Tamil News | Online Tamil News |
- இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட பயங்கர சதி: கைது செய்யப்பட்டவர்கள் 'பகீர்' வாக்குமூலம்
- அலுவலக பிரிப்பில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மோதல்: ஆக்கிரமித்து கொள்வதால் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சிக்கல்
- தகவல் தொழில்நுட்ப குற்ற சட்ட திருத்தம்: அஞ்சி நடுங்கும் வலை பதிவர்கள்
- ஐந்து ஆண்டில் கூடுதல் மின் உற்பத்தி112 மெகாவாட் மட்டுமே அதிகரிப்பு'
- சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு: அமைச்சர்கள் கலக்கம்
- ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: மத்திய அரசு அதிரடி
- இந்திய பிரதமர் மோடி சிறந்த நிர்வாகி: அமெரிக்க எம்.பி.,க்களுக்கான அறிக்கையில் தகவல்
- சுதந்திர தின சலுகை: பெட்ரோல் விலை குறைப்பு
- தமிழக சுகாதார துறையின் அலட்சியத்தால் மக்கள் அதிர்சசி:'எபோலா வைரஸ்' தடுப்பு முன் எச்சரிக்கையில் கவன குறைவு?
- மூத்த அதிகாரிகள் நியமனம்: பிரதமர் மோடியே உத்தரவு
| இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட பயங்கர சதி: கைது செய்யப்பட்டவர்கள் 'பகீர்' வாக்குமூலம் Posted: சென்னை:இந்து முன்னணி மாவட்ட தலைவர், சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்போர், இந்து தலைவர்களின் உயிருக்கு குறிவைத்து, தமிழகத்தில் பலர் பதுங்கி இருப்பதாக, வாக்குமூலம் அளித்து இருப்பதால், அவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.கொடூரமாக...:கடந்த ஆண்டு, பா.ஜ., மாநில நிர்வாகிகள் அரவிந்த ரெட்டி, ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன், மதுரையில் சுரேஷ் உள்ளிட்ட பலர், அடுத்தடுத்து கொடூரமாக கொல்லப்பட்டனர்.இந்த கொலை வழக்குகளில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்ட பின், ... |
| Posted: ஐதராபாத்: ஆந்திராவிலிருந்து, தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின், அங்கு நிலவும் நிர்வாக சிக்கல்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இரு மாநிலங்களுக்கும், தனித்தனியாக பிரிக்கப்பட்ட அலுவலகங்கள் போக, பொதுவாக நிர்வகிக்க வேண்டிய அலுவலகங்கள் விவகாரத்தில், இரு மாநிலங்களும் மோதிக் கொள்கின்றன; இதனால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். பல கட்சிகள் அந்த கோரிக்கையை, பூசி மெழுகி வந்த நிலையில், காங்., தலைமையிலான, ... |
| தகவல் தொழில்நுட்ப குற்ற சட்ட திருத்தம்: அஞ்சி நடுங்கும் வலை பதிவர்கள் Posted: தகவல் தொழில் நுட்பக் குற்றங்களைத் தடுப்பதற்காக, சிறப்பு சட்டம் ஒன்றை, நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வந்திருக்கிறது, தமிழக அரசு.அதாவது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது, இந்த சட்டத்தின் மீது வழக்குப் பதிந்து, அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், ஓராண்டு சிறையில் தள்ள, இந்த சட்டம் வகை செய்கிறது.சமூக வலைதளங்களில், சமூகம் குறித்த தங்கள் ஆதங்கங்களை பதிவு செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில், இது பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.குறிப்பாக, அரசுக்கு எதிரான கருத்துக்களை, சமூக வலைதளங்களில் ... |
| ஐந்து ஆண்டில் கூடுதல் மின் உற்பத்தி112 மெகாவாட் மட்டுமே அதிகரிப்பு' Posted: சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (டான்ஜெட்கோ), மின் உற்பத்தி அதிகரிப்பு, 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 112 மெகாவாட்டாக மட்டுமே இருந்தது' என, இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 2006 முதல், 2011 வரை, தி.மு.க., ஆட்சியில் இருந்தது. 2011 மே 13ம் தேதி முதல் அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளது.தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, 2007 2012 வரையிலான, ஐந்தாண்டு திட்ட காலத்தில், பெரும்பாலான காலம், அதாவது, நான்கு ஆண்டுகள், தி.மு.க., தான் ஆட்சியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.தணிக்கை அறிக்கை ... |
| சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு: அமைச்சர்கள் கலக்கம் Posted: சென்னை: சட்டசபை கூட்டத்தொடர் முடிந்து விட்டதால், விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்ற தகவல், அமைச்சர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.முதல்வர் ஜெயலலிதா, அவ்வப்போது அமைச்சரவையை மாற்றி வருகிறார். எனவே, எப்போது பதவிக்கு ஆபத்து வருமோ? என்ற அச்சத்துடன், அமைச்சர்கள் இருந்தனர்.ஆனால், கடந்த ஒரு மாதமாக, அமைச்சர்கள் நிம்மதியாக இருந்தனர். ஏனெனில், சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வந்தது.கூட்டத்தொடர், நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து, விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்ற தகவல், தலைமைச் செயலகத்தில் பரவி உள்ளது.இதனால், ... |
| ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: மத்திய அரசு அதிரடி Posted: மதுரை: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உட்பட இந்திய ஆட்சிப் பணியில் உள்ள அதிகாரிகளுக்கு மோடியின் புதிய அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அகில இந்திய பணிகள் 1968 ல் விதி 3 (1)ல் தற்போது புதிதாக 1(ஏ) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணியாளர் நலத்துறை நேற்று இந்த அறிவிப்பை கெஜட்டில் வெளியிட்டுள்ளது. இதில் அனைத்து அதிகாரிகளும் பின்வரும் 6 குணங்களை கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.1. உயர் அறநெறியுடன், நம்பிக்கை, நாணயமும் கொண்டிருக்க வேண்டும்.2. அரசியல் கட்சிகளிடம் பாரபட்சம் இன்மை,3. கடமையை செய்யும்போது விதிகள், நியாயங்களை ... |
| இந்திய பிரதமர் மோடி சிறந்த நிர்வாகி: அமெரிக்க எம்.பி.,க்களுக்கான அறிக்கையில் தகவல் Posted: வாஷிங்டன்: 'இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சிறந்த நிர்வாகி; அமெரிக்காவுடனான உறவை புதிய விதத்தில் புதுப்பித்துக் கொள்ள விரும்புபவர்' என, அமெரிக்க பார்லிமென்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அறிக்கை:உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் நாடுகளைப் பற்றி, அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதற்காக, பார்லிமென்ட் ஆராய்ச்சி சேவை - சி.ஆர்.எஸ்., என்ற அமைப்பு, அமெரிக்காவில் உள்ளது. அதில், தெற்காசிய விவகாரங்களில் வல்லுனரான, கே.ஆலன் குரோன்ஸ்டாட் தயாரித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவின் சமீபத்திய அரசியல் வரலாற்றில், ... |
| சுதந்திர தின சலுகை: பெட்ரோல் விலை குறைப்பு Posted: புதுடில்லி:'பெட்ரோல் விலை, லிட்டருக்கு, குறைந்தபட்சம், 1.89 ரூபாய் முதல் அதிகபட்சம், 2.38 வரை, ஆகஸ்ட் 15ம் தேதி முதல் விலை குறைத்து விற்கப்படும்' என, மத்திய பெட்ரோலியத் துறை இணைஅமைச்சர், தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்தார்.நான்கு ஆண்டுகளுக்கு பிறகு...: பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை கட்டுப்பாட்டை, 2010 ஜூன் முதல், மத்திய அரசு கைவிட்டு விட்டது. பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் தான், அவ்வப்போது நிலவும் சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்ப, விலையில் மாற்றம் செய்து வருகின்றன.சமீப காலமாக, 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலை மாற்றம் ... |
| Posted: சென்னை: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும், 'எபோலா' வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மேற்கு ஆப்ரிக்க நாட்டில் இருந்து, சென்னை வந்த தேனி மாவட்ட வாலிபரின் ரத்த மாதிரி, ஏற்கனவே கூறியது போல், புனே நகர ஆய்வு மையத்திற்கு அனுப்பப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.உயிர்கொல்லி நோய் பரவலை தடுக்கும் விஷயத்தில், தமிழக சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கையுடன் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், 'எபோலா' வைரஸ் (உயிர்கொல்லி நோய்) தாக்கம் அதிகரித்துள்ளது; இதுவரை, 970 பேர் வரை இறந்துள்ளனர். அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளால், நோய் பரவும் ... |
| மூத்த அதிகாரிகள் நியமனம்: பிரதமர் மோடியே உத்தரவு Posted: புதுடில்லி:மூத்த அதிகாரிகள் நியமனங்களை, பிரதமர் நரேந்திர மோடியே மேற்கொள்வதாகவும், உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங்கின் ஒப்புதல் பெயரளவுக்குத் தான் பெறப்படுவதாகவும் கூறப்படுகிறது.மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் நியமனம் தொடர்பான விவகாரங்களை கவனிக்க, நியமனங்களுக்கான கேபினட் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிட்டியில், பிரதமர், உள்துறை அமைச்சர், அந்தந்த துறை அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பர். இதை பிரதமர் மோடி மாற்றிஅமைத்துள்ளார்.அந்தந்த துறை அமைச்சர்கள் இல்லாமல், பிரதமரும், உள்துறை அமைச்சரும் இணைந்து, நியமனங்களை மேற்கொள்ள, திருத்தங்களை மோடி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 14,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |