ஈகரை தமிழ் களஞ்சியம் |
- எதுக்கு ஹெல்மெட் சைடுல ரெண்டு துவாரம் இருக்கு?
- பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!
- தமிழ் காதல் கவிதைகள்
- ஒரு கேள்வி.
- வால் - கவிதை - பா.சத்தியமோகன்
- தையல்காரன் - ஓஷோ நகைச்சுவை
- மனதை கவரும் வண்ணப்பறவைகள்
- பிடித்தது
- காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு
- பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்
- உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..!
- நலந்தானா..!
- வாழ்த்துவதால் வருமே வளமும் நலமும்
- தெரிந்த திருக்குறளும் தெரியாத தகவல்களும்
- பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்?
- சந்தோஷமாக வாழ என்ன வழி
- உலகைத் தாங்குவது அன்பு–காந்தியின் பொன்மொழிகள்
- உலகில் சிறந்தவர்...
- உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்!
- கிழமைகள்… பலன்கள்… பரிகாரங்கள்…
- 3000 மதிப்பீடுகள் கடந்த கிருஷ்ணாம்மா...
- அனுபவமே உயர்ந்தது-புத்தர்
- அறிமுகம்
- ஐந்தாயிரம் பாசம்மிகு மதிப்பீடுகளுடன் ஈகரையில் ஜொலிக்கும் பானு அக்காவை வாழ்த்தலாம் வாங்க
- அம்மா அப்பா !
- இரண்டு தவளைகள் - சிறுகதைகள் தொடர்
- 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு
- மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை
- இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் !
- 2000 மதிப்பீடுகள் பெற்ற ரேவதி அவர்களை வாழ்த்தலாம் வாங்க
- இன்று ஹிரோஷிமா நினைவு தினம்
- ஆகஸ்ட் 6: கெரம் ஷாலோம் எல்லையை இஸ்ரேல் திறந்துவிட்ட நாள்
- ஸ்மார்ட் போன்களின் திரை தொடர்ந்து பெரிதாவது ஏன்?
- போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம்
- ஆகஸ்ட் 1 - 7 : உலக தாய்ப்பால் வாரம்
- முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (59)
- இயல்புதானே?
- பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
| எதுக்கு ஹெல்மெட் சைடுல ரெண்டு துவாரம் இருக்கு? Posted: 06 Aug 2014 03:43 PM PDT எதுக்கு ஹெல்மெட் சைடுல ரெண்டு துவாரம் இருக்கு? - அது வழியா என் மனைவி காதைப் பிடிச்சு திருகுவா...! - --------------------------------------- - ரயில் கட்டண உயர்வு அவரை பாதிக்காதா...ஏன்? - வித்தவுட்ல போறவராச்சே...! - ---------------------------------------- - உன் வீட்டுக்காரரை 'மைனாரிட்டி தலைவர்'னு சொல்றியே...ஏன்? - வீட்ல அவருக்கு யார் ஆதரவும் கிடையாது..! - ------------------------------------- - இந்த டாக்டர்தான் ஆபரேஷன் செய்ய மாட்டாரே... எதுக்கு பயப்படறே? - அவருக்கு மேஜிக்தெரியும், ... |
| பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Posted: 06 Aug 2014 03:27 PM PDT புதிதாக ஒரு ஃப்ளாட் வாங்கியிருந்தேன். அதில் கெய்சர், வாஷிங்மெஷின், வாஷ்பேஸின் ஆகியவற்றை பொருத்தவேண்டியிருந்தது. எனக்கு ப்ளம்பர் நண்பர் ஒருவர் உண்டு. அவரை வீட்டுக்கு வரவழைத்தேன். அவர் நல்ல திறமைசாலிதான். ஆனால் அன்று ஏனோ கெய்சரை பொருத்தி டெஸ்ட் செய்த போது சூடு ஏறவில்லை. பிறகு தவறை கண்டுபிடித்து மீண்டும் பரிசோதிக்க முயற்சித்தபோது மின்சாரம் போய்விட்டது. பொருத்துவதற்காக ட்ரில்லிங் செய்தபோது, டிரில் பிட் உடைந்து விட்டது. வாஷிங்மெஷினில் நிப்பிள் மேட்ச் ஆகவில்லை. ஆக அவற்றை பொருத்த ஏதுவாக என்னையும் கடைக்கு ... |
| Posted: 06 Aug 2014 03:23 PM PDT 1 கண் இமைக்காமல் பார்க்கிறது " கண் இமைத்துக்கொண்டே இருந்த என் கண்கள் உன்னை பார்த்த முதல் கண் இமைக்காமல் பார்க்கிறது உன்னை மட்டும் -- 2 காதலின் வலி " காதல் என்ற பெயரில் சிலரை ஏமாத்துவதை நிருத்திக்கொள் உன்னால் ஏமாந்ததில் முதலும் கடைசியுமாய் நானே இருக்கிறேன் நீ உண்மையாக ஒருவனை காதலித்து ஏமாறும் போது தான் காதலின் வலி புரியும் - 3 காதலின் பிரிவு " காதலின் பிரிவு மரணத்தை விட கொடுமையானது ஒவ்வொருவரும் பிரியும் போது தான் தெரியும் காதல் தோல்வி எவ்வளவு கொடுமையானது என்று ... |
| Posted: 06 Aug 2014 12:16 PM PDT அண்மையில் தான் பொழுது போகவில்லை என்று, வம்சம் தொடர் நாடகத்தை சில நாள்கள் பார்த்தேன். அதில் பொன்னுரங்கம் வேடத்தில் நடிக்கும் நடிகர், அசல் பலம்பெரும் நடிகர் அமரர் பாலாஜி அவர்களைப் போல இருக்கிறார். அவர் அமரர் பாலாஜி அவர்களின் உறவுக்காரரா? தெரிந்தவர்கள் சொல்ல்லாமே? |
| Posted: 06 Aug 2014 12:01 PM PDT - சைக்கிள் கடையில் முன் சக்கரத்திலோ பின் சக்கரத்திலோ காற்று பிடிக்கும்போது தற்செயலாக நிமிர்ந்தால் மூச்சுக் காற்றை நிறுத்துவது போல பயமுறுத்தும் செந்நிற டாபர்மேனுக்கு கண்ணும் நெருப்பு நிறமே. - சைக்கிளை அவிழ்க்கும் முன் டாபர்மேன் கண்பார்வை பயந்த மனசைக் கடித்து பல்பதிக்கும் பல தடவை சட்டென யோசிப்பதுண்டு - கன்று போல உயரமிருந்தும் ஏனோ வளரவில்லை சிறுத்தை போல உடலிருந்தாலும் நறுக்கிய வாலே அதற்கு - ஆட்காட்டி விரல் நீளம் ஆட்ட முடியாத வால் ஓர் அவமரியாதை இதற்கு ஏனெனக் கேட்க கடை ஆள் சொல்வான் - ''நீளமாக ... |
| Posted: 06 Aug 2014 12:00 PM PDT தையல்காரன் ஒருவன் இருந்தான் அவன் பெயர் சம்பாச்சு. - அவனிடம் மேல் சட்டை தைக்கக் கொடுத்திருந்த ஒ ருவன் வந்து,சட்டையைப் போட்டுப் பார்த்ததில் ஒரு கை குட்டையாக இருந்தது.அதை சரி செய்ய வேண்டும் என்று அவன் சொன்னபோது சம்பாச்சு சொன்னான், - ''இந்த துணி கலை நயம்வாய்ந்த துணி.இதைத் திரும்பத் தைத்தால் அதன் நயம் கெட்டுவிடும்.கையைக் கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டால் சரியாகிவிடும்.' 'சரியென்று பார்த்தால் முதுகுப் பக்கம் துணி அதிகமாக இருந்ததால் மிக லூசாக இருந்தது.இதற்கென்ன செய்வது என்று ... |
| Posted: 06 Aug 2014 11:56 AM PDT |
| Posted: 06 Aug 2014 11:55 AM PDT அப்பாவுக்கு முறுகலான தோசை பிடிக்கும்! அண்ணனுக்கு வெங்காய ஊத்தப்ப தோசை பிடிக்கும்! அக்காவுக்கு முட்டை தோசை பிடிக்கும்! அம்மாவுக்கு மட்டும் மீதமான தோசை பிடிக்கும்!! பூங்கொடி, சித்தோடு |
| காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு Posted: 06 Aug 2014 11:54 AM PDT காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு பரிசல் போட்டியில் பரிசு பெறவே பேரவா . இருப்பினும் என்றும் வேண்டும் , ஒரு பரிசு அதுவே வேண்டிய அளவு உன் வரவு . காவிரி அன்னை காலத்தே கண் திறந்தால் கள்வெறி கொள்ளாரோ கரையோர மக்கள் . சோழ நாடு சோறுடைத்து என மறுமுறை பெயர் படைக்க வேழம் கொண்டு போரடிக்க வேண்டும் தாயே உன் வரவால் ரமணியன் |
| பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் Posted: 06 Aug 2014 11:48 AM PDT - பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் பிறப்பு (அக்டோபர் 16, 1881 மகிபாலன் பட்டி, தமிழ்நாடு இறப்பு அக்டோபர் 24 1953 (அகவை 72) சமயம் இந்து பெற்றோர் முத்துகருப்பன், சிவப்பி ஆச்சி வாழ்க்கைத் துணை மீனாட்சி - பண்டிதமணி என அழைக்கப்பட்ட மு. கதிரேசச் செட்டியார் (அக்டோபர் 16, 1881 - அக்டோபர் 24, 1953) ஏழு மாதங்கள் கூட பள்ளியில் படிக்காமல் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பெருமைக்கு உரியவர். - வடமொழி நூல்கள் பலவற்றை மொழி பெயர்த்தவர். பல தமிழறிஞர்களுக்குப் பாடம் சொன்னவர். - சிறந்த ... |
| உரிய நேரத்தில் வெளிப்படுங்கள்… உலகை வெல்லுங்கள்..! Posted: 06 Aug 2014 11:47 AM PDT நம்மில் பலருக்கும் உள்ள பிரச்சினையே நமக்கான திறமையை உரிய நேரத்தில் வெளிப்படுத்தத் தெரியாதது தான். அந்த வீட்டுக்கு புதிதாக வந்த மருமகள் பிரார்த்தனை அறையில் மனமுருக இறைவனை துதித்து பாடிக் கொண்டிருந்தாள். அப்போது வெளியில் வாக்கிங்கை முடித்து விட்டு வந்த மாமனார் தன் மகனிடம், "எத்தனை அருமையான பாட்டு… இன்னும் கொஞ்சம் டிவி வால்யூமை கூட்டி வை" என்றார். மகன் சொன்னபிறகு தான் தன் மனம் உருகப் பாடியது தன் அன்பான மருமகள் என்பதை தெரிந்து கொண்டார். "சினிமாவில் பாடியிருந்தால் திரைக்கு இன்னொரு பி.சுசிலா கிடைத்திருக்கக் ... |
| Posted: 06 Aug 2014 11:43 AM PDT நாம் உறவினர்களையோ, நண்பர்களையோ சந்திக்கும்போது கேட்டுக்கொள்ளும் முதல் வார்த்தை, முக்கியமான வார்த்தை, `நலந்தானா?' என்பது! மனித வாழ்க்கையில் `நலம்' அவ்வளவு முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது. ஆனால் யாரைப் பார்த்தாலும் ஏதாவது ஒருவகையில் உடல் நலக் குறைபாட்டுடன்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை ஒரு விவாத பொருளாக மாற்றாமல், `நலமாக இருக்கிறேன்' என்று கூறிவிடுவார்கள். சிலரோ, `நலந்தானா?' என்று கேட்டு முடிப்பதற்குள், தனக்கு அங்கே வலிக்கிறது.. இங்கே வலிக்கிறது என்று புலம்பத் தொடங்கி விடுவார்கள். ... |
| வாழ்த்துவதால் வருமே வளமும் நலமும் Posted: 06 Aug 2014 11:39 AM PDT ஜப்பானில் "கோய்' என்றொரு மீன் வகை உள்ளது. இந்த மீன் விசித்திரமான இயல்புடையது. நீங்கள் இந்த மீனை ஒரு சிறிய தொட்டியில் வைத்து வளர்த்தால் அது அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று அங்குலம் மட்டுமே வளரும். சற்று பெரிய தொட்டியில் வளர்த்தால் கோய் மீன் 8 அல்லது 10 அங்குலம் வரை வளரும். சிறு குட்டையில் கோய் மீன்களை வளர்த்தால் அது ஒன்று முதல் ஒன்றரை அடி வரை வளரும். கோய் மீனைக் குளத்தில் வளர்த்தால் இரண்டரை அடி முதல் மூன்றடி வரை வளரும். மிகப் பெரிய ஏரியில் கோய் மீனை வளர்த்தால் அது ஐந்து அடி வரை வளரும். மனிதர்களும் ... |
| தெரிந்த திருக்குறளும் தெரியாத தகவல்களும் Posted: 06 Aug 2014 11:37 AM PDT திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் 133 அதிகாரங்களும் 1330 குறள்களும் உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. அதில், நம்மில் தெரியாத சில தகவல்களை காண்போம். 1. திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை 2. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 42,194 3. 247 தமிழ் எழுத்துகளில் 37 எழுத்துகள் மட்டுமே இடம் பெறவில்லை. 4. திருக்குறளில் இடம் பெறும் இரு மலர்கள் அனிச்சம், குவளை 5. திருக்குறளில் இடம் பெறும் ஒரே பழகம் நெருஞ்சிப்பழம் 6. திருக்குறளில் இடம் பெறும் ஒரே விதை குன்றிமணி 7. திருக்குறளில் ... |
| பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Posted: 06 Aug 2014 11:30 AM PDT 'பொறாமை என்பது கோழைகளின் கோபம்' என்றார் ஓஷோ. ரத்த உறவுகளாகவே இருந்தாலும் பொறாமை இல்லாமல் இருக்காது. அதன் அளவு வேண்டுமானால் வேறுபடலாமே தவிர, பொறாமை அறவே இல்லை என்பதை ஏற்க முடியாது. அண்ணன் – தம்பிக்கி டையே… அக்கா – தங்கைக்கிடையே… நண்பர்களுக்கிடையே… மேலதிகாரிக்கும் ஊழியருக்கும் இடையே… இப்படி எல்லா இடங்களி லும், எல்லார் மனங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிற உணர்வு பொறாமை. ரத்த பந்தங்களுக்கிடையிலேயே பொறாமை இருக்கும் என் கிற போது, சம்பந்தமே இல்லாத வேறு வேறு சூழலில் பிறந்து, வளர்ந்து, வாழ்க்கையில் இணைகிற ... |
| Posted: 06 Aug 2014 11:16 AM PDT 'அறிவாளிகள் பிரச்னைகளைத் தீர்க்கிறார்கள். மேதைகள் பிரச்னை களைத் தவிர்க்கிறார்கள்' – இப்படியொரு ஆங்கிலப் பொன்மொழி உண்டு. நீங்கள் அறிவாளியா? மேதையா? பிரச்னை… பிரச்னை… பிரச்னை… எல்லாருக்கும் எப்போதும் ஏதோ ஒரு பிரச்னை. அதை எப்படித் தீர்ப்பது என்கிற தவிப்பு. அது தீர்வதற்குள் இன்னொரு பிரச்னை… பிறகு அதன் பின் ஓட்டம்… இப்படியே வாழ்நாள் முழுக்க பிரச்னை… பிரச்னை… பிரச்னைகளைத் தீர்க்கும் வழிகளைப் பற்றி யோசிப்பதற்குப் பதில், அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, சந்தோஷமாக வாழ என்ன வழி என யோசித்துப்பாருங்களேன்… தீர்வுகளைத் ... |
| உலகைத் தாங்குவது அன்பு–காந்தியின் பொன்மொழிகள் Posted: 06 Aug 2014 11:01 AM PDT * அணுக்களிடையே இணைக்கும் சக்தி இருப்பதால்தான், உலகம் பொடிப்பொடியாக உதிர்ந்துவிடாமல் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அது போலவே, உயிர்களிடத்தும் அன்பு என்னும் இணைக்கும் சக்தி இருக்க வேண்டும். அன்பு உள்ள இடத்திலேயே, உயிர் இருக்கிறது. பகைமை அழிவையே தருகிறது. மனித ஜாதி அழியாமல் ஜீவித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், இணைக்கும் சக்தியே. இது பிரிக்கும் சக்தியை விடப் பெரியது. * உண்மை இன்றேல் அன்பும் இல்லை. உண்மை இல்லாமல் பாசம் இருக்கலாம். உதாரணம், பிறர் கெடத் தான் வாழும் தேசபக்தி. உண்மை ... |
| Posted: 06 Aug 2014 10:59 AM PDT பிரான்சு தேசத்தில் பாரிஸ் நகரத்தில் ஒரு பல்கலைக்கழக மனோதத்துவப் பேராசிரியர்,வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது சொன்னார், ''உலகிலேயே சிறந்த மனிதன் நான் தான்,'' உடனே ஒரு மாணவன் தைரியமாக எழுந்து ,''உங்களால் அதை நிரூபிக்க முடியுமா?''என்று கேட்டான். - அடுத்து ஆசிரியர்,''உலகிலேயே சிறந்த நாடு எது?''என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார். - மாணவர்கள் அனைவரும் பிரான்சு தேசக்காரர்களே. எனவே அவர்கள்,''பிரான்சு தான் சிறந்த நாடு,''என்றனர். - பின் ஆசிரியர் கேட்டார்,''பிரான்சிலேயே சிறந்த ... |
| உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்! Posted: 06 Aug 2014 10:46 AM PDT விருப்பமுள்ளவர்கள் உங்கள் மொபைல் போனின் Screenshot -ஐ இங்கு பதிவிடுங்கள்! இது என்னுடைய Tab2 ஸ்க்ரீன்ஷாட் . GT-P3100 ROM: Sungsonic™ HD |
| கிழமைகள்… பலன்கள்… பரிகாரங்கள்… Posted: 06 Aug 2014 10:43 AM PDT பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறப்பெடுக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவான அவர்களுடைய செயல்பாடுகளின் பலாபலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. எண்கணித அடிப்படையில் கிழமைகள், குறிப்பிட்ட கிழமையில் பிறந்த அன்பர்களது குணநலன்கள், அவர்களுக்கான பலாபலன்கள், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பரிகார வழிபாடுகள் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. அதுபற்றி நாமும் அறிவோம். ஞாயிற்றுக்கிழமை கடின வேலைகளையும் மிக எளிதாகவும் திறமையாகவும் முடித்து ... |
| 3000 மதிப்பீடுகள் கடந்த கிருஷ்ணாம்மா... Posted: 06 Aug 2014 10:25 AM PDT 3000 மதிப்பீடுகள் கடந்த நம் ஈகரை சமையல் ராணி கிருஷ்ணாம்மாவை வாழ்த்துவோம் வாங்க மென்மேலும் பல்லாயிரம் மதிப்பீடுகள் பெற மனமார்ந்த வாழ்த்துகள் கிருஷ்ணாம்மா |
| Posted: 06 Aug 2014 10:23 AM PDT பார்வையற்ற இளைஞன் ஒருவனை சிலர் புத்தரிடம் அழைத்து வந்தனர். அவர்கள் "இந்த இளைஞன் வெளிச்சத்தை பற்றி எவ்வளவு சொன்னாலும் நம்ப மறுக்கிறான்" என்று கூறினர். அப்போது பார்வையற்ற இளைஞன் "வெளிச்சத்தை நான் தொட்டு பார்க்க வேண்டும். சுவைத்து பார்க்க வேண்டும். அதன் வாசனையையோ அல்லது ஓசையையோ நான் உணர வேண்டும். இவை எதுவும் இல்லாத வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதை நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?" என்றான். அவனுடன் வந்தவர்கள் புத்தரிடம், "நீங்கள் தான் வெளிச்சம் உண்டு என்பதை அவன் நம்பும்படி செய்ய வேண்டும்" என்று ... |
| Posted: 06 Aug 2014 10:23 AM PDT பெயர்:சே.சையது அலி சொந்த ஊர்:வடகரை ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:இணையம் பொழுதுபோக்கு:புத்தகம் படிப்பது தொழில்:மின்சாரப்பணியாளர் மேலும் என்னைப் பற்றி:புதிய நண்பர்களைத்தேடுவது நட்பை தொடர்வது |
| ஐந்தாயிரம் பாசம்மிகு மதிப்பீடுகளுடன் ஈகரையில் ஜொலிக்கும் பானு அக்காவை வாழ்த்தலாம் வாங்க Posted: 06 Aug 2014 10:18 AM PDT ஐந்தாயிரம் மதிப்பீடுகள் என்ற கடினமான இலக்கை உறவுகளின் பாசக்கரங்களை கொண்டு தகர்த்தெறிந்த தங்கத்தாரகை பானு அக்காவை வாழ்த்தும் அன்புத்தம்பி ஹர்ஷித் வாழ்த்துக்கள் அக்கா |
| Posted: 06 Aug 2014 10:07 AM PDT அம்மா என்பது மூன்ரழுது அப்பா என்பது மூன்றழுது அவர்கள் என்னக்கு தந்த வாழ்வு மூன்றழுது வாழ்வில் தந்த அன்பு மூன்றழுது அன்பில் கிடைத்த வெற்றி மூன்றழுது ஆனால் அவர்கள் என்னக்கு மூன்றழுது அல்ல என் பெயரின் முன்னால் ஒளிந்திருக்கும் முதலழுது. |
| இரண்டு தவளைகள் - சிறுகதைகள் தொடர் Posted: 06 Aug 2014 10:06 AM PDT சில தவளைகள் காட்டு வழியாக போய் கொண்டு இருந்தன. அங்கே ஒரு ஆழமான குட்டையில் இரண்டு தவளைகள் விழுந்து விட்டன. அதை பார்த்த மற்ற தவளைகள், அங்கே இருந்து மேலே வர முடியாது, நீங்க ரெண்டு பேரும் செத்து போன மாதிரிதான், அப்டீன்னு சொல்லி கத்திகிட்டு இருந்ததாம். இதை கேட்ட ஒரு தவளை உள்ளே விழுந்து செத்து போனதாம். மற்ற தவளை மிகவும் வேகமாக முயற்ச்சி செய்து கொண்டு இருந்த்தது. இதை கண்ட மற்ற தவளைகள் முன்பை விட அதிகமாக விழுந்து உயிரை விடும்படி கத்தியதாம். இதை கண்ட தவளை முன்பை விட அதிகமாக முயற்சித்து வெளியே ... |
| 'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு Posted: 06 Aug 2014 10:01 AM PDT 'தமிழர்கள் அனைவரும் இந்தி கற்க வேண்டும்' என, இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் இருந்தவர் மார்கண்டேய கட்ஜு. இவர், தற்போது, இந்திய பிரஸ் கவுன்சில் தலைராக உள்ளார். பரபரப்பு : தன், 'பேஸ்புக்' பக்கத்தில், திடீர் திடீரென பல கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருபவர்.இவர் நேற்று தன், 'பேஸ் புக்' பக்கத்தில், தமிழர்கள் இந்தி கற்பது குறித்து, ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார்.அக்கட்டுரையில் ... |
| Posted: 06 Aug 2014 09:42 AM PDT "சிவா எங்கே இருக்கீங்க?" கேட்டவர் பெரிய தொழிலதிபர் மாணிக்கம். "வீட்லதான் சார்" "நான் உங்க ஆபீஸ் வாசலில்தான் வெயிட் பண்றேன். சீக்கிரம் வாங்க. உங்ககிட்டே ஒரு முக்கியமான வேலையை ஒப்படைக்கணும். அதுக்கு அட்வான்ஸா அம்பதாயிரம் ரூபாயை இப்ப வந்து வாங்கிக்கங்க." "இதோ வர்றேன் சார்." 'அடடா.. நாம பணக்கஷ்டத்தில் இருக்கோம்னு கடவுள் நமக்காக ஒரு ஆளை உதவி செய்ய அனுப்பியிருக்கார்' என்று நினைத்தபடி வண்டியை எடுத்தான் சிவா. வரும் வழியில் ஓரிடத்தில் கசகசவென்று கூட்டம். சிவா தன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு ... |
| இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ! Posted: 06 Aug 2014 09:02 AM PDT இன்று பிறந்தநாள் காணும் Ayyasami RAM அவர்களை வாழ்த்துவோம் ஆயிரம் ஆயிரம் பூக்கள் அய்யாசாமி ராம் அவர்களுக்கு , அவரது பிறந்த தின வாழ்த்துகளுடன் இடைவிடாது --------------- இடைவெளி விடாது ,சிரிப்பு தரும் சிறப்பு பதிவுகள் . தொடருங்கள் அய்யா அவர்களே ரமணியன் |
| 2000 மதிப்பீடுகள் பெற்ற ரேவதி அவர்களை வாழ்த்தலாம் வாங்க Posted: 06 Aug 2014 08:18 AM PDT 2000 மதிப்பீடுகள் பெற்ற கணம் கணக்காளர் அம்மணி ரேவதி அவர்களுக்கு வாழ்த்துகள். இன்னும் பல ஆயிரம் மதிப்பீடுகள் பெற வாழ்த்துகள். |
| Posted: 06 Aug 2014 06:25 AM PDT இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது 1945, ஆக., 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதன் நினைவுநாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அணுகுண்டு பாதிப்பால் ஹிரோஷிமா நகரில் பலியான பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கு உணர்த்தும் நாளாகவும், இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக வரலாற்றில் அமெரிக்கா தான் முதன் முதலாக அணுகுண்டு தாக்குதலை தொடங்கியது. ""லிட்டில்பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த "பி-29 ரக எனோலாகெய்' ... |
| ஆகஸ்ட் 6: கெரம் ஷாலோம் எல்லையை இஸ்ரேல் திறந்துவிட்ட நாள் Posted: 06 Aug 2014 06:09 AM PDT இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடையிலான எல்லை நாளுக்கு நாள் மாறிவரும் அளவுக்குக் குடியேற்றங்கள், தாக்குதல்கள் என்று கடுமையாக நடந்துகொள்கிறது இஸ்ரேல். இதே இஸ்ரேல், பாலஸ்தீனர்களுக்கு அவ்வப்போது கொஞ்சம் கருணை காட்டுவதும் உண்டு. அப்படியான ஒரு சந்தர்ப்பமும் வந்தது. காஸா இஸ்ரேல் - எகிப்து இடையிலான கெரம் ஷாலோம் எல்லையை 2004 ஜூலை 18 முதல் மூடியிருந்தது இஸ்ரேல். இதனால், எகிப்து சென்றிருந்த பாலஸ்தீனர்கள் பலர் காஸாவுக்குள் நுழைய முடியாமல் பரிதவித்தனர். சுமார் 2,000-க்கும் மேற்பட்டவர்கள் எங்கும் செல்ல முடியாமல் ... |
| ஸ்மார்ட் போன்களின் திரை தொடர்ந்து பெரிதாவது ஏன்? Posted: 06 Aug 2014 06:04 AM PDT அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்துகிற எந்த ஸ்மார்ட் மொபைல் போன்களின் ஹார்ட்வேர் அம்சங்களைக் கவனித்துப் பார்த்தால், அவற்றில் இரண்டு விஷயங்கள் நமக்குப் புலப்படும். முதலாவதாக, புதிய போன் அறிமுகமாகும்போது, அதன் முந்தைய ஸ்மார்ட் போனைக் காட்டிலும், இதன் திரை சற்றுப் பெரியதாக அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாவதாக, அதன் பேட்டரியின் திறன் சற்று உயர்வாக இருக்கும். எடுத்துக் காட்டாக, சாம்சங் காலக்ஸி ஸ்மார்ட் போன்களைப் பார்க்கலாம். காலக்ஸி எஸ் போனின் திரை 4 அங்குலமாக அறிமுகமானது. இதன் திரை 233 பிக்ஸெல் அடர்த்தியுடன் ... |
| போய்விடு வலியே… போய்விடு…!-மன அழுத்தம் Posted: 06 Aug 2014 05:44 AM PDT `20-ம் நூற்றாண்டின் இயல்புகளில் ஒன்றாக மன அழுத்தம் உருவாகிவிட்டது' என்கிறார் ஆஸ்திரியாவைச் சேர்ந்த மனஅழுத்த நிபுணர் டாக்டர் கான் செல்லி. மனஅழுத்தம் என்பது 1930-ம் ஆண்டுக்கு முன்பு அதிகமாக வழக்கில் வராத சொல்லாகும். பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் மொழிகளில் மனஅழுத்தத்தைக் குறிக்கும் சொல்லே வழக்கில் இல்லை என்று கான் செல்லி கூறுகிறார். பிற்காலத்தில்தான் பிரான்சில் `லி ஸ்ட்ரெஸ்' என்றும், ஜெர்மனில் `டெர் ஸ்ட்ரெஸ்' என்றும் புதிய வார்த்தைகளை உருவாக்கிக் கொண்டனர் என்று அவர் குறிப்பிடுகிறார். உண்மையில் ... |
| ஆகஸ்ட் 1 - 7 : உலக தாய்ப்பால் வாரம் Posted: 06 Aug 2014 04:29 AM PDT உலகிலேயே கலப்படம் செய்ய முடியாத ஓர் உணவு உண்டென்றால் அது தாய்ப்பால்தான். ஒரு குழந்தைக்கு உலகிலேயே சிறந்த உணவும் அதுதான். சீம்பாலின் மகிமை குழந்தை பிறப்புக்குப் பிறகு, சில நாட்கள் மார்பகங்கள் பாலைச் சுரப்பதில்லை. சீம்பாலைத்தான் சுரக்கின்றன. மஞ்சள் நிறத்தில் இருக்கும் இதைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது எனச் சில முதியவர்கள் கூறுவார்கள். அதனால் முதல் மூன்று நாட்களுக்குத் தாய்ப்பால் புகட்டக்கூடாது என்றும் கூறுபடுவது உண்டு. ஆனால், இது பெரும் தவறு. குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், நோய்த் ... |
| முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்? Posted: 06 Aug 2014 04:23 AM PDT இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் ஒரு பதிவு இடப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி வரும் கடிதங்களை கொச்சைப்படுத்தும் வகையில் அந்தப் பதிவிற்கு தலைப்பு ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. (How meaningful are Jayalalitha's love letters to Narendra Modi?) ஷெனாலி டி வடுகே என்பவர் எழுதியுள்ள அந்தப் பதிவின் சாரம்சம்: "இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு கவுன்சிலில் ... |
| Posted: 06 Aug 2014 04:22 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 06 Aug 2014 01:55 AM PDT இயல்புதானே? பண்டித மணி கதிரேசன் செட்டியார் ஒருநாள் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரைப் பார்க்க சென்றிருந்தார். அவர் ஆதீனத்தை உடல் தாழ்ந்து வணங்கும் போது கால் தடுமாறிக் கீழே விழப்போனார். ஆதீனத்தலைவர்அவரை சட்டென்று எழுந்து தாங்கிப் பிடித்துக் கொண்டார். செட்டியார்மறுபடியும் ஆதீனத்தை வணங்கி,''எல்லாமே இயல்பாகத்தானே நடந்திருக்கிறது,சுவாமி,''என்றார். ஆதீனத் தலைவர் அவர் சொல்வது விளங்காமல்,''இயல்பாக என்ன இப்போது நடந்தது?''என்று கேட்டார். கதிரேசன் செட்டியார் விளக்கம் சொன்னார்,''எங்களைப் போன்ற அடியவர்கள் ... |
| பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Posted: 06 Aug 2014 12:06 AM PDT தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா ! அன்பு நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் ! இவை எல்லாமே ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |