Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தலைநகர் பிரச்சினை: சந்திரபாபு நாயுடுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராயலசீமா பகுதியில் 2–வது நாளாக பந்த்

Posted: 03 Sep 2014 10:38 PM PDT

ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகரை தேர்வு செய்ய சிவராமகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்த குழு தனது பரிந்துரை அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளது. அதில் புதிய தலைநகரை ஒரே இடத்தில் அமைக்கக்கூடாது என்றும் ராயலசீமாவில் ஒரு பகுதியில், வட ஆந்திராவான விசாகப்பட்டினத்திலும், காளஹஸ்தி– நாடிகுடி பகுதியிலும் தலைநகர் அமைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஊர்பஞ்சாயத்தில் தந்தைக்கு கொடூர தண்டனை: மகளை கற்பழித்து கொலை செய்த கும்பல்

Posted: 03 Sep 2014 10:32 PM PDT

மேற்கு வங்காள மாநில ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அந்த பஞ்சாயத்துக்கு சொந்தமான டிராக்டரை வாடகைக்கு எடுத்து விவசாய பணிகள் செய்தார். அதற்கான வாடகை பாக்கி நிலுவையில் இருந்தது. நீண்ட நாட்களாகியும் அவர் திருப்பி செலுத்தாததால் ஊர் பஞ்சாயத்து முன் நிறுத்தப்பட்டார். வாடகை பாக்கி செலுத்தாதற்காக ஊர் மக்கள் அவரை அடித்து உதைக்க வேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டது.

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

Posted: 03 Sep 2014 10:26 PM PDT

அருணாச்சலப்பிரதேச மாநிலம் மேற்கு சியாங் மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவில் 3.8 என பதிவானதாகவும் டெல்லி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களை எதிர்த்து ராகுல் ஆதரவாளர்கள் திடீர் போர்க்கொடி

Posted: 03 Sep 2014 10:23 PM PDT

பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலை மோடி தலைமையில் பா.ஜ.க. வும், ராகுல் தலைமையில் காங்கிரசும் எதிர்கொண்டன. நரேந்திரமோடி, ராகுல் காந்தி இருவரும் நாடெங்கும் தனி விமானத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஏராளமான பொதுக் கூட்டங்களில் பேசி மக்களிடம் போட்டி போட்டு ஆதரவு திரட்டினார்கள். விறுவிறுப்பாக நடந்த அந்த தேர்தலில் பாரதீய

திருப்பதி கோவில் அருகே தாழ்வாக விமானம் பறந்ததால் பரபரப்பு

Posted: 03 Sep 2014 10:17 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் திருமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கன மழை நீடிப்பு: பாறைகள் உருண்டு வீடுகள் இடிந்தன

Posted: 03 Sep 2014 10:16 PM PDT

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக இந்த மழை கன மழையாக மாறி கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் தலைநகரான திருவனந்தபுரம் வெள்ளக்காடானது. சாலைகளில் தண்ணீர் பாய்ந்து ஓடியது. பிரதான சாலையான எம்.சி. ரோட்டில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. காலை நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு செல்லும்

மதுவிலக்கு கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம்: உம்மன்சாண்டி

Posted: 03 Sep 2014 08:32 PM PDT

கேரளாவில் படிப்படியாக மது விலக்கை அமல்படுத்தும் நடவடிக்கையில் அம்மாநில முதல்-மந்திரி உம்மன்சாண்டி ஈடுபட்டுள்ளார். மாநிலம் முழுவதும் 412 மதுக்கடைகள் சமீபத்தில் அதிரடியாக மூடப்பட்டன. தொடர்ந்து படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று கேரள அரசு தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர், திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி உம்மன்சாண்டி நிருபர்களுக்

தமிழ்நாட்டில் குரு உத்சவ் கிடையாது: ஆசிரியர் தினம் தான் கொண்டாடப்படும்: கல்வித்துறை தகவல்

Posted: 03 Sep 2014 04:25 PM PDT

மத்தியில் பொறுப்பேற்றுள்ள பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான புதிய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ''ஆசிரியர்கள் தினம்'' எனக் கொண்டாடப்படுவது இனி வருங்காலங்களில் ''குரு உத்சவ்'' என்ற பெயரில் கொண்டாட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. புதிய பா.ஜ.க. அரசின் இந்த செயல் முழுக்க முழுக்க கல்வியில் இந்துதுத்துவாவை திணிக்கும் நடவடிக்கை என்றும், நாட்டை சமஸ்கிருதமயமாக்கல் செய்யும் முயற்சியின் ஒரு பகுதி எனவும் கூறப்பட்டது. இந்த மோசமான அறிவிப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ளன

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 10 ரூபாய் கேட்ட மாணவியை கொன்ற தந்தை வழி மாமா

Posted: 03 Sep 2014 01:25 PM PDT

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாகேப்கஞ்ச் பகுதியில் ஆசிரியர் தின விழாவிற்காக 10 ரூபாய் பணம் கேட்ட 11 வயது மாணவியை அவரது தந்தை வழி மாமா அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாகேப்கஞ்சில் உள்ள பிந்துதாம் நடுநிலை பள்ளியில் படிக்கும் காஜல் குமாரி என்ற அப்பெண் தனது பாட்டியிடம் ஆசிரியர் தினத்திற்கான தபால் தலை வாங்க பத்து ரூபாய் வழங்குமாறு கேட்டுள்ளார். அப்போது பாட்டியின் அருகில் இருந்த அப்பெண்ணின் தந்தை வழி மாமா அவளது

கேரள மக்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன்: ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சதாசிவம் பேட்டி

Posted: 03 Sep 2014 10:42 AM PDT

தமிழகத்தை சேர்ந்தவரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான பி. சதாசிவம் கேரள மாநில ஆளுநராக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனது நியமனத்திற்கு பின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது; கேரள மக்களின் நலன்களில் முன்னேற்றம் ஏற்படுத்த சிறப்பான முறையில் பாடுபடுவேன். தலைமை

ஆசிய விளையாட்டில் இருந்து சோம்தேவ் விலகியது சரியல்ல: டென்னிஸ் கூட்டமைப்பு அதிருப்தி

Posted: 03 Sep 2014 09:22 AM PDT

தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19-ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளன. இதற்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவின் முதல்நிலை டென்னிஸ் வீரரான சோம்தேவ் தேவ்வர்மன் போட்டியில் இருந்து விலகினார். தனது சர்வதேச தரநிலையை மேம்படுத்தும் நோக்கில் அவர் விலகியிருக்கிறார்.

ஆஸ்திரேலிய பிரதமர் நாளை இந்தியா வருகை: அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு

Posted: 03 Sep 2014 08:30 AM PDT

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இந்தியா வருகிறார். மும்பையில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்திக்கும் அபோட், அங்கிருந்து தனது பயணத்தை தொடங்குகிறார். ஆதம் கில்கிறிஸ்ட், பிரெட் லீ ஆகிய முன்னணி கிரிக்கெட் வீரர்களுடன் சச்சினை சந்திக்கிறார் டோனி அபோட். பின்னர் இரு

கேரள ஆளுநராக சதாசிவம் நியமனம்: ஜனாதிபதி உத்தரவு

Posted: 03 Sep 2014 07:05 AM PDT

மத்தியில் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட மாநில கவர்னர்கள் நீக்கப்பட்டு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய அரசு கேட்டுக்கொண்டும் சில மாநில ஆளுநர்கள் பதவி விலக மறுத்தனர். அப்படி பதவி விலக மறுத்து வந்த, கேரள மாநி ஆளுநர் ஷீலா தீட்சித்

குழந்தைகளின் பாலியல் தேர்வு குறித்து வலைத்தளம் நடத்தியவர் குர்கானில் கைது

Posted: 03 Sep 2014 06:35 AM PDT

குழந்தையில்லா தம்பதியர் ஆண் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு உதவும் பாலியல் தேர்வுக் கருவிகளைத் தனது இணையதளத்தின்மூலம் விற்பனை செய்துவந்த உரிமையாளர் ஒருவர் குர்கானில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள பிரிஸ்டல் லாரென்ஸ் சாலையில் சஞ்சய் கடானா என்பவர் ஒரு இணையதள அலுவலகத்தை நடத்தி வந்துள்ளார்.

கங்கையை சுத்தம் செய்யும் மத்திய அரசின் திட்டம்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

Posted: 03 Sep 2014 05:43 AM PDT

கங்கை நதியை சுத்தப்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் திட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. புனித நதியான கங்கையின் மாசுபாட்டை குறைத்து அதனை சுத்தம் செய்யும் பணிக்காக பல்லாயிரக்கணக்கான கோடி பணம் செலவு செய்தும் உரிய பலன் அளிக்கவில்லை. மத்தியில் பா.ஜனதா ஆட்சியமைந்ததும்

போர்நிறுத்த மீறலை பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்: ராஜ்நாத்

Posted: 03 Sep 2014 05:42 AM PDT

ராஜஸ்தானில் உள்ள போலீஸ் அகடாமி கருத்தரங்கில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- பாகிஸ்தான் தொடர்ச்சியாக போர் நிறுத்த மீறலில் ஈடுபட்டு வருகிறது. இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்தியா பொதுவாக போர் நிறுத்த மீறலில் ஈடுபடுவதில்லை. பக்கத்து நாடுகளுடன் நல்ல உறவுகளை ஏற்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். பாகிஸ்தானின் இந்த செயல் கவலை அளிக்கிறது.

பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிக்கும் பணத்திற்கு 100% வரிவிலக்கு: திட்டத்தை பிரபலப்படுத்த அறிவுறுத்தல்

Posted: 03 Sep 2014 04:58 AM PDT

பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அதிக நிதி சேர்க்கும் வகையில் 100 சதவித வரிவிலக்கு சலுகை அளிக்கப்படும் என்று பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை பிரபலப்படுத்தி மக்களை தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்க ஊக்குவிக்கும்படி அரசுத் துறைகளை பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. பிரதமர் மந்திரியின் தேசிய நிவாரண நிதிக்கு அளிக்கும் அனைத்து நன்கொடைக்கும் 100 சதவித வரிவிலக்கு

மகாராஷ்டிர மாநிலம் பிரிவதை அனுமதிக்க மாட்டோம்: சிவசேனா

Posted: 03 Sep 2014 04:20 AM PDT

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து விதர்பா பிராந்தியத்தை பிரித்து தனி மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சிவ சேனா, அதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளது. அக்கட்சி தனது அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது. "மகாராஷ்டிராவை பிரிக்க பா.ஜனதா முயற்சி

டிகே பட்டம்மாள் உள்பட 8 இசைமேதைகள் நினைவு தபால் தலை வெளியீடு

Posted: 03 Sep 2014 04:07 AM PDT

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இசைத்துறையில் சாதனைப் படைத்த 8 பேரின் தபால் தலையை இன்று வெளியிட்டார். இந்த விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இந்திய இசைத்துறையில் சாதனை படைத்த டி.கே. பட்டம்மாள், ரவிசங்கர், பிம்சென் ஜோஷி, மல்லியார்ஜுன் மன்சூர், கங்குபாய் ஹங்கல், குமார் கந்தர்வா, உஸ்தாட் விலாயத் கான் மற்றும் உஸ்தாட் அலி அக்பர் கான் ஆகியோரின் நினைவாக தபால்தலை வெளியிடப்பட்டதாக ஜனாதிபதியின் செய்தித்தொடர்பு செயலாளர் வேணு ராஜமோனி தெரிவித்தார்.

உ.பி.யில் தூங்கியவர்கள் மீது லாரி கவிழ்ந்து 10 பேர் பலி

Posted: 03 Sep 2014 03:36 AM PDT

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி கவிழ்ந்ததில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரெயில் பஜார் பகுதியில் உள்ள கும்கார் மண்டியில் சாலையோரம் பொதுமக்கள் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று காலை அந்த வழியாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியின் ஒரு டயர் திடீரென நடுரோட்டில் திறந்து இருந்த சாக்கடை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™