Tamil News | Online Tamil News |
- அரசியலில் ஓய்வுபெறும் எண்ணம் இல்லை : தேவகவுடா கூறுகிறார்
- 'ஊழல் நபரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க பரிந்துரை செய்தவர் கே.ஜி.பாலகிருஷ்ணன்'
- பயங்கரவாதத்தை ஒடுக்க போலீஸ் சீர்திருத்தம் அவசியம் : ராஜ்யசபாவில் எம்.பி.,க்கள் வலியுறுத்தல்
- சர்வதேச நாடுகளை கலங்கடிக்கும் 'எபோலா' வைரஸ் பரவியது எப்படி?
- ஆசிரியர் நியமனத்தில் தமிழ் பாடத்திற்கு சொற்ப இடம்: நியமன வரிசையில் தமிழை முதலில் சேர்க்க கோரிக்கை
- அடுத்தது நெய்யாறு அணை பிரச்னை: சட்ட போராட்டத்திற்கு ஏற்பாடு மும்முரம்
- அழகிரிக்கு ஒரு நீதி; ஸ்டாலினுக்கு ஒரு நீதியா?அறிவாலயத்தில் குவியும் ஆதங்க கடிதங்கள்
- சத்துணவு ஊழியர்கள் பிரச்னையில் அணுகுமுறை என்ன? கருணாநிதி கேள்வி
- ராஜ்யசபாவுக்கு வராத சச்சின் மீது எம்.பி.,க்கள் பாய்ச்சல்: விடுமுறை விண்ணப்பத்தை அனுமதித்தார் குரியன்
- பணியாளர் அமைச்சகத்துக்கு பிரதமர் மோடி உத்தரவு: லோக்பால் உட்பட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற
- சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகளை தேர்வு செய்ய புது முறை: நீதிபதிகள் குழுவை நீக்க சட்டத்திருத்த மசோதா தாக்கல்
| அரசியலில் ஓய்வுபெறும் எண்ணம் இல்லை : தேவகவுடா கூறுகிறார் Posted: பெங்களூரு: "அரசியலில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம் எதுவுமில்லை; தொடர்ந்து, தேசிய தலைவராக கட்சியை முன்னுக்கு கொண்டு வர பாடுபடுவேன்," என, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா கூறினார்.பெங்களூருவில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சமீபத்தில் என்னை, என் மகன்கள் குமாரசாமியும், ரேவண்ணாவும் சந்தித்து, அரசியலிலிருந்து விலகும் படியும், அரசியல் வழிகாட்டியாக இருந்தால் மட்டும் போதும் என, கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாயின. அவர்கள், என்னை சந்தித்தது உண்மை. ஆனால், அரசியலில் இருந்து விலகும்படி எதுவும் கூறவில்லை. எனக்கும் அரசியலில் இருந்து விலகும் எண்ணம் இல்லை.தேர்தலில் ... |
| 'ஊழல் நபரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க பரிந்துரை செய்தவர் கே.ஜி.பாலகிருஷ்ணன்' Posted: புதுடில்லி: 'ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தவர், முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்' என, இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு குற்றம் சாட்டி உள்ளார்.இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் உள்ள தன் வலைப்பக்கத்தில், கட்ஜு கூறியுள்ளதாவது:கடுமையான ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க, அப்போதைய தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனை தலைவராகவும், நீதிபதி கபாடியாவை உறுப்பினராகவும் கொண்ட, 'கொலீஜியம்' என, ... |
| பயங்கரவாதத்தை ஒடுக்க போலீஸ் சீர்திருத்தம் அவசியம் : ராஜ்யசபாவில் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் Posted: புதுடில்லி : 'பயங்கரவாதத்தை வேரறுக்க, கடுமையான செயல்பாட்டு முறையை உருவாக்க வேண்டும். போலீஸ் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்' என, ராஜ்யசபாவில், எம்.பி.,க்கள் பலரும் நேற்று கோரிக்கை விடுத்தனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்து, ராஜ்யசபாவில், நேற்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய, எம்.பி.,க்கள் கூறியதாவது:எச்.கே.துவா - நியமன எம்.பி.,: பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ளும் நிலையில், நாடு இல்லை. மும்பையில், 2008ல், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மூலம், இது தெரியவந்துள்ளது. எந்த ஒரு தனிப்பட்ட மாநிலமும், ... |
| சர்வதேச நாடுகளை கலங்கடிக்கும் 'எபோலா' வைரஸ் பரவியது எப்படி? Posted: உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும், 'எபோலா' வைரஸ் என்ற உயிர்கொல்லி நோய், கடந்த ஆண்டு இறுதியில், மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் வசித்த, 2 வயது சிறுவனிடம் இருந்து தான், மற்றவர்களுக்கு பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 1976ல், மேற்கு ஆப்ரிக்க நாடான, காங்கோவில், எபோலா நதிக்கரையில் தோன்றி யதால், இந்த நோய்க்கு, 'எபோலா வைரஸ்' என, பெயர் வைக்கப்பட்டது.இதன்பின், மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், குறிப்பிட்ட இடைவெளிகளில் இந்த நோயின் தாக்கம் தெரியும். இதில், ஏராளமானோர் செத்து மடிவர். இந்த நோயை குணமாக்குவதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், முன் ... |
| ஆசிரியர் நியமனத்தில் தமிழ் பாடத்திற்கு சொற்ப இடம்: நியமன வரிசையில் தமிழை முதலில் சேர்க்க கோரிக்கை Posted: அரசு பள்ளிகளில், புதிதாக நியமிக்கப் பட உள்ள ஆசிரியர்களில், தமிழ் பாடத்திற்கான ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் குறைவு. வெறும், 772 இடங்கள் மட்டுமே, தமிழ் பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 'பாட வாரியான பணி நியமன வரிசையில், தமிழை, நான்காவது இடத்தில் வைத்திருப்பது தான், இதற்கு காரணம்' என, தமிழ் ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் தேர்வில், பணி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை, நேற்று முன்தினம், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 10,726 பணியிடங்கள் ஒதுக்கிஉள்ள போதும், தமிழ் பாடத்திற்கு, 772 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு ... |
| அடுத்தது நெய்யாறு அணை பிரச்னை: சட்ட போராட்டத்திற்கு ஏற்பாடு மும்முரம் Posted: முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை தொடர்ந்து, நெய்யாறு அணை பிரச்னையிலும், தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதற்கான முயற்சியில், அரசு இறங்கியுள்ளது. இந்த வழக்கு விரைவில், விசாரணைக்கு வர உள்ள நிலையில், அதற்கான பணி களில், நீர்வளத் துறை உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலை தொடரில், கேரள மாநிலம், கள்ளிக்காடு என்ற இடத்தில் உற்பத்தியாகிறது நெய்யாறு. இதில், தமிழகத்தை ஒட்டிய கேரள எல்லையில், நெய்யாறு அணை கட்டப்பட்டுள்ளது.இரு மாநிலங்களுக்கு தண்ணீர்:அணையில் இருந்து, வலது புற கால்வாய் வழியாக கேரளாவிற்கும், இடதுபுற ... |
| அழகிரிக்கு ஒரு நீதி; ஸ்டாலினுக்கு ஒரு நீதியா?அறிவாலயத்தில் குவியும் ஆதங்க கடிதங்கள் Posted: தி.மு.க.,வில் கடித பரபரப்பு இன்னும் ஓயவில்லை. 'முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை அறிவிக்க வேண்டும்' என, கட்சியின் அமைப்புச் செயலராக இருந்த, கல்யாணசுந்தரம் எழுதிய கடிதத்தை தொடர்ந்து, பல மாவட்டங்களில் இருந்தும், ஏராளமான கடிதங்கள் அறிவாலயத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.எழுப்பப்படும் கேள்வி:ஸ்டாலின் ஆதரவாளர்களிடம் இருந்து வரும் கடிதங்களில், 'அழகிரிக்கு ஒரு நீதி; ஸ்டாலினுக்கு ஒரு நீதியா' என கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு உதாரணமாக, ஸ்டாலின் தீவிர ஆதரவாளரான, தமிழ்புகழ் என்பவர், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தை, அறிவாலய ... |
| சத்துணவு ஊழியர்கள் பிரச்னையில் அணுகுமுறை என்ன? கருணாநிதி கேள்வி Posted: ''சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் பிரச்னையில், தமிழக அரசின் அணுகுமுறை என்ன?'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை: தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.தமிழகத்தில், 68 ஆயிரம் சத்துணவு மையங்களும், 35 ஆயிரம் அங்கன்வாடி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில், 2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த இரண்டரை லட்சம் பேரில், 40 ஆயிரம் காலி பணி இடங்களும் உள்ளன.தனி துறை வேண்டும்கடந்த மூன்றாண்டுகளாக, இந்த காலி இடங்கள் நிரப்பப்படவில்லை. இதன் ... |
| ராஜ்யசபாவுக்கு வராத சச்சின் மீது எம்.பி.,க்கள் பாய்ச்சல்: விடுமுறை விண்ணப்பத்தை அனுமதித்தார் குரியன் Posted: புதுடில்லி:ராஜ்யசபா நிகழ்ச்சிகளில், பல நாட்களாக பங்கேற்காத, பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, நேற்றும் சபையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா ஆகியோர், 2012ல், காங்., சார்பில், ராஜ்யசபா எம்.பி.,க்களாக நியமிக்கப்பட்டனர். அதன்பின், இவர்கள், ராஜ்யசபா நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, அரிதாக உள்ளது என, கடந்த வாரம், சபையில், எம்.பி.,க்கள் பலர் குற்றம் சாட்டினர்.விதிகளை மீறவில்லை: 'சபை விதிகளின்படி, ஒரு எம்.பி., 60 நாட்கள் சபைக்கு வராமல் இருந்தால், அந்த எம்.பி.,க்கான இடம், காலியாக உள்ளதாக ... |
| பணியாளர் அமைச்சகத்துக்கு பிரதமர் மோடி உத்தரவு: லோக்பால் உட்பட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற Posted: புதுடில்லி: லோக்பால் அமைப்பது, ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது, பொதுமக்கள் குறைதீர் மசோதாவை நிறைவேற்றுவது போன்றவற்றில், அதிக அக்கறை காட்டும்படி, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தை, பிரதமர் அலுவலகம் வலியுறுத்தி உள்ளது. இவையே, அரசின் முக்கியமான முன்னுரிமைகள் என்றும் தெரிவித்துள்ளது.மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்திற்கு, பிரதமர் அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், லோக்பால் அமைப்பது, பொதுமக்கள் குறைதீர் மசோதாவை நிறைவேற்றுவது மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் ... |
| Posted: புதுடில்லி: உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்ய, விரைவில் புது முறை அமலாக உள்ளது. அதனால், தற்போது செயல்பாட்டில் உள்ள, நீதிபதிகள் தேர்வுக் குழுவை நீக்குவதற்கான, அரசியல் சட்ட திருத்த மசோதா, நேற்று லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது.உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை தேர்வு செய்ய, தற்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில், 'கொலீஜியம்' என, அழைக்கப்படும், நீதிபதிகள் அடங்கிய தேர்வுக் குழு உள்ளது.இந்த முறையை மாற்றி, நீதிபதிகளை நியமிக்க, நீதிபதிகள் நியமன ஆணையம் ஒன்றை அமைக்க, முந்தைய மத்திய அரசு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 12,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |