை கவர்னரான நஜீப் ஜூங் அண்மையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பிய அறிக்கையில் டெல்லியில் ஆட்சியமைக்க தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பா.ஜனதாவுக்கு அழைப்பு விடுக்க அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார். |
| குஜராத்தில் வினாயகர் சிலை கரைப்பின் போது ஆற்றில் மூழ்கி 5 பேர் பலி Posted: 07 Sep 2014 01:52 PM PDT குஜராத் மாநிலத்தில் நேற்று வினாயகர் சிலைகளை ஆறுகளில் கரைக்கச் சென்ற 5 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். தலைநகர் அகமதாபாத் அருகேயுள்ள சபர்மதி ஆற்றில் வினாயகர் சிலைகளை கரைக்கும்போது 3 பேர் நீரில் மூழ்கி பலியானதாகவும், ராஜ்கோட் பகுதியில் உள்ள ஆஜி ஆற்றில் நடைபெற்ற வினாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியின்போது இருவர் ஆற்றில் மூழ்கி பலியானதாகவும் அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். |
| போனி கைதியை தூக்கிலிட ஆவலுடன் காத்திருக்கும் மீரட் சிறை கொலையாளி Posted: 07 Sep 2014 12:56 PM PDT உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு சிறுவர், சிறுமிகளை கடத்திச் சென்று கொடூரமான முறையில் கொன்று, பிணங்களை கால்வாயில் வீசிய சுரிந்தர் கோலி என்பவனுக்கு நான்கு கொலைகளை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் குற்றவாளி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவனது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் தள்ளுபடியான நிலையில் சுரிந்தர் கோலிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும்படி காசியாபாத் கூடுதல் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது. |
| பஞ்சாப்பில் ஏ.டி.எம். மையத்தில் ரூ.25 லட்சம் கொள்ளை Posted: 07 Sep 2014 12:11 PM PDT பஞ்சாப் மாநில தலைநகர் அம்ரிஸ்டரில் உள்ள குரு ராம்தாஸ் சர்வதேச விமான நிலையம் அருகே அரசுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்கு நேற்று வந்த அடையாளம் தெரியாத நபர்கள் காவலாளியை கூர்மையான ஆயுதங்களால் தாக்கிவிட்டு, உள்ளேயிருந்த ரொக்கப்பணம் ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். மின்சார ரம்பம், கியாஸ் வெல்டிங் இயந்திரம் ஆகியவற்றின் உதவியுடன் ஏ.டி.எம். இயந்திரத்தை |
| காஷ்மீர் நிலச்சரிவுக்கு 7 பேர் பலி: 20 பேர் கதி என்ன? Posted: 07 Sep 2014 11:56 AM PDT காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு கடுமையான வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது. ஜீலம், தாவி உள்பட முக்கிய நதிகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி வருகிறது. இந்த நதிகளின் கரையோரப் பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. |
| பண்டிகை காலத்தின் போது டெல்லி மீது தாக்குதல்: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் திட்டம் அம்பலம் Posted: 07 Sep 2014 10:48 AM PDT டெல்லி ஜாமா மசூதியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் அஜாஸ் ஷேக்கை, டெல்லி தனிப்பிரிவு காவல்துறையினர் உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரில் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம், புணே நகரைச் சேர்ந்த அஜாஸ் ஷேக், 2010-இல் நடந்த ஜாமா மசூதி தாக்குதல், அதே ஆண்டில் புணேவில் நடைபெற்ற ஜெர்மன் பேக்கரி தாக்குதல், 2008-இல் தில்லி பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் சம்பவம் உள்பட இந்தியாவில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் |
| காஷ்மீர் மழை, வெள்ளத்துக்கு 150 பேர் பலி: ரூ. ஆயிரம் கோடி நிவாரண நிதி ஒதுக்கி பிரதமர் உத்தரவு Posted: 07 Sep 2014 10:11 AM PDT காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு கடுமையான வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது. ஜீலம், தாவி உள்பட முக்கிய நதிகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி வருகிறது. இந்த நதிகளின் கரையோரப் பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கடந்த ஆண்டு உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் போல் காஷ்மீரில் கடும்சேதம் ஏற்பட்டுள்ளது. மலைப் பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. |
| ரேஷன் கடைகளில் செல்போன் ரீசார்ஜ், பஸ் டிக்கெட் எடுக்கலாம் Posted: 07 Sep 2014 07:53 AM PDT டெல்லிவாசிகள் இப்போது ரேஷன் கடைகளிலேயே செல்போன் ரீசார்ஜ், டி.டி.எச் கார்டுகள், பஸ் டிக்கெட்டுளை முன்பதிவு செய்து கொள்ளலாம். டெல்லி அரசு இதற்காக ரேஷன் கடைகளுக்கு விதிகளை தளர்த்தியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| பாகிஸ்தானில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகளுக்கு உதவ தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு Posted: 07 Sep 2014 07:01 AM PDT பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. பஞ்சாப் மாகாணம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கன மழை பெய்து வருவதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைவெள்ளத்தில் சிக்கி 110க்கும் மேற்பட்டோர்கள் பலியாகினர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |