Tamil Star |
- ஹாலிவுட் பாடகிக்கு ரஹ்மான் அழைப்பு!
- ரகசிய திருமணமா? விஷால் பதில்
- ஹீரோவானார் வில்லன் கிஷோர்!
- ரொனால்டோவுக்கு விருது!
- ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா இங்கிலாந்து பலப்பரீட்சை!
- எத்தனை பேர்டா இப்படி கிளம்பியிருக்கீங்க!
- அறுவடை செய்யப்படும் Tulips மலர்களின் கண்கொள்ளாக் காட்சி!
- மிருகங்களின் அசத்தலான மிருகவேட்டை….
- எழுச்சிக் குறைபாட்டுக்கு இந்த உணவுகள் கை கொடுக்கும்!
- “தக்காளி” திருவிழா – ஸ்பெயினில் நடைபெற்ற சிகப்புக் கொண்டாட்டம்!
- “ஸ்வர்மிஸ்” ரோபோ – நாசாவின் புத்தம்புதிய முயற்சி!
- அமைச்சர் வாசுதேவ அமெரிக்காவில் “இலங்கையின் நல்லிணக்கம்” பற்றி உரையாற்றுகிறார்!
- இலங்கையின் சமூக பதற்றம் ஐ.நாவின் கவனத்தில் உள்ளது!
- கடலில் காணாமல் போன தமிழக மீனவர்களை தேடும் பணி 4வது நாளாகவும் தொடர்கிறது!
- போர்க்குற்ற விசாரணையில் ஐ.நா. குழு தமது இயலுமையை காட்டவேண்டும்! செய்தியாளர்கள் கருத்து
- சாலட்ரவுன் மகாநாட்டு படத்திற்கு புத்துணர்வு அளிக்கும் கனடிய முதல்வர்கள்!
- இளவரசி டயானாவின் திருமண கேக் துண்டின் விலை 1,375-U.S. டாலர்கள்!!
- கொலம்பியா நெடுஞ்சாலையில் பாரிய பேரூந்து விபத்து!
| ஹாலிவுட் பாடகிக்கு ரஹ்மான் அழைப்பு! Posted: 30 Aug 2014 02:43 AM PDT
தனது இசையில் மயங்கிய ஹாலிவுட் இளம் பாடகியுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கோலிவுட், பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் படங்களுக்கும் இசை அமைக்கிறார். அவரது இசையில் மயங்கினார் ஹாலிவுட் மற்றும் பாப் பாடகி டைலர் ஸ்விப்ட். இவர் 4 முறை கிராமி விருது பெற்றதுடன் இளசுகளை கவரும் குரல் வளத்தால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கிறார். ரஹ்மானின் இசை பற்றி ஸ்விப்ட் கூறும்போது, 'இந்திய இசையை நான் பெரிதும் நேசிக்கிறேன். குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மயங்கி இருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றார்.இதற்கு பதில் அளித்துள்ள ரஹ்மான்,'மிஸ் டைலர் ஸ்விப்ட்வுடன் இணைந்து நான் பணியாற்ற வேண்டும் என்று என் மகள் ரஹீமாவும் ஆசைப்படுகிறார். அதற்காக நீங்கள் இந்தியா வருவதை எதிர்பார்த்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் இவர்கள் இணைந்து வழங்கும் இசையை கேட்க முடியும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 30 Aug 2014 02:38 AM PDT
ரகசிய திருமணம் செய்தேனா என்றதற்கு பதில் அளித்தார் விஷால்.ஹரி இயக்கத்தில் 'பூஜை படத்தில் நடித்து வருகிறார் விஷால். அவர் தனது 37வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். பின்னர் அவர் கூறியதாவது: தாமிரபரணி படத்துக்கு பிறகு ஹரி இயக்கத்தில் பூஜை படத்தில் நடிக்கிறேன். தீபாவளி தினத்தில் இப்படம் திரைக்கு வரும். கையில் பணம் இல்லாமல்தான் விஷால் பிலிம் பேக்டரியை தொடங்கினேன். தற்போது கொஞ்சம் பணம் வைத்துக்கொண்டு நல்ல படங்களை தேர்வு செய்து எடுக்கிறேன். அதுபோல் வி மியூசிக் என்ற ஆடியோ நிறுவனமும் தொடங்கி இருக்கிறேன். திருட்டு விசிடியை தனி ஆளாக நின்று ஒழிக்க முடியாது. திரையுலகினர் அனைவரும் ஒன்று சேர வேண்டும். ரஜினி, விஜய் போன்றவர்களும் குரல் கொடுக்க வேண்டும். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் விரைவில் கட்ட வேண்டும். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கில்லை. அடுத்து சுந்தர்.சியின் ஆம்பள, சுசீந்திரன் இயக்கும் படம் மற்றும் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளேன். பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் இப்போதைக்கு திருமணம் கிடையாது. ஆனால் சிலர் எனக்கு ரகசிய திருமணம் ஆகிவிட்டது. குழந்தை பள்ளிக்கு செல்கிறது என்று எழுதுகிறார்கள். அதெல்லாம் பொய். இவ்வாறு விஷால் கூறினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 30 Aug 2014 02:32 AM PDT
ஜி.ஆர் கோல்டு பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பூரணி தயாரிக்கும் படம், 'காதலி காணவில்லை'. கிஷோர், ஹர்திகா, சோப்ராஜ், பத்மா வசந்தி ஆகியோருடன் காமெடி அரசியல்வாதியாக ஜி.ஆர் நடிக்கிறார். ஒளிப்பதிவு, தயாள் ஓஷோ. இசை, தேவா. பாடல்கள்: இளையகம்பன், அண்ணாமலை. இயக்கம்: ரவி&ராஜா. இப்படம் குறித்து அவர்கள் கூறியதாவது:ரத்தமும், சதையுமாகப் பார்க்கும் ஒரு தாதா மனதின் இன்னொரு பக்கத்தை காட்டும் கதை. தேவா இசையமைப்பில் இளையகம்பன் எழுதிய 'நான்தான்டா சென்னை கிங்' என்ற பாடலை ஸ்ரீகாந்த் தேவா பாடியுள்ளார். கதையைக் கேட்ட கிஷோர், இதுவரை நடித்த வில்லன் வேடங்களில் இருந்து மாறுபட்ட கேரக்டர் என்பதால், உடனே ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 30 Aug 2014 02:20 AM PDT
மொனாக்கோவின் மான்டி கார்லோ நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த வண்ணமயமான விழாவில், ரொனால்டோ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். விருதுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் ரொனால்டோ. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா இங்கிலாந்து பலப்பரீட்சை! Posted: 30 Aug 2014 02:02 AM PDT
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி, நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.00 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டியில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 31 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. பிரிஸ்டல் மைதானத்தில் நடக்க இருந்த முதல் போட்டி கனமழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், அடுத்து கார்டிப் சோபியா கார்டனில் நடந்த 2வது போட்டியில் இந்திய அணி 133 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அசத்தியது. ரெய்னா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கேப்டன் டோனி, ரோகித், ரகானே ஆகியோரும் கணிசமாக ரன் குவித்தனர். பந்துவீச்சில் ஜடேஜா, ஷமி, அஷ்வின் ஜொலித்தனர். இந்தியா 10 என முன்னிலை வகிக்க, 3வது ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் இன்று நடக்கிறது. தொடக்க வீரர் ரோகித் ஷர்மாவின் வலது கை நடுவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், எஞ்சியுள்ள ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளார். அம்பாதி ராயுடு, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிப்பது, ரகானேவை தொடக்க வீரராக களமிறக்குவது குறித்தும் இந்திய அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.கடந்த 2011ல் இங்கிலாந்து சென்று விளையாடியபோதும் ரோகித் காயம் காரணமாக விலக நேரிட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது போட்டியில் கிடைத்த அபார வெற்றியால் உற்சாகமாக உள்ள இந்திய அணி வீரர்கள், முன்னணியை அதிகரிக்கும் முனைப்புடன் களமிறங்குகின்றனர். அதே சமயம், பதிலடி கொடுத்து 11 என சமநிலை ஏற்படுத்த இங்கிலாந்து அணியும் கடுமையாக முயற்சிக்கும் என்பதால், இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியா: டோனி (கேப்டன்), ஷிகர் தவான், முரளி விஜய், விராத் கோஹ்லி, அஜிங்க்யா ரகானே, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன், ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, கரண் ஷர்மா, மோகித் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, தவால் குல்கர்னி, புவனேஷ்வர் குமார். இங்கிலாந்து: அலஸ்டர் குக் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், கேரி பேலன்ஸ், இயான் பெல், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் பின், ஹாரி கர்னி, அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், இயான் மார்கன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் டிரெட்வெல், கிறிஸ் வோக்ஸ்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| எத்தனை பேர்டா இப்படி கிளம்பியிருக்கீங்க! Posted: 30 Aug 2014 01:56 AM PDT |
| அறுவடை செய்யப்படும் Tulips மலர்களின் கண்கொள்ளாக் காட்சி! Posted: 30 Aug 2014 01:16 AM PDT |
| மிருகங்களின் அசத்தலான மிருகவேட்டை…. Posted: 30 Aug 2014 01:12 AM PDT |
| எழுச்சிக் குறைபாட்டுக்கு இந்த உணவுகள் கை கொடுக்கும்! Posted: 30 Aug 2014 12:27 AM PDT
ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு என்பது வயதான ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான குறைபாடே. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுவது தான் இந்த குறைபாடுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. 40 வயதை கடந்த ஆண்களுக்கு தான் இது அதிகமாக வரக்கூடும். சமீபத்திய புள்ளி விவரங்கள் படி, 45 வயதை கடந்த ஆண்களில் 5 சதவீத பேர்களுக்கும், 60 வயதை கடந்த ஆண்களில் 20-25 சதவீத பேர்களுக்கும் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு உள்ளது. இந்த ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டினைக் குணப்படுத்த சில மருத்துவ வழிமுறைகளும் இருக்க தான் செய்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதை பற்றி பேசுகையில், இயற்கை வழிமுறையே இதனை சரி செய்வதற்கான சிறந்த வழியாகும். ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை வைத்தியங்களைப் பற்றி தான் பார்க்க போகிறோம். ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை சிகிச்சையில் நம் கவனத்தை செலுத்தியுள்ள நாம் கீழ் கூறியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். ஆண்மை குறைவை நிவர்த்தி செய்யும் உணவுகள், ஆண்மை குறைவிற்கான இயற்கை சிகிச்சைகள், விறைப்பு செயல் பிழற்சியை குணப்படுத்தும் உணவுகள் மற்றும் விறைப்பு செயல் பிழற்சிக்கான இயற்கை சிகிச்சைகள். பாலியல் உறுப்பில் போதிய அளவிலான இரத்த ஓட்டம் இல்லாதது ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இரத்த ஓட்டத்தை சீராக்கி அழுத்தத்தை அதிகரிக்க பூண்டு உதவும். இதனால் பாலியல் உறுப்பு தூண்டப்படும். மேலும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பூண்டில் பல கனிமங்கள் வளமையாக உள்ளது. மாட்டிறைச்சியில் ஜிங்க் வளமையாக உள்ளது. இந்த ஜிங்க் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான முதன்மையான இயற்கை பொருளாக விளங்குகிறது. இது விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது. ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டினை குணப்படுத்தும் சில சக்தி வாய்ந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும். மாதுளை பழம் என்பது பல காரணங்களால் சக்தி வாய்ந்த உணவாக விளங்குகிறது. கனிமங்கள் மற்றும் அதிமுக்கிய வைட்டமின்கள் வளமையாக உள்ள இந்த பழம் இயற்கையான முறையில் ஆண்மை குறைவை நீக்கும். ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கலவை வளமையாக உள்ள மாதுளை பழம் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை போதிய அளவில் அதிகரிக்கும். தினமும் ஒரு வாழைப்பழம் உட்கொண்டால போதும், ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு மெல்ல நீங்கும். வாழைப்பழத்தில் பிரோம்லைன் என்ற முக்கிய என்ஸைம் உள்ளது. இது உடலில் உள்ள பாலியல் ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது போக வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் பி1 வளமையாக உள்ளதால், அது ஆண்களின் ஆற்றலை ஊக்குவித்து, பாலியல் மனநிலையை தூண்டி விடும். இப்போது நம் கவனத்தை சற்று திருப்பி, ஆண்மை குறைவிற்கான இயற்கை சிகிக்ச்சைகள் பக்கமாக மாற்றுவோம். உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியமாகும். உங்கள் உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்பு இல்லையென்றால், தானாகவே விந்தணு உற்பத்தி மேம்படும். அதனால் இளைத்த எடையில் ஆரோக்கியமாக விளங்கிடுங்கள். மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கவும் மெட்டபாலிச வீதத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது. ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டை குணப்படுத்த உதவும் சிறந்த வழிகளில் யோகாவும் ஒன்றாகும். இது உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி பாலியல் உறுப்புகளை ஊக்குவிக்கும். வால்நட்களை போல் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டை இயற்கையான வழியில் குணப்படுத்தும் ஆச்சரியமளிக்கும் மற்றொரு உணவு தான் பாதாம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| “தக்காளி” திருவிழா – ஸ்பெயினில் நடைபெற்ற சிகப்புக் கொண்டாட்டம்! Posted: 30 Aug 2014 12:15 AM PDT
ஸ்பெயின் நாட்டின் பியுனோல் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவின் தக்காளி சண்டை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 22,000 பேர் பங்கு கொண்டனர். இவர்களில் பலர் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்தனர். இவர்கள் ஒருவர் மீது ஒருவர் வீசி எறிவதற்காக 125 டன் பழுத்த தக்காளிகள் இன்று அங்கு வரவழைக்கப்பட்டிருந்தன. சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த ஆதரவைப் பெற்ற இந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்ட தக்காளிகளால் தெரு முழுவதும் தக்காளிக் கூழினால் சிவந்து காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற வெளிநாட்டுப் பயணிகளிடம் இரண்டாவது ஆண்டாக தலைக்கு பத்து யூரோக்கள் வசூலிக்கப்பட்டது. அதாவதி இந்திய மதிப்பில் சுமார் 800 ரூபாய் ஆகும். பல வாரங்களுக்கு முன்பாகவே இந்த முன்பதிவு நிறைவு பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நகரத்தைச் சேர்ந்த 20,000 மக்கள் தங்களின் நகர நிர்வாகத்துக்கு இருந்த 5.5 மில்லியன் யூரோ கடனை அடைப்பதற்காக சென்ற ஆண்டு இத்தகைய ஏற்பாட்டைத் தொடங்கினர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| “ஸ்வர்மிஸ்” ரோபோ – நாசாவின் புத்தம்புதிய முயற்சி! Posted: 30 Aug 2014 12:11 AM PDT
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வேற்று கிரக மனிதர்கள் குறித்த ஆராய்ச்சிக்காக "ரோபோ" படைகளை தயாரிக்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பல்வேறு கிரகங்களை ஆய்வு செய்ய, செயற்கைக் கோள்களை அனுப்பி உள்ளது. மேலும், விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவி பல ஆய்வுகளையும் நடத்தி வருகிறது. இந்நிலையில், இம்மாத துவக்கத்தில், நிலவின் மேற்பரப்பில் வேற்று கிரகவாசிகளின் நடமாட்டம் குறித்த புகைப்படத்தை நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்வர்மிஸ் ரோபோ: இதையடுத்து, மற்ற கிரகங்களில் வாழும் வேற்று கிரகவாசிகளை கண்டறிய, "ஸ்வர்மிஸ்" என்றழைக்கப்படும் சிறிய வகை ரோபோக்களை தயாரித்துள்ளது. தற்போது நான்கு ரோபோக்களைத் தயாரித்துள்ள நாசா அவற்றில் கேமரா, வைபை ஆகிய வசதிகளையும் உருவாக்கி உள்ளது. மேலும், இவற்றின் மூலமாக வேற்று கிரகங்களின் தண்ணீர், மனிதர்கள் வாழ்நிலை சூழ்நிலைகளையும் அறிந்து கொள்ளலாம் என்று நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமைச்சர் வாசுதேவ அமெரிக்காவில் “இலங்கையின் நல்லிணக்கம்” பற்றி உரையாற்றுகிறார்! Posted: 30 Aug 2014 12:06 AM PDT
இலங்கையின் தேசிய மொழிகள்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அமெரிக்க ஹூஸ்டன், டெக்சாஸில் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் உரைநிகழ்த்தவுள்ளார். ஏதிர்வரும் ஒக்டோபர் 8 ம் திகதியன்று ஹூஸ்டனில் உள்ள ஆசிய சமூக மண்டபத்தில் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இலங்கையில் `காயங்களை ஆற்றுதலும் நல்லிணக்கமும்" என்ற தலைப்பில் இந்த உரை அமையவுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பில் அமைச்சர் மொழிப்பிரச்சினையை தீர்க்கும் வகையிலான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறார். எனினும் அவரின் முனைப்புக்களுக்கு உரிய அரசாங்க ஆதரவு கிடைப்பதில்லை என்று குறை ஏற்பட்டுள்ளது. இந்த உரையை அடுத்து அமெரிக்க தமிழர்களின் மத்தியில் சிறப்பு பெற்றுள்ள ஹூஸ்டனில் வசிக்கும் குடிவரவு சட்டத்தரணி ஜோர்ஜ் ஆர் வில்லியின் ஒழுங்கமைப்பில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதில் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிகழ்வு திறந்தநிலை நிகழ்வாக இடம்பெறுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையின் சமூக பதற்றம் ஐ.நாவின் கவனத்தில் உள்ளது! Posted: 30 Aug 2014 12:00 AM PDT
இந்தநிலையில் சமாதானத்துக்கான பாலங்களை கட்டியெழுப்ப "சீரிய சமூக இணையம்" போன்ற அமைப்புக்கள் முக்கிய பங்கை வகிப்பதாக ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்தோனேசியா பாலியல் சீரிய சமூக இணையத்தின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதன்போது உரையாற்றிய நாடுகளின் இணையம் அமைப்பின் உயர் பிரதிநிதி நாஸிர் அப்துல்லாசிஸ் அல் நாஸர், தமது அமைப்பு வன்முறை தடுப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அபிவிருத்திக்கு முனைப்புக்காட்டுவதாக குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பேன் கீ மூனும் பங்கேற்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| கடலில் காணாமல் போன தமிழக மீனவர்களை தேடும் பணி 4வது நாளாகவும் தொடர்கிறது! Posted: 29 Aug 2014 11:58 PM PDT
இலங்கையின் நெடுந்தீவுக்கு அருகில் தமது விசைப்படகு மூழ்கியநிலையில் நடுக்கடலில் காணாமல் போயுள்ள மூன்று தமிழக மீனவர்களையும் தேடும் பணிகள் நான்காவது நாளாக இடம்பெற்று வருகின்றன. இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற நான்கு பேரே காணாமல் போயுள்ளனர். இந்த விசைப்படகில் ஜோன்கென்னடி (50) டேனியல் (20) வில்சன் (19) எஸ்ரோன் (19) ஆகிய நான்கு மீனவர்கள் சம்பவத்தின்போது இருந்துள்ளனர். எனினும் ஜோன் கென்னடி என்பவர் உள்ளுர் மீனவர்களால் மீட்கப்பட்டார். நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் ஜோன் கென்னடி என்ற மீனவரை மீட்புக்குழு மீனவர்கள் மீட்டு பாம்பனுக்கு கொண்டு வந்தனர். ஏனைய மூன்று மீனவர்களை தேடும் பணியில் 30 மீனவர்கள் அடங்கிய மீட்பு குழு மூன்று படகுகளில் நான்காவது நாளாகவும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதேவேளை மீட்பு நடவடிக்கைகளில் கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மீட்பு பணிகளில் ஈடுபடவில்லை என்பதை கண்டித்து கடந்த புதன்கிழமை பாம்பன் பாலம் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடற்படையின் ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டிருந்தால் மூன்று மீனவர்களையும் காப்பாற்றி இருக்க முடியும். இந்தநிலையில் காணாமல் போயுள்ள மூன்று மீனவர்களுக்கும் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பு என்று மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| போர்க்குற்ற விசாரணையில் ஐ.நா. குழு தமது இயலுமையை காட்டவேண்டும்! செய்தியாளர்கள் கருத்து Posted: 29 Aug 2014 11:56 PM PDT
இலங்கையில் இறுதிப் போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றமை தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ஐக்கிய நாடுகள் விசாரணையாளர்கள் தமது விசாரணைகளை திறந்தநிலையில் மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களின் கருத்துக்களை தாங்கி இணையத்தளம் ஒன்றில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரின்போது போர்க்குற்றங்களில் இலங்கை அரச படையினரும் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் இதனை முன்னர் முழுமையாக மறுத்த இலங்கை அரசாங்கம் தற்போது மக்களின் உயிரிழப்புகளை குறைத்துக்காட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்களுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று இலங்கை அரசாங்கம் கூறியதை அடுத்தே ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்கள் இலங்கைக்கு வெளியில் இருந்து தமது விசாரணைகளை முன்னெடுக்கின்றனர். இதன்போது இலங்கையில் உள்ள போர்க்குற்ற சாட்சிகளை வீடியோ கொன்பரன்ஸ் மற்றும் ஸ்கைப் போன்ற தொழில்நுட்பங்களின் ஊடாக அவர்கள் சாட்சியமளிக்க செய்கின்றனர். இது இலங்கை மக்கள் மத்தியில் உண்மையான விசாரணைத் தோற்றத்தை ஏற்படுத்தாது என்றே செய்தியாளர்களின் கருத்தை தாங்கி வரும் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. எனவே ஐக்கிய நாடுகள் சபை தமக்கிருக்கும் அதிகாரத்தை கொண்டு இலங்கை விசாரணையில் தமது இயலுமையை காட்டவேண்டும் என்று இணைத்தளத்தில் கோரப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சாலட்ரவுன் மகாநாட்டு படத்திற்கு புத்துணர்வு அளிக்கும் கனடிய முதல்வர்கள்! Posted: 29 Aug 2014 11:42 PM PDT
கனடிய முதல்வர்கள் கனடிய வரலாற்றின் ஒரு முக்கிய தருணத்தை வியாழக்கிழமை அவர்களது வருடாந்த கோடைகால சந்திப்பில் புதுப்பித்துள்ளர். கனடாவின் கூட்டமைப்பு பயணம் தொடங்கப்பட்ட 1864 செப்ரம்பர் மாதம் 6-ந்திகதிய சாலட்ரவுன் மகாநாட்டு பிரதிநிதிகளுடன் கனடிய தற்போதைய முதல்வர்கள் சாலட்ரவுன் அரசு மாளிகையின் படிகளில் நின்று போஸ் கொடுத்துள்ளனர். இரண்டு படங்களிலும் உள்ள முக்கியமான குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் என்னவெனில் கனடாவின் இரண்டு பெண் முதல்வர்களுமே. ஒன்ராறியோவின் கத்தலின் வின் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் கிறிஸ்டி கிளாக். 150-வருடங்களிற்கு முன்னர் இப் படம் முதல் எடுக்கப்பட்ட போது பெண் அரசியல் வாதிகள் என்ற கேள்விக்கே இடமில்லை என கூறப்பட்டுள்ளது. புதிய பதிப்பில் பெண்களை காண்பது அற்புதமாக இருக்கின்றதென கருத்து தெரிவிக்கப் பட்டுள்ளது. அசல் படத்தில் Sir John A. Macdonald அவர்களின் படமும் சேர்க்கப் பட்டுள்ளது. அவர் கனடாவின் முதல் பிரதம மந்திரியாவதற்கு முன்னர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இளவரசி டயானாவின் திருமண கேக் துண்டின் விலை 1,375-U.S. டாலர்கள்!! Posted: 29 Aug 2014 11:40 PM PDT
இந்த கேக் இன்னமும் அதன் அசல் வெள்ளை மற்றும் சில்வர் நிற காட்சிப் பெட்டியில் உள்ளது. இது வியாழக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ்சிலுள்ள நேட்டி. சான்டர்ஸ் ஏலத்தில் ஆன்லைனில் விற்பனையாகி உள்ளது. அந்த பெட்டிக்குள் ஒரு கார்ட்டில் ; "With best wishes from Their Royal Highnesses, the Prince & Princess of Wales." என குறிப்பிடப்பட்டுள்ளது. அசல் பெட்டியில் அசல் மெழுகு தாளில் சுற்றப்பட்ட நிலையில் இருந்தாலும் அதை சாப்பிட முயல்வது ஒரு நல்ல சிறந்த யோசனை அல்ல என ஏல வீட்டு பேச்சாளர் சாம் ஹெலர் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| கொலம்பியா நெடுஞ்சாலையில் பாரிய பேரூந்து விபத்து! Posted: 29 Aug 2014 11:37 PM PDT
இவர்களில் 7-பேர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 6-பேர்கள் மோசமான நிலையில் உள்ளனர். எவ்வாறான காயங்கள், காயமடைந்தவர்களின் வயதுகள் அல்லது ஆண்களா பெண்களா என்ற விபரங்கள், காயமடைந்தவர்களில் வாகன சாரதியும் அடங்கியுள்ளாரா போன்ற விபரங்களை இதுவரை தெரியவரவில்லை என கூறப்படுகின்றது . இப் பேரூந்து சீன சுற்றுலா நிறுவனமான Coquihalla வினால் இயக்கப்படும் ஒன்றாகும். Merritt, B.C என்ற இடத்தில் இருந்து 30-கிலோ மீற்றர்கள் தொலைவில் இவ்விபத்து நடந்துள்ளது. வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 55-மக்கள் வரையில் வேறு வேறு வைத்தியசாலைகளிற்கு அனுப்பப் பட்டுள்ளனர். விபத்து ஏன் நடந்தது என்பது ஒரு மர்மமாக உள்ளதென கூறப்படுகின்றது. விபத்து நடந்ததை டிரக்டர் டிரெய்லர் ஒன்றின் டாஷ்போர்ட்டில் இருந்த கமராவில் பதிவாகியுள்ளதை ஆர்சிஎம்பியினர் பார்வையிட்டதில் விபத்திற்கு வேகம் ஒரு காரணமாக இல்லை என தோன்றுவதாக தெரிவித்துள்ளனர். இயந்திர பிரச்சனைகள் அல்லது மனிதக்கோளாறு காரணமாக இருக்கலாம் என ஆர்சிஎம்பி சார்ஜன் பிறயன் நைட்டிங்கேல் கூறியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

















