Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மராட்டிய தேர்தலில் 5 முனை போட்டி: பா.ஜ.க.வுடன் சரத்பவார் நெருக்கம்?

Posted: 25 Sep 2014 10:57 PM PDT

288 இடங்களை கொண்ட மராட்டிய மாநில சட்ட சபைக்கு அடுத்த மாதம் 15–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி, காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணிகளிடையே நேரடி போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 10 நாட்களாக நடந்து வந்த பேச்சு வார்த்தைகளில் சுமூகமான தீர்வு எட்டப்படாததால் இரு கூட்டணிகளும் உடைந்து விட்டன.

டெல்லியில் காங். பேரணியில் போலீஸ் தடியடி: காயம் அடைந்தவர்களை ராகுல் பார்த்தார்

Posted: 25 Sep 2014 10:48 PM PDT

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் நேற்று மத்திய அரசை எதிர்த்து 'இளைஞர்கள் ஆவேச பேரணி' என்ற பெயரில் பேரணி நடந்தது. இதில் அரியானா, பஞ்சாப், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இந்த

பா.ஜ.க. தலைவர்கள் - மராட்டிய மக்களின் எதிரிகள்: சிவசேனா ஆவேச தாக்கு

Posted: 25 Sep 2014 10:45 PM PDT

பா.ஜ.க.வுடனான 25 ஆண்டுகால கூட்டணி நேற்று முறிவடைந்த நிலையில் முதன்முதலாக அக்கட்சி மீது தாக்குதல் நடத்தியுள்ள சிவசேனா, பாரதிய ஜனதா கட்சியினரை மராட்டிய மக்களின் எதிரி என்று குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக இன்று வெளியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வில் ஒரு தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது

டீசல் விலை ரூ.2 குறைகிறது: அடுத்த வாரம் அமலுக்கு வருகிறது

Posted: 25 Sep 2014 10:19 PM PDT

மராட்டியம், அரியானா மாநிலங்களில் அடுத்த மாதம் (அக்டோபர்) 15–ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. கடந்த மாதம் சமையல் கியாஸ் விலையை உயர்த்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் சட்டசபை தேர்தல்களை மனதில் கொண்டு அந்த விலை உயர்வை மத்திய

திருப்பதி கோவிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்

Posted: 25 Sep 2014 10:06 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 4–ந்தேதி வரை 9 நாட்கள் விழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை 30–ந்தேதி இரவு நடக்கிறது. விழாவையொட்டி நேற்று கோவிலில் அங்குரார்பணம் நடந்தது. மேலும் ஏழுமலையான் சேனாதிபதியான விஸ்வக்சேனர் வீதி உலா நடந்தது.

மத்திய அரசில் சிவசேனா நீடிக்கும்: மத்திய மந்திரி ஆனந்த் கீதே பதில்

Posted: 25 Sep 2014 08:33 PM PDT

மராட்டிய சட்டசபை தேர்தலில் சிவசேனா- பா.ஜனதா கூட்டணி முறிந்ததை தொடர்ந்து மத்திய அரசில் இருந்து சிவசேனா வெளியேறும் என்று கூறப்படுகிறது. சிவசேனா கட்சியை சேர்ந்த ஆனந்த் கீதே மத்திய மந்திரி சபையில் தொழில்துறை மந்திரியாக பதவி வகிக்கிறார். கூட்டணி முறிவால் அவர் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

தூய்மை இந்தியா திட்டத்தை 2-ந்தேதி மோடி தொடங்கி வைக்கிறார்

Posted: 25 Sep 2014 08:17 PM PDT

'தூய்மை இந்தியா' இயக்கத்தை பிரதமர் நரேந்திரமோடி 2-ந் தேதி தொடங்கி வைக்கிறார். விடுமுறை தினமான அன்று அரசு ஊழியர்கள் அலுவலகம் சென்று தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களை சுத்தப்படுத்தும் விதமாக, 'தூய்மை இந்தியா' என்ற இயக்கத்தை பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதி அறிவித்தார். டெல்லி செங்கோட்டையில் சுதந்திரதின உரையாற்றுகையில் இதனை அவர் வெளியிட்டார்.

இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்கள் குவிப்பு: இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பு

Posted: 25 Sep 2014 01:58 PM PDT

காஷ்மீரின் லடாக் பகுதியில் இருந்து 300 கி.மீ.க்கு அப்பால், இமாச்சல பிரதேச எல்லையில் அமைந்துள்ள சுமர் பகுதியில், சீன ராணுவம் கடந்த 10-ந் தேதி அத்துமீறி நுழைந்தது. அங்கு தொடர்ந்து குவிக்கப்பட்டு வரும் ஏராளமான வீரர்களுக்கு, சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தினமும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை வேறு மாநிலத்தில் வழங்க சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு

Posted: 25 Sep 2014 01:52 PM PDT

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிந்துள்ள நிலையில், நாளை (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இந்த தீர்ப்பை வேறு மாநிலத்தில் வைத்து வழங்கவோ

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு: பெங்களூர் தனிக்கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு

Posted: 25 Sep 2014 12:56 PM PDT

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நாளை தனிக்கோர்ட்டில் ஆஜராவதையொட்டி பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வந்த சொத்துகுவிப்பு வழக்கில் நாளை(சனிக்கிழமை) தீர்ப்பு கூறப்படுகிறது. அன்றைய தினம் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா சுதாகரன், இளவரசி ஆகியோர் கோர்ட்டில் ஆஜராக உள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா

ஓய்வு பெற்று 2 ஆண்டுகள் வரையில் நீதிபதிகள் புதிய பதவியை ஏற்கக்கூடாது: நீதிபதி ஆர்.எம்.லோதா பேட்டி

Posted: 25 Sep 2014 12:35 PM PDT

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நாளை (சனிக்கிழமை) ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில் அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், "நீதிபதிகள் ஓய்வு பெற்ற பின்னர் குறைந்தது 2 ஆண்டுகளுக்காவது அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான எந்த

மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல்: காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் முறிந்தது

Posted: 25 Sep 2014 08:53 AM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த மாதம் 15-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், தொகுதி உடன்பாடு எட்டப்படாததால் 25 ஆண்டு கால கூட்டணியான சிவசேனா-பா.ஜனதா கூட்டணி உடைந்தது. இதேபோல் ஆளும் கூட்டணியான காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசிலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. இன்று மாலை வரை தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், 15 ஆண்டு கால கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்து போட்டியிட தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி முறிந்தது: தனித்து போட்டியிட பா.ஜ.க. முடிவு

Posted: 25 Sep 2014 06:51 AM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் 25 ஆண்டுகாலம் கூட்டணியாக இருந்த பா.ஜ.க.வும், சிவசேனாவும், அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்கள் கூட்டணியை முறித்துக்கொண்டுள்ளன. இது குறித்து பா.ஜ.க. தலைவர் தேவேந்திர பத்னாவிஸ் அளித்த பேட்டி வருமாறு

அமெரிக்க பயணத்தை தொடங்கினார் சுஷ்மா: ஏழு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை சந்தித்தார்

Posted: 25 Sep 2014 05:35 AM PDT

மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது பத்து நாள் அமெரிக்க பயணத்தை தொடங்கினார். அங்கு அவர் நேற்று பிரிட்டன் மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட ஏழு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பேசினார்.

சாரதா சிட்பண்ட் மோசடி: தொழிலதிபரின் ஜாமின் மனுவை நிராகரித்தது ஐகோர்ட்

Posted: 25 Sep 2014 05:29 AM PDT

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட சந்திர் அகர்வாலின் ஜாமின் மனுவை கொல்கத்தா உயர்நீதிமன்றம் நிராகரித்தது. சாரதா சிட்பண்ட் நிறுவன தலைவர் சுதிப்தா சென் மற்றும் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த தொழிலதிபர் சந்திர் அகர்வாலை சி.பி.ஐ. கைது செய்து விசாரணை

கற்பழிப்பு பேச்சு: டபாஸ் பால் மனு டிஸ்மிஸ்-சி.ஐ.டி விசாரணையை உறுதி செய்தது நீதிமன்றம்

Posted: 25 Sep 2014 04:51 AM PDT

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும், பிரபல வங்காள மொழி நடிகருமான டபாஸ் பால் (வயது 55) கட்சி கூட்டம் ஒன்றில் பேசும்போது, எதிர்க்கட்சிகளை தாக்கிப் பேசியதுடன், தங்கள் கட்சியினரை தாக்கினால் மார்க்சிஸ்ட் கட்சி பெண் உறுப்பினர்களை பாலியல் பலாத்காரம் செய்யும்படி தமது கட்சி இளைஞர்களிடம் கூறுவேன் என்றும் கூறியிருந்தார்.

மோடி அரசுக்கு எதிரான இளைஞர் காங்கிரஸ் போராட்டத்தில் வன்முறை: போலீஸ் தடியடி

Posted: 25 Sep 2014 04:24 AM PDT

நரேந்திர மோடி அரசுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. டெல்லியில் இன்று மத்திய அரசுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய மூத்த தலைவர் திக்விஜய் சிங், தொண்டர்களை தூண்டிவிடும் வகையில் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

அமெரிக்கா புறப்பட்டார் மோடி: ஐ.நா மாநாட்டில் பங்கேற்கிறார்-ஒபாமாவை சந்திக்கிறார்

Posted: 25 Sep 2014 04:04 AM PDT

ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுதற்காகவும், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திப்பதற்காகவும் பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று நியூயார்க் புறப்பட்டு சென்றார். ஐ.நா. சபை கூட்டத்தில் உரையாற்றும் அவர் அங்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் கொய்ராலா ஆகியோரையும் சந்தித்து பேசுகிறார்.

வாலிபரின் இதயத்தில் பாய்ந்த துப்பாக்கி குண்டு இரண்டு மாதத்திற்கு பின் வெற்றிகரமாக அகற்றப்பட்டது

Posted: 25 Sep 2014 03:35 AM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகரில் வசித்து வரும் பரத் சர்மா என்பவர் கடந்த ஜூலை 22-ந் தேதி தனது நிறுவனத்தின் வங்கி கணக்கு இருந்த வங்கியில் செக் டெபாசிட் செய்ய சென்றார். அப்போது அந்த வங்கியில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய கொள்ளை கும்பல் திடீரென வங்கிக்குள் நுழைந்தது. அந்த நேரத்தில் செக் டெபாசிட் செய்ய வந்த பரத் சர்மாவை அக்கும்பல் துப்பாக்கியால் சுட்டது. அப்போது 20 மி.மீ விட்டம் கொண்ட இரண்டு புல்லட் அவரது உடலில் பாய்ந்தது.

செயில் நிறுவனத்தின் இரும்பு தொழிற்சாலையில் தீ விபத்து: 21 பேர் காயம்

Posted: 25 Sep 2014 02:41 AM PDT

இந்திய ஸ்டீல் அதாரிட்டி நிறுவனத்தின் (செயில்) துணை நிறுவனமான இந்திய இரும்பு மற்றும் எஃகு ஆலை மேற்கு வங்க மாநிலம் பர்ன்பூரில் உள்ளது. இங்குள்ள உள்ள ஒரு யூனிட்டில் இன்று திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவெனப் பரவி அந்த யூனிட் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் 21 பேர் காயமடைந்ததாகவும்,


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™