Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சோனியா, ராகுலுக்கு ஆதரவாக டில்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Posted:

புதுடில்லி:'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையின், 2,000 கோடி ரூபாய் சொத்துகளை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக, காங்கிரஸ் தலைவர், சோனியா மற்றும் அவர் மகன் ராகுல் உட்பட, காங்கிரஸ் பிரபலங்கள் மீது, பா.ஜ., மூத்த தலைவர், சுப்ரமணியசாமி தொடர்ந்த வழக்கில், இன்று நடைபெற இருந்த விசாரணைக்கு, டில்லி உயர்நீதிமன்றம், நேற்று தடை விதித்தது.நாட்டின் முதல் பிரதமர், ஜவகர்லால் நேரு துவக்கிய, நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு, டில்லியில், 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துகள் உள்ளன. 'அந்த சொத்துகளை அபகரிக்கும் நோக்கத்தில், 'யங் இந்தியன்' என்ற அமைப்பை நிறுவி, அதன் மூலம், நேஷனல் ...

விவசாயத்தில் அதிக மகசூலுக்கு புதிய வழிமுறைகள்: சந்திரசேகர் ராவ்

Posted:

ஐதராபாத்:விவசாயத்தில் அதிக மகசூல் பெற புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ், ஐதராபாத்தில் தெரிவித்தார்.ஐதராபாத்தில் உள்ள பல்கலைகழகத்தில் நடந்த தெலுங்கானா சிந்தனையாளர் ஜெயசங்கரின் 81வது பிறந்தநாள் நினைவுதின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ்,நமது கிராமம் நமது காய்கறிகள் திட்டத்தை துவக்கி வைத்தார்.இத்திட்டத்தால் ரங்கா ரெட்டி,மேடக் மற்றும் மகபூப்நகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 31 கிராமங்களில் உள்ள 3ஆயிரம் ஏக்கரில் காய்கறி விளைச்சலை அதிகரித்து பயன்பெறலாம்.இத்திட்டத்தின் ...

கிளப், ஓட்டல்களில் வேட்டிக்கு தடை விதித்தால் சிறை ஒரு ஆண்டு புது சட்டத்துக்கான மசோதா சட்டசபையில் தாக்கல்

Posted:

சென்னை:தனியார் 'கிளப்'களில், வேட்டி கட்டிச் செல்ல தடை விதித்தால், ஒரு ஆண்டு சிறைத் தண்டனையோடு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வழி வகுக்கும், சட்ட முன் வடிவை (மசோதா), முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.மசோதாவில் கூறப்பட்டுஉள்ளதாவது:தமிழ் பண்பாட்டை, பிரதிபலிக்கும் உடையான வேட்டி அல்லது இந்திய பாரம்பரிய உடை அணிந்து வருவோரை, மனமகிழ் மன்றங்கள், உணவகங்கள், திரையரங்குகள், பெரும் வணிக வளாகங்கள், அரங்குகள், உணவுக் கூடங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகளின் உள்ளே நுழைய, தடை விதிப்பதை நீக்க, இச்சட்டம் வகை செய்யும்.சில மன்றங்கள், தங்கள் ...

ராகுல் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லி...பதிலடி உட்கட்சி சண்டையை திசை திருப்புவதாக புகார்

Posted:

புதுடில்லி:பார்லிமென்டில் இதுநாள் வரை பதுங்கியிருந்த, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், நேற்று தன் கட்சி, எம்.பி.,க்களுடன் சேர்ந்து, ''நாட்டில் மத மோதல்கள் அதிகரித்து விட்டன; இதற்கு காரணம் யார் என தெரிய வேண்டும்,'' என, பிரச்னையை கிளப்பி, அமளியை ஏற்படுத்தினார்.இதை கண்டித்துள்ள பா.ஜ., அமைச்சர், அருண் ஜெட்லி, 'காங்கிரஸ் மேலிடத்தில் அரண்மனை கலகம் நடைபெறுகிறது; அங்குள்ள உட்கட்சி குழப்பத்தை திசை திருப்பவே, ராகுல் அமளியில் ஈடுபட்டார்' என தெரிவித்துள்ளார்.லோக்சபா, நேற்று காலை வழக்கம்போல் கூடியதும், கேள்வி நேரம் துவங்கியது. எம்.பி.,க்கள் முன்னதாக கேட்டிருந்த ...

நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Posted:

புதுடில்லி:மத்திய பிரதேச மாநில ஐகோர்ட் நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்த வழக்கை, உடனடியாக விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.மத்திய பிரதேச மாநில ஐகோர்ட் நீதிபதி ஒருவர், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அவர் வீட்டு நிகழ்ச்சிக்கு, தன்னை குத்தாட்டம் ஆட வற்புறுத்தியதாகவும், குவாலியர் கோர்ட்டில் பணியாற்றிய பெண் நீதிபதி ஒருவர், சமீபத்தில் பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார். தன் பதவியையும், அவர் ராஜினாமா செய்தார்.பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் குறித்து, எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் ...

டில்லியில் விரைவில் அனைத்து கட்சி கூட்டம் :யு.பி.எஸ்.சி., பிரச்னையில் அரசு அறிவிப்பு

Posted:

'திட்டமிட்டபடி, வரும் 24ல், யு.பி.எஸ்.சி., தேர்வுகள் நடைபெறும். இதில், எந்த மாற்றமும் இருக்காது. இந்த விவகாரத்தில் சுமுக தீர்வு காண்பதற்காக விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.யு.பி.எஸ்.சி., நடத்தும் முதல் நிலைத் தேர்வின் திறனறி தேர்வில், ஆங்கில மொழி புலமை குறித்த கேள்விகள் இடம் பெறுவதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, 'ஆங்கில மொழி புலமையை சோதிக்கும் கேள்விகளுக்கான மதிப்பெண், தகுதிப் பட்டியலில் சேர்க்கப்படாது' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வட மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், ...

கடுமையான குற்றங்களை விசாரிக்க சிறப்பு பிரிவு

Posted:

சென்னை:முக்கிய கொலை வழக்கு, பாலியல் வன்முறை வழக்கு, ஆள் கடத்தல் வழக்கு, திட்டமிட்ட கொலை வழக்கு, ஆகியவற்றில் புலன் விசாரணை மேற்கொள்வதற்காக, கடுமையான குற்றங்களை விசாரிக்கும், சிறப்பு பிரிவுகள், முதல் கட்டமாக, 20 மாவட்டங்களில் உருவாக்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அத்துடன், 99.73 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.சட்டசபையில், நேற்று, காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா, பதிலளித்தார். பின், 53 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் விவரம்:15 மாவட்டங்களில், ...

நாலு பேர்; நாலு புகாருடன் வாசன் முகாம்:சோனியாவை சந்திக்க டில்லியில் தவம்

Posted:

நான்கு பேர் மீதான புகார் பட்டியலுடன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் டில்லியில் முகாமிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துப் பேசும் திட்டத்துடன், அவர் காத்திருக்கிறார்.தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, புதிய தலைவரை நியமனம் செய்வது தொடர்பான பேச்சு, மீண்டும் டில்லியில் துவங்கி இருக்கிறது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும், வாசனுக்கும் இடையே ஏற்பட்ட போட்டியில், இப்போது சிதம்பரம் பின்தங்கியிருப்பதாக, டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.பார்லிமென்டில் புயலை கிளப்பி இருக்கும், இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில், ...

கட்சி ஒரு நாள் நம் வசமாகும் கனிமொழியிடம் சொன்ன அழகிரி

Posted:

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு; நீர் அடித்து நீர் விலகாது என்ற சொற்றொடர்கள், நாமெல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தித் தான், தலைவர் கருணாநிதியால் சொல்லப்பட்டவை' என, தன் சகோதரர் மு.க.அழகிரியிடம் கனிமொழி கூறியிருக்கிறார்.அதனால், 'நல்லது நடக்கும் வரையில் தான் அமைதியாக இருக்கிறேன்' என, அழகிரி, கனிமொழியிடம் சொன்னதாக கட்சி வட்டாரங்களில் தகவல் பரவி இருக்கிறது.கடந்த 3ம் தேதி, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யான திருச்சி சிவாவின் மனைவி தேவிகா ராணியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திருச்சிக்குப் போனார், தி.மு.க.,வின் ராஜ்யசபா உறுப்பினரான ...

செம்மொழி மாநாட்டு கணக்கு வழக்கு: லஞ்ச ஒழிப்பு போலீஸ் விரிவான விசாரணை

Posted:

சென்னை:'செம்மொழி மாநாட்டுக்கான செலவு கணக்கு தொடர்பான குற்றச்சாட்டு குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், விரிவான விசாரணை நடத்துகின்றனர்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது.சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் பி.ரமேஷ்பாபு, தாக்கல் செய்த மனு: கோவையில், உலக செம்மொழி மாநாடு, 2010ல் நடந்தது. மாநாட்டுக்கு ஆன செலவு குறித்து, இரண்டு விதமான செய்திகள் வெளிவந்தன. 386 கோடி ரூபாய் செலவு என, ஒரு செய்தியும், 301 கோடி ரூபாய் செலவு என, மற்றொரு செய்தியும் வந்தது.தகவல் பெறும் உரிமை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™