மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தனிமை சிறையில் ஜெயலலிதா அவதி: நேற்றிரவு சாப்பிடவில்லை
- பண்டிகைக் கால தட்டுப்பாட்டைச் சமாளிக்க பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி
- தீவிரவாதத்தை தடுத்து தேசத்தை காப்போம்: ராஜ்நாத்சிங் பேச்சு
- பா.ஜ.க.வு.க்கு மகாராஷ்டிராவில் வீசும் அலையை நிரூபிப்போம்: உத்தவ் காட்டம்
- முன்னாள் மத்திய மந்திரி கோபிநாத் முண்டே மகளை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவதில்லை: சிவசேனா முடிவு
- அரியானா சட்டப்பேரவை தேர்தல்: 90 இடங்களுக்கு 2094 பேர் வேட்பு மனு தாக்கல்
- மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி மீது அவதூறு வழக்கு: பிப்ரவரி 28-ந் தேதி விசாரணை
- பெங்களூரில் பயங்கர சாலை விபத்து: சாப்ட்வேர் என்ஜினியர்கள் மூவர் சம்பவ இடத்திலேயே பலி
- அபராதத்தை செலுத்தாவிட்டால் சொத்துக்கள் முடக்கப்படும்: அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் பேட்டி
- மேகாலயா வெள்ளப்பெருக்கு-நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு
- ஜெயலலிதாவுக்கு நெஞ்சுவலி: பெங்களூர் சிறைச்சாலை மருத்துவமனையில் பரிசோதனை
- சர்வதேச குழந்தைகள் அமைதிப் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்
- பெங்களூர் பரப்பன அக்ரஹாரா பகுதியில் திரண்ட அ.தி.மு.க.வினர் கைது: தடை உத்தரவு 5 கி.மீ. நீட்டிப்பு
- சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை
- ரூ.56 கோடிக்கு கணக்கு இல்லை: நீதிபதி தீர்ப்பு
- சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு
- ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் 3 மணிக்கு தீர்ப்பு
- திட்டமிட்ட காலத்தை விட மங்கள்யான் நீண்ட நாள் செயல்படும்: செவ்வாயை ஆராயும் பணியை தொடங்கியது
- ஜம்மு-காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு மாதா அமிர்தானந்தமயி மடம் ரூ.25 கோடி நிதியுதவி
- பத்மநாபா சுவாமி கோயிலில் ராஜ்நாத் சிங் வழிபாடு
| தனிமை சிறையில் ஜெயலலிதா அவதி: நேற்றிரவு சாப்பிடவில்லை Posted: 27 Sep 2014 10:47 PM PDT ரூ.66.56 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று நேற்று பிற்பகல் 2.30 மணிக்கே அறிவிக்கப்பட்டு விட்டது. அப்போதே ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தண்டனை கிடைப்பது உறுதியாகி விட்டது. பிற்பகல் 3.30 மணிக்கு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை, |
| பண்டிகைக் கால தட்டுப்பாட்டைச் சமாளிக்க பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி Posted: 27 Sep 2014 09:56 PM PDT இந்தியாவின் வெங்காய விளைச்சலில் பெரும் பங்காற்றிவரும் கர்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் பருவமழை பொய்த்துப் போனதால் நாட்டின் பல பகுதிகளில் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் சற்று உயர்ந்துக் காணப்படுகின்றது. தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த விலைவாசி மேலும் அதிகரிக்ககூடும் என்ற அச்சம் மக்களிடையே மேலோங்கியுள்ளது. |
| தீவிரவாதத்தை தடுத்து தேசத்தை காப்போம்: ராஜ்நாத்சிங் பேச்சு Posted: 27 Sep 2014 09:55 PM PDT கேரளாவை சேர்ந்த பிரசித்தி பெற்ற பெண் சாமியார் மாதா அமிர்தானந்தமயியின் 61–வது பிறந்த நாள் கொல்லத்தில் உள்ள அமிர்தபுரி ஆசிரமத்தில் நேற்று நடைபெற்றது. மாதா அமிர்தானந்தமயி பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கினார். மேலும் காஷ்மீர் வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.25 கோடி நிதி உதவியும் |
| பா.ஜ.க.வு.க்கு மகாராஷ்டிராவில் வீசும் அலையை நிரூபிப்போம்: உத்தவ் காட்டம் Posted: 27 Sep 2014 04:24 PM PDT மகாராஷ்டிரா மாநிலத்தில் நீண்ட காலமாக கூட்டணியாக இருந்த பா.ஜ.க. மற்றும் சிவசேனா கட்சிகள் தொகுதி உடன்பாட்டில் முட்டிக்கொண்டதால் பிரிந்தன. இரு கட்சிகளும் சட்டப்பேரவை தேர்தலை தனித்தனியாக சந்திக்கின்றன. இந்நிலையில் சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே சனிக்கிழமையன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். |
| முன்னாள் மத்திய மந்திரி கோபிநாத் முண்டே மகளை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவதில்லை: சிவசேனா முடிவு Posted: 27 Sep 2014 03:49 PM PDT மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் எப்படியும் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி ஏற்பட்டுவிடும் என்று நினைத்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. தொகுதி உடன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டதால் இரு கட்சிகளும் தனித்தனியாக களமிறங்குகின்றன. இந்நிலையில் சாலை விபத்தில் பலியான முன்னாள் பா.ஜ.க மந்திரியான கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா போட்டியிடும் தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவதில்லை என சிவசேனா முடிவு செய்துள்ளது. |
| அரியானா சட்டப்பேரவை தேர்தல்: 90 இடங்களுக்கு 2094 பேர் வேட்பு மனு தாக்கல் Posted: 27 Sep 2014 03:30 PM PDT அடுத்த மாதம் 15-ந் தேதி அரியானாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 90 இடங்களுக்கு 2094 போட்டியிட மனு தாக்கல் செய்தனர். கடைசி நாளான நேற்று மட்டும் 1239 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரந்தீப் சிங் கைத்தால் தொகுதியிலும், இந்திய தேசிய லோக் தளத்தை சேர்ந்த அபய் சிங் சவுதாலா எல்லெனாபாத் தொகுதியிலும், நைனா சவுதாலா டப்வாலி தொகுதியிலும், பா.ஜ.க.வை சேர்ந்த கேப்டன் அபிமன்யு நர்னான்ட் தொகுதியிலும், அனில் விஜ் அம்பாலா கண்டோன்மென்ட் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். |
| மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி மீது அவதூறு வழக்கு: பிப்ரவரி 28-ந் தேதி விசாரணை Posted: 27 Sep 2014 02:22 PM PDT குஜராத்தில் 2012-ம் ஆண்டு, டிசம்பர் 20-ந் தேதி குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானபோது, டி.வி. சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் மீது தற்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியும், பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான ஸ்மிரிதி இரானி அவதூறான கருத்தை வெளியிட்டதாக தெரிகிறது. |
| பெங்களூரில் பயங்கர சாலை விபத்து: சாப்ட்வேர் என்ஜினியர்கள் மூவர் சம்பவ இடத்திலேயே பலி Posted: 27 Sep 2014 02:12 PM PDT பெங்களூரில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட சாலை விபத்தில் சாப்ட்வேர் என்ஜினியர்கள் மூவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தாங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு மூவரும் சென்ற போது பெங்களூர் அருகே எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள உயர்வான மேம்பாலத்தின் கைப்பிடிச்சுவரில் அவர்களது கார் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அனீஸ் வர்கீஸ், வயது 26, ராம் வைத்தியநாதன், வயது 35 மற்றும் ராஜீவன் சார்லஸ், வயது 35 ஆகியோர் பலியானார்கள். |
| அபராதத்தை செலுத்தாவிட்டால் சொத்துக்கள் முடக்கப்படும்: அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் பேட்டி Posted: 27 Sep 2014 12:29 PM PDT முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 'சொத்து குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்களின் மதிப்பு இன்றைய நிலவரப்படி பார்த்தால் 5 மடங்கு அதிகரித்து இருக்கும். அதன் |
| மேகாலயா வெள்ளப்பெருக்கு-நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு Posted: 27 Sep 2014 12:02 PM PDT மேகாலயாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்தது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவந்தது. இந்த கனமழையால் மேகாலயாவில் 25 பேர் பலியானதாக ஏற்கனவே வந்த தகவல்கள் தெரிவித்தன. அங்கு மீட்பு பணிகளை தேசிய பேரிடர் மீட்பு படை துரிதமாக மேற்கொண்டதால் வெள்ளத்தில் சிக்கிய பலர் காப்பாற்றப்பட்டனர். அடுத்து வரும் நாட்களில் மேலும் சில பலியான உடல் மீட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ஜெயலலிதாவுக்கு நெஞ்சுவலி: பெங்களூர் சிறைச்சாலை மருத்துவமனையில் பரிசோதனை Posted: 27 Sep 2014 06:03 AM PDT சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும், மற்றவர்களுக்கு தலா 10 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பையடுத்து 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். |
| சர்வதேச குழந்தைகள் அமைதிப் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண் Posted: 27 Sep 2014 05:32 AM PDT நெதர்லாந்தின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாமில் செயல்பட்டுவரும் குழந்தைகள் உரிமை அமைப்பு நிறுவனமான 'கிட்ஸ்ரைட்ஸ்' ஆண்டுதோறும் குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்தும் விதமாகச் செயல்படும் சிறுவர், சிறுமியருக்கு விருதுகளை வழங்கி வருகின்றது. கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து அளிக்கப்படும் இந்த விருதுகளின் 10-வது ஆண்டு நிறைவு இதுவாகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருதுகளுக்கு மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கவா |
| பெங்களூர் பரப்பன அக்ரஹாரா பகுதியில் திரண்ட அ.தி.மு.க.வினர் கைது: தடை உத்தரவு 5 கி.மீ. நீட்டிப்பு Posted: 27 Sep 2014 05:32 AM PDT ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா பகுதியில் இருந்த அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா இன்று தீர்ப்பளித்தார். தண்டனை விவரத்துக்காக காத்திருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளித்தது. ஆவேசத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றம் அமைந்துள்ள பரப்பன அக்ரஹாரா பகுதியில் ஏராளமானோர் திரண்டதால், போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. |
| சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை Posted: 27 Sep 2014 05:32 AM PDT வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தமிழக முதல்- அமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்தபோது கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கு விசாரணையை சென்னையில் |
| ரூ.56 கோடிக்கு கணக்கு இல்லை: நீதிபதி தீர்ப்பு Posted: 27 Sep 2014 03:29 AM PDT ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ரூ. 66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இதில் ரூ.9.95 கோடி சொத்துக்கு மட்டுமே கணக்கு காட்டப்பட்டதாகவும், மீதம் உள்ள ரூ.56.70 கோடி சொத்துக்கு கணக்கு இல்லை என்று நீதிபதி |
| சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு Posted: 27 Sep 2014 02:07 AM PDT வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ததாக கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்தபோது கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். |
| ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் 3 மணிக்கு தீர்ப்பு Posted: 27 Sep 2014 01:34 AM PDT வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ததாக கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்தபோது கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கு விசாரணையை சென்னையில் அமைக்கப்பட்ட தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது. |
| திட்டமிட்ட காலத்தை விட மங்கள்யான் நீண்ட நாள் செயல்படும்: செவ்வாயை ஆராயும் பணியை தொடங்கியது Posted: 27 Sep 2014 01:31 AM PDT செவ்வாய் கிரகத்தை ஆராய இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் மங்கள்யான் விண்கலத்தை செலுத்தினார்கள். அது செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இந்த வெற்றிக்காக இந்திய விஞ்ஞானிகளை நாட்டு மக்கள் பாராட்டினார்கள். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பும், மரியாதையும் உயர்ந்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்ட பாதையை அடைந்த மங்கள்யான் பெங்களூரில் உள்ள இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு |
| ஜம்மு-காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு மாதா அமிர்தானந்தமயி மடம் ரூ.25 கோடி நிதியுதவி Posted: 27 Sep 2014 01:12 AM PDT காஷ்மீர் மாநிலத்தை துவம்சம் செய்த வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் அம்மாநில மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். காஷ்மீரில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களும், ஆப்பிள் தோட்டங்களும் நீரில் மூழ்கி நாசமாகின. 400–க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானதாக மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ள நிவாரண நிதிக்கு பல்வேறு மாநில அரசுகளும், |
| பத்மநாபா சுவாமி கோயிலில் ராஜ்நாத் சிங் வழிபாடு Posted: 27 Sep 2014 01:03 AM PDT மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கேரள மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க பத்மநாபா சுவாமி கோயிலில் இன்று வழிபாடு செய்தார். அவரை திருவனந்தபுரம் மாவட்ட கூடுதல் நீதிபதி இந்திரா வரவேற்று ஆலயத்தினுள் அழைத்துச் சென்றார். சுமார் 45 நிமிடங்கள் வரை கோயிலை சுற்றிப் பார்த்த ராஜ்நாத் சிங்குடன் வந்திருந்த கேரள மாநில பா.ஜ.க. தலைவர் பி.கே.கிருஷ்ணதாஸ் உள்ளிட்ட மாநில பா.ஜ.க.நிர்வாகிகளும் சுவாமியை தரிசித்தனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |