Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பொறியாளன் விமர்சனம்

Posted:

பென்னி குவிக் மாதிரி பெயரெடுக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு கட்டிட பொறியாளனை ‘தண்ணி தவிக்க’ வைக்கிறது விதி. இரண்டு கோடி பணத்தை ஏமாந்து அதை இரண்டே நாளில் மீட்டெடுக்க வேண்டிய அவசரத்திலிருக்கும் அவன், என்னவெல்லாம் பாடு பட்டு, எதிராளிக்கு எப்படியெல்லாம் ‘வூடு’ கட்டுகிறான் என்பதுதான் படம்.


Read more ...

நெய்வேலி என் எல் சி ஒப்பந்த தொழிலாளர் பிரதிநிதிகளுடன் சென்னையில் இன்று பேச்சுவார்த்தை!

Posted:

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நெய்வேலி என் எல் சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரதிநிதிகளுடன் இன்று சென்னையில், அதிகாரிகள்
பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.


Read more ...

புலம்பெயர் தமிழர்களுக்கான இந்தியாவின் செய்தி!

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் பலதரப்பினருக்குமான செய்திகளை கொண்டு வந்திருக்கிறது.


Read more ...

ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவைத் தேர்தல் குறிப்பிட்ட நேரத்தில் கட்டாயம் நடைப்பெற வேண்டும்:உமர் அப்துல்லா

Posted:

ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவைத் தேர்தல் குறிப்பிட்ட நேரத்தில் கட்டாயம் நடைப்பெற வேண்டும் என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.


Read more ...

காஷ்மீரின் தெற்குப் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது:மீட்புப் பணிகள் தீவிரம்!

Posted:

வரலாறு காணாத மழை ஜம்மு காஷ்மீரில் பெய்து வருவதால், காஷ்மீரின் தெற்குப் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. அங்கு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.


Read more ...

ஒருங்கிணைந்த இலங்கைக்குள் வடக்கு- கிழக்கு தன்னாட்சி அதிகார அலகிற்காக போராடுவோம்: இலங்கைத் தமிழரசுக் கட்சி

Posted:

பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள்ளே, இணைந்த வடக்கு - கிழக்கில் பகிரப்படும் இறைமையின் அடிப்படையில், தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசு ஒன்று வன்முறையற்ற சாத்வீகப் போராட்டத்தின் மூலம் வென்றெடுக்கப்படும் வரை போராடுவோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. 


Read more ...

பண்டிகை நாட்களில் டெல்லி,சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களைத் தகர்க்கத் திட்டம் : இந்தியன் முகாஜீதீன்

Posted:

பண்டிகை நாட்களில் சென்னை, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி, நகரைத தகர்க்க இந்தியன் முகாஜீதீன் அமைப்புத் திட்டமிட்டு உள்ளதாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

டெல்லியில் பாஜக ஆட்சி:நாளை பாஜகவின் ஆட்சி மன்றக் குழுக்கூட்டம் கூடுகிறது!

Posted:

டெல்லியில் பாஜக ஆட்சி அமைப்பதுக் குறித்து முடிவெடுக்க அக்ட்சியின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம்,டெல்லியில் நாளை கூடுகிறது.


Read more ...

நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 2ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் விடுதலை!

Posted:

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நீண்டகாலமாக சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகள், லோக் அதாலத் நீதிமன்ற விசாரணையின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைக் கைதிகள் என்கிற பெயரில் ஜாமீனிலும் வெளிவராமல், தண்டனைக் காலத்தில் பாதி நாட்களுக்கும் மேல் சிறையில் கழித்துள்ள விசாரணைக் கைதிகளை லோக் அதாலத் என்கிற மக்கள் நீதிமன்றங்கள் மூலம் விசாரித்து, விடுதலை செய்ய வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவுப் பிறப்பித்திருந்தது. அதன் படி நேற்று தமிழக சிறைகளில் இருக்கும் 2ஆயிரத்து  500க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகளை லோக் அதாலத் நீதிமன்றம்மூலம், 3 ஆயிரம் வழக்குகளின் கீழ், விடுதலை செய்துள்ளனர்.

சேலம் சிறையில் உள்ள 455 விசாரணைக் கைதிகள், அம்மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முன்னர் விசாரிக்கப் பட்டு, ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபா அபராதத்துக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதே போன்று வேலூர், புழல், காஞ்சீபுரம் உள்ளிட்ட சிறைகளில் இருந்தும் கைதிகள் விடுவிக்கப் பட்டுள்ளனர். இப்படி லோக் அதாலத் நீதிமன்றங்கள் மூலம் தமிழகத்தில் மட்டும் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.


Read more ...

சமஷ்டி என்கிற கருப்பொருளை சிங்கள மக்கள் மத்தியில் சரியாக எடுத்துச் செல்ல வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

சமஷ்டி என்பது பிரிவினையைக் கோருவதல்ல, மாறாக ஒருங்கிணைந்த இலங்கை என்கிற நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்வது என்பதை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜப்பான் பிரதமரின் இலங்கை விஜயம்: இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் கூட்டறிக்கை கைச்சாத்து!

Posted:

ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயின் இலங்கை விஜயமானது இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளுக்கு மற்றுமொரு மைல்கல்லாக அமைந்துள்ளதாக இரு நாட்டுத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர். 


Read more ...

விண்ணுலகிலிருந்து வந்த தாய்லந்தின் வெள்ளை கோவில் : புகைப்படங்கள்

Posted:

வெள்ளை கோவில் என அழைக்கப்படும் Wat Rong Khun எனும் புத்த ஆலயம் தாய்லந்தில் உள்ளது.


Read more ...

மனித உரிமைகளை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம்: ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை!

Posted:


சிறிய நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு மனித உரிமைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் சையத் அல் ஹூசைன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 


Read more ...

தீபெத்தில் தமக்குப் பதிலாக இன்னொரு தலைவர் தேவையில்லை!:தலாய் லாமா திட்டவட்டம்

Posted:

தீபேத்தில் பௌத்தர்களின் ஆன்மிகத் தலைவரான தாலாய் லாமா சமீபத்தில் ஜேர்மனி பத்திரிகைக்கு அளித்த் செவ்வியில் தானே தீபேத்தில் இறுதி ஆன்மிகத் தலைவர் எனவும் எனக்குப் பின் இப் பழமையான சமய கலாச்சார வழக்கம் ஓர் முடிவுக்கு வந்து விடும் எனவும் தனது ஹிமாலயன் தாயகத்தில் இருந்து கூறிய கூற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

ஜப்பானின் டோக்கியோவில் மறுபடி பரவி வரும் டெங்கு!:WHO எச்சரிக்கை

Posted:

ஜப்பானின் டோக்கியோ நகரில் கடந்த 70 வருடங்களுக்குப் பின்னர் மறுபடியும் நுளம்பினால் பரவும் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Read more ...

சோமாலியாவின் அல் ஷபாப் போராளிக் குழு புதிய தலைவரை அறிவித்தது

Posted:

கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவின் வான் தாக்குதலில் சோமாலியாவின் அல் ஷபாப் போராளிக் குழுவின் தலைவரன அஹ்மெட் கொடானே கொல்லப் பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டிருந்தது.


Read more ...

‘மீண்டும் போராடுவோம்’: இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று மாவை உரை!

Posted:

சர்வதேச இராஜதந்திர சந்தர்ப்பமும், குறிப்பாக இந்தியாவின் புதிய அரசின் சந்தர்ப்பமும், புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளின் பயனுள்ள உழைப்பும் கைகூடியுள்ள இச்சந்தர்ப்பத்தைப் பற்றி நின்று பொருத்தமான இலக்கை எய்துவதற்கான இலட்சியம் நிறைந்த தீர்மானங்களை எடுப்போம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 


Read more ...

பாகிஸ்தானில் முக்கிய ஷியா பிரிவுத் தலைவரும் மெய்ப்பாதுகாவலரும் சுட்டுக் கொலை

Posted:

இன்று ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் வர்த்தகத் தலைநகரான கராச்சியில் இனம் தெரியாத துப்பாக்கி தாரிகளால் அந்நாட்டின் முக்கிய ஷியா முஸ்லிம் பிரிவின் தலைவரும் அவரின் மெய்ப் பாதுகாவலரும் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

இந்திய மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்:ஜி.கே.வாசன்

Posted:

மதுரையில் காங்கிரஸ் நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியதாவது,


Read more ...

ஓணம் பண்டிகை விடுமுறையால் தேக்கடிக்குச் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

Posted:

கேரளாவில் ஓணம் பண்டிகை விடுமுறை துவங்கியதை ஒட்டி, முக்கிய சுற்றுலாத் தலமான தேக்கடியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. பண்டிகையை ஒட்டி காலாண்டு தேர்வுகள் முன்னமே நடத்தி முடிக்கப்பட்டு பள்ளிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளுக்கும் விடுமுறை என்பதால் தேக்கடிக்குச் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரியில் படகு போக்குவரத்தில் சென்று வன விலங்குகளைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் இன்று தேக்கடியில் காலை முதலே கூட்டம் அதிகரித்தது. இதனால் அனைத்து படகுகளும் முழு அளவிலான சுற்றுலா பயணிகளுடன் இயக்கப்பட்டன. முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 132 அடியை தாண்டியுள்ளதால் நீர் நிரம்பியுள்ள தேக்கடி ஏரி, சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஓணம் பண்டிகையின் அடுத்து வரும் விடுமுறை நாட்களில் இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என சுற்றுலாத்துறையினர் தெரிவித்தனர்.

- 4தமிழ்மீடியாவுக்காக ஸ்டீவ்


Read more ...

குழந்தை தொழிலாளர்களின் அடையாளமாகி வரும் டெல்லி

Posted:

இந்தியத் தலைநகர் டெல்லியில் தொடரும் சமூக அவலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.


Read more ...

ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே இலங்கை விஜயம்; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார்!

Posted:

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, தனது குழுவினருடன் இன்று சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கட்டுநாயக்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். 


Read more ...

2ஜி ஊழல் : சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சிங்ஹா மீதான குற்றச்சாட்டுக்களும், மறுப்பும்!

Posted:

2ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பான விசாரணை டில்லி சிறப்பு சிபிஜ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™