Tamil News | Online Tamil News |
- அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி எப்போது
- வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவதில் முதலிடத்தில் தமிழக நிறுவனங்கள்
- 'எனக்கு ஒன்றுமில்லை; நல்லாயிருக்கேன்': கட்சியினருக்கு தெம்பூட்டிய விஜயகாந்த்
- கலவை சாதத்துடன் மசாலா முட்டை : சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு
- வாஜ்பாய் - மோடி என்ன வித்தியாசம்? அமித் ஷா சொல்கிறார்
- லோக்சபா தேர்தல் தோல்விக்கு ராகுல் காரணமில்லை : காங்கிரஸ் விளக்கம்
- திட்ட கமிஷனுக்கு மூடுவிழா: சுதந்திர தின விழாவில் மோடி அறிவிப்பு
- டில்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் புதுமை: சாதாரண மக்களுக்கு முக்கியத்துவம்
- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்: உருக்கமான உரையால் சமூக போக்கை மாற்ற முயற்சி
- பா.ஜ., வெற்றிக்கு காங்., தான் காரணம்: அத்வானி பெருந்தன்மை
| அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி எப்போது Posted: சென்னை: அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும், 14 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா? என்ற ஏக்கத்தில் உள்ளனர். இவர்களைப் போலவே, பள்ளிகளின் நிர்வாகிகளும், அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.தமிழகத்தில், கடந்த, 2011ம் ஆண்டு முதல், ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா, ஐந்து தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்பு துவங்கப்பட்டது. இத்திட்டம் படிப்படியாக, கடந்த கல்வியாண்டு முதல், உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், சில அரசு பள்ளிகளில், ஆறு, ஒன்பது, பிளஸ் 1 ... |
| வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவதில் முதலிடத்தில் தமிழக நிறுவனங்கள் Posted: சென்னை:மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய ஆய்வில், தமிழகத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் நிதியைப் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.குழந்தைகள், பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், பணியாளர்கள் என, பலரது மேம்பாட்டிற்கு என, தனித்தனியாக தொண்டு நிறுவனங்கள், நல அமைப்புகள் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன.இவை, பெரும்பாலும் இங்குள்ள நிலைமையை எடுத்துக் கூறி, வெளிநாட்டில் இருந்து நிதியைப் பெற்று செலவழித்து வருகின்றன.இந்த வகையில், 2012ல், அதிகபட்சமாக, 2,285 கோடி ரூபாய் பெற்று, டில்லி முதலிடத்தையும்; 1,704 கோடி ரூபாய் ... |
| 'எனக்கு ஒன்றுமில்லை; நல்லாயிருக்கேன்': கட்சியினருக்கு தெம்பூட்டிய விஜயகாந்த் Posted: சுதந்திர தினத்திற்காக, நீண்ட நாட்களுக்கு பின், தே.மு.தி.க., தலைமை அலுவலகம் வந்த, விஜயகாந்த், கட்சியினருக்கு தெம்பூட்டும் வகையில் பேசினார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கடந்த மாதம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அங்கு இரண்டு வாரம் தங்கியிருந்தவர், சமீபத்தில் சென்னை திரும்பினார்.அதன்பிறகு, கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காமல், வீட்டிலேயே தங்கியிருந்து ஓய்வெடுத்து வந்தார்.சென்னையில் இருக்கும்போது, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து செல்வதை, விஜயகாந்த் வழக்கமாக வைத்திருந்தார்.கட்சி செயல்பாடுகள் தொடர்பாக, கட்சி ... |
| கலவை சாதத்துடன் மசாலா முட்டை : சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு Posted: சென்னை: ''தமிழகத்தில் உள்ள, அனைத்து சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு, பல வகை கலவை சாதத்துடன், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படும்,'' என, சுதந்திர தின விழாவில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.சென்னை, கோட்டை கொத்தளத்தில், தேசியக் கொடியேற்றி, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்பது பழமொழி. 'ஏழை சொல் தான், புனித ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும்' என்ற புதுமொழியை, தமிழகத்தில் நிலைநாட்டிக் கொண்டிருப்பது இந்த அரசு.விளை நிலங்கள் வழியே, 'கெய்ல்' நிறுவன குழாய் பதிப்பு திட்டம்; தஞ்சையில், 'மீத்தேன் எரிவாயு' ... |
| வாஜ்பாய் - மோடி என்ன வித்தியாசம்? அமித் ஷா சொல்கிறார் Posted: புதுடில்லி: ''இதுவரை, பா.ஜ.,வைச் சேர்ந்த வாஜ்பாய், நரேந்திர மோடி ஆகிய இரு பிரதமர்கள், சுதந்திர தினவிழாவில் கொடியேற்றியுள்ளனர். ஆனால், இந்த இரண்டு சம்பவங்களுக்குமே, அதிக வித்தியாசம் உள்ளது'' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசினார்.பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா பேசியதாவது:பா.ஜ.,வின் சாதாரண தொண்டராக இருந்து, நாட்டின் பிரதமராக உயர்ந்து, தற்போது தேசியக் கொடி ஏற்றியுள்ளார், நரேந்திர மோடி.இதற்கு முன், பா.ஜ.,வைச் சேர்ந்த வாஜ்பாயும், பிரதமராக இருந்து, தேசியக் கொடி ஏற்றிஉள்ளார். ஆனால், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது.வாஜ்பாய் பிரதமராக ... |
| லோக்சபா தேர்தல் தோல்விக்கு ராகுல் காரணமில்லை : காங்கிரஸ் விளக்கம் Posted: புதுடில்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ராகுல் காரணமில்லை. சோனியா, ராகுல் தலைமையின் கீழ், காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சி அடையும்,'' என, காங்., மூத்த தலைவர் அந்தோணி கூறினார்.சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய, காங்., மூத்த தலைவரும், முன்னாள் ராணுவ அமைச்சருமான அந்தோணி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, தன் அறிக்கையை, நேற்று முன்தினம், கட்சி தலைவர் சோனியாவிடம் அளித்தது.இதுகுறித்து, அந்தோணி கூறியதாவது:அறிக்கையில் உள்ள ... |
| திட்ட கமிஷனுக்கு மூடுவிழா: சுதந்திர தின விழாவில் மோடி அறிவிப்பு Posted: என் அன்பு நாட்டு மக்களே!இன்று, இந்த நாட்டில் உள்ள இந்தியர்களும், வெளிநாட்டில் உள்ள இந்தியர்களும், சுதந்திர தின திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். இந்த புனிதமான சுதந்திர திருநாளில், இந்தியாவின் முதல் சேவகனான நான், நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த சுதந்திர தின திருவிழாவில், நாம் அனைவரும் உறுதி எடுப்போம். 'தாய் நாட்டுக்காக பணியாற்றுவோம்; ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், தலித் இன மக்கள், சுரண்டப்பட்டோர் மற்றும் இந்த நாட்டின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைப்போம்' என உறுதி எடுப்போம்.என் அன்பு நாட்டு மக்களே, ... |
| டில்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் புதுமை: சாதாரண மக்களுக்கு முக்கியத்துவம் Posted: புதுடில்லி:தலைநகர் டில்லியில், நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், இதுவரை இல்லாத வகையில், வி.ஐ.பி.,க்களுக்கு இணையாக, சாதாரண மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால், ஏராளமான மக்கள், விழாவில் பெரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.டில்லியில், நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, பல புதுமைகள் அரங்கேறின. வழக்கமாக, சுதந்திர தின விழா நடக்கும்போது, பார்வையாளர் வரிசையில் வி.ஐ.பி.,க்களுக்கு தான், முக்கியத்துவம் அளிக்கப்படும்.வி.ஐ.பி.,க்களுக்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள இருக்கைகள் மட்டுமே சாதாரண மக்களுக்கு ... |
| நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்: உருக்கமான உரையால் சமூக போக்கை மாற்ற முயற்சி Posted: புதுடில்லி: ''இந்திய சுதந்திர தின நாளன்று, என் அன்புடைய தேசமக்களுக்கு, பாரதத்தின் இந்த பிரதான சேவகனின் வாழ்த்துக்கள். நான் உங்கள் மத்தியில் பிரதம மந்திரியாக இல்லை; பிரதான சேவகனாக வந்துள்ளேன்,'' என, உருக்கமாக துவங்கிய பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை; வழக்கமான சலுகை திட்ட அறிவிப்புகள், அரசின் சாதனை விளக்கங்கள், அரசியல் முழக்கங்கள் இல்லாத, பாரத மக்களை நாட்டின், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காக தனிப்பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் படி ஊக்குவிக்கும் உரையாக அமைந்தது.பாரத குடிமக்களின் தனிநபர் கடமைகள் மற்றும் பொறுப்புகளை பற்றி அவர் உரையாற்றிய ... |
| பா.ஜ., வெற்றிக்கு காங்., தான் காரணம்: அத்வானி பெருந்தன்மை Posted: புதுடில்லி:''லோக்சபா தேர்தலில், பா.ஜ., மகத்தான வெற்றி பெற்றதற்கு, நரேந்திர மோடியின் பிரசாரத்தை விட, காங்கிரஸ் கட்சியினர் செய்த தவறுகளே, முக்கிய காரணமாக அமைந்தது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறினார்.பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியதாவது:சுதந்திர தின விழாவில், பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, மிகச் சிறப்பாக இருந்தது. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நலன் அளிக்கும், பல நல்ல திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில், பா.ஜ., மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, மிகப் பெரிய வெற்றியை, பா.ஜ.,வுக்கு நாட்டு மக்கள் பரிசளித்துள்ளனர். 282 ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 16,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |