Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடக்கவில்லை?: பரபரப்பு தகவல்கள்

Posted: 09 Sep 2014 10:57 PM PDT

சுவாமி நித்யானந்தா மீது, அவரிடம் சீடராக இருந்த ஆர்த்திராவ் என்பவர் பெங்களூர் பிடதி போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு புகார் கூறினார். அந்த குற்றச்சாட்டை நித்யானந்தா மறுத்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையை கர்நாடகா மாநில சி.ஐ.டி. போலீசார் நடத்தினார்கள். இந்த நிலையில் உண்மையை அறிய சுவாமி நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில்

புகார் செய்த பொது மக்களிடம் குறைகள் தீர்க்கப்பட்டதா என்று போன் செய்து பேசும் முதல்–மந்திரி

Posted: 09 Sep 2014 10:43 PM PDT

மத்திய பிரதேச மாநிலத்தில் பொது மக்களின் குறைகளை புகார்களாக பெற்று அதை உடனடியாக தீர்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 1–ந்தேதி முதல்வரின் ஹெல்ப்லைன் 181 திட்டம் தொடங்கப்பட்டது. இந்த எண்ணில் பொது மக்கள் செய்யும் புகார் அதற்காக அமைக்கப்பட்டுள்ள கால் சென்டரில் முதலில் பதிவாகிறது. அங்கிருந்து தேவைக்கு ஏற்றபடி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்த அழைப்பு மாற்றி விடப்படுகிறது.

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Posted: 09 Sep 2014 10:14 PM PDT

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லை பகுதியில் மர்ம மனிதர்கள் சிலர் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 3 தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குள் இருந்து அந்த பகுதிக்கு ஊடுருவி இருப்பது தெரியவந்தது. இன்று அதிகாலை அந்த 3 தீவிரவாதிகளையும் பிடிப்பதற்கு

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்திய வாலிபர்

Posted: 09 Sep 2014 10:05 PM PDT

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து திருவனந்தபுரம் வந்த ஏர்இந்தியா விமானத்தில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை தனியாக அழைத்து சென்று அவரது உடமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் சிக்கவில்லை. ஆனாலும் அவர் மீது

தெலுங்கானாவை அவமதித்தால் குழிதோண்டி புதைத்து விடுவோம்: சந்திரசேகரராவ் மிரட்டல்

Posted: 09 Sep 2014 10:02 PM PDT

தெலுங்கானா மாநில சட்டசபையின் நடவடிக்கைகளை 2 டி.வி. சேனல்கள் விமர்சனம் செய்தன. சட்டசபையில் மின் விளக்குகள் கூட சரியில்லை என்று கூறி அதையும் விரிவாக ஒளிபரப்பு செய்தன. இதனால் தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகர ராவ் கடுமையாக கோபம் அடைந்தார். இது தவிர அந்த சேனல்களில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளிலும் தெலுங்கானா ஆட்சி குறித்து விமர்சனங்கள் செய்யப்பட்டன.

திருப்பதி கோவில் சன்னதி முழுவதும் தங்கத்தகடு பொருத்தப்படுகிறது: ஆந்திர மந்திரி தகவல்

Posted: 09 Sep 2014 09:45 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவில் கர்ப்பகிரக சன்னதி முழுவதும் தங்க தகடுகள் பொருத்த கடந்த 2008–ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்கு அனந்த சுவர்ணமயம் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. மறைந்த முதல்–மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஜெகன்மோகன் ரெட்டி மீதான சொத்து குவிப்பு வழக்கில் 11–வது குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted: 09 Sep 2014 09:40 PM PDT

ஆந்திர முன்னாள் முதல்–மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவர் 6 மாதங்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தனது மீதான சொத்து குவிப்பு வழக்குகளை கோர்ட்டில் சந்தித்து வருகிறார். இந்த வழக்கில் இதுவரை 10 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்து குவிப்பு வழக்கில் 11–வது குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஒய்.எஸ்.ராஜ சே

திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அறிவித்தது, பீகார் அரசு

Posted: 09 Sep 2014 01:38 PM PDT

காட்டில் வாழும் ஐந்தறிவு படைத்த கொடிய மிருகங்கள் கூட தங்களின் இனத்தை சேர்ந்த இதர மிருகங்களை காயப்படுத்தவோ, ஒதுக்கி வைக்கவோ விரும்புவதில்லை. ஆனால், ஆறறிவு கொண்ட மனிதர்கள் என்று தற்பெருமை பேசி வரும் மனித குலத்தை சேர்ந்த நாம் மட்டும் தான் நம்மில் ஒரு பிரிவினரை குறைந்தபட்சம் 100 அடையாள பெயர்களால் அழைத்து, தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரையும் குத்தி மனித சமுதாயத்தை விட்டு காலகாலமாக விலக்கியே வைத்துள்ளோம். பூர்வ ஜென்ம விதிப்பலனாகவும், 'க்ரோமோசோம்'களின் குளறுபடியினால் விளைந்த (எதிர்) வினைப்பயனாகவும் மூன்றாம் பாலின மனிதப்பிறவிகளாக இந்த பூமியில் பிறந்து விட்ட திருநங்கையர்கள்

கடனுக்கு உத்தரவாதம் கொடுப்பவர்களுக்கு கிடுக்குப்பிடி: ரிசர்வ் வங்கி அதிரடி

Posted: 09 Sep 2014 01:28 PM PDT

வங்கிகளில் கடனை வாங்கி விட்டு திருப்பிச் செலுத்த தவறுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். இப்போது கடன் வாங்குகிறவர்களுக்கு, உத்தரவாதம் தருகிறவர்களுக்கும் சிக்கல் வருகிறது. கடன் வாங்கியவர்கள், கடனை திருப்பி செலுத்தாதபோது, அதற்கு உத்தரவாதம் தந்தவர்கள் திருப்பி செலுத்த வேண்டும். அவர்கள் அதற்கான பண வசதி இருந்தும், செலுத்தாதபோது, அவர்களும் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்களாக கருதப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சாரதா நிதி நிறுவன மோசடி: கைதான மேற்கு வங்க முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 09 Sep 2014 01:21 PM PDT

மேற்கு வங்காளத்தை மையமாக வைத்து சாரதா சிட்பண்ட் என்ற நிதி நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் சுதிப்தா சென். இவரும், இவரின் நிறுவனத்தை சேர்ந்தவர்களும், முதலீட்டாளர்களிம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. சலுகைககள், பரிசு பொருட்கள் அளிப்பதாக, பொதுமக்களிடம் சீட்டு பணம் வசூல் செய்து, மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த சாரதா நிறுவன தலைவர் சுதிப்தா சென் காஷ்மீரில் கைது செய்யப்பட்டு, கொல்கத்தா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவரது சொத்துக்களும் முடக்கப்பட்டன.

பெங்களூருக்கு அருகே உள்ள ஆசிரமம் திருவண்ணாமலைக்கு மாற்றம்: நித்யானந்தா முடிவு

Posted: 09 Sep 2014 01:03 PM PDT

பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா தியான பீடம் அமைந்து உள்ளது. அங்கு நித்யானந்தா சாமியார் தங்கி இருந்து ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரிடம் சீடராக இருந்த ஆர்த்திராவ் என்ற பெண் பெங்களூர் பிடதி போலீஸ் நிலையத்தில் நித்யானந்தா மீது கற்பழிப்பு புகார் கூறினார். இந்த வழக்கு சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது.

ரூ.1600 கோடி வாராக்கடன்: விஜய் மல்லையாவுக்கு பாரத ஸ்டேட் வங்கி நோட்டீஸ்

Posted: 09 Sep 2014 12:59 PM PDT

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனம் 17 வங்கிகளின் கூட்டமைப்பிற்கு மொத்தம் 4022 கோடி கடன் செலுத்த வேண்டியுள்ளது. இதில் யுனைடெட் வங்கிக்கு வரவேண்டிய கடன் தொகை 350 கோடியாகும். அதுமட்டுமின்றி, புதிய விமானங்களைப் பெறுவதற்கான முன்தொகையாகவும் இந்த வங்கி 60 கோடி அளித்துள்ளது. இந்த வாராக் கடன்களைத் திரும்பப்பெறும் முயற்சியாக வங்கிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தங்களிடம் இந்தக் கடன் தொகைக்கு இணையாக வைக்கப்பட்ட யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட், மங்களூர் கெமிகல்ஸ் மற்றும் பெர்டிலைசர்ஸ் லிமிடெட்

அரியானா மாநில சட்டசபை தேர்தல்: 43 வேட்பாளர்கள் கொண்ட பா.ஜ.க.வின் முதல் பட்டியல் வெளியீடு

Posted: 09 Sep 2014 12:22 PM PDT

90 உறுப்பினர்களை கொண்ட அரியானா மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் 27-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், புதிய சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தலுக்கான தேதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடும் 43 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை டெல்லியில் உள்ள பா.ஜ.க.தலைமை நேற்றிரவு அறிவித்துள்ளது. தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில், பிரதமர் மோடி முன்னிலையில், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி உள்ளிட்டவர்களை கொண்ட மத்திய தேர்தல் குழு இந்த வேட்பாளர்களை தேர்வு செய்தது.

புதிய 10 ரூபாய் நோட்டுக்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

Posted: 09 Sep 2014 11:23 AM PDT

2005 மகாத்மா காந்தி வரிசையில் புதிய 10 ரூபாய் நோட்டுக்களை விரைவில் வெளியிட உள்ளதாக பாரத ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. இந்த புதிய 10 ரூபாய் நோட்டின் பின்புறம் 2014 என ஆண்டு அச்சிடப்பட்டிருக்கும். ரூபாய் நோட்டின் நம்பரிங் பேனலில் 'எம்' என்ற ஆங்கில எழுத்துடன் கூடிய கீழ், மேல் வரிசை எண்கள் அச்சிடப்படும்.

நதிக்கரைகளில் கட்டிடங்கள் கட்ட தடை விதிக்க வேண்டும்: வி.கே.சிங்

Posted: 09 Sep 2014 11:17 AM PDT

மத்திய மந்திரியும், முன்னாள் ராணுவ படைத் தளபதியுமான வி.கே.சிங், நதிக்கரைகளில் கட்டிடங்களை கட்ட தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், 'ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டுள்ள வெள்ளம் போன்ற பேரழிவுகளை எதிர்கொள்ள மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டுமல்ல. இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு இயற்கை பேரழிவுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பயிற்சிகளை வழங்க வேண்டும்.

நூற்றாண்டு வரலாறு காணாத பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரில் நிவாரணப் பணிகள் தீவிரம்

Posted: 09 Sep 2014 10:48 AM PDT

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மிக பலத்த மழை பெய்து வருவதால் கடந்த 109 ஆண்டுகால வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலத்த தொடர் மழை காரணமாக காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் முற்றிலும் அழிந்த நிலைக்கு மாறியுள்ளன. பல ஊர்கள் தண்ணீருக்குள் மூழ்கி உள்ளன. மழை வெள்ளத்துக்கு சுமார் 200 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், காஷ்மீரில் இன்றும் மேக மூட்டம் காணப்பட்டது.

ஸ்ரீநகரில் சிக்கித்தவிக்கும் சுற்றுலாப் பயணிகளை இலவசமாக அழைத்து வருகிறது ஏர் இந்தியா

Posted: 09 Sep 2014 07:52 AM PDT

வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சுமார் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீநகரில் இருந்து சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக அழைத்து வர ஏர் இந்தியா

7 ஆண்டுகளுக்குப் பிறகு டீசல் விலை குறைகிறது

Posted: 09 Sep 2014 07:34 AM PDT

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள கணிசமான இழப்பை ஈடுசெய்யும் வகையில் மாதந்தோறும் டீசல் விலையை 50 காசுகள் வரை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஜம்முவில் அமெரிக்க துப்பாக்கி, கள்ளநோட்டுடன் அசாம் வாலிபர் கைது

Posted: 09 Sep 2014 05:35 AM PDT

ஜம்மு- காஷ்மீரில் அமெரிக் துப்பாக்கி மற்றும் கள்ளநோட்டுடன் அசாம் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு- பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் சம்பா சவுக் பகுதியில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுசில் போலீசார் திடீரென சோதனை செய்தனர். அப்போது அங்கே இருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

டெல்லி கண்காட்சிக்காக பாகிஸ்தான் தொழிலதிபர்களுக்கு 400 விசா வழங்கிய இந்திய தூதரகம்

Posted: 09 Sep 2014 05:26 AM PDT

டெல்லியில் நடைபெற உள்ள இரண்டாவது 'லைப்ஸ்டைல் பாகிஸ்தான்' கண்காட்சியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானின் 350 முதல் 400 வர்த்தகர்களுக்கு இந்தியா விசா வழங்கியுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 350 முதல் 400 விசா விண்ணப்பங்கள் வந்ததாகவும்,


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™