மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- என்கவுன்டர் பொது நல வழக்கில் உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு
- சீனப்படைகள் அத்துமீறல்: இந்திய எல்லையில் ராணுவம் குவிப்பு
- வடகிழக்கு மாநிலங்களில் பலத்த மழை-வெள்ளம்: 10 பேர் பலி
- கண்ணிவெடி தாக்குதல்: சந்திரபாபு நாயுடுவை கொல்ல முயன்ற வழக்கில் 25–ந்தேதி தீர்ப்பு
- 25-ந்தேதி மோடி அமெரிக்கா பயணம்: 2 லட்சம் மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டம்
- இன்று ஆழ்வார் திருமஞ்சனம்: திருப்பதி கோவிலில் 6 மணி நேரம் தரிசனம் ரத்து
- கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: சமூக பணிகளில் ஈடுபட தெண்டுல்கர் விருப்பம்
- சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் முன்னாள் மத்திய மந்திரி ஆஜர்
- ஜெயலலிதா வருகையையொட்டி பெங்களூரில் பாதுகாப்பு குறித்து கமிஷனர் ஆலோசனை
- மும்பை-அகமதாபாத் இடையே மணிக்கு 300 கி.மி. வேக புல்லட் ரெயில்: ஜப்பான் மந்திரி ஆய்வு நடத்தினார்
- சீன படைகளின் ஊடுருவலால் பதற்றம் எதிரொலி: ராணுவ தளபதியின் வெளிநாட்டு பயணம் ரத்து
- சீன அதிபர் வருகையின் போது வடகிழக்கு பணியாளர்களுக்கு தடை பிறப்பிக்கவில்லை: ஓட்டல் நிர்வாகம் அறிவிப்பு
- கங்கையை சுத்தப்படுத்த 18 ஆண்டுகள் ஆகும்: மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தகவல்
- கொச்சி விமான நிலையத்தில் ரோபட் பாதுகாப்பு அறிமுகம்
- ரூ. 1 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி: தெலுங்கானா முதல் மந்திரி உத்தரவு
- காஷ்மீர் வெள்ளத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டமைப்புகள் சேதம்: அரசு தகவல்
- ரெயில்வே வாரிய உறுப்பினர் நியமனம் குறித்து சிங்லா என்னிடம் பேசவில்லை: பன்சால் சாட்சியம்
- தோற்கக்கூடிய தொகுதிகளை கூட கொடுங்கள்-அதே சமயம் கேட்ட எண்ணிக்கையை தாருங்கள்: பா.ஜ.க
- தேநீரை தேசிய பானமாக அறிவிக்க மோடிக்கு வலியுறுத்தல்
- தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் தலைவர்கள் நாளை சந்திப்பு: பிரபுல் பட்டேல்
| என்கவுன்டர் பொது நல வழக்கில் உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு Posted: 22 Sep 2014 10:59 PM PDT டெல்லி உச்சநீதிமன்றத்தில் கடந்த 1999-ம் ஆண்டு போலீசார் நடத்தும் என்கவுன்டருக்கு எதிராக ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ''அனைத்து என்கவுன்டர் வழக்குகளிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியம். |
| சீனப்படைகள் அத்துமீறல்: இந்திய எல்லையில் ராணுவம் குவிப்பு Posted: 22 Sep 2014 10:53 PM PDT காஷ்மீர் மாநிலம் லடாக் பிராந்தியத்தில் உள்ள சுமர் என்ற பகுதி இந்தியா – சீனா எல்லையில் உள்ளது. இந்த பகுதியை ஆக்கிரமித்து தங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என சீனா கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி அத்துமீறல் செய்து வருகிறது. கடந்த 2012–ம் ஆண்டு சுமர் பகுதிக்குள் சீனாவின் மக்கள் போர்ப்படை ராணுவம் கடும் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்தது. அவர்களுடன் இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சு நடத்தி பின் வாங்க செய்தனர். இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சுமர் பகுதி மீது குறி வைத்து சீன ராணுவம் ஊடுருவத் தொடங்கியது. கடந்த 10–ந்தேதியன்று |
| வடகிழக்கு மாநிலங்களில் பலத்த மழை-வெள்ளம்: 10 பேர் பலி Posted: 22 Sep 2014 10:23 PM PDT வடகிழக்கு மாநிலங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் அதிகபட்ச மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அசாம், மேகாலயா, மாநிலங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அசாமில் கோல்பரா, துப்ரி, லக்கிம்பூர், கம்ரப் மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் சுமார் 100 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்த கிராமங்களில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான |
| கண்ணிவெடி தாக்குதல்: சந்திரபாபு நாயுடுவை கொல்ல முயன்ற வழக்கில் 25–ந்தேதி தீர்ப்பு Posted: 22 Sep 2014 10:22 PM PDT ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை கடந்த 2003–ம் ஆண்டு கண்ணி வெடி தாக்குதல் மூலம் கொல்ல முயற்சி நடந்தது. திருப்பதி கோவில் பிரமோற்சவ கருடசேவை நிகழ்ச்சியில் பங்கேற்று மலை பாதை வழியாக காரில் திரும்பியபோது கண்ணி வெடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரது கார் தலைகுப்புற கவிழ்ந்தது. குண்டு துளைக்காத கார் என்பதால் சந்திரபாபு நாயுடு லேசான காயத்துடன் உயிர் தப்பினார். |
| 25-ந்தேதி மோடி அமெரிக்கா பயணம்: 2 லட்சம் மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டம் Posted: 22 Sep 2014 10:11 PM PDT பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வருகிற 26–ந்தேதி புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டிருந்தார். தற்போது அவரது பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திட்டமிட்டதற்கு ஒரு நாளைக்கு முன்பே அதாவது 25–ந்தேதியே பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்ல உள்ளார். ''ஏர் இந்தியா ஒன்'' எனும் சிறப்பு விமானத்தில் செல்லும் பிரதமர் மோடி ஜெர்மனி தலைநகர் பிராங்பர்ட் நகரில் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு பயணத்தை தொடருவார். |
| இன்று ஆழ்வார் திருமஞ்சனம்: திருப்பதி கோவிலில் 6 மணி நேரம் தரிசனம் ரத்து Posted: 22 Sep 2014 09:50 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 26–ந் தேதி வருடாந்திர பிரமோற்சவம் நடக்கிறது. அதற்கு முன்னதாக கோவிலை தூய்மைபடுத்தும் வகையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடப்பது வழக்கம். அதன்படி இன்று காலை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. ஏழுமலையான் கருவறை முதல் ராஜகோபுரம் வரை சுத்தம் செய்யப்பட்டது. |
| கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: சமூக பணிகளில் ஈடுபட தெண்டுல்கர் விருப்பம் Posted: 22 Sep 2014 04:56 PM PDT நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பல்வேறு சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். குறிப்பாக தொண்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அவர் அதிக ஆர்வம் காட்டுகிறார். நேற்று முன் தினம் புனேயில் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நிதி திரட்டும் |
| சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் முன்னாள் மத்திய மந்திரி ஆஜர் Posted: 22 Sep 2014 04:32 PM PDT ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரெயில்வே மந்திரியாக பதவி வகித்தவர் பவன்குமார் பன்சால். இவருடைய பதவி காலத்தில், அவரது உறவினர் விஜய் சிங்லா ரெயில்வே மின்சாரத்துறை உறுப்பினர் பதவியை மகேஷ்குமார் என்பவருக்கு வாங்கித் தருவதற்கு ரூ.10 கோடி லஞ்சம் |
| ஜெயலலிதா வருகையையொட்டி பெங்களூரில் பாதுகாப்பு குறித்து கமிஷனர் ஆலோசனை Posted: 22 Sep 2014 04:24 PM PDT பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில் 27-ந் தேதி தீர்ப்பு கூறப்படுகிறது. இதையொட்டி அன்று தனிக்கோர்ட்டில் தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஆஜராகிறார்கள். இதற்காக ஜெயலலிதா 27-ந் தேதி பெங்களூர் வருகிறார். ஜெயலலிதா பெங்களூர் வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் |
| மும்பை-அகமதாபாத் இடையே மணிக்கு 300 கி.மி. வேக புல்லட் ரெயில்: ஜப்பான் மந்திரி ஆய்வு நடத்தினார் Posted: 22 Sep 2014 12:04 PM PDT மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் இருந்து குஜராத் தலைநகர் அகமதாபாத் வரை மணிக்கு 300 கி.மி. வேக புல்லட் ரெயில் சேவையை அறிமுகப்படுத்த இந்திய ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. ஜப்பான் நாட்டின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்படும் இந்த புல்லட் ரெயில் வழித்தடம் தொடர்பான திட்டங்கள் பற்றி ஆய்வு செய்வதற்காக ஜப்பான் நாட்டின் உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி அகிஹிரோ ஒஹ்டா புது டெல்லியில் ரெயில்வே மந்திரி சதானந்தா கவுடாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். |
| சீன படைகளின் ஊடுருவலால் பதற்றம் எதிரொலி: ராணுவ தளபதியின் வெளிநாட்டு பயணம் ரத்து Posted: 22 Sep 2014 11:55 AM PDT சீன ராணுவத்தினர், காஷ்மீர் மாநிலம் லடாக் பிராந்தியத்தில் உள்ள சுமர் பகுதிக்குள் அத்துமீறி ஊடுருவி உள்ளனர். அங்கேயே முகாமிட்டுள்ளனர். அவர்களின் நோக்கத்தை முறியடிக்க இந்திய படைகளும் அங்கேயே நிலைகொண்டுள்ளன. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக், |
| சீன அதிபர் வருகையின் போது வடகிழக்கு பணியாளர்களுக்கு தடை பிறப்பிக்கவில்லை: ஓட்டல் நிர்வாகம் அறிவிப்பு Posted: 22 Sep 2014 11:19 AM PDT சீன அதிபரின் குஜராத் வருகையின் போது, அகமதாபாத் உள்ள ஓட்டலில் திபெத்தை சேர்ந்த போரட்டாக்காரர்கள் ஊழியர்கள் என்ற போர்வையில் உள்ளே வந்து போரட்டத்தில் ஈடுபடலாம் என தகவல்கள் வெளியானதால் ஓட்டலில் பணியாற்றும் வடகிழக்கு பணியாளர்கள் மற்றும் ஓட்டல் எதிரே உள்ள "மால்" ஒன்றின் வடகிழக்கு பணியாளர்களை அன்றைய தினம் பணிக்கு வர வேண்டாம் என கேட்டுகொண்டதாக தகவல் வெளியானது. |
| கங்கையை சுத்தப்படுத்த 18 ஆண்டுகள் ஆகும்: மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தகவல் Posted: 22 Sep 2014 10:38 AM PDT பாராளுமன்ற தேர்தலின் போது, நரேந்திர மோடி மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் தங்களது கனவு திட்டமான கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றும் என்று உறுதி அளித்தார். பின்னர், மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைத்த பின்பு இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. |
| கொச்சி விமான நிலையத்தில் ரோபட் பாதுகாப்பு அறிமுகம் Posted: 22 Sep 2014 10:18 AM PDT தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.12 கோடி செலவில் ரோபோடிக் செக்யூரிட்டி சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உயர்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த ரோபட்கள் வெடிகுண்டுகளை செயலிக்கச் செய்தல் மற்றும் அவற்றை கையாளுதல், |
| ரூ. 1 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி: தெலுங்கானா முதல் மந்திரி உத்தரவு Posted: 22 Sep 2014 10:12 AM PDT ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலை சந்தித்த தெலுங்கானா ராஷ்ட்டரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவ், 'எங்கள் கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால், வறட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு விவசாயிகள் வாங்கியிருந்த வங்கிக் கடன் ரத்து செய்யப்படும்' என்று வாக்குறுதி அளித்திருந்தார். அந்த தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கானா ராஷ்ட்டரிய சமிதி, தெலுங்கானாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது தொடர்பாக மந்திரிசபையுடன் ஆலோசித்த சந்திரசேகர் ராவ், விவசாயக் கடன்களை தள்ளுபடி |
| காஷ்மீர் வெள்ளத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டமைப்புகள் சேதம்: அரசு தகவல் Posted: 22 Sep 2014 07:08 AM PDT ஜம்மு- காஷ்மீரில் பெய்த கடும் மழை காரணமாக அங்குள்ள ஜீலம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. காஷ்மீரை சூறையாடிய இந்த வெள்ளத்திற்கு 277 பேர் பலியாகியுள்ளனர். காஷ்மீர் மாநில அரசு குறித்த நேரத்தில் நிவாரணப் பொருட்களை குறித்த நேரத்திற்குள் வழங்கவில்லை என்று காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் 2 வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். இதற்கு இன்று காஷ்மீர் அரசு பதில் |
| ரெயில்வே வாரிய உறுப்பினர் நியமனம் குறித்து சிங்லா என்னிடம் பேசவில்லை: பன்சால் சாட்சியம் Posted: 22 Sep 2014 06:59 AM PDT ரெயில்வே வாரிய உறுப்பினர் நியமனம் தொடர்பாக சிங்லா தன்னிடம் பேசவில்லை என்று பவன் குமார் பன்சால் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். ரெயில்வே வாரிய உறுப்பினர் பதவி வாங்கி கொடுப்பதற்காக ரூ.10 கோடி லஞ்சம் கேட்ட வழக்கில் முன்னாள் ரெயில்வே மந்திரி பவன் குமார் |
| தோற்கக்கூடிய தொகுதிகளை கூட கொடுங்கள்-அதே சமயம் கேட்ட எண்ணிக்கையை தாருங்கள்: பா.ஜ.க Posted: 22 Sep 2014 06:38 AM PDT மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 15-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில் அங்கு தொகுதி பங்கீடு தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கடும் இழுபறி நீடிக்கிறது. பா.ஜ.க-சிவசேனா இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்னும் தொகுதி உடன்பாடு முடிவடைந்தபாடில்லை. |
| தேநீரை தேசிய பானமாக அறிவிக்க மோடிக்கு வலியுறுத்தல் Posted: 22 Sep 2014 06:15 AM PDT இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு விகிப்பதாகவும், உடல்நலத்திற்கு நன்மை விளைவிப்பதுமான தேநீரை தேசிய பானமாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தேயிலை உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு பெங்கால் தேயிலை தயாரிப்பாளர் நல சங்கம் மூலம் வடக்கு பெங்கால் மற்றும் பீகாரில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் இந்த கோரிக்கைக் கடிதம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. |
| தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் தலைவர்கள் நாளை சந்திப்பு: பிரபுல் பட்டேல் Posted: 22 Sep 2014 05:35 AM PDT மகாராஷ்டிரா சட்டசபைக்கு வருகிற 15-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய பின்பும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கிடையே தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையவில்லை. நாளைக்குள் (இன்று) தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பற்றி முடிவு செய்யாவிடில் 288 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிடும் என்று மகாராஷ்டிர மாநில முதல் மந்திரி பிரித்விராஜ் சவான் கூறியிருந்தார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |