Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வேட்டி மீதான தடை நீக்கம் உள்பட 17 மசோதாக்கள் நிறைவேற்றம்
- பயிற்சி மருத்துவர் உதவித் தொகை ரூ.13 ஆயிரமாக அதிகரிப்பு
- முதல்வருக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு பாராட்டு
- "திமுகவிடமிருந்து ஜனநாயகத்தை காப்பாற்றப் பாடுபட்டேன்'
- பேரவையில் பேசுவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கே அதிக வாய்ப்பு
- புதிய தமிழகம், ம.ம.க. வெளிநடப்பு
- 3 ஆண்டுகளில் 109 அறிவிப்புகள்
- அரசுத் திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.11,336 கோடி ஒதுக்க துணை மதிப்பீடு
- "நெல்லை நாறும்பூநாதர் கோயில் சுவர் ஓவியங்கள் புதுப்பிக்கப்படும்'
- சத்துணவு, அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு எப்போது? தமிழக அரசு விளக்கம்
- 6 ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்படும்
- பட்டுக்கோட்டை நகராட்சி பொன்விழா: அடிப்படை வசதிகளுக்கு ரூ.25 கோடி
- வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்காக இடம்பெயர்ந்தோர் வள மையம்: முதல்வர்
- போலாவரம் திட்டம்: மோடியிடம் முறையிட ஒடிஸா குழு முடிவு
- ஜேட்லி, சரத் யாதவ், கரண் சிங்குக்கு "சிறந்த நாடாளுமன்றவாதி' விருது
- அரசியல் கட்சிகள் ஊடக நிறுவனங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது: டிராய் வலியுறுத்தல்
- சுதந்திர தினத்தன்று பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு
- வெளிநாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களின் உடலை விரைவில் கொண்டுவர புதிய திட்டம்
- சர்வதேச அகதிகள் சட்டத்தை மீறியது இலங்கை: ஐ.நா. குற்றச்சாட்டு
- தென்னாப்பிரிக்கா: காந்தி சேவையாற்றிய மருத்துவமனையை இடிக்கும் திட்டத்தால் சர்ச்சை
- இந்த நாளில் அன்று (13.8.1958); டாங்கேயை கம்யூனிஸ்டு கட்சியே கைவிடுகிறது; அயல்நாட்டு பாங்கில் அவர் வைத்திருக்கும் கணக்குக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லையாம்
- "மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?'
- புதிய அரசின் பொருளாதாரத் திட்டங்கள்!
- நிழல் யுத்தமா, போலி நாடகமா?
- 2ஜி: மாறன் சகோதரர்கள் மீது இந்த மாத இறுதிக்குள் குற்றப்பத்திரிகை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்
- அர்ச்சனா ராமசுந்தரம் நியமன விவகாரம்: மத்திய, தமிழக அரசுகள் பதில் மனு தாக்கல்
- அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்
- பணியிடங்களில் இறக்கும் தொழிலாளர்களின் நிவாரண நிதி ரூ.5 லட்சமாக உயர்வு
- 106 கோயில்களுக்கு அன்னதானத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் அறிவிப்பு
- 17 சார் கருவூலங்களுக்கு புதிய கட்டடங்கள்: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
- சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் எலித் தொல்லையா? பேரவையில் ருசிகர விவாதம்
- 14 ஆண்டுகளில் 20 ராணுவ வீரர்களைக் காணவில்லை
- போலாவரம் திட்டம்: மோடியிடம் முறையிட ஒடிஸா குழு முடிவு
- ஜார்க்கண்ட்டில் திரிணமூல் புதிய கூட்டணி
- தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகளின் மிச்சத்துடன் தேயிலை: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
- லாலு - நிதீஷ் கூட்டுப் பிரசாரம்: "போதுமான ஏற்பாடு இல்லாததால் உரிய வரவேற்பு கிடைக்கவில்லை'
- பூலான் தேவி கொலை வழக்கு: நாளை தண்டனை அறிவிப்பு
- கார்கிலில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும்: ஒமர் அப்துல்லா
- இந்தியாவுக்கு ராணுவத் தளவாடங்கள் விற்பதில் அமெரிக்கா முதலிடம்: அருண் ஜேட்லி
- காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் குண்டுவெடிப்பு
- கோவா முதல்வருக்கு பாஜக எதிர்ப்பு
- பாஜகவுடனான கூட்டணி செயல்பாடுகளை சீரமைக்க குழு
- செல்ஜா வீட்டில் பணிப்பெண்ணின் கணவர் இறந்த சம்பவம்: சமையல்காரர் கைது
- மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வகுப்புக் கலவரம் அதிகரிப்பு: சோனியா
- அரசு இணையதளத்தில் தகவல்களை தாமதமின்றி பதிவேற்ற வேண்டும்: மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
- காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 8 வீரர்கள் காயம்
- "ஆஷா' திட்ட பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களின் சலுகை கிடையாது
- ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி
- தியான் சந்த்துக்கு "பாரத ரத்னா' வழங்க உள்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரை
- வாஜ்பாய்க்கு "பாரத ரத்னா' வழங்கினால் மகிழ்ச்சி: உறவினர் கருணா சுக்லா
- இராக் பிரதமராக ஹைதர் அல்-அபிதி நியமனம்: புதிய அரசமைக்க அதிபர் 30 நாள் அவகாசம்
- நேபாளத்தில் இந்தியர் சுட்டுக் கொலை
- உதவிப் பொருள்களுடன் உக்ரைன் புறப்பட்ட ரஷிய லாரிகள்
- ஆஸ்திரேலியாவில் 2,500 கடற்படை வீரர்களை நிறுத்த அமெரிக்கா ஒப்பந்தம்
- போரின்போது மாயமானதாகக் கூறப்படுவோரின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது: இலங்கை
- சிக்கலான கட்டத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீன பேச்சுவார்த்தை
- இராக்கில் ஐ.எஸ். நிலைகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்
- பஜாஜ் டிஸ்கவர் 150 எஃப் அறிமுகம்
- "வளைகுடா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரூ. 400 கோடிக்கு பம்ப்செட் ஏற்றுமதி வாய்ப்பு'
- ஏர் இந்தியா தென் மண்டலத்துக்கு புதிய செயல் இயக்குநர்
- செயில் நிறுவனத்தின் லாபம் ரூ. 530 கோடி
- "ஆஸ்திரே−யாவை வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை'
- துளிகள்...
- என் பணி முடிந்தது: ஜெயவர்தனே
- ஆகஸ்ட் 15-இல் புச்சி பாபு தொடர் தொடக்கம்
- ஃபிடே தலைவர் தேர்தல்: காஸ்பரோவ் தோல்வி
- செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணி டிரா
- யாருக்கும் "கேல் ரத்னா' இல்லை: அர்ஜுனா விருதுக்கு 15 பேர் பரிந்துரை
- டெல்டா பாசனத்துக்காக கல்லணை நாளை திறப்பு
- ராபின் வில்லியம்ஸ் மறைவு: கமல்ஹாசன் இரங்கல்
- பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணம்
- மேலை நாடுகளுக்கு இந்தியா வழிகாட்டியாகத் திகழ வேண்டும்: ரத்தன் டாடா
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது
- வெளிநாட்டு வேலை: மோசடி செய்த 2 பேர் கைது
- நெல்லையில் வழக்குரை மிரட்டிய ஒருவர் கைது: துப்பாக்கி பறிமுதல்
- தமிழகத்தில் 17 ஆயிரம் தொடக்கபள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகளாக இயங்குகின்றன: ஆய்வுத் தகவல்
- நிலம் விற்பதாக ரூ. 1 கோடி மோசடி: ஒருவர் கைது
- தம்பிதுரைக்கு வைகோ வாழ்த்து
- திட்டக்குடி மாணவிகள் பாலியல் வழக்கு: அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 16 பேர் மீது குண்டர் சட்டம்
- கடலூர் அருகே கடல் அரிப்பு: வீடு சேதம், சிமெண்ட் சாலை துண்டிப்பு
- திருப்போரூர் அருகே கொத்தடிமைகள் மீட்பு: ஆர்டிஓ விசாரணை
- விவசாயத்தை பாதிக்கும் கருவல் மரங்களை அழிக்க ஊராட்சி தலைவர்கள் ஒத்துழைக்க வலியுறுத்தல்
- பணி நிரந்தரம் செய்யக்கோரி, நெய்வேலியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கண்டன பேரணி
- இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மறைமுகப் போர்: பாகிஸ்தானுக்கு மோடி கண்டனம்
- போலி செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை: 3 பேர் கைது
- அண்ணாமலைப் பல்கலையில் திருநங்கைகளுக்கான மனித உரிமைகள் குறித்த பயிற்சி வகுப்பு
- கடமலை-மயிலை யூனியன்:குடிநீர் வழங்ககோரி யூனியன் அலுவலகம் முற்றுகை
- மேற்குவங்க திரிணாமுல் அரசை கண்டித்து, கடலூரில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்
- ஆம்பூர் பெண் கொலையில் வாலிபர் கைது: மூதாட்டிக்கு வலைவீச்சு
- புதுகை நகரில் கடைகளில் ரூ. 66 ஆயிரம் மதிப்புள்ள காலாவதி உணவுப் பொருள்கள் பறிமுதல்
- ராஜஸ்தான்: வீடு இடிந்ததில் ஒரே குடும்பத்தினர் 7 பேர் பலி
- விருதுநகரில் வரும் 14-ம் தேதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
- ரூ.2500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
- 361 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
- ஆக.15 முதல் நாகர்கோவில் வானொலியில் நாள் முழுதும் ஒலிபரப்பு: பொன்.ராதாகிருஷ்ணனிடம் ஒலிபரப்புத் துறை அமைச்சர் உறுதி
- கேரளம்: விமான நிலையத்தில் ரூ.1.80 கோடி தங்கம் கண்டெடுப்பு
- ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக நடிகை மீது புகார்
- மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மத வன்முறை அதிகரிப்பு: சோனியா காந்தி
- காதல் தகராறு: கொதிக்கும் பாலை ஊற்றியதில் 4 பேர் படுகாயம்
- காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு 2 மணி நேரம் பதிலளித்த ராஜ்நாத் சிங்
| வேட்டி மீதான தடை நீக்கம் உள்பட 17 மசோதாக்கள் நிறைவேற்றம் Posted: 12 Aug 2014 01:29 PM PDT வேட்டி மீதான தடை நீக்கம் உள்பட மொத்தம் 17 மசோதாக்கள் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டன. |
| பயிற்சி மருத்துவர் உதவித் தொகை ரூ.13 ஆயிரமாக அதிகரிப்பு Posted: 12 Aug 2014 01:28 PM PDT பயிற்சி மருத்துவர்களுக்கான உதவித் தொகை ரூ.8,500-லிருந்து ரூ.13 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
| முதல்வருக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு பாராட்டு Posted: 12 Aug 2014 01:27 PM PDT சிறு, குறு சாய ஆலை தொழில் புத்துணர்வு பெறும் வகையில் ரூ.700 கோடியில் ஒருங்கிணைந்த தொழில் சார்ந்த வளர்ச்சி குழுமம் உருவாக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) வரவேற்றுள்ளது. |
| "திமுகவிடமிருந்து ஜனநாயகத்தை காப்பாற்றப் பாடுபட்டேன்' Posted: 12 Aug 2014 01:26 PM PDT திமுக உறுப்பினர்களிடம் இருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற பாடுபட்டேன் என்று பேரவைத் தலைவர் தனபால் கூறினார். |
| பேரவையில் பேசுவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கே அதிக வாய்ப்பு Posted: 12 Aug 2014 01:26 PM PDT சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு 73 சதவீத வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக பேரவைத் தலைவர் ப.தனபால் கூறினார். |
| புதிய தமிழகம், ம.ம.க. வெளிநடப்பு Posted: 12 Aug 2014 01:25 PM PDT சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும், மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர்களும் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனர். |
| Posted: 12 Aug 2014 01:24 PM PDT சட்டப்பேரவையில் 3 ஆண்டுகளில் 110-விதியின் கீழ் 109 அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதாக பேரவைத் தலைவர் ப.தனபால் கூறினார். |
| அரசுத் திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.11,336 கோடி ஒதுக்க துணை மதிப்பீடு Posted: 12 Aug 2014 01:24 PM PDT அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவைப்படும் கூடுதல் நிதியான ரூ.11,336 கோடியை ஒதுக்க வகை செய்யும் முதல் துணை மதிப்பீடுகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். அது, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. |
| "நெல்லை நாறும்பூநாதர் கோயில் சுவர் ஓவியங்கள் புதுப்பிக்கப்படும்' Posted: 12 Aug 2014 01:22 PM PDT நெல்லை மாவட்டம் நாறும்பூநாதசுவாமி கோயில் சுவர் ஓவியங்கள் புதுப்பித்துப் பராமரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
| சத்துணவு, அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு எப்போது? தமிழக அரசு விளக்கம் Posted: 12 Aug 2014 01:22 PM PDT சத்துணவு, அங்கன்வாடி மையப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து, முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார். |
| 6 ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்படும் Posted: 12 Aug 2014 01:20 PM PDT மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 5 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில் 6 ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: |
| பட்டுக்கோட்டை நகராட்சி பொன்விழா: அடிப்படை வசதிகளுக்கு ரூ.25 கோடி Posted: 12 Aug 2014 01:19 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியின் பொன்விழாவையொட்டி, அடிப்படை வசதிகளுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
| வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்காக இடம்பெயர்ந்தோர் வள மையம்: முதல்வர் Posted: 12 Aug 2014 01:18 PM PDT வெளிநாடுவாழ் தமிழர்கள் நலனுக்காக இடம்பெயர்ந்தோர் வள மையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
| போலாவரம் திட்டம்: மோடியிடம் முறையிட ஒடிஸா குழு முடிவு Posted: 12 Aug 2014 01:14 PM PDT ஆந்திர அரசு தன்னிச்சையாக மேற்கொண்டு வரும் சர்ச்சைக்குரிய போலாவரம் அணைத் திட்டத்தால் மாநிலத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் முறையிட ஒடிஸா சட்டப்பேரவைக் குழு முடிவு செய்துள்ளது. |
| ஜேட்லி, சரத் யாதவ், கரண் சிங்குக்கு "சிறந்த நாடாளுமன்றவாதி' விருது Posted: 12 Aug 2014 01:12 PM PDT மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் ஆகியோருக்கு சிறந்த நாடாளுமன்றவாதிகளுக்கான விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார். |
| அரசியல் கட்சிகள் ஊடக நிறுவனங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது: டிராய் வலியுறுத்தல் Posted: 12 Aug 2014 01:09 PM PDT கையூட்டுச் செய்திகள், பாரபட்சமான செய்திகளைத் தவிர்க்க வேண்டுமென்றால், அரசியல் கட்சிகள், மதச் சார்பு அமைப்புகள் மற்றும் மத்திய, மாநில அமைச்சகங்களால் ஊடக நிறுவனங்கள் நடத்தப்படுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வலியுறுத்தியுள்ளது. |
| சுதந்திர தினத்தன்று பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு Posted: 12 Aug 2014 01:07 PM PDT சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைய இருப்பதாக கருதப்படுவதால், சுதந்திர தினத்தன்று பெட்ரோல் விலை குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. |
| வெளிநாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களின் உடலை விரைவில் கொண்டுவர புதிய திட்டம் Posted: 12 Aug 2014 01:07 PM PDT வெளிநாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களின் உடலைத் தாயகம் கொண்டு வருவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் வகையில் ஆன்லைன் வசதித் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. |
| சர்வதேச அகதிகள் சட்டத்தை மீறியது இலங்கை: ஐ.நா. குற்றச்சாட்டு Posted: 12 Aug 2014 01:04 PM PDT பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களிடம் விசாரணை கூட நடத்தாமல், அவர்களை திருப்பி அனுப்பி, சர்வதேச அகதிகள் சட்டத்தை இலங்கை மீறியுள்ளது என்று ஐ.நா. அகதிகள் அமைப்பு செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளது. |
| தென்னாப்பிரிக்கா: காந்தி சேவையாற்றிய மருத்துவமனையை இடிக்கும் திட்டத்தால் சர்ச்சை Posted: 12 Aug 2014 01:03 PM PDT நூறு ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் பிளேக் நோய் பரவியபோது, மகாத்மா காந்தி நோயாளிகளுக்கு சேவையாற்றிய ரீட்ஃபான்டீன் மருத்துவமனையை இடித்துவிட்டு குடியிருப்பு வளாகம் கட்டும் அந்நாட்டு அரசின் திட்டத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. |
| Posted: 12 Aug 2014 01:00 PM PDT டாங்கேயை கம்யூனிஸ்டு கட்சியே கைவிடுகிறது; அயல்நாட்டு பாங்கில் அவர் வைத்திருக்கும் கணக்குக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லையாம் |
| "மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?' Posted: 12 Aug 2014 12:56 PM PDT மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்கிற கருத்து ஏற்புடையதல்ல. இளைஞர்கள் படித்துவிட்டு வேலைவாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். |
| புதிய அரசின் பொருளாதாரத் திட்டங்கள்! Posted: 12 Aug 2014 12:53 PM PDT புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு தனது பொருளாதார நடவடிக்கைகளை தீவிரமாகத் தொடங்க ஆரம்பித்திருக்கும் இந்த வேளையில் அதற்கு ஆதரவும், எதிர்ப்பும் உருவாகியுள்ளன. |
| Posted: 12 Aug 2014 12:52 PM PDT முந்தைய மன்மோகன் சிங் அரசால் கொண்டு வரப்பட்ட "காப்பீட்டுத் திருத்த மசோதா 2008', சில மாற்றங்களுடன் நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி அரசால் தாக்கல் செய்யப்பட்டு, மாநிலங்களவையில் அதற்குப் போதிய ஆதரவு இல்லாததால் இழுபறியில் தொடர்கிறது. |
| 2ஜி: மாறன் சகோதரர்கள் மீது இந்த மாத இறுதிக்குள் குற்றப்பத்திரிகை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் Posted: 12 Aug 2014 12:47 PM PDT ஏர்செல் - மேக்சிஸ் பங்குகள் விற்பனை தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் டி.வி. நிர்வாக இயக்குநருமான கலாநிதி மாறன் ஆகியோர் மீது இந்த மாத இறுதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. |
| அர்ச்சனா ராமசுந்தரம் நியமன விவகாரம்: மத்திய, தமிழக அரசுகள் பதில் மனு தாக்கல் Posted: 12 Aug 2014 12:46 PM PDT சிபிஐ கூடுதல் இயக்குநராக அர்ச்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் திங்கள்கிழமை பரஸ்பரம் பதில் மனுக்களைத் தாக்கல் செய்தன. |
| அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் Posted: 12 Aug 2014 12:45 PM PDT அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
| பணியிடங்களில் இறக்கும் தொழிலாளர்களின் நிவாரண நிதி ரூ.5 லட்சமாக உயர்வு Posted: 12 Aug 2014 12:44 PM PDT பணியிடங்களில் இறக்கும் தொழிலாளர்களுக்கான நிவாரண நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
| 106 கோயில்களுக்கு அன்னதானத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் அறிவிப்பு Posted: 12 Aug 2014 12:42 PM PDT தமிழகத்தில் நடப்பாண்டில் 106 திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
| 17 சார் கருவூலங்களுக்கு புதிய கட்டடங்கள்: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் Posted: 12 Aug 2014 12:41 PM PDT சொந்தக் கட்டடங்கள் இல்லாத 17 சார் கருவூலங்களுக்குப் புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். |
| சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் எலித் தொல்லையா? பேரவையில் ருசிகர விவாதம் Posted: 12 Aug 2014 12:40 PM PDT சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் எலித் தொல்லை இருக்கிறதா? இல்லையா? என்பது தொடர்பாக, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே செவ்வாய்க்கிழமை ருசிகர விவாதம் நடைபெற்றது. |
| 14 ஆண்டுகளில் 20 ராணுவ வீரர்களைக் காணவில்லை Posted: 12 Aug 2014 12:38 PM PDT கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையில் மட்டும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 20 இந்திய ராணுவ வீரர்களைக் காணவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. |
| போலாவரம் திட்டம்: மோடியிடம் முறையிட ஒடிஸா குழு முடிவு Posted: 12 Aug 2014 12:34 PM PDT ஆந்திர அரசு தன்னிச்சையாக மேற்கொண்டு வரும் சர்ச்சைக்குரிய போலாவரம் அணைத் திட்டத்தால் மாநிலத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் முறையிட ஒடிஸா சட்டப்பேரவைக் குழு முடிவு செய்துள்ளது. |
| ஜார்க்கண்ட்டில் திரிணமூல் புதிய கூட்டணி Posted: 12 Aug 2014 12:33 PM PDT ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜெய் பாரத் சமந்தா, ஜார்க்கண்ட் விகாஸ் ஆகிய இரு கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தியுள்ளது. |
| தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகளின் மிச்சத்துடன் தேயிலை: ஆய்வில் அதிர்ச்சித் தகவல் Posted: 12 Aug 2014 12:31 PM PDT இந்தியாவில், முன்னணி நிறுவனங்கள் விற்பனை செய்யும் தேயிலையில் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகளின் மிச்சம் இருப்பதாக அரசு சாரா அமைப்பு மேற்கொண்ட ஓராண்டு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. |
| லாலு - நிதீஷ் கூட்டுப் பிரசாரம்: "போதுமான ஏற்பாடு இல்லாததால் உரிய வரவேற்பு கிடைக்கவில்லை' Posted: 12 Aug 2014 12:29 PM PDT "போதுமான ஏற்பாடுகள் செய்யாததாலேயே ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நிதீஷ் குமாரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் யாதவும் திங்கள்கிழமை கூட்டாக பிரசாரம் செய்த கூட்டத்துக்கு குறைவான வரவேற்பு கிடைத்தது' என்று ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது. |
| பூலான் தேவி கொலை வழக்கு: நாளை தண்டனை அறிவிப்பு Posted: 12 Aug 2014 12:28 PM PDT பூலான் தேவி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷேர்சிங் ராணாவுக்கு இந்த மாதம் 14ஆம் தேதி (வியாழக்கிழமை) தண்டனை அறிவிக்கப்படும் என்று தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. |
| கார்கிலில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும்: ஒமர் அப்துல்லா Posted: 12 Aug 2014 12:28 PM PDT கார்கில் நகர விரிவாக்கத்துக்கு வழிவிடும் வகையில், அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இந்திய ராணுவம் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார். |
| இந்தியாவுக்கு ராணுவத் தளவாடங்கள் விற்பதில் அமெரிக்கா முதலிடம்: அருண் ஜேட்லி Posted: 12 Aug 2014 12:13 PM PDT இந்திய ராணுவத்துக்கு ராணுவத் தளவாடங்கள் விற்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தைப் பெற்றுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்தது. |
| காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் குண்டுவெடிப்பு Posted: 12 Aug 2014 12:13 PM PDT மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவின் வீட்டில் தீவிரவாதிகள் திங்கள்கிழமை நிகழ்த்திய குண்டு வெடிப்பில் அவரது ஆதரவாளர்கள் 2 பேர் காயமடைந்தனர். |
| கோவா முதல்வருக்கு பாஜக எதிர்ப்பு Posted: 12 Aug 2014 12:11 PM PDT கோவா மாநிலத்துக்குள் சர்சைக்குரிய வலதுசாரி அமைப்பான ஸ்ரீராம் சேனை இயக்கம் அனுமதிக்கப்படாது என்று முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளநிலையில், அதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. |
| பாஜகவுடனான கூட்டணி செயல்பாடுகளை சீரமைக்க குழு Posted: 12 Aug 2014 12:10 PM PDT சிரோமணி அகாலி தளம், பாஜக இடையேயான கூட்டணி செயல்பாடுகளை சீரமைக்கும் வகையில் இரு கட்சி உறுப்பினர்களும் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவை பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் அமைத்துள்ளார். |
| செல்ஜா வீட்டில் பணிப்பெண்ணின் கணவர் இறந்த சம்பவம்: சமையல்காரர் கைது Posted: 12 Aug 2014 12:09 PM PDT காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குமாரி செல்ஜாவின் வீட்டு வளாகத்தில், வீட்டுப் பணிப்பெண் மஞ்சுவின் கணவர் காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக சமையல்காரர் அனில் கைது செய்யப்பட்டார். |
| மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வகுப்புக் கலவரம் அதிகரிப்பு: சோனியா Posted: 12 Aug 2014 12:08 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டில் வகுப்புக் கலவரங்கள் அதிகரித்து விட்டன என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார். |
| அரசு இணையதளத்தில் தகவல்களை தாமதமின்றி பதிவேற்ற வேண்டும்: மத்திய அரசுக்கு வலியுறுத்தல் Posted: 12 Aug 2014 12:07 PM PDT அரசு செயல்பாடு குறித்த தகவல்களை இணையதளத்தில் தாமதமின்றி பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான கே.என்.பாலகோபால் கேட்டுக்கொண்டுள்ளார். |
| காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 8 வீரர்கள் காயம் Posted: 12 Aug 2014 12:07 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் 8 வீரர்கள் காயமடைந்தனர். |
| "ஆஷா' திட்ட பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களின் சலுகை கிடையாது Posted: 12 Aug 2014 12:06 PM PDT "ஆஷா' திட்டம் என்றழைக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரத் திட்ட (ஏ.எஸ்.ஹெச்.ஏ.) பணியாளர்களுக்கு, அரசு ஊழியர்களைப் போல் சலுகைகள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| Posted: 12 Aug 2014 12:04 PM PDT தரையிலிருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறனுடைய ஆகாஷ் ஏவுகணையின் பயன்பாட்டுச் சோதனையை விமானப்படையினரால் செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. |
| தியான் சந்த்துக்கு "பாரத ரத்னா' வழங்க உள்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரை Posted: 12 Aug 2014 12:01 PM PDT இந்தியாவுக்கு ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களைப் பெற்றுத்தந்த மறைந்த ஹாக்கி கேப்டன் தியான் சந்த்துக்கு "பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பல்வேறு தரப்பினர் பரிந்துரை செய்துள்ளனர். |
| வாஜ்பாய்க்கு "பாரத ரத்னா' வழங்கினால் மகிழ்ச்சி: உறவினர் கருணா சுக்லா Posted: 12 Aug 2014 11:59 AM PDT முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு "பாரத ரத்னா' விருது வழங்கினால் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைவோம் என்று அவரது உறவினரும், முன்னாள் எம்.பியுமான கருணா சுக்லா கூறியுள்ளார். |
| இராக் பிரதமராக ஹைதர் அல்-அபிதி நியமனம்: புதிய அரசமைக்க அதிபர் 30 நாள் அவகாசம் Posted: 12 Aug 2014 11:52 AM PDT இராக் பிரதமராக அந்நாட்டு நாடாளுமன்ற துணைத் தலைவர் ஹைதர் அல்-அபிதியை, அதிபர் ஃபுவத் மாசூம் திங்கள்கிழமை நியமித்தார். |
| நேபாளத்தில் இந்தியர் சுட்டுக் கொலை Posted: 12 Aug 2014 11:51 AM PDT நேபாளத்தின் தனுஷா மாவட்டத்தில் இந்தியர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபரால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். |
| உதவிப் பொருள்களுடன் உக்ரைன் புறப்பட்ட ரஷிய லாரிகள் Posted: 12 Aug 2014 11:51 AM PDT உக்ரைன் மற்றும் மேலை நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு உக்ரைன் பகுதிக்கு நிவாரணப் பொருள்களுடன் 280 ரஷிய லாரிகள் செவ்வாய்க்கிழமை புறப்பட்டன. |
| ஆஸ்திரேலியாவில் 2,500 கடற்படை வீரர்களை நிறுத்த அமெரிக்கா ஒப்பந்தம் Posted: 12 Aug 2014 11:50 AM PDT ஆசியப் பகுதியில் அமெரிக்க கடற்படை பலத்தைக் காட்டும் விதமாக ஆஸ்திரேலியாவில் 2,500 கடற்படை வீரர்களை நிறுத்த இரு நாடுகளிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. |
| போரின்போது மாயமானதாகக் கூறப்படுவோரின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது: இலங்கை Posted: 12 Aug 2014 11:49 AM PDT இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது மாயமானதாகக் கூறப்படுவோரின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது என்று அந்நாட்டின் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. |
| சிக்கலான கட்டத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீன பேச்சுவார்த்தை Posted: 12 Aug 2014 11:48 AM PDT காஸாவில் அமல்படுத்தப்பட்டுள்ள 72 மணி நேர போர் நிறுத்தம் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக தொடரும் நிலையில், இந்தப் பிரச்னைக்கு நீண்டகாலத் தீர்வு காண்பதற்காக இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. |
| இராக்கில் ஐ.எஸ். நிலைகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் Posted: 12 Aug 2014 11:44 AM PDT இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை வாஷிங்டனில் தெரிவித்துள்ளது. |
| பஜாஜ் டிஸ்கவர் 150 எஃப் அறிமுகம் Posted: 12 Aug 2014 11:42 AM PDT பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பஜாஜ் டிஸ்கவர் 150 எஃப், டிஸ்கவர் 150 எஸ் ஆகிய இரு புதிய ரக மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியுள்ளது. |
| "வளைகுடா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரூ. 400 கோடிக்கு பம்ப்செட் ஏற்றுமதி வாய்ப்பு' Posted: 12 Aug 2014 11:41 AM PDT வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரூ. 400 கோடிக்கு பம்ப்செட் ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளதாக, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கத்தின் (சீமா) தலைவர் வி.லட்சுமிநாராயணசாமி தெரிவித்தார். |
| ஏர் இந்தியா தென் மண்டலத்துக்கு புதிய செயல் இயக்குநர் Posted: 12 Aug 2014 11:37 AM PDT ஏர் இந்தியா நிறுவனத்தின் தென்மண்டலத்துக்கு புதிய செயல் இயக்குநராக ஆர்.ஹரிஹர் பொறுப்பேற்றார். |
| செயில் நிறுவனத்தின் லாபம் ரூ. 530 கோடி Posted: 12 Aug 2014 11:36 AM PDT பொதுத் துறையைச் சேர்ந்த உருக்காலை நிறுவனமான செயில் முதல் காலாண்டு நிகர லாபமாக ரூ. 530 கோடியைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. |
| "ஆஸ்திரே−யாவை வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை' Posted: 12 Aug 2014 11:03 AM PDT பெயர் : ஸ்ரீஜேஷ் கோல் கீப்பர் : இந்திய ஹாக்கி அணி. பங்கேற்ற போட்டிகள் : லண்டன் ஒலிம்பிக், 2 உலகக் கோப்பை (தில்லி, நெதர்லாந்து), கிளாஸ்கோ காமன்வெல்த், ஆசியக் கோப்பை. அடுத்து பங்கேற்கும் போட்டி : ஆசியப் போட்டிகள். சாதனை : 2013 ஆசியக் கோப்பையில் சிறந்த கோல் கீப்பர். தமிழகத்துடன் தொடர்பு : 2006 முதல் சென்னையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிக்காக ஆடி வருகிறார். |
| Posted: 12 Aug 2014 11:02 AM PDT *"ஹாக்கியில் பல சாதனைகளைப் புரிந்து நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த, சிறந்த வீரரான தியான் சந்த் பெயரை, "பாரத ரத்னா' விருதுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்த செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. |
| Posted: 12 Aug 2014 11:01 AM PDT இலங்கை கிரிக்கெட்டில் 17 ஆண்டுகள் கோலோச்சிய ஜெயவர்தனே, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். |
| ஆகஸ்ட் 15-இல் புச்சி பாபு தொடர் தொடக்கம் Posted: 12 Aug 2014 10:59 AM PDT சென்னையில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் புச்சி பாபு நினைவு கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. |
| ஃபிடே தலைவர் தேர்தல்: காஸ்பரோவ் தோல்வி Posted: 12 Aug 2014 10:58 AM PDT சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (ஃபிடே) தலைவர் பதவிக்கான போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் கேரி காஸ்பரோவ் தோல்வியடைந்தார். |
| செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணி டிரா Posted: 12 Aug 2014 10:58 AM PDT செஸ் ஒலிம்பியாட் தொடரின் 9-வது சுற்றில் இந்திய ஆடவர் அணி, ஆர்ஜெண்டினாவுக்கு எதிராக டிரா செய்தது. மகளிர் அணி உக்ரைனிடம் தோல்வியடைந்தது. |
| யாருக்கும் "கேல் ரத்னா' இல்லை: அர்ஜுனா விருதுக்கு 15 பேர் பரிந்துரை Posted: 12 Aug 2014 10:58 AM PDT இந்த ஆண்டுக்கான "ராஜீவ் கேல் ரத்னா' விருதுக்கு வீரர்கள் யாரும் பரிந்துரை செய்யப்படவில்லை. அதேநேரத்தில், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்பட 15 வீரர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். |
| டெல்டா பாசனத்துக்காக கல்லணை நாளை திறப்பு Posted: 12 Aug 2014 10:48 AM PDT டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணை வியாழக்கிழமை முற்பகல் திறக்கப்பட வாய்ப்புள்ளது. |
| ராபின் வில்லியம்ஸ் மறைவு: கமல்ஹாசன் இரங்கல் Posted: 12 Aug 2014 10:48 AM PDT கடந்த சில நாள்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். |
| பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணம் Posted: 12 Aug 2014 10:46 AM PDT ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் (63) திங்கள்கிழமை மரணமடைந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது. |
| மேலை நாடுகளுக்கு இந்தியா வழிகாட்டியாகத் திகழ வேண்டும்: ரத்தன் டாடா Posted: 12 Aug 2014 10:44 AM PDT மேலை நாடுகளைப் பின்தொடர்வதற்குப் பதிலாக, அந்த நாடுகளுக்கு இந்தியா வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கூறினார். |
| மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது Posted: 12 Aug 2014 10:43 AM PDT கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து செவ்வாய்க்கிழமை 20 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது. |
| வெளிநாட்டு வேலை: மோசடி செய்த 2 பேர் கைது Posted: 12 Aug 2014 08:05 AM PDT 16 பேருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அருள்குமாரன், மெர்வின் டென்னிஸ், பிரகாஷ் ஆகியோர் ரூ. 14 லட்சம் ஏமாற்றியதாக அயன்புரத்தைச் சேர்ந்த மைதிலி என்பவர் காவல்துறையில் புகார் |
| நெல்லையில் வழக்குரை மிரட்டிய ஒருவர் கைது: துப்பாக்கி பறிமுதல் Posted: 12 Aug 2014 07:48 AM PDT திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. வழக்குரைஞரான இவர், தனது பைக்கில் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது தனியார் |
| தமிழகத்தில் 17 ஆயிரம் தொடக்கபள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகளாக இயங்குகின்றன: ஆய்வுத் தகவல் Posted: 12 Aug 2014 07:27 AM PDT கடந்த 2009ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14 வயதுக் குட்பட்ட குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 |
| நிலம் விற்பதாக ரூ. 1 கோடி மோசடி: ஒருவர் கைது Posted: 12 Aug 2014 07:07 AM PDT ஆதம்பாக்கத்தை சேர்ந்த அருள் (51) என்பவர் வேறு ஒருவரின் நிலத்தை தன்னுடைய நிலம் என்று கூறி மோசடி செய்து விட்டதாக வேளச்சேரி நேதாஜி காலனியை சேர்ந்த சந்திரன் (62) என்பவர் காவல்துறையில் |
| Posted: 12 Aug 2014 06:39 AM PDT இந்திய அரசியலில் மிக முக்கியமான காலகட்டத்தில் நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவரும், மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான மு. தம்பிதுரை மக்களவை துணைத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு |
| திட்டக்குடி மாணவிகள் பாலியல் வழக்கு: அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 16 பேர் மீது குண்டர் சட்டம் Posted: 12 Aug 2014 06:32 AM PDT திட்டக்குடி மாணவிகள் பாலியல் பலாத்கார வழக்கில் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 17 பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. இதற்காக மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யும் பணியில் கடலூர் மாவட்ட |
| கடலூர் அருகே கடல் அரிப்பு: வீடு சேதம், சிமெண்ட் சாலை துண்டிப்பு Posted: 12 Aug 2014 06:30 AM PDT கடலூர் துறைமுகம் அருகே கடலோரம் அக்கரைகோரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் உப்பனாறு, கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக அப்பகுதியில் தொடர்ந்து கடல் |
| திருப்போரூர் அருகே கொத்தடிமைகள் மீட்பு: ஆர்டிஓ விசாரணை Posted: 12 Aug 2014 05:48 AM PDT காஞ்சிபுரம் மாவட்ட திருப்போரூரை அடுத்த மானாமதி பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலை உரிமையாளர் பாஸ்கர் தனது அரிசி ஆலையில் பழங்குடி இருளர் இன மக்களை கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி |
| விவசாயத்தை பாதிக்கும் கருவல் மரங்களை அழிக்க ஊராட்சி தலைவர்கள் ஒத்துழைக்க வலியுறுத்தல் Posted: 12 Aug 2014 05:37 AM PDT கூட்டம் உதவியாளர் மணி கண்டன், 23 தீர்மனங்களை வாசித்து, கவுன்சிலர்கள் ஒப்பதலுடன் நிறை வேற்றப்பட்டன.கிராமங்களில் வயல்கள் பகுதிகளில் அடர்த்தியாக வளரும் காட்டுக்கருவல் மரங்களால் |
| பணி நிரந்தரம் செய்யக்கோரி, நெய்வேலியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கண்டன பேரணி Posted: 12 Aug 2014 05:23 AM PDT நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறர்கள். இவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம், ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை, 20 |
| இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மறைமுகப் போர்: பாகிஸ்தானுக்கு மோடி கண்டனம் Posted: 12 Aug 2014 05:15 AM PDT இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை தூண்டிவிட்டு தொடர்ந்து மறைமுகப் போரில் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் நேருக்கு நேராக |
| போலி செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை: 3 பேர் கைது Posted: 12 Aug 2014 05:07 AM PDT பெங்களூரு ஓ.டி.சி.சாலையைச் சேர்ந்தவர் கானாராம் (21), பன்சங்கரியைச் சேர்ந்தவர் பாரஸ்கிரி (34), கப்பன்பேட்டையைச் சேர்ந்தவர் ஜோய்த்தாராம் (46). இவர்கள் 3 பேரும் எஸ்.பி.சாலை முதலாவது குறுக்கு |
| அண்ணாமலைப் பல்கலையில் திருநங்கைகளுக்கான மனித உரிமைகள் குறித்த பயிற்சி வகுப்பு Posted: 12 Aug 2014 05:03 AM PDT சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக அரசியல் அறிவியல் துறை மற்றும் பொது நிர்வாகப்பிரிவு சார்பில் திருநங்கைகளுக்கான மனித உரிமைகள் என்ற தலைப்பிலான ஒருநாள் பயிற்சி |
| கடமலை-மயிலை யூனியன்:குடிநீர் வழங்ககோரி யூனியன் அலுவலகம் முற்றுகை Posted: 12 Aug 2014 05:00 AM PDT கடமலை-மயிலை ஒன்றியத்தியத்தின் பெரும்பாலான கிராமங்கள் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.இப்பகுதியில் போதிய மழை இல்லாததால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.இதனை சமாளிக்க |
| மேற்குவங்க திரிணாமுல் அரசை கண்டித்து, கடலூரில் சிஐடியூ ஆர்ப்பாட்டம் Posted: 12 Aug 2014 04:24 AM PDT மேற்கு வங்கத்தில் திரிணாமுல் அரசு, இடதுசாரி இயக்கத்தின் மீதும், உழைப்பாளி மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்துவதை கண்டித்து கடலூர் முதுநகரில் சிஐடியூ சார்பில் கண்டன |
| ஆம்பூர் பெண் கொலையில் வாலிபர் கைது: மூதாட்டிக்கு வலைவீச்சு Posted: 12 Aug 2014 04:16 AM PDT கீழாம்பூர் துர்க்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சமையல் தொழிலாளி பொன்சுந்தர் (40). இவரது மனைவி சிவகாமசுந்தரி (35). இவர்களுக்குத் திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது, குழந்தைகள் இல்லை. |
| புதுகை நகரில் கடைகளில் ரூ. 66 ஆயிரம் மதிப்புள்ள காலாவதி உணவுப் பொருள்கள் பறிமுதல் Posted: 12 Aug 2014 04:06 AM PDT புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் வருவாய், உணவுப்பாதுகாப்பு, நகராட்சி, வழங்கல், தொழிலாளர், சுகாதாரம் ஆகிய துறைகளில் அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய கூட்டு சோதனையில் |
| ராஜஸ்தான்: வீடு இடிந்ததில் ஒரே குடும்பத்தினர் 7 பேர் பலி Posted: 12 Aug 2014 03:59 AM PDT ராஜஸ்தானில் கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் ஒரே குடும்பத்தினர் 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை |
| விருதுநகரில் வரும் 14-ம் தேதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் Posted: 12 Aug 2014 03:58 AM PDT விருதுநகர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மேற்குறிப்பிட்ட நாளில் ராமமூர்த்தி சாலையில் உள்ள கந்தசாமி-ராஜம்மாள் அரங்கத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு |
| ரூ.2500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது Posted: 12 Aug 2014 03:42 AM PDT நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மசக்காளிப்பட்டி மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் அத்தியண்ணன் என்பவரது மகன் ரவிசங்கர் (48). இவர் வாரிசு சான்றிதழ் கேட்டு முத்துகாளிப்பட்டி கிராம |
| 361 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு Posted: 12 Aug 2014 03:42 AM PDT சென்செக்ஸ் 361 புள்ளிகள் உயர்ந்து 25,880 என்ற நிலையிலும், நிப்டி 101 புள்ளிகள் உயர்ந்து 7,727 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது. |
| Posted: 12 Aug 2014 03:37 AM PDT வரும் சுதந்திரத் திருநாளில் இருந்து, நாகர்கோவில் வானொலி நிலையம் காலை 5..55 முதல் இரவு 11 மணி வரை நாள் முழுதும் செயல்படும் என நாகர்கோவில் எம்.பி.யும் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணனிடம் மத்திய தகவல் மற்றும் |
| கேரளம்: விமான நிலையத்தில் ரூ.1.80 கோடி தங்கம் கண்டெடுப்பு Posted: 12 Aug 2014 03:30 AM PDT விமான நிலையத்தில் உள்ள லிஃப்டில் இருக்கும் காற்றாடியின் உள்ளிருந்து 4 கிலோ தங்கத்தையும், நகரும் படிக்கட்டுக்கு (எஸ்கலேட்டர்) அடியில் இருந்து 2.232 கிலோ தங்கத்தையும் சுங்கத் துறை அதிகாரிகள் |
| ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக நடிகை மீது புகார் Posted: 12 Aug 2014 03:11 AM PDT தன்னிடம் ஒன்றரை கோடி ரூபாய், நகை போன்றவற்றை மோசடி செய்துவிட்டதாக புதுமுக நடிகை அனுராதா மீது தொழிலதிபர் ஒருவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் அந்த மனுவில் |
| மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மத வன்முறை அதிகரிப்பு: சோனியா காந்தி Posted: 12 Aug 2014 03:09 AM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டில் மத வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார். மக்களைவத் தேர்தலுக்குப் பிறகு, |
| காதல் தகராறு: கொதிக்கும் பாலை ஊற்றியதில் 4 பேர் படுகாயம் Posted: 12 Aug 2014 03:00 AM PDT சூளையை அடுத்த தட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் காதல் விவகாரம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் |
| காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு 2 மணி நேரம் பதிலளித்த ராஜ்நாத் சிங் Posted: 12 Aug 2014 02:58 AM PDT சுமார் 2 மணி நேரமாக அவர் பதில் அளித்து பேசினார். அவைத்தலைவர் குரியன் பலமுறை கேட்டுக்கொண்டும் அவர் பேச்சை நிறுத்தவில்லை. மேல்-சபை உறுப்பினர்களும் பொறுமை இழந்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |