Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ராஜஸ்தான், ஒடிசாவில் 50 சதவீத கிராமங்களில் மின்சாரம் கிடையாது

Posted: 19 Sep 2014 11:05 PM PDT

ராஜஸ்தான், ஒடிசா மாநிலத்தில் 50 சதவீத கிராமங்களில் மின்சாரம் இல்லை என தெரியவந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் மின்சார தேவை அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகள் தொழிற்கூடங்கள் தவிர வீடுகள் தோறும் மின்சாதன பொருட்கள், பெருகி விட்டன. செல்போன் சார்ஜ் செய்வதில் இருந்து, மிக்ஸி, கிரைண்டர், டி.வி., வாஷிங்மெஷின்,

அண்ணா கேன்டீன் திட்டம் ஆந்திராவுக்கு பொருந்தாது: தெலுங்கு தேசம் எம்எல்ஏ

Posted: 19 Sep 2014 10:34 PM PDT

தமிழ்நாட்டில் அம்மா உணவகம் போல் ஆந்திராவில் என்.டி.ராமராவ் பெயரில் அண்ணா கேன்டீன் அமைக்க ஆந்திர அரசு ஏற்பாடு செய்து வருகிறது. முதல் கட்டமாக விசாகப்பட்டணத்தில் 15 இடங்களிலும், குண்டூரில் 10 இடங்களிலும், அனந்தபுரம், திருப்பதியில் தலா 5 இடங்களிலும் அக்டோபர் 2–ந்தேதி முதல் அண்ணா கேன்டீன் தொடங்கப்படும் என்றும் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார்.

4–வது முறையாக வெளியிட்டார்: சந்திரபாபு நாயுடு சொத்து மதிப்பு ரூ.39 கோடி

Posted: 19 Sep 2014 10:08 PM PDT

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த சில ஆண்டுகளாக தனது சொத்து மதிப்பை வெளியிட்டு வருகிறார். 4–வது ஆண்டாக தனது குடும்ப சொத்தை அவர் வெளியிட்டார். இதன்படி தனது குடும்பத்தின் நிகர சொத்து ரூ.38.92 கோடி என அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு ரூ.41.70 கோடியாக இருந்தது என்றும் இந்த ஆண்டு ரூ.2 கோடி வரை குறைந்து உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி நியமனத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Posted: 19 Sep 2014 08:13 PM PDT

சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, வரும் 27–ந் தேதி ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை நீதிபதியாக சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி எச்.எல். தத்து நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மத்திய உளவு அமைப்பின் ('ரா') முன்னாள் அதிகாரியும், வக்கீலுமான நிஷா பிரியா பாட்டியா ஒரு

அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: சுப்ரீம் கோர்ட்டு

Posted: 19 Sep 2014 05:20 PM PDT

நாடு முழுவதும் உள்ள சில மருத்துவ கல்லூரிகளில், சில குறைபாடுகள் காரணமாக, அவற்றின் அங்கீகாரத்தை இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) புதுப்பிக்கவில்லை. இதனால், அக்கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த முடியவில்லை. இதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி, அந்த கல்லூரிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய முஸ்லிம்கள் இந்தியாவுக்காகவே வாழ்வார்கள்: பிரதமர் மோடி

Posted: 19 Sep 2014 05:16 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, ஒரு வார கால அரசு முறைப்பயணமாக அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார். அவர் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசுவதுடன், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை 2 தினங்கள் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சு நடத்த உள்ளார். இந்த நிலையில் ஒரு அபூர்வ நிகழ்வாக, அவர் அமெரிக்காவின் சி.என்.என். டி.வி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் அக்.10-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Posted: 19 Sep 2014 05:07 PM PDT

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கூடுதலாக ஐ, ஜே, கே என்று 3 கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைத்தது. இதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையாக அனுமதி பெறவில்லை என்று கூறி, சென்னை மாநகராட்சி 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது.

ஊழல் வழக்கில் கைதான ஐ.ஏ.எஸ். தம்பதியரின் 110 ஏக்கர் நிலம், சொகுசு பங்களா பறிமுதல்

Posted: 19 Sep 2014 04:58 PM PDT

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் அரவிந்த்ஜோஷி. இவரது மனைவி டினூ ஜோஷி இருவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆவார்கள். அரவிந்த் ஜோஷி சுமார் 32 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்தார். கணவன்-மனைவி இருவரும் மத்திய அரசுப் பணியில் முக்கிய பொறுப்புகள் வகித்தனர். பிரதமர் அலுவலகத்தில் துணை செயலாளராக 1988- ஆண்டு ஜூலை மாதம் முதல் 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை டினூ ஜோஷி பணியாற்றியுள்ளார். அரவிந்த் ஜோஷி கார்கில் போரின் போது

சீனாவுக்கு வருமாறு மோடிக்கு அதிபர் ஜின்பிங் அழைப்பு: நாடு திரும்பினார் சீன அதிபர்

Posted: 19 Sep 2014 04:01 PM PDT

சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முதல் நாள் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்ற ஜின்பிங் ஆமதாபாத் நகரில் அவரைச் சந்தித்து பேசினார். அப்போது குஜராத்தின் 3 முக்கிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பின்னர், நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் மோடியும் ஜின்பிங்கும் மீண்டும் சந்தித்துப் பேசினர். அப்போது இருதரப்பு எல்லைப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பது உள்பட பல்வேறு விஷயங்களை இரு தலைவர்களும்

பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து: மானிய குழு நேரில் ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 19 Sep 2014 03:53 PM PDT

தரமற்ற நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில், 41 பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக மானியக்குழு நேரில் ஆய்வு நடத்தி வருகிற 23-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்தியாவில் உள்ள 127 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், பலவற்றில் தரமற்ற கல்வி வழங்கப்பட்டு வருவதாக கூறி விப்லப் சர்மா என்பவர் கடந்த

சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை: தாக்குதலில் போலீஸ்காரர் பலி

Posted: 19 Sep 2014 03:27 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பாஸ்டர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக ஜக்தால்பூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான சிறப்புப்படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஹரகோடர் பகுதியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட போது அங்குள்ள காட்டுப்பகுதியில் ஏராளமான மாவோயிஸ்டுகள் மறைந்திருந்ததை கண்டுபிடித்தனர்.

15 நாள் பச்சிளம் குழந்தையை ரூ. 20 ஆயிரத்துக்கு விற்க முயன்ற தாய் கைது

Posted: 19 Sep 2014 03:23 PM PDT

பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை 20 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசி விற்க முயன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் உள்ள பன்சிலால்பேட் பகுதியை சேர்ந்த வெங்கடலட்சுமி என்ற பெண் தனது பிறந்த குழந்தையை விற்பதற்காக மாதவி என்பவரிடம் புரோக்கர்கள் மூலமாக பேரம் பேசி வருவதாக காந்தி நகர் போலீசாருக்கு தகவல் வந்தது.

வதோதராவில் கிராமவாசியை கவ்விக் கொன்ற முதலையை ஊர் மக்கள் அடித்துக் கொன்றனர்

Posted: 19 Sep 2014 02:52 PM PDT

த்தரப்பிரதேசம் மாநிலம், வதோதரா மாவட்டத்தில் விஷ்வமிர்தி ஆற்றங்கரையோரம் நேற்று கால்நடைகளை மேய்க்கச் சென்ற ஷிஹோர் கிராமத்தைச் சேர்ந்த ரைஜிபாய்(55) எனபவரை கரையோரம் மறைந்திருந்த ஒரு முதலை கவ்விக் கொண்டு, தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. அவரது கதறலை கேட்டு ஓடிவந்த சிலர், சுமார் 11 அடி நீளமுள்ள அந்த முதலையின் பிடியில் இருந்து ரைஜிபாயை விடுவிக்க போராடினர். கல் மற்றும் கம்புகளால் தாக்கியும் தனது தாடையில் அடக்கிக் கொண்ட அவரை சுமார் 3 மணி நேரம் வரை முதலை விடுவிக்கவே இல்லை.

சீன அதிபர் பெயரை தவறாக வாசித்த செய்தி வாசிப்பாளர் பணி நீக்கம்: தூர்தர்ஷன் அதிரடி

Posted: 19 Sep 2014 02:40 PM PDT

சீன அதிபர் ஜின் பிங் 3 நாள் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இது தொடர்பான செய்தியை அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் ஒரு நாள் மாலையில் ஒளிபரப்பியபோது, செய்தி வாசிப்பாளர் சீன அதிபர் பெயரின் முதல் இரு ஆங்கில எழுத்துக்களான 'எக்ஸ்ஐ' என்பதை 'ஸி' என உச்சரிப்பதற்கு பதிலாக 'எக்ஸ்ஐ' என்ற எழுத்துக்களை '11' என்னும் ரோமானிய எண்ணைக் குறிக்கும் எழுத்துக்கள் என கருதி 'லெவன் ஜின்பிங்' என வாசித்து விட்டார்.

மராட்டிய சட்டசபை தேர்தல்: பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி தொடருமா? உத்தவ் தாக்கரே மகன் பேட்டி

Posted: 19 Sep 2014 02:29 PM PDT

288 இடங்களை கொண்ட மராட்டிய மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 15-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.– சிவசேனா கூட்டணிக்கும் காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. மராட்டியத்தில் பா.ஜ.க.– சிவசேனா கூட்டணி கடந்த 25 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க. அதிக இடங்களிலும் சட்டசபை தேர்தலின்போது சிவசேனா அதிக இடங்களிலும் போட்டியிடுவது வழக்கமாக உள்ளது. இந்த தேர்தலிலும் அதேப்போன்ற தொகுதிப் பங்கீட்டை மேற்கொள்ள சிவசேனா நினைத்தது.

ஐதராபாத்: சொத்து தகராறில் பெண்ணைக் குத்திக் கொன்ற தாய், சகோதரிகள் கைது

Posted: 19 Sep 2014 01:58 PM PDT

ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் சொத்துப் பிரிவினை தொடர்பாக குடும்பத்தாருக்குள் ஏற்பட்ட தகராறில் 28 வயது பெண் குத்திக் கொல்லப்பட்டார். ஐதராபாத்தின் யூசுப்குடா பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண்வாரிசுகளுக்கிடையில் சொத்துக்களை பிரித்துக் கொள்வது தொடர்பாக நேற்று தொடங்கிய வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. இதில் சுவேதா(28) என்பவரை அவரது தாயார் கத்தியால் குத்தினார். உயிருக்கு பயந்து கூச்சலிட்டபடியே வெளியே ஒடிய அவரை விரட்டிச் சென்ற தாயாரும், இரு சகோதரிகளும்

கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கக் கோரி 16 வயது சிறுமி அரியானா கோர்ட்டில் மனு

Posted: 19 Sep 2014 01:24 PM PDT

அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா மாவட்டத்தை சேர்ந்த தங்களின் 16 வயது மகளை காணவில்லை என அவளது பெற்றோர் கடந்த ஏப்ரல் மாதம் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் பெண்ணை தேடிவந்த போலீசார், கடந்த ஜூலை மாதம் அவளை கண்டுபிடித்து, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். திருமண ஆசை காட்டி அந்த சிறுமியை வீட்டை விட்டு அழைத்துச் சென்று, மறைவான இடத்தில் தங்கவைத்து கற்பழித்ததாக சுர்ஜித் குமார் என்ற வாலிபர் உள்பட 7 பேர் மீது அம்பாலா மாவட்டத்தின் பிம்லேஷ் தன்வரில் உள்ள விரைவு நீதி மன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அமைதியாக வங்கிக்குள் நுழைந்து ரூ.40 லட்சத்தை அள்ளிச் சென்ற மர்ம மனிதன்

Posted: 19 Sep 2014 12:07 PM PDT

ஒடிசா மாநிலத்தில் உள்ள வங்கிக்குள் நுழைந்து, பணியாளர்களுக்கு எந்த தொந்தரவும் தராமல், கத்தியின்றி, ரத்தமின்றி 40 லட்சம் ரூபாயை அள்ளிச் சென்ற மர்ம மனிதனை போலீசார் தேடி வருகின்றனர். ஒடிசாவின் தொழில்நகரமான ரூர்கேலாவின் பரபரப்பு நிறைந்த மையப்பகுதியில் சிண்டிகேட் வங்கியின் கிளை ஒன்று இயங்கி வருகின்றது. நேற்று பிற்பகல் இந்த வங்கிக்குள் நுழைந்த ஒருவன், வங்கியின் காசாளர் அறையை மெல்ல நோட்டமிட்டான்.

பீகார்: குளங்களில் மூழ்கி 7 குழந்தைகள் பரிதாப பலி

Posted: 19 Sep 2014 11:29 AM PDT

பீகார் மாநிலத்தில் ஒரே நாளில் 7 குழந்தைகள் நீர் நிலைகளில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதாமாரி மாவட்டத்தின் கச்வாச்சி குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது சேற்றில் சிக்கிக் கொண்ட ரஃபத் காத்தூன்(16), நிக்கத் காத்தூன்(16), குர்ஷிதா காத்தூன்(13), ராணி காத்தூன்(10) ஆகியோர் நீரில் மூழ்கி பலியாகினர். கோபால்கஞ்ச் மாவட்டத்தின் மிர்ஸாபூர் கிராமத்தில்

காஷ்மீருக்கு வெள்ள நிவாரண நிதி அளிப்பதை தடுப்பதா?: கெஜ்ரிவால் ஆவேசம்

Posted: 19 Sep 2014 11:13 AM PDT

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கடும் இன்னலுக்குள்ளாகி இருக்கும் காஷ்மீர் மக்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் ஏராளமான தொகையினை நிதியாக வழங்கி வருகின்றன. இது தவிர, தனியார் நிறுவனங்களும், அரசு ஊழியர்களும், எம்.பி. மற்றும் சில மாநிலங்களின் எம்.எல்.ஏக்களும் தனிப்பட்ட முறையில் நிதியுதவி செய்து வருகின்றனர். அவ்வகையில், டெல்லி சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 27 எம்.எல்.ஏ.க்களும் தங்களது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து தலா 20 லட்சம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™