Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


முதல்வர் கொடுத்த காலி 'கவர்': பரிசு இல்லாததால் வீரர்கள் ஏமாற்றம்

Posted:

சோனேபட்:அரியானா முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா கொடுத்த பரிசு 'கவரில்' காசோலை இல்லாததால் வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற அரியானாவை சேர்ந்த சுஷில் குமார், யோகேஷ்வர் தத் உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்களுக்கு பாராட்டு மற்றும் பரிசுப்பணம் தரப்பட்டது. பதக்கம் வெல்லாத மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் தலா ரூ. 5 லட்சம் கொடுக்க முடிவு செய்தனர்.இந்த விழா சமீபத்தில் நடந்தது. இதில் பிரசாந்த் கர்மாகர் (நீச்சல்), ஜெய்தீப் சிங்கிற்கு (வட்டு எறிதல்) அரியானா முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா பரிசு கொடுத்தார்.இதைத் திறந்து ...

ஒப்பந்தத்தில் கோட்டை விட்ட அரசு விரைவு கழகம்: தனியாருக்கு 4.05 கோடி ரூபாய் ஆதாயம்

Posted:

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்கு வரத்து கழகம், தண்டத் தொகை விதிப்பதற்கான விதியை, ஒப்பந்தத்தில் சேர்க்க தவறியதாலும், தாமதமாக வழங்கப்பட்ட அடிச்சட்டங்களுக்கு உயர்த்தப்பட்ட சுங்க வரி செலவை ஈடு கட்டியதாலும், தனியார் நிறுவனத்திற்கு, 4.05 கோடி ரூபாய் ஆதாயம் கிடைத்து உள்ளது.36 வாரங்கள் தாமதம்:இது குறித்து, இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை அறிக்கையில் அளித்துள்ள விவரம்: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு, 80 சதவீதத்திற்கும் மேலான அடிச்சட்டங்களை, அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து, சாலை போக்குவரத்து நிறுவனம் (ஐ.ஆர்.டி.,) ...

135 சார் - பதிவாளர் அலுவலகங்களில் ரூ.1,271 கோடி முறைகேடு

Posted:

'தமிழகத்தில், 135 சார் - பதிவாளர் அலுவலகங்களில், சொத்துகளை குறைவாக மதிப்பிடுதல், தவறாக வகைபடுத்துதல் உள்ளிட்ட வழிகளில், 1,271 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன' என, தணிக்கை துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.கடந்த 2012 - 13ம் நிதி ஆண்டுக்கான, தமிழக அரசின், பல்வேறு துறைகளின் நிதி நிர்வாக செயல்பாடுகள் குறித்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் அறிக்கை, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.முறைகேடுகள்:அதில், பத்திரப்பதிவு துறையின், நிதி நிர்வாக செயல்பாடுகள் குறித்த அறிக்கையில், சுட்டிக்காட்டப்பட்டுள்ள ...

இடைத்தேர்தலை சந்திப்பது எப்படி? கட்சியினருடன் ஆலோசிக்கிறார் விஜயகாந்த்

Posted:

அ.தி.மு.க., தரப்பிலான நெருக்கடியை சமாளித்து, உள்ளாட்சி இடைத்தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து, தே.மு.தி.க., நிர்வாகிகளுடன், அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.லோக்சபா தேர்தல் தோல்வியால், தே.மு.தி.க., நிர்வாகிகளில் துவங்கி தொண்டர்கள் வரை, பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால், கட்சியினர் மத்தியில் சோர்வு ஏற்பட்டது.இதனால், கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் மாற்று முகாம் நோக்கி, ஓட்டம் பிடித்து விடுவார்கள் என்ற தகவல் வெளியானது. இதனால், தே.மு.தி.க., தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.இதை தவிர்க்க, ...

வீடியோ விவகாரத்தால் ராகுல் கோபம்: அதிரடி வியூகத்தால் காங்., மேலிடம் கலக்கம்

Posted:

ராகுலை விமர்சித்துப் பேசிய வீடியோ விவகாரம், தமிழக காங்கிரசில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனத்தில், ராகுல் வகுத்துள்ள வியூகத்தால், காங்கிரஸ் மேலிடம் கலக்கம் அடைந்துள்ளது.விசாரணை:நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரிக்க, காங்கிரஸ் மேலிடம் ஏற்பாடு செய்தது.முன்னாள் மத்திய அமைச்சர், ஏ.கே.அந்தோணி தலைமையிலான குழுவினர், இந்த விசாரணையை நடத்தினர். அதில் ஆஜரான, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், ...

குழந்தைகளுக்கு 'அம்மா கிட்': முதல்வர் அறிவிப்பு

Posted:

சென்னை: ''அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் ('அம்மா கிட்')' வழங்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:*திருச்சி, நெல்லை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் மற்றும் புதுக்கோட்டை அரசு ராணியர் மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில், தாய் - சேய் நலப் பிரிவுகள், மேன்மை மிகு மையங்களாக, 60 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும்.இதன் மூலம், 200 படுக்கை வசதி கொண்ட கூடுதல் கட்டடம், நவீன மருத்துவ உபகரணங்கள், ...

சுதந்திர தின கொண்டாட்டம் அதிகாரிகளுக்கு கண்டிப்பு

Posted:

புதுடில்லி:'சுதந்திர தினத்தன்று, டில்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவுக்கு வரும்படி, அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளும், தவறாமல் பங்கேற்க வேண்டும். இல்லையெனில், கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்' என,மத்திய அரசு எச்சரித்துஉள்ளது.மத்திய அரசின் அனைத்து துறை செயலர்களுக்கும், அமைச்சரவை செயலர் அஜித் சேத் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுதந்திர தின கொண்டாட்டம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், 15ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம், டில்லி செங்கோட்டையில், பிரதமர் ...

இந்தியாவுக்கு எதிராக மறைமுக போரில் ஈடுபடும் பாக்.,:பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

Posted:

லே:''நேரடியாக போரிடும் துணிச்சல் இல்லாததால், இந்தியாவுக்கு எதிராக, பயங்கரவாதம் என்ற மறைமுக போரில், பாகிஸ்தான் ஈடுபடுகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.வீரர்கள் மத்தியில் உரை:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இரண்டு நீர்மின் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும், மின் பரிமாற்ற லைன்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டவும், அங்குள்ள, லே மற்றும் லடாக்கிற்கு, நேற்று விஜயம் செய்த, பிரதமர் நரேந்திரமோடி, லே நகரில், ராணுவ வீரர்கள் மற்றும் விமானப் படையினர் மத்தியில் பேசியதாவது:பயங்கரவாதம் உலகளாவிய பிரச்னை. நம் நாட்டில், போரை விட, ...

அரசியல் கட்சிகள், தொழில் குழுமங்கள் ஊடகத்துறையில் செயல்பட தடை: தமிழகத்தில் கட்சிகளுக்கான 'டிவி' சேனல்களின் கதி என்ன?

Posted:

புதுடில்லி: செய்தி மற்றும் கருத்தின் பன்முகத் தன்மையை உறுதி செய்யும் முயற்சியாக, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, 'டிராய்' நேற்று, மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகளின் படி, அரசியல் கட்சிகள் மற்றும் தொழில் குழுமங்கள், ஊடகத்துறையில் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் கட்சி, 'டிவி' சேனல்களின் கதி என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.நாடு முழுவதும், 'டிவி'களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமாக உள்ளது. அதிக வருவாய் கிடைக்கும் அந்தத் துறையில் கிடைத்த லாபத்தைக் கொண்டு, பத்திரிகைகளையும், எப்.எம்., ரேடியோக்களையும், இணையதளங்களையும் ...

லோக்சபா துணை சபாநாயகராக தம்பிதுரை தேர்வு: பா.ஜ., முடிவுக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு

Posted:

பாரதிய ஜனதா, காங்கிரஸ் உட்பட, 11 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதால், லோக்சபா துணை சபாநாயகராக, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, இன்று ஏகமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். அதனால், லோக்சபாவில், அ.தி.மு.க.,வை வழிநடத்தப் போகும், புதிய தலைவர் யார் என்ற, கேள்வி எழுந்துள்ளது.லோக்சபா துணை சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பை, லோக்சபா செயலகம், நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. இதையடுத்து, நேற்று காலை, 10:45 மணிக்கு, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் புடை சூழ, தம்பிதுரை தன் வேட்பு மனுவை, லோக்சபா செயலகத்தில் தாக்கல் செய்தார். ஆதரவு கடிதங்கள்:அவரின் மனுவை, திருச்சி எம்.பி., குமாரும், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™