Tamil News | Online Tamil News |
- தி.மு.க.,வில் அழகிரி - ஸ்டாலின் பனிப்போர்...முற்றுகிறது : தொண்டர்களை திரட்ட ஸ்டாலின் சுற்றுப்பயணம்
- மிசோரம் கவர்னராக இருந்த கமலா பெனிவால் மீது புகார்கள்...திடுக்':ஜனாதிபதி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பிறகே நீக்கம்
- டாடா அறிவை இழந்து விட்டாராம்: மே.வங்க அமைச்சர் கோபம்
- இந்தியா அறிவியல் தொழில்நுட்பத்தில் வளர சமஸ்கிருத இலக்கியம் அவசியம்: கட்ஜு பேச்சு
- சாந்தி துரோகி என்றால் கட்சியை விட்டு நீக்க வேண்டியது தானே?தே.மு.தி.க.,விற்கு, முதல்வர் கேள்வி
- கட்சி நிர்வாகத்தை கையில் எடுக்கும் கருணாநிதி?
- ஜெ., வாசித்த தே.மு.தி.க., குற்றப்பட்டியல் பதிலடி கொடுக்க விஜயகாந்த் திட்டம்
- சூரிய சக்தி மின் உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை ஐந்து மாநிலங்களுடன் விரைவில் ஒப்பந்தம்
- தேர்தல் கமிஷனில் விடிய விடிய ஆலோசனை
- இனப்படுகொலை நடத்திய கம்போடிய முன்னாள் கெமர்ரூச் தலைவர்களுக்கு ஆயுள்:
| தி.மு.க.,வில் அழகிரி - ஸ்டாலின் பனிப்போர்...முற்றுகிறது : தொண்டர்களை திரட்ட ஸ்டாலின் சுற்றுப்பயணம் Posted: தி.மு.க.,வில், அழகிரி - ஸ்டாலின் இடையேயான பனிப்போர் முற்றி வருகிறது. கட்சியில் மீண்டும் சேர்வதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, சென்னையில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகிறார். அதை முறியடிக்கும் திட்டத்துடன், தமிழகம் முழுவதும் தொண்டர்களை திரட்ட, பொருளாளர் ஸ்டாலின், நேற்று, தன் சுற்றுப்பயணத்தை துவங்கி உள்ளார்.தி.மு.க.,விலிருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ... |
| Posted: புதுடில்லி:வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் கவர்னராக இருந்த கமலா பெனிவால், 87, நேற்று முன்தினம், அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு, அவர் மேற்கொண்டதாகக் கூறப்படும், சில சர்ச்சைக்குரிய முறைகேடுகள் தான் காரணம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அது குறித்து ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பிறகே, அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்தது.பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கடந்த மே மாதம், மத்தியில் பொறுப்பேற்றதை அடுத்து, பல மாநில கவர்னர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். காங்கிரஸ் தலைமையிலான, ... |
| டாடா அறிவை இழந்து விட்டாராம்: மே.வங்க அமைச்சர் கோபம் Posted: கோல்கட்டா:''டாடா நிறுவனங்களின் கவுரவ தலைவர், ரத்தன் டாடாவுக்கு, 73, வயதாகிவிட்டதால், அறிவை இழந்துவிட்டார்,'' என, மேற்கு வங்க நிதியமைச்சர், அமித் மித்ரா கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.'நானோ' கார் தொழிற்சாலை: திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்கத்தின் சிங்குர் என்ற இடத்தில், 'நானோ' கார் தொழிற்சாலையை அமைக்க, டாடா நிறுவனம், 2008ல் திட்டமிட்டது. அதற்காக, நிலம் கையகப்படுத்திய அந்நிறுவனம், தொழிற்சாலையை உருவாக்க முழு மூச்சில் இறங்கிய போது, அப்போது முதல்வராக இல்லாத மம்தா பானர்ஜி நடத்திய போராட்டத்தால், நானோ கார் ... |
| இந்தியா அறிவியல் தொழில்நுட்பத்தில் வளர சமஸ்கிருத இலக்கியம் அவசியம்: கட்ஜு பேச்சு Posted: சென்னை:இந்தியா, அறிவியல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி பெற, சமஸ்கிருத இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகள் அவசியமானது,'' என, இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான, மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், 'ஓய்ஸ் மேன்' அமைப்பின், 71வது சர்வதேச கருத்தரங்கு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மார்கண்டேய கட்ஜு பேசியதாவது:இந்த நிகழ்ச்சியில், இந்திய நாட்டை பற்றி பேச விரும்புகிறேன். இந்தியாவில் தற்போது வாழ்பவர்களில், 93 சதவீதம் பேர், உலகின் பல்வேறு பகுதிகளில் ... |
| சாந்தி துரோகி என்றால் கட்சியை விட்டு நீக்க வேண்டியது தானே?தே.மு.தி.க.,விற்கு, முதல்வர் கேள்வி Posted: சென்னை:தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சாந்தி துரோகி என்றால், கட்சியை விட்டு நீக்க வேண்டியது தானே?'' என, முதல்வர் ஜெயலலிதா, தே.மு.தி.க., வினரிடம் கேள்வி எழுப்பினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:தே.மு.தி.க., முத்துக்குமார்: சிறைச்சாலைகளில், குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கான துப்புரவு தொழிலாளர்கள் இல்லை என கூறப்படுகிறது.அமைச்சர் வளர்மதி: சிறைச்சாலைகளுக்கு சென்றிருந்தால் மட்டுமே, இந்த அனுபவம் இருக்கும்.முத்துக்குமார்: எங்களுக்கு அனுபவம் இல்லை. ஊழல் வழக்குகளில், சிறை சென்றவர்களுக்கு சிறை அனுபவம் இருக்கும்.அமைச்சர் வளர்மதி: ... |
| கட்சி நிர்வாகத்தை கையில் எடுக்கும் கருணாநிதி? Posted: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு நெருக்கமாகச் செயல்பட்ட அமைப்பு செயலர் பெ.கல்யாணசுந்தரம் மீது, 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அக்கட்சியில், தி.மு.க., தலைவர் கருணாநிதி 'கை' மீண்டும் ஓங்கியுள்ளது.இனி, கட்சியை, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக, கருணாநிதி, தனக்கு நெருக்கமாகச் செயல்படக் கூடிய ஆலந்துார் பாரதியை, அமைப்பு செயலர் பதவிக்கு நியமித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அறிவாலயத்தில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் துணை மேலாளர் ஜெயக்குமாருக்கும், அமைப்பு செயலர் கல்யாணசுந்தரத்திற்கும் இடையே, கடுமையான கருத்து வேறுபாடு ... |
| ஜெ., வாசித்த தே.மு.தி.க., குற்றப்பட்டியல் பதிலடி கொடுக்க விஜயகாந்த் திட்டம் Posted: சென்னை:தே.மு.தி.க., நிர்வாகிகள் செய்த குற்றங்களை சட்டசபையில் பட்டியலிட்டு பேசிய, முதல்வர் ஜெயலலிதாவிற்கு பதிலடி கொடுப்பதற்காக, கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த், ஆலோசனை நடத்தியுள்ளார்.தே.மு.தி.க., தலைவர் :விஜயகாந்த், சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய பின், விருகம்பாக்கத்தில் இருக்கும் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.இருந்தாலும், கட்சி எம்.எல்.ஏ.,க்களின் சட்டசபை செயல்பாடுகளை தீவிரமாக கவனித்து வருகிறார்.சட்டசபையில், நேற்று முன்தினம், காவல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது.அதில் தமிழக சட்டம் ஒழுங்கு சூழ்நிலை குறித்து, தே.மு.தி.க., ... |
| சூரிய சக்தி மின் உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை ஐந்து மாநிலங்களுடன் விரைவில் ஒப்பந்தம் Posted: மத்திய அரசு, உள்நாட்டில், சூரிய சக்தி மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், முதற்கட்டமாக, விரைவில், ஐந்து மாநிலங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.ராஜஸ்தான்:இதன்படி, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில், தலா, 500 மெகாவாட் திறனுக்கும் மேற்பட்ட, மெகா சூரிய சக்தி மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தேவையான உதவிகளை, மத்திய அரசு வழங்கும்.குறிப்பாக, மத்திய பிரதேசத்தில், 750 முதல் 800 மெகாவாட் திறனில், சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டு, ஜனவரி 31ம் தேதி ... |
| தேர்தல் கமிஷனில் விடிய விடிய ஆலோசனை Posted: மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள், விடிய விடிய ஆலோசனை நடத்திய பின், 2 நகர மேயர் தேர்தல் உட்பட, உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பை, திடீரென ரத்து செய்துள்ளனர்.உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகல், இறப்பு, பதவி பறிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் காலியிடங்களுக்கு, ஆறு மாதத்திற்கு ஒருமுறை, மாநில தேர்தல் கமிஷன் மூலம், இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.உள்ளாட்சி பதவிகள்:அந்த அடிப்படையில் திருநெல்வேலி, துாத்துக்குடி மேயர்கள், ராமநாதபுரம், சங்கரன் கோவில் நகராட்சி தலைவர்கள் உள்ளிட்ட, 1,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் ... |
| இனப்படுகொலை நடத்திய கம்போடிய முன்னாள் கெமர்ரூச் தலைவர்களுக்கு ஆயுள்: Posted: நம்பென்: கம்போடியாவில் இனப்படுகொலை நடத்திய மூத்த கெமர்ரூச் ஆட்சியாளர்கள் இருவருக்கு ஆயுள் வரை சிறை தண்டனை விதித்து ஐ.நா. சர்வதேச விசாரணை தீர்ப்பாயம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.1975-களில் தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் கெமர்ரூச் கொடுங்கோலன் பூல்பாட் தலைமையில், இயங்சரே,நௌவான்சியா, கெஹியூ சம்பான் ஆகிய கொடுங்கோலர்கள் 1975- 79-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர். அப்போது 17லட்சம் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். வியட்நாமில் இருந்து கம்போடியாவிற்கு பிழைப்பும், இருப்பிடமும் தேடி வந்த அவர்கள். கெமர்ரூச் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடினர். ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 08,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |