Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்
- 5 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.2.70 கோடியில் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு
- சாயக்கழிவு பிரச்னையில் முதல்வரின் நடவடிக்கைக்கு வரவேற்பு
- தகராறில் பெண்ணுக்கு வெட்டு: 3 பேர் கைது
- குளித்தலையில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- வேலாயுதம்பாளையம் அருகே கார் மோதி தொழிலாளி சாவு
- எபோலா வைரஸ் குறித்து பீதி அடைய வேண்டாம்: விஜயபாஸ்கர்
- வட மாநிலத்தவர்களால் வேலையிழப்பு:கரூர் மொசைக் தொழிலாளர்கள் புகார்
- சைக்கிளில் சென்றவர் பைக் மோதி சாவு
- "சிறைப் பணியாளர்களுக்கு 100 குடியிருப்புகள்'
- நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஓய்வூதியர்கள் மனு
- றைதீர் முகாமில் ரூ. 1.18 லட்சத்தில் உதவி
- போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
- தமிழகத்தில் புதிதாக 15 தாலுகாக்கள்
- 3 விதை விற்பனை நிலையங்கள் செயல்பட தாற்காலிக தடை
- அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத ஊராட்சித் தலைவரைக் கண்டித்து போராட்டம்
- குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள்
- சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு
- கடன் தகராறில் இளைஞரின் காதைக் கடித்தவர் கைது
- கந்தர்வகோட்டை அருகே மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்
- புதுக்கோட்டை மாவட்டத்தில் டெல்டா பகுதியில் 28 ஆயிரம் ஹெக்டேர் சம்பா சாகுபடி செய்ய இலக்கு: ஆட்சியர்
- உரிமம் இன்றி விதைகள் விற்றால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை
- பேருந்து மோதி4 செம்மறி ஆடுகள் பலி: ஓட்டுநர் கைது
- புதுவாழ்வுத் திட்டம் மூலம் 50 பேருக்கு ஓட்டுநர் உரிமம் அளிப்பு
- கடைமடை பகுதிக்கு தண்ணீர்கிடைக்க நடவடிக்கை தேவை
- சட்டநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- முதல்வரின் அறிவிப்புக்கு வழக்குரைஞர்கள் வரவேற்பு
- சிறு சாய ஆலைகளை காப்பாற்ற ரூ.700 கோடியில் தொழில் வளர்ச்சி குழுமம்
- சுய தொழில் தொடங்க பெண்ணுக்கு நிதி
- மேட்டூர் அணையின் நீர் மூலம் ஏரி, குளங்களை நிரப்ப கோரி மனு
- எம்.எல்.ஏ.க்களுக்கு இன்று தேநீர் விருந்து
- "உடல் உழைப்பு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் கண்டு கொள்ளப்படுவதில்லை
- பேருந்து பயணியிடம் திருடிய 4 பேர் போலீஸில் ஒப்படைப்பு
- அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் தோண்டினால் சிறை: சட்ட மசோதா தாக்கல்
- "அதிமுக ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம்'
- சட்டநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- பேரவையில் மயங்கி விழுந்த தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.
- போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- கார் மோதியதில் தொழிலாளி சாவு
- மறியல் : 440 சத்துணவு ஊழியர்கள் கைது
- கரூர் அரசு கலைக்கல்லூரியில் சேர 14}ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
- மதுபானங்கள் மீதான ஆயத் தீர்வை உயர்வு: மசோதா தாக்கல்
- பி.எட். தேர்வெழுத அனுமதிக்கக் கோரி மனு
- கல்வீசித் தாக்கியதாக 10 பாமகவினர் மீது வழக்கு
- பள்ளபட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
- இணையம் மூலமும் புகார் அளிக்கலாம் : எஸ்.பி
- சத்துணவு ஊழியர்கள் மறியல் : 415 பேர் கைது
- கொளத்தூரில் நாளை சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம்
- துப்புரவுத் தொழிலாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
- சம்பா சாகுபடி முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை
- மதிமுக மாணவரணி சார்பில் பேச்சுப் போட்டி
- போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- ஆக. 15-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
- மத்திய அமைச்சருக்கு குடந்தை வணிகர்கள் நன்றி
- சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: 345 பேர் கைது
- மாமன்ற உறுப்பினரால் அரசு நிலம் ஆக்கிரமிப்பு
- சாலை வசதி கோரி நரிக்குறவர்கள் போராட்டம் நடத்த முடிவு
- மாவட்டத்தில் 100 இடங்களில் தெருமுனை பிரசாரக் கூட்டங்கள்: கம்யூனிஸ்ட் முடிவு
- மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றுவோர் மீது கடும் நடவடிக்கை
- பெண் தூக்கிட்டுதற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை
- பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
- சீர் வரிசையை திருப்பித் தராத கணவர் கைது
- சம்ஸ்கிருத திணிப்பை கண்டித்து தெருமுனைக் கூட்டம்
- ஆக்கிரமிப்பில் உள்ள கோயிலை மீட்க வலியுறுத்தல்
- மக்களவையில் டிஆர்எஸ் அமளி
- பேருந்து பயணியிடம் திருடிய 4 பேர் போலீஸில் ஒப்படைப்பு
- இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 3 கட்சிகளின் தேசிய அங்கீகாரம் ரத்தாகுமா?
- கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை தேவை
- மயிலாடுதுறையில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்
- மக்களவை துணைத் தலைவர் பதவிக்கு நாளை தேர்தல்
- சத்துணவு ஊழியர்கள் மறியல்: 600 பேர் கைது
- நாகையில் மீனவர் பிரச்னை குறித்து பாஜக குழுவினர் கருத்துக்கேட்பு
- காஷ்மீர் பண்டிட்டுகளின் மறுவாழ்வுக்கு புதிய திட்டம்: மத்திய அரசு
- வேதாரண்யத்தில்விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்
- நாகையில்17 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
- "பாஜகவை வீழ்த்த எங்களுடன் பகுஜன் சமாஜ், சமாஜவாதி இணைய வேண்டும்'
- உப்பனாற்றில் இணைப்பு பாலம் கட்ட பகுஜன் சமாஜ் வலியுறுத்தல்
- மின் வயர்களை புதுப்பிக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை
- தெருநாய் கடித்து 9 மாணவிகள் காயம்: கர்ப்பிணியின் வயிற்றில் 8 மாத சிசு மரணம்
- "தமிழக அறிவியல் வரலாறு நூல் தொகுதி வெளியிட முடிவு
- பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: 4 பேர் காயம்
- கரூரில் தலைமைக் காவலரை கத்தியால் குத்தியவர் கைது
- "ஊழல் நீதிபதிக்கு கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆதரவு'
- புதுகையில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் போராட்டம்
- "பொறியியல் கல்வியை ஈடுபாட்டோடு படியுங்கள்'
- வரதட்சிணைக் கொடுமை:கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
- எருக்கலக்கோட்டை அய்யனார் கோயிலில் கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு
- ஆடுகள் திருடியவர் கைது
- உலக மக்கள் தொகை நாள் விழிப்புணாவு கருத்தரங்கம்
- பசுமை வீடு கட்ட போலி அரசாணை:ஆட்சியரிடம் பெண் புகார் மனு அளிப்பு
- கீரனூரில் இடதுசாரிக் கட்சியினர் உண்ணாவிரதம்
- பசுமை வீடு கட்ட போலி அரசாணை: ஆட்சியரிடம் பெண் புகார் மனு அளிப்பு
- மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் முத்தமிழ் விழா
- இலங்கை போர்க் குற்ற விசாரணை: சர்வதேசக் குழுவில் இந்தியர் நியமனம்
- உரிமம் இன்றி விதைகள் விற்றால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை
- மேலையூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
- ஜஸ்வந்த் சிங் தொடர்ந்து கவலைக்கிடம்
- வரதட்சிணை கொடுமை:கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
- கல்லூரியில் சுதந்திர தின விழா கபடி போட்டி
- சந்திரசேகர ராவின் மகள் மீது தேசத் துரோக வழக்கு
| காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் Posted: 11 Aug 2014 12:43 PM PDT காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மாநிலங்களவை திமுக உறுப்பினரும், அனைத்து விவசாயிகள் சங்க தலைவருமான கே.பி.ராமலிங்கம் வலியுறுத்தினார். |
| 5 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.2.70 கோடியில் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு Posted: 11 Aug 2014 12:42 PM PDT சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட 5 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.2.70 கோடி செலவில் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. |
| சாயக்கழிவு பிரச்னையில் முதல்வரின் நடவடிக்கைக்கு வரவேற்பு Posted: 11 Aug 2014 12:38 PM PDT சாயக்கழிவு பிரச்னையைத் தீர்க்க முதல்வர் எடுத்த நடவடிக்கைக்கு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வரவேற்றுள்ளது. |
| தகராறில் பெண்ணுக்கு வெட்டு: 3 பேர் கைது Posted: 11 Aug 2014 12:38 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய 3 பேரை ஜயங்கொண்டம் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| குளித்தலையில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 11 Aug 2014 12:38 PM PDT இந்திய மாணவர் சங்க நாமக்கல் மாவட்டச் செயலரைத் தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, குளித்தலையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| வேலாயுதம்பாளையம் அருகே கார் மோதி தொழிலாளி சாவு Posted: 11 Aug 2014 12:38 PM PDT கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை கார் மோதியதில் கூலித்தொழிலாளி இறந்தார். மேலும் அந்தக் கார் கவிழ்ந்ததில் 7 பேர் காயமடைந்தனர். |
| எபோலா வைரஸ் குறித்து பீதி அடைய வேண்டாம்: விஜயபாஸ்கர் Posted: 11 Aug 2014 12:38 PM PDT எபோலா வைரஸ் குறித்து தமிழக மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறினார். |
| வட மாநிலத்தவர்களால் வேலையிழப்பு:கரூர் மொசைக் தொழிலாளர்கள் புகார் Posted: 11 Aug 2014 12:37 PM PDT குறைவான ஊதியம் பெறும் வட மாநிலத்தவர்களால் கரூர் மாவட்ட மொசைக் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. |
| சைக்கிளில் சென்றவர் பைக் மோதி சாவு Posted: 11 Aug 2014 12:37 PM PDT கரூர் சின்னாண்டாங்கோவில் ஜீவாநகரைச் சேர்ந்தவர் காமராஜ் (55). கூலித் தொழிலாளியான இவர் ஞாயிற்றுக்கிழமை தனது சைக்கிளில் கடை வீதிக்கு வந்தபோது எதிரே அதே பகுதியைச் சேர்ந்த |
| "சிறைப் பணியாளர்களுக்கு 100 குடியிருப்புகள்' Posted: 11 Aug 2014 12:37 PM PDT சிறைத் துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நடப்பு நிதியாண்டில் (2014-15) 100 குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
| நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஓய்வூதியர்கள் மனு Posted: 11 Aug 2014 12:37 PM PDT அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. |
| றைதீர் முகாமில் ரூ. 1.18 லட்சத்தில் உதவி Posted: 11 Aug 2014 12:37 PM PDT கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் முகாமில் ரூ.1.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 11 Aug 2014 12:36 PM PDT கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் எதிரே, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் பென்சனர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். |
| தமிழகத்தில் புதிதாக 15 தாலுகாக்கள் Posted: 11 Aug 2014 12:36 PM PDT தமிழகத்தில் நடப்பாண்டில் (2014-15) புதிதாக 15 தாலுகாக்கள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
| 3 விதை விற்பனை நிலையங்கள் செயல்பட தாற்காலிக தடை Posted: 11 Aug 2014 12:36 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் 3 விதை விற்பனை நிலையங்கள் செயல்பட தாற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத ஊராட்சித் தலைவரைக் கண்டித்து போராட்டம் Posted: 11 Aug 2014 12:36 PM PDT அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர மறுக்கும் தழுதாழை ஊராட்சித் தலைவரை கண்டித்து, அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை ஊராட்சித் தலைவர் சதீஷ், அந்த |
| குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் Posted: 11 Aug 2014 12:35 PM PDT அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் ரூ. 2 லட்சத்து 22 ஆயிரத்து 170 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார். |
| சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு Posted: 11 Aug 2014 12:35 PM PDT தமிழக சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைகிறது. கேள்வி நேரம் முடிந்த பிறகு, சட்டப்பேரவை, பொதுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. |
| கடன் தகராறில் இளைஞரின் காதைக் கடித்தவர் கைது Posted: 11 Aug 2014 12:35 PM PDT அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே கடன் தகராறில் இளைஞரின் காதைக் கடித்தவரை உடையார்பாளையம் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| கந்தர்வகோட்டை அருகே மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல் Posted: 11 Aug 2014 12:35 PM PDT கந்தர்வகோட்டை அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| புதுக்கோட்டை மாவட்டத்தில் டெல்டா பகுதியில் 28 ஆயிரம் ஹெக்டேர் சம்பா சாகுபடி செய்ய இலக்கு: ஆட்சியர் Posted: 11 Aug 2014 12:34 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் சுமார் 28 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் செ |
| உரிமம் இன்றி விதைகள் விற்றால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை Posted: 11 Aug 2014 12:34 PM PDT விவசாயிகளுக்கு தரமற்ற சான்றில்லாத விதைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற நேரிடும் என வேளாண் விதை ஆய்வுத் துறை |
| பேருந்து மோதி4 செம்மறி ஆடுகள் பலி: ஓட்டுநர் கைது Posted: 11 Aug 2014 12:34 PM PDT ஆலங்குடி அருகே தனியார் பேருந்து மோதியதில் 4 செம்மறி ஆடுகள் இறந்தன. இதுதொடர்பாக, பேருந்து ஓட்டுநரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| புதுவாழ்வுத் திட்டம் மூலம் 50 பேருக்கு ஓட்டுநர் உரிமம் அளிப்பு Posted: 11 Aug 2014 12:34 PM PDT புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் புதுவாழ்வுத் திட்டம் மூலம் கிராம வறுமை ஒழிப்புச் சங்க உறுப்பினர்கள் 50 பேருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது. |
| கடைமடை பகுதிக்கு தண்ணீர்கிடைக்க நடவடிக்கை தேவை Posted: 11 Aug 2014 12:33 PM PDT வேதாரண்யம் பகுதியில் நிலவும் வறட்சியை கருத்தில்கொண்டு கடைமடை பகுதிவரை தண்ணீர் திறந்துவிடுவதற்கான நடவடிக்கைகளை அரசு காலத்தில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| சட்டநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 11 Aug 2014 12:33 PM PDT சீர்காழி ஒன்றியம், சட்டநாதபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| முதல்வரின் அறிவிப்புக்கு வழக்குரைஞர்கள் வரவேற்பு Posted: 11 Aug 2014 12:33 PM PDT நாகையில் ரூ. 19.52 கோடியில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்றக் கட்டடம் கட்டப்படும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு வழக்குரைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். |
| சிறு சாய ஆலைகளை காப்பாற்ற ரூ.700 கோடியில் தொழில் வளர்ச்சி குழுமம் Posted: 11 Aug 2014 12:32 PM PDT சிறு,குறு சாய ஆலைகளின் தொழில் நலிவடையாமல் புத்துணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.700 கோடியில் ஒருங்கிணைந்த தொழில் சார்ந்த வளர்ச்சி குழுமம் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
| சுய தொழில் தொடங்க பெண்ணுக்கு நிதி Posted: 11 Aug 2014 12:32 PM PDT பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண்ணுக்கு டிபன் கடை நடத்திட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் நிதி வழங்கினார். |
| மேட்டூர் அணையின் நீர் மூலம் ஏரி, குளங்களை நிரப்ப கோரி மனு Posted: 11 Aug 2014 12:32 PM PDT தஞ்சாவூர் மாவட்டம் கடைமடை பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் மேட்டூர் அணையின் மூலம் ஏரி, குளங்களை நிரப்ப வேண்டுமென பட்டுக்கோட்டை ஒன்றிய ஊராட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| எம்.எல்.ஏ.க்களுக்கு இன்று தேநீர் விருந்து Posted: 11 Aug 2014 12:32 PM PDT சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடியும் நாளான செவ்வாய்க்கிழமை மாலை (ஆகஸ்ட் 12) அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா தேநீர் விருந்து அளிக்கிறார். எம்.ஆர்.சி. நகரிலுள்ள பிரதான சாலையில் அமைந்திருக்கும் தனியார் ஓட்டலில் இந்தத் தேநீர் விருந்து அளிக்கப்படுகிறது. |
| "உடல் உழைப்பு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் கண்டு கொள்ளப்படுவதில்லை Posted: 11 Aug 2014 12:32 PM PDT தமிழக அரசு உடல் உழைப்பு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தை கண்டு கொள்வதில்லை என்றார் தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி மாவட்டச் செயலர் ஆர்.தில்லைவாணன். |
| பேருந்து பயணியிடம் திருடிய 4 பேர் போலீஸில் ஒப்படைப்பு Posted: 11 Aug 2014 12:32 PM PDT கும்பகோணத்தில் பேருந்து பயணியிடம் ரூ. 44 ஆயிரத்தைத் திருடிய 4 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். |
| அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் தோண்டினால் சிறை: சட்ட மசோதா தாக்கல் Posted: 11 Aug 2014 12:31 PM PDT அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் தோண்டினால் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. |
| "அதிமுக ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம்' Posted: 11 Aug 2014 12:31 PM PDT அதிமுக ஆட்சியில் கல்விக்கு முதல்வர் ஜெயலலிதா முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்றார் மா |
| சட்டநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 11 Aug 2014 12:31 PM PDT சீர்காழி ஒன்றியம், சட்டநாதபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பேரவையில் மயங்கி விழுந்த தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. Posted: 11 Aug 2014 12:31 PM PDT சட்டப்பேரவை கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. சுந்தரராஜனுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. |
| போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 11 Aug 2014 12:31 PM PDT அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை உறுதிப்படுத்த அரசே ஏற்று நடத்தக் கோரி திருவாரூர் தமிழ்நாடு போக்குவரத்துக்கழக |
| Posted: 11 Aug 2014 12:30 PM PDT கரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை கார் மோதி மத்திய பிரதேச மாநில தொழிலாளி இறந்தார். |
| மறியல் : 440 சத்துணவு ஊழியர்கள் கைது Posted: 11 Aug 2014 12:30 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 440 சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். |
| கரூர் அரசு கலைக்கல்லூரியில் சேர 14}ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் Posted: 11 Aug 2014 12:30 PM PDT கரூர் அரசு கலைக்கல்லூரியில் 2014-15-ம் ஆண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு வரும் 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். |
| மதுபானங்கள் மீதான ஆயத் தீர்வை உயர்வு: மசோதா தாக்கல் Posted: 11 Aug 2014 12:30 PM PDT மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வையை உயர்த்துவதற்கான சட்ட மசோதா பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. |
| பி.எட். தேர்வெழுத அனுமதிக்கக் கோரி மனு Posted: 11 Aug 2014 12:30 PM PDT பிஎட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கரூரைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். |
| கல்வீசித் தாக்கியதாக 10 பாமகவினர் மீது வழக்கு Posted: 11 Aug 2014 12:30 PM PDT வாங்கல் அருகே பொதுமக்கள் மீது கல்வீசித் தாக்கியதாக பாமக மாவட்ட செயலர் உள்பட 10 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர். |
| பள்ளபட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு Posted: 11 Aug 2014 12:29 PM PDT பள்ளபட்டியில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து 15 பவுன் தங்க நகை, ரூ. 25 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனர். |
| இணையம் மூலமும் புகார் அளிக்கலாம் : எஸ்.பி Posted: 11 Aug 2014 12:29 PM PDT பொதுமக்களுக்கு அன்றாடம் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் குறைகளை இணையம் மூலமாகவும் புகாராக அளிக்கலாம் என்றார் பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா. |
| சத்துணவு ஊழியர்கள் மறியல் : 415 பேர் கைது Posted: 11 Aug 2014 12:29 PM PDT காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 276 சத்துணவுப் பணியாளர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| கொளத்தூரில் நாளை சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் Posted: 11 Aug 2014 12:28 PM PDT பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகேயுள்ள கொளத்தூர் கிராமத்தில் புதன்கிழமை (ஆக. 13) சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் நடைபெறுகிறது. |
| துப்புரவுத் தொழிலாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம் Posted: 11 Aug 2014 12:28 PM PDT அரியலூரில் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து துப்புரவுத் தொழிலாளர்கள் நெற்றியில் பட்டை நாமத்துடன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| சம்பா சாகுபடி முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை Posted: 11 Aug 2014 12:28 PM PDT சம்பா சாகுபடி முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| மதிமுக மாணவரணி சார்பில் பேச்சுப் போட்டி Posted: 11 Aug 2014 12:28 PM PDT அரியலூர் மாவட்ட மதிமுக மாணவரணி சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 11 Aug 2014 12:27 PM PDT தஞ்சாவூர் ரயிலடியில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| ஆக. 15-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை Posted: 11 Aug 2014 12:27 PM PDT தஞ்சாவூர் மாவட்ட மதுக்கடைகளை வரும் 15-ம் தேதி மூட மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். |
| மத்திய அமைச்சருக்கு குடந்தை வணிகர்கள் நன்றி Posted: 11 Aug 2014 12:27 PM PDT கும்பகோணம் - விருத்தாசலம் புதிய ரயில்பாதை திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர்கள் சங்க கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்தனர். |
| சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: 345 பேர் கைது Posted: 11 Aug 2014 12:26 PM PDT காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த 345 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| மாமன்ற உறுப்பினரால் அரசு நிலம் ஆக்கிரமிப்பு Posted: 11 Aug 2014 12:26 PM PDT தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. |
| சாலை வசதி கோரி நரிக்குறவர்கள் போராட்டம் நடத்த முடிவு Posted: 11 Aug 2014 12:26 PM PDT கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி ஊராட்சிக்குட்பட்ட ஏழுமாந்திடல் கிராமத்திற்கு சாலை வசதி கோரி நரிக்குறவர்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 12) முதல் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். |
| மாவட்டத்தில் 100 இடங்களில் தெருமுனை பிரசாரக் கூட்டங்கள்: கம்யூனிஸ்ட் முடிவு Posted: 11 Aug 2014 12:26 PM PDT விலைவாசி உயர்வு, ஊழல்களை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 இடங்களில் தெருமுனைப் பிரசாரக் கூட்டங்களை நடத்துவது என்று இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளன. |
| மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றுவோர் மீது கடும் நடவடிக்கை Posted: 11 Aug 2014 12:26 PM PDT மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதாகக் கூறி ஏமாற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார். |
| பெண் தூக்கிட்டுதற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை Posted: 11 Aug 2014 12:25 PM PDT தஞ்சாவூரில் திருமணமாகி இரண்டே மாதங்களான பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு Posted: 11 Aug 2014 12:25 PM PDT செப்டம்பர், அக்டோபர் மாதம் நடைபெறும் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| சீர் வரிசையை திருப்பித் தராத கணவர் கைது Posted: 11 Aug 2014 12:25 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே விவாகரத்து பெற்ற பின்னர் மனைவிக்கு சீர் வரிசைப் பொருள்களைத் திருப்பித் தராத கணவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| சம்ஸ்கிருத திணிப்பை கண்டித்து தெருமுனைக் கூட்டம் Posted: 11 Aug 2014 12:25 PM PDT மத்திய அரசின் சம்ஸ்கிருத திணிப்பைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் திங்கள்கிழமை தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. |
| ஆக்கிரமிப்பில் உள்ள கோயிலை மீட்க வலியுறுத்தல் Posted: 11 Aug 2014 12:24 PM PDT தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள கோயிலையும், கோயில் நிலத்தையும் மீட்க வலியுறுத்தி தேப்பெருமநல்லூர் |
| Posted: 11 Aug 2014 12:24 PM PDT ஹைதராபாத் நகர சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பொறுப்பை ஆளுநர்வசம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) உறுப்பினர்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். |
| பேருந்து பயணியிடம் திருடிய 4 பேர் போலீஸில் ஒப்படைப்பு Posted: 11 Aug 2014 12:24 PM PDT கும்பகோணத்தில் பேருந்து பயணியிடம் ரூ. 44 ஆயிரத்தைத் திருடிய 4 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். |
| இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 3 கட்சிகளின் தேசிய அங்கீகாரம் ரத்தாகுமா? Posted: 11 Aug 2014 12:24 PM PDT இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக, அக்கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் வரும் 19ஆம் தேதி கருத்து கேட்கவுள்ளது. |
| கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை தேவை Posted: 11 Aug 2014 12:23 PM PDT வேதாரண்யம் பகுதியில் நிலவும் வறட்சியை கருத்தில்கொண்டு கடைமடை பகுதிவரை தண்ணீர் திறந்துவிடுவதற்கான நடவடிக்கைகளை அரசு காலத்தில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ள |
| மயிலாடுதுறையில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம் Posted: 11 Aug 2014 12:23 PM PDT மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கவிஞர் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை அமைக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர் |
| மக்களவை துணைத் தலைவர் பதவிக்கு நாளை தேர்தல் Posted: 11 Aug 2014 12:23 PM PDT மக்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் புதன்கிழமை நடைபெற உள்ளது. |
| சத்துணவு ஊழியர்கள் மறியல்: 600 பேர் கைது Posted: 11 Aug 2014 12:23 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை, திருவாரூரில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 600 பேர் கைது செய்யப்பட்டனர். |
| நாகையில் மீனவர் பிரச்னை குறித்து பாஜக குழுவினர் கருத்துக்கேட்பு Posted: 11 Aug 2014 12:23 PM PDT மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பாஜக மாநிலக் குழுவினர் திங்கள்கிழமை நாகை மீனவர்களைச் சந்தித்து கருத்து கேட்டறிந்தனர். |
| காஷ்மீர் பண்டிட்டுகளின் மறுவாழ்வுக்கு புதிய திட்டம்: மத்திய அரசு Posted: 11 Aug 2014 12:22 PM PDT காஷ்மீர் திரும்பும் பண்டிட்டுகளின் மறுவாழ்வுக்கு, அவர்களின் பிரதிநிதிகள், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசுடன் கலந்து பேசி புதிய திட்டம் வகுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை தெரிவித்தார். |
| வேதாரண்யத்தில்விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் Posted: 11 Aug 2014 12:22 PM PDT வேதாரண்யம் பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வலியுறுத்தி அந்த பகுதி விவசாயிகள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை 11-வது நாளாக |
| நாகையில்17 பேருக்கு நலத் திட்ட உதவிகள் Posted: 11 Aug 2014 12:22 PM PDT நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை |
| "பாஜகவை வீழ்த்த எங்களுடன் பகுஜன் சமாஜ், சமாஜவாதி இணைய வேண்டும்' Posted: 11 Aug 2014 12:22 PM PDT "சமூக நீதிக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது. எனவே சமூக நீதியை பாதுகாப்பதற்காகவே நாங்கள் (நிதீஷ்குமாருடன்) இணைந்தோம். பாஜகவை வீழ்த்தும் முயற்சியில் எங்களுடன் சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கைகோக்க வேண்டும்' என்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் கூறினார். |
| உப்பனாற்றில் இணைப்பு பாலம் கட்ட பகுஜன் சமாஜ் வலியுறுத்தல் Posted: 11 Aug 2014 12:22 PM PDT வெள்ளப்பள்ளம்-புதுத்துறை இடையே உப்பனாற்றில் இணைப்பு பாலம் கட்ட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| மின் வயர்களை புதுப்பிக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை Posted: 11 Aug 2014 12:22 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் மின் இணைப்பு கம்பிகிளை புதுப்பித்து சீரமைத்திட மின்வாரியத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| தெருநாய் கடித்து 9 மாணவிகள் காயம்: கர்ப்பிணியின் வயிற்றில் 8 மாத சிசு மரணம் Posted: 11 Aug 2014 12:21 PM PDT தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தெரு நாய் கடித்ததில் 9 மாணவிகள் காயமடைந்தனர். மேலும் நாய் வருவதைக் கண்டு அச்சத்தில் ஓடிய கர்ப்பிணி பெண் கீழே விழுந்ததில் வயிற்றுக்குள் இருந்த எட்டு மாத சிசு இறந்தது. |
| "தமிழக அறிவியல் வரலாறு நூல் தொகுதி வெளியிட முடிவு Posted: 11 Aug 2014 12:21 PM PDT தமிழக அறிவியல் வரலாறு நூல் தொகுதிகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை. |
| பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: 4 பேர் காயம் Posted: 11 Aug 2014 12:21 PM PDT போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். |
| கரூரில் தலைமைக் காவலரை கத்தியால் குத்தியவர் கைது Posted: 11 Aug 2014 12:20 PM PDT கரூரில் மது போதையில் தலைமைக் காவலரை கத்தியால் குத்திய பெயிண்டரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| "ஊழல் நீதிபதிக்கு கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆதரவு' Posted: 11 Aug 2014 12:20 PM PDT ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க முயற்சி மேற்கொண்டதாக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மீது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், இந்திய பத்திரிகையாளர் மன்ற (பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா) தலைவருமான மார்கண்டேய கட்ஜு தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
| புதுகையில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் போராட்டம் Posted: 11 Aug 2014 12:20 PM PDT காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியரகம் அருகில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கான்வாடி |
| "பொறியியல் கல்வியை ஈடுபாட்டோடு படியுங்கள்' Posted: 11 Aug 2014 12:20 PM PDT பொறியியல் கல்வியை ஈடுபாட்டோடு படியுங்கள் என்றார் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தலைமை பொது மேலாளர், மனிதவள இயக்குநர் என். முத்து. |
| வரதட்சிணைக் கொடுமை:கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு Posted: 11 Aug 2014 12:20 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மனைவியிடம் வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர். |
| எருக்கலக்கோட்டை அய்யனார் கோயிலில் கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு Posted: 11 Aug 2014 12:19 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே எருக்கலக்கோட்டையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த இடத்தில் திங்கள்கிழமை கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| Posted: 11 Aug 2014 12:19 PM PDT கந்தர்வகோட்டை அருகே ஆடுகள் திருடியவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| உலக மக்கள் தொகை நாள் விழிப்புணாவு கருத்தரங்கம் Posted: 11 Aug 2014 12:19 PM PDT அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், காவேரி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அன்னவாசல் வட்டார அளவிலான உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. |
| பசுமை வீடு கட்ட போலி அரசாணை:ஆட்சியரிடம் பெண் புகார் மனு அளிப்பு Posted: 11 Aug 2014 12:19 PM PDT முதல்வரின் பசுமை வீடு கட்ட போலியான அரசாணை அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பெண் ஒருவர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
| கீரனூரில் இடதுசாரிக் கட்சியினர் உண்ணாவிரதம் Posted: 11 Aug 2014 12:18 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியப் பகுதிகளில் தொழில் பூங்காவுக்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கீரனூரில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. |
| பசுமை வீடு கட்ட போலி அரசாணை: ஆட்சியரிடம் பெண் புகார் மனு அளிப்பு Posted: 11 Aug 2014 12:18 PM PDT முதல்வரின் பசுமை வீடு கட்ட போலியான அரசாணை அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பெண் ஒருவர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
| மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் முத்தமிழ் விழா Posted: 11 Aug 2014 12:18 PM PDT மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் அண்மையில் முத்தமிழ் விழா நடைபெற்றது. கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் 3 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவின் தொடக்க நிகழ்வுக்கு |
| இலங்கை போர்க் குற்ற விசாரணை: சர்வதேசக் குழுவில் இந்தியர் நியமனம் Posted: 11 Aug 2014 12:18 PM PDT போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க இலங்கை அதிபர் அமைத்துள்ள ஆணையத்துக்கு உதவுவதற்கான சர்வதேசக் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஒருவர் இடம்பெற்றுள்ளார். |
| உரிமம் இன்றி விதைகள் விற்றால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை Posted: 11 Aug 2014 12:17 PM PDT விவசாயிகளுக்கு தரமற்ற சான்றில்லாத விதைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற நேரிடும் என வேளாண் விதை ஆய்வுத் துறை |
| மேலையூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 11 Aug 2014 12:17 PM PDT மேலையூரில் பூம்புகார் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்ற மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ஜஸ்வந்த் சிங் தொடர்ந்து கவலைக்கிடம் Posted: 11 Aug 2014 12:17 PM PDT தில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். |
| வரதட்சிணை கொடுமை:கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு Posted: 11 Aug 2014 12:17 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மனைவியிடம் வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர். |
| கல்லூரியில் சுதந்திர தின விழா கபடி போட்டி Posted: 11 Aug 2014 12:17 PM PDT பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா சிறப்பு கபடி போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| சந்திரசேகர ராவின் மகள் மீது தேசத் துரோக வழக்கு Posted: 11 Aug 2014 12:17 PM PDT ஜம்மு-காஷ்மீர், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், எம்.பி.யுமான கே.கவிதா மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |