மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 100–ல் இருந்து 107 சதவீதமாக உயருகிறது
- பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்று கேரளா வருகை
- ஆந்திரா மறுசீரமைப்புக்கு ரூ.4 1/2 லட்சம் கோடி தேவை: மத்தியக் குழு பரிந்துரை
- மீண்டும் சமாஜ்வாடி கட்சிக்கு திரும்பிய அமர்சிங்குக்கு எம்.பி.பதவி: முலாயம்சிங் முடிவு
- நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் 5 பேர் உடல் நசுங்கி சாவு
- ஆபாசப் படங்களை காட்டி, பலாத்காரம்: 13 வயது சிறுமி தற்கொலை முயற்சி - ஆசிரியர் கைது
- மணல் மாபியாக்களின் கொலைவெறி தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய பெண் டி.எஸ்.பி.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் கேரள கவர்னராக நியமனம்
- நடிகை திருமண மோசடி புகார்: சதானந்த கவுடா மகன் ஜாமின் கோரி மனு
- ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக பத்வா: முஸ்லிம் மதகுரு உத்தரவு
- மணிப்பூரில் போராட்டக்காரர்கள்-போலீஸ் மோதல்: துப்பாக்கி சூட்டில் இருவர் பலி
- பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைப்பு: டீசல் விலை 50 காசுகள் அதிகரிப்பு
- கிரேட்டர் நொய்டாவில் கோர விபத்து: 7 பேர் பலி
- மேற்கு வங்கத்தில் எங்கள் வளர்ச்சியை மம்தாவே ஒப்புக்கொண்டுள்ளார்: பா.ஜ.க. பெருமிதம்
- மம்தாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: கம்யூனிஸ்ட் காட்டம்
- ஏழை மக்களுக்கு பெரிய அளவிலான பலனை ஜன் தன் திட்டம் தராது: மாயாவதி கணிப்பு
- ஏழை மக்களுக்கான வங்கி கணக்குகள் 2.14 கோடியை எட்டியது: அருண் ஜெட்லி பெருமிதம்
- பா.ஜனதாவில் சேர்ந்தால் முதல்வர் ஆக்குவதாக சொன்னார்கள்: குமார் விஸ்வாஸ் பரபரப்பு பேட்டி
- மானநஷ்ட வழக்கு விசாரணையில் ஆஜராகாத ஷீலா தீட்சித்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்
- அசாம் சட்டசபையில் புயலை கிளப்பிய எல்லை மோதல் விவகாரம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
| மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 100–ல் இருந்து 107 சதவீதமாக உயருகிறது Posted: 30 Aug 2014 10:51 PM PDT மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படியை உயர்த்தி வழங்குகிறது. இந்த ஆண்டு தற்போது 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் |
| பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்று கேரளா வருகை Posted: 30 Aug 2014 10:40 PM PDT பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக புதிதாக பொறுப்பேற்ற பிறகு அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சென்று பாரதீய ஜனதா கட்சியை வலுப்படுத்தி வருகிறார். பாரதீய ஜனதா பலம் குறைவாக உள்ள மாநிலங்களில் கட்சியை வளர்த்து அந்த மாநிலத்தில் எதிர்காலத்தில் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு அவர் கட்சி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். கேரளாவில் பாரதீய ஜனதா கட்சி |
| ஆந்திரா மறுசீரமைப்புக்கு ரூ.4 1/2 லட்சம் கோடி தேவை: மத்தியக் குழு பரிந்துரை Posted: 30 Aug 2014 10:22 PM PDT ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக கடந்த ஜூன் மாதம் பிரிக்கப்பட்டது. 2 மாநிலத்துக்கும் ஐதராபாத் பொது தலைநகராக 10 ஆண்டுகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஆந்திராவுக்கு புதிய தலைநகர் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. புதிய தலைநகரை தேர்வு செய்ய சிவராமகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவினர் |
| மீண்டும் சமாஜ்வாடி கட்சிக்கு திரும்பிய அமர்சிங்குக்கு எம்.பி.பதவி: முலாயம்சிங் முடிவு Posted: 30 Aug 2014 10:17 PM PDT உத்தர பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர் அமர்சிங். கட்சியில் முலாயம்சிங் யாதவுக்கு அடுத்தபடியாக 2–வது இடத்தில் இருந்தார். முலாயம்சிங்குக்கு மிகவும் நெருக்கமானவராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் விளங்கினார். ஆனால் நாளடைவில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் முலாயம்சிங் யாதவ் தனது மகன் அகிலேஷ் யாதவை அரசியலுக்கு கொண்டு வந்தார். முலாயம் சிங்கின் சகோதரர் மகன் ராம்கோபால் யாதவ், அசம்கான் ஆகியோர் கை ஓங்கியது. |
| நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் 5 பேர் உடல் நசுங்கி சாவு Posted: 30 Aug 2014 10:09 PM PDT பீகார் தலைநகர் பாட்னாவின் நகர எல்லைக்கு வெளியே அரசுக்கு சொந்தமான ஒரு அலுவலகத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக பொருட்களை ஏற்றிவந்த ஒரு லாரி, நேற்றிரவு அப்பகுதியின் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறி நசுக்கியதில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பாட்னா போலீசார், |
| ஆபாசப் படங்களை காட்டி, பலாத்காரம்: 13 வயது சிறுமி தற்கொலை முயற்சி - ஆசிரியர் கைது Posted: 30 Aug 2014 09:57 PM PDT கிழக்கு டெல்லியில் உள்ள மண்டவாலி பகுதியில் பெற்றோருடன் வசிக்கும் 13 வயது சிறுமியின் செல்போனுக்கு தொடர்ந்து மெஸேஜ்களாக வந்த ஆபாசப்படங்களை பார்த்த அவரது தாயார் அதிர்ச்சியடைந்தார். அவற்றை அனுப்பியது யார்? என்று சிறுமியை மிரட்டி கேட்டபோது, தனக்கு டியூஷன் கற்றுத்தரும் ஆசிரியர் இதைப்போன்ற படங்களை காட்டி, தன்னை பலமுறை கற்பழித்ததாகவும், அவர்தான் இந்தப் படங்களை மெஸேஜ்களாக அனுப்பி வருவதாகவும் தெரிவித்தாள். தாயாரிடம் உண்மையை கூறிய பிறகு, வீட்டில் இருந்த பழைய மருந்துகளை குடித்து தற்கொலைக்கு முயன்று, மயங்கி விழுந்த சிறுமியை ஆஸ்பத்திரியில் அனுமதித்த பெற்றோர், அவளது உயிரை காப்பாற்றியுள்ளனர். |
| மணல் மாபியாக்களின் கொலைவெறி தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய பெண் டி.எஸ்.பி. Posted: 30 Aug 2014 09:41 PM PDT மணல் கொள்ளையை தடுக்க முயன்ற பெண் போலீஸ் டி.எஸ்.பி.யை மணல் மாபியா கும்பல் லாரியை ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தின் மண்டியா மாவட்டத்தில் உள்ள அரெகெரே பகுதி வழியாக அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற லாரிகளை பெண் போலீஸ் துணை சூப்பிரண்ட் கவிதா ஹுகர் தலைமையில் நேற்று முன்தினம் இரவு அதிகாரிகள் மடக்கி, சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். நான்கு அதிகாரிகள் லாரிகளை தணிக்கை செய்துக் கொண்டிருந்தபோது, டி.எஸ்.பி. கவிதா தனது ஜீப்பில் அமர்ந்து ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார். |
| தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் கேரள கவர்னராக நியமனம் Posted: 30 Aug 2014 02:50 PM PDT மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி அமைந்த பிறகு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட மாநில கவர்னர்கள் நீக்கப்பட்டு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய அரசு கேட்டுக்கொண்டும் சில மாநில கவர்னர்கள் பதவி விலக மறுத்தனர். அப்படி பதவி விலக மறுத்து வந்த, கேரள மாநில கவர்னர் ஷீலா தீட்சித் பின்னர் மனம் மாறி கடந்த செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். |
| நடிகை திருமண மோசடி புகார்: சதானந்த கவுடா மகன் ஜாமின் கோரி மனு Posted: 30 Aug 2014 11:12 AM PDT கன்னட நடிகை மைத்ரேயி, மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா மகன் கார்த்திக் கவுடா மீது திருமண மோசடி மற்றும் கற்பழிப்பு புகார் கொடுத்தார். மேலும் தாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாகவும், கார்த்திக் தன்னை ரகசிய திருமணம் செய்து உல்லாசமாக இருந்ததாகவும் தற்போது தன்னை கைவிட்டு வேறு பெண்ணை மணக்க முடிவு செய்து திருமண நிச்சியதார்த்தம் நடத்தி இருப்பதாகவும் தனது புகாரில் அவர் கூறியிருந்தார். |
| ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக பத்வா: முஸ்லிம் மதகுரு உத்தரவு Posted: 30 Aug 2014 10:32 AM PDT கேரளாவை சேர்ந்த முக்கிய மதகுரு ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக பிறப்பித்துள்ள பத்வாவில், இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் இதர தீவிரவாத இயக்கத்தையும் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். மிகவும் பழமை வாய்ந்த அனைத்திந்திய சன்னி ஜாம்-ஈ-யாத்துல் உலமா அமைப்பை சேர்ந்த ஷேக் அபு பக்கர் அகமது என்ற மதகுரு கூறுகையில், |
| மணிப்பூரில் போராட்டக்காரர்கள்-போலீஸ் மோதல்: துப்பாக்கி சூட்டில் இருவர் பலி Posted: 30 Aug 2014 10:06 AM PDT மணிப்பூரில் உள்ள உக்ருல் மாவட்டத்தில் நாகா ஐக்கிய முன்னணி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது திடீரென வன்முறை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் கூட்டத்தினரை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் வீசினர். எனினும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டவுடன் போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினர். ஆனால் |
| பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைப்பு: டீசல் விலை 50 காசுகள் அதிகரிப்பு Posted: 30 Aug 2014 07:11 AM PDT சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் ரூபாய்-டாலர் பரிமாற்ற விகிதத்தின் அடிப்படையில் மாதந்தோறும் பெட்ரோல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.82 குறைப்பதாகவும், டீசல் விலையை 50 காசுகள் உயர்த்துவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ளன. இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. |
| கிரேட்டர் நொய்டாவில் கோர விபத்து: 7 பேர் பலி Posted: 30 Aug 2014 05:04 AM PDT நொய்டாவில் இருந்து கிரேட்டர் நொய்டா நோக்கி நேற்று இரவு ஒரு காரில் 2 வயது குழந்தை உள்பட 6 பேர் வந்துகொண்டிருந்தனர். ராடிசன் ப்ளூ ஓட்டல் அருகே கார் வந்தபோது, 3 பேர் திடீரென சாலையைக் கடந்தனர். கார் டிரைவர் சுதாரிப்பதற்குள், நடந்து சென்றவர்கள் மீது கார் பயங்கரமாக மோதியது. பின்னர் நிலைகுலைந்த கார், சாலைத் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. |
| மேற்கு வங்கத்தில் எங்கள் வளர்ச்சியை மம்தாவே ஒப்புக்கொண்டுள்ளார்: பா.ஜ.க. பெருமிதம் Posted: 30 Aug 2014 04:31 AM PDT மேற்கு வங்க மாநில அரசியல் தொடர்பாக நேற்று பேட்டி அளித்த முதல்வர் மம்தா பானர்ஜி, மதவாத பா.ஜ.க.வை வீழ்த்த யாருடன் வேண்டுமானாலும் கூட்டு சேரத் தயார் என்னும் பொருள்பட பேசியிருந்தார். இதுபற்றி கருத்து கூறிய பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் சித்தார்த் நாத் சிங், மேற்கு வங்கத்தில் எங்கள் வளர்ச்சியை மம்தாவே ஒப்புக்கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். |
| மம்தாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: கம்யூனிஸ்ட் காட்டம் Posted: 30 Aug 2014 04:20 AM PDT திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'கம்யூனிஸ்டுகள் உள்பட அரசியலில் தீண்டத் தகாதவர்கள் என்று யாருமில்லை' என கூறியிருந்தார். இதையடுத்து, எதிர்வரும் தேர்தலில் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்து மம்தா பானர்ஜி போட்டியிடக்கூடும் என்ற யூகங்கள் உலா வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று கொல்கத்தாவில் பேட்டி அளித்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான குருதாஸ் தாஸ்குப்தா |
| ஏழை மக்களுக்கு பெரிய அளவிலான பலனை ஜன் தன் திட்டம் தராது: மாயாவதி கணிப்பு Posted: 30 Aug 2014 04:13 AM PDT பிரதமரின் ஜன் தன் திட்டம் ஏழை மக்களுக்கு பெரிய அளவிலான பலனை தந்துவிடப் போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார். இதுதொடர்பாக, உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் பேட்டி அளித்த மாயாவதி கூறியதாவது:- பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்காக தற்போதைய மத்திய அரசு என்ன திட்டத்தைக் கொண்டு வர உள்ளது? என்பது தொடர்பாக நாங்கள் கூர்மையாக கவனித்து வருகிறோம். |
| ஏழை மக்களுக்கான வங்கி கணக்குகள் 2.14 கோடியை எட்டியது: அருண் ஜெட்லி பெருமிதம் Posted: 30 Aug 2014 04:06 AM PDT மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 30 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டில் கூட்டணி அல்லாத ஒற்றைக் கட்சி |
| பா.ஜனதாவில் சேர்ந்தால் முதல்வர் ஆக்குவதாக சொன்னார்கள்: குமார் விஸ்வாஸ் பரபரப்பு பேட்டி Posted: 30 Aug 2014 03:05 AM PDT பா.ஜனதா கட்சியில் சேர்ந்து ஆட்சியமைக்க உதவி செய்தால் டெல்லி முதல்வர் ஆக்குவதாக அக்கட்சியின் எம்.பி. ஒருவர் கூறியதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் குமார் விஸ்வாஸ் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக குமார் விஸ்வாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- |
| மானநஷ்ட வழக்கு விசாரணையில் ஆஜராகாத ஷீலா தீட்சித்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் Posted: 30 Aug 2014 02:48 AM PDT கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளராக விஜேந்தர் குப்தா போட்டியிட்டார். அப்போது, நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, ஷீலா தீட்சித் மற்றும் அவரது தலைமையிலான டெல்லி அரசின் மீது ஏராளமான ஊழல் |
| அசாம் சட்டசபையில் புயலை கிளப்பிய எல்லை மோதல் விவகாரம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு Posted: 30 Aug 2014 02:42 AM PDT அசாம்-நாகலாந்து மாநில எல்லையில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் சிரங் மாவட்டத்தில் பள்ளி மாணவியை போடோலேண்ட் தேசிய ஜனநாயக முன்னணி (சாங்பிஜித் பிரிவு) தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றது ஆகிய விவகாரங்கள் குறித்து அசாம் சட்டசபையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |