மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கேரளாவில் பார்களை மூடும் அரசின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு
- இன்று திருவோண பண்டிகை: மாவேலி மன்னன் வேடமிட்டு ஊர்வலம் சென்ற வாலிபர்கள்
- அல்கொய்தா மிரட்டல்: திருப்பதி கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
- காங்கிரஸ் அரசு கொண்டுவந்த ஆதார் அட்டை திட்டத்தை செயல்படுத்த மோடி முடிவு
- மருத்துவ பரிசோதனை: சோனியா மீண்டும் அமெரிக்கா சென்றார்
- கிராமங்களில் அட்டகாசம் செய்த சிறுத்தைக்கு வைத்த கூண்டில் புலி சிக்கியது
- கற்பழிப்பு வழக்கு: சதானந்த கவுடா மகனை கைது செய்யாதது ஏன்? - நடிகை மைத்திரி பாய்ச்சல்
- சாரதா சிட் பண்ட் ஊழலில் மம்தா தான் பயனடைந்தார்: திரிணாமூல் எம்.பி. குற்றச்சாட்டு
- காஷ்மீரில் வெள்ளப்பெருக்கு: பலியானவர்களின் எண்ணிக்கை 150-ஐ நெருங்கியது
- ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் எபோலா நோய்த்தாக்கத்தினால் பாதிப்படைந்துள்ள வைர வர்த்தகம்
- டெல்லியில் ஆட்சி அமைக்க அழைத்தால் பரிசீலிப்போம்: ராஜ்நாத் சிங்
- அரியானாவில் பழுது நீக்கும் போது இயந்திரத்தில் சிக்கி ஜப்பான் எஞ்சினீயர் பரிதாப பலி
- குஜராத் வரும் சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்கிறார்
- உ.பி.யில் மதக்கலவரங்கள் தொடர்ந்தால் பா.ஜ.க. அங்கு ஆட்சியமைக்கும்: அமித் ஷா
- வெள்ளத்தில் மிதக்கும் காஷ்மீரை பிரதமர் இன்று பார்வையிடுகிறார்
- பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியவனை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்
- அசாமில் ஒரே கயிற்றில் பிணமாக தொங்கிய மாணவிகள் கற்பழித்துக் கொல்லப்படவில்லை
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் உமர் அப்துல்லா
- ஒரு கிலோ டீத்தூள் விலை ரூ.1 லட்சம்
- வானொலி வாயிலாக பொதுமக்களுடன் கலந்துரையாட பிரதமர் மோடி புதிய திட்டம்
| கேரளாவில் பார்களை மூடும் அரசின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு Posted: 06 Sep 2014 11:15 PM PDT கேரளாவில் கடந்த சில ஆண்டுகளில் மது அருந்து வோர் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்தது. இதனால் மாநிலத்தில் குற்றங்கள் அதிகரித்ததோடு, குடும்ப பெண்களும் பாதிக்கப்பட்டனர். இதற்கு முடிவு காண கேரள காங்கிரஸ் கூட்டணி அரசு கேரளாவில் உள்ள மதுபான பார்களை மூட முடிவு செய்தது. முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள 712 பார்களை மூட உத்தரவிட்டது. |
| இன்று திருவோண பண்டிகை: மாவேலி மன்னன் வேடமிட்டு ஊர்வலம் சென்ற வாலிபர்கள் Posted: 06 Sep 2014 11:11 PM PDT கேரள மக்களின் பாரம்பரிய விழாவான திருவோண பண்டிகை இன்று மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சாதி, மத, இன பாகுபாடின்றி அனைவரும் ஒருமைப்பாட்டுடன் கொண்டாடும் இந்த விழாவை மக்கள் புத்தாடை உடுத்தியும், கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தும் கொண்டாடினர். அதிகாலையிலேயே அனைவரின் வீடுகள் முன்பும் அத்தப்பூ கோலங்கள் அசத்தலாக போடப்பட்டிருந்தன. |
| அல்கொய்தா மிரட்டல்: திருப்பதி கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு Posted: 06 Sep 2014 10:49 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் உள்ளது. பக்தர்கள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவ கூடும் என்று உளவுத்துறை எச்சரித்து இருந்ததால் கோவிலில் பல இடங்களில் கேமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் செயல்பட்டு வரும் |
| காங்கிரஸ் அரசு கொண்டுவந்த ஆதார் அட்டை திட்டத்தை செயல்படுத்த மோடி முடிவு Posted: 06 Sep 2014 10:36 PM PDT நாடு முழுவதும் ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. வாடிக்கையாளர்களுக்கு சந்தை விலையிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கி விட்டு அதற்கான மானியதொகையை ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தையும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. ஆனால் அந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய சில மாதங்களிலேயே |
| மருத்துவ பரிசோதனை: சோனியா மீண்டும் அமெரிக்கா சென்றார் Posted: 06 Sep 2014 10:28 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த ஆண்டு அமெரிக்கா சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவரது வயிற்றில் கோளாறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்காக அமெரிக்க மருத்துவ மனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற்ற பின்பு இந்தியா திரும்பினார். அதன் பிறகு சோனியா தனது சுற்றுப் பயணங்களை குறைத்துக் கொண்டார். |
| கிராமங்களில் அட்டகாசம் செய்த சிறுத்தைக்கு வைத்த கூண்டில் புலி சிக்கியது Posted: 06 Sep 2014 09:50 PM PDT கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுப்பேட்டை தாலுகா ஓம்காரா வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியையொட்டி தேசிபுரா கிராமத்தில் கடந்த ஒரு வாரங்களாக சிறுத்தை நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. கால்நடைகளையும் அந்த சிறுத்தை கொன்று தின்றது. அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை இரும்பு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை |
| கற்பழிப்பு வழக்கு: சதானந்த கவுடா மகனை கைது செய்யாதது ஏன்? - நடிகை மைத்திரி பாய்ச்சல் Posted: 06 Sep 2014 09:39 PM PDT மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக். இவர் மீது பிரபல கன்னட நடிகை மைத்திரி கற்பழிப்பு புகார் கொடுத்தார். கார்த்திக்கும் நானும் காதலித்தோம். என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை காட்டி கார்த்திக் என்னை கற்பழித்தார். பின்னர் திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டார் என்று நடிகை மைத்திரி கடந்த மாதம் 24–ந்தேதி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கார்த்திக் மீது பாலியல் பலாத்காரம், மோசடி, குற்றத்தை மறைக்க முயன்றது ஆகிய 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு கார்த்திக்குக்கு போலீசார் 2 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் பெங்களூர் மாநகர 8–வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் கடந்த 4–ந்தேதி அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது. |
| சாரதா சிட் பண்ட் ஊழலில் மம்தா தான் பயனடைந்தார்: திரிணாமூல் எம்.பி. குற்றச்சாட்டு Posted: 06 Sep 2014 08:58 PM PDT கொல்கத்தாவை சேர்ந்த சாரதா சிட்பண்ட் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ அமைப்பு விசாரித்து வருகிறது. இந்த ஊழலில் தொர்புடையதாக கருதப்படும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான குணால் கோஷை சி.பி.ஐ கைது செய்து விசாரித்து வருகிறது. நேற்று சி.பி.ஐ அவரிடம் விசாரணை நடத்திய போது, சாரதா நிறுவனத்தில் யாராவது பலனடைந்தார் என்று கருதினால், அது மம்தாவாக மட்டுமே இருக்கமுடியும் என்று அவர் உரக்க குரலெழுப்பி கோஷம் போட்டார். |
| காஷ்மீரில் வெள்ளப்பெருக்கு: பலியானவர்களின் எண்ணிக்கை 150-ஐ நெருங்கியது Posted: 06 Sep 2014 08:32 PM PDT காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது. 10 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜீலம், தாவி உள்பட முக்கிய நதிகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. இந்த நதிகளின் கரையோரப் பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. |
| ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் எபோலா நோய்த்தாக்கத்தினால் பாதிப்படைந்துள்ள வைர வர்த்தகம் Posted: 06 Sep 2014 08:02 PM PDT ஆப்பிரிக்க நாடுகளை தற்போது அச்சுறுத்திவரும் எபோலா நோய்த்தாக்கம் அந்நாடுகளின் மிகப் பெரிய வர்த்தக ஆதாரமான வைர ஏற்றுமதியையும் பாதித்துள்ளது. உலகளாவிய உற்பத்தியில் 50 சதவிகிதம் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பெறப்படுகின்றது என்றும், அவற்றின் மதிப்பு 14 பில்லியன் டாலர்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதில் சியரா லியோன், ஐவரி கோஸ்ட், காங்கோ, கானா, கினியா, நைஜீரியா, லைபீரியா, செனெகல் ஆகிய நாடுகள் ஆண்டுதோறும் 1.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள வைரங்களை உற்பத்தி செய்கின்றன. இந்தியாவின் சூரத் நகரைச் சேர்ந்த வைர வியாபாரிகள் தங்களின் நேரடி கொள்முதல் வர்த்தகத்திற்கு இந்த நாடுகளுக்குத்தான் வந்துகொண்டிருந்தனர். எபோலா நோய்த்தாக்கத்தினால் 1400க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதைத் தொடர்ந்து இங்கு வருவதை இந்திய வியாபாரிகள் நிறுத்தியுள்ளனர். அதுபோல் இந்த நாடுகளில் இருந்து |
| டெல்லியில் ஆட்சி அமைக்க அழைத்தால் பரிசீலிப்போம்: ராஜ்நாத் சிங் Posted: 06 Sep 2014 03:27 PM PDT டெல்லியில் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கவர்னர் நஜீப் ஜங் அறிக்கை அளித்துள்ளார். அங்கு பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க அழைக்கப்படக்கூடும் என யூகங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ஜம்முவில் மழை, வெள்ள நிலைமையை நேற்று நேரில் ஆய்வு செய்ய சென்ற மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் டெல்லி நிலவரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். |
| அரியானாவில் பழுது நீக்கும் போது இயந்திரத்தில் சிக்கி ஜப்பான் எஞ்சினீயர் பரிதாப பலி Posted: 06 Sep 2014 01:38 PM PDT அரியானா மாநிலம், ரெவாரி மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையின் கனரக இயந்திரத்தை நேற்று ஜப்பானை சேர்ந்த ஒரு எஞ்சினீயரும் அவரது இந்திய உதவியாளரும் பழுது நீக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த இயந்திரம் திடீரென இயங்கத் தொடங்கியது. இதில், ஜப்பான் எஞ்சினீயரின் கை இயந்திரத்தினுள் சிக்கிக் கொண்டது. இயந்திரத்தின் சுழற்சி வேகத்துக்கு ஏற்ப சுழற்றி அடிக்கப்பட்ட கரூஜா ஃபுஜீட்டா(27) உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினார். |
| குஜராத் வரும் சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்கிறார் Posted: 06 Sep 2014 01:09 PM PDT அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகைதரும் சீன அதிபர் க்ஸீ ஜின்பிங் வரும் 17-ம் தேதி குஜராத் செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் தலைநகர் அகமதாபாத்துக்கு சென்று சீன அதிபரை வரவேற்பார் என அம்மாநில முதல் மந்திரி ஆனந்தி பென் நேற்று அறிவித்தார். நேற்று பா.ஜ.க. தொண்டர்களிடையே பேசிய ஆனந்தி பென், பிரதமர் மோடியின் பிறந்தநாளான வரும் 17-ம் தேதி குஜராத் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை தேடித்தந்து அவருக்கு பிறந்த நாள் பரிசாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். |
| உ.பி.யில் மதக்கலவரங்கள் தொடர்ந்தால் பா.ஜ.க. அங்கு ஆட்சியமைக்கும்: அமித் ஷா Posted: 06 Sep 2014 12:04 PM PDT காங்கிரஸ் ஆட்சியின் போது நாட்டில் மதக்கலவரங்கள் அதிகமாக நடந்ததாகவும், 600 க்கும் மேற்பட்ட மதக்கலவரங்கள் காங்கிரஸ் ஆட்சியில் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து, இந்தியா டி.வி-யின் ஆப் கி அதாலத் என்ற நிகழ்ச்சியில் பேசுகையில், ''உ.பி. போலீசார் மதக்கலவரங்களை உருவாக்கும் வகையில் பாரபட்சத்துடன் நடந்து கொள்கின்றனர். மகாராஷ்டிரமும், ஹரியானாவும் தேர்தலை சந்திக்க போகிறது. ஆனால் அங்கு எந்த மதக்கலவரங்களும் |
| வெள்ளத்தில் மிதக்கும் காஷ்மீரை பிரதமர் இன்று பார்வையிடுகிறார் Posted: 06 Sep 2014 11:58 AM PDT காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல் வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது. ஜீலம், தாவி உள்பட முக்கிய நதிகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி வருகிறது. இந்த நதிகளின் கரையோரப் பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கடந்த ஆண்டு உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் போல் காஷ்மீரில் கடும்சேதம் ஏற்பட்டுள்ளது. மலைப் பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஸ்ரீநகரின் ஒரு பகுதியிலும் வெள்ளம் புகுந்தது. இதனால் ஸ்ரீநகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை |
| பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியவனை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர் Posted: 06 Sep 2014 11:39 AM PDT பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக ஊடுருவியவனை இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் எல்லைக்கோட்டுப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் முள்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை பெய்த அடர்மழையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பாகிஸ்தானில் இருந்து ஒருவன் |
| அசாமில் ஒரே கயிற்றில் பிணமாக தொங்கிய மாணவிகள் கற்பழித்துக் கொல்லப்படவில்லை Posted: 06 Sep 2014 11:20 AM PDT அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் ஒரே கயிற்றில் 2 மாணவிகள் பிணமாக தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த புதன்கிழமை காணாமல் போன அந்த மாணவிகள், வங்காளதேச எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் மரத்தில் பிணமாக தொங்கியதை அவர்களின் உறவினர் ஒருவர் கண்டுபிடித்தார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கயிற்றின் இரு முனைகளிலும் தொங்கிய சடலங்களை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். |
| வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் உமர் அப்துல்லா Posted: 06 Sep 2014 11:16 AM PDT ஜம்முவில் இன்று மதியம் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட உமர் அப்துல்லா அங்கு நடைபெற்று வரும் மீட்பு பணிகளை பார்வையிட்டார். பின்பு, பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்ட மக்களுக்காக தயார்நிலையில் உள்ள இடங்களை கவனித்தார். வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு முறையாக உணவு பொட்டலங்கள், போர்வைகள் மற்றும் தேவையான பொருட்களை வழங்கப்படுகிறதா என்பதை சோதனையிட்டார். |
| ஒரு கிலோ டீத்தூள் விலை ரூ.1 லட்சம் Posted: 06 Sep 2014 10:43 AM PDT இந்தியாவின் மிக விலையுயர்ந்த தேயிலை தயாரிப்புகளில் ஒன்றாக டார்ஜிலிங் மகாய்பாரி டீ எஸ்டேட் தேர்வாகியுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ஒரு கிலோ தேயிலை வெளிநாடுகளில் 1850 டாலர்களுக்கு மேல் விற்பனையாகிறது. இந்திய பண மதிப்பில் இது ரூ.1.12 லட்சமாகும். |
| வானொலி வாயிலாக பொதுமக்களுடன் கலந்துரையாட பிரதமர் மோடி புதிய திட்டம் Posted: 06 Sep 2014 10:43 AM PDT ஆசிரியர் தினமான நேற்று தலைநகர் டெல்லியில் இருந்தபடியே நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவ- மாணவியருடன் பிரதமர் நரேந்திர மோடி சுமார் ஒன்றரை மணி நேரம் வீடியோ காண்பிரன்ஸிங் முறையில் கலந்துரையாடினார். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை ஆட்சித்துறையிலும் நுழைத்து சாதனை படைக்கும் ஆர்வமும், நிர்வாகத் துறையில் பொதுமக்களின் கருத்துகளும் கலந்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் கொண்ட பிரதமர் மோடி, அடுத்தகட்டமாக பொதுமக்களுடன் வானொலி மூலமாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |