Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சுற்றுச்சூழலை பாதுகாக்க சைக்கிள் பேரணி: பிகார் அரசு முடிவு

Posted: 31 Aug 2014 01:22 PM PDT

பிகார் மாநிலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க, சைக்கிளை பயன்படுத்த வலியுறுத்தி, சைக்கிள் பேரணி நடத்த மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சுயசரிதை: மும்பைத் தாக்குதல் பற்றி குறிப்பிடாத சிவராஜ் பாட்டீல்

Posted: 31 Aug 2014 01:21 PM PDT

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், "ஒடிஸி ஆஃப் மை லைஃப்' என்ற தலைப்பில் சுயசரிதை எழுதியுள்ளார்.

ஜார்க்கண்ட்: நக்ஸல் சம்பவங்கள் 35 சதவீதம் குறைவு

Posted: 31 Aug 2014 01:20 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளால், நக்ஸல்கள் தொடர்பான சம்பவங்கள் 35 சதவீதம் குறைந்துள்ளதாக அந்த மாநில காவல்துறைத் தலைவர் ராஜீவ்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

திருப்பதியிலிருந்து செம்மரம் கடத்தல்: சென்னையைச் சேர்ந்த இருவர் கைது

Posted: 31 Aug 2014 01:20 PM PDT

செம்மரக் கடத்தல் தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளிகள் இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக புத்தூர் டி.எஸ்.பி. கிருஷ்ண கிஷோர் தெரிவித்தார்.

பிபின் சந்திரா குடும்பத்தினருக்கு பிரணாப் ஆறுதல்

Posted: 31 Aug 2014 01:19 PM PDT

மறைந்த வரலாற்று ஆய்வாளர் பிபின் சந்திராவின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

"ஜன் தன்' திட்டம்: எல்.ஐ.சி. அதிகாரிகள் இன்று ஆலோசனை

Posted: 31 Aug 2014 01:19 PM PDT

கழுத்தளவு ஊழலில் மூழ்கியுள்ளது ஐக்கிய ஜனதா தள அரசு: பாஜக

Posted: 31 Aug 2014 01:18 PM PDT

பிகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்த சம்பவம், மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தள அரசு, ஊழலில் மூழ்கிவிட்டது என்பதையே வெளிப்படுத்துகிறது என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

வாகனம் மோதி ரேஷன் கடை விற்பனையாளர் சாவு

Posted: 31 Aug 2014 12:32 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், நக்கசேலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி நியாய விலைக் கடை விற்பனையாளர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

உதவி வேளாண் அலுவலர் பணி : பரிந்துரையை சரிபார்க்க அழைப்பு

Posted: 31 Aug 2014 12:31 PM PDT

உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் சரிபார்க்கலாம்.

மனைவி நல வேட்பு விழா : 150 தம்பதிகள் பங்கேற்பு

Posted: 31 Aug 2014 12:31 PM PDT

பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மனைவி நல வேட்பு விழாவில் 150-க்கும் மேற்பட்ட தம்பதிகள் பங்கேற்றனர்.

158 விநாயகர் சிலைகள் காவிரியில் கரைப்பு

Posted: 31 Aug 2014 12:31 PM PDT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் வைக்கப்பட்டிருந்த 158 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.

வெளி மாவட்டங்களில் பணிபுரிய 3 ஆசிரியர்களுக்கு ஆணைகள்

Posted: 31 Aug 2014 12:30 PM PDT

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வில், வெளி மாவட்டங்களில் பணிபுரிய 3 பேருக்கு பணி ஆணை வழங்கினார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம்.

சாலையில் கிடக்கும் மின் வயர்களை சீரமைக்க வலியுறுத்தல்

Posted: 31 Aug 2014 12:30 PM PDT

பெரம்பலூர் நகரில் பாதுகாப்பின்றி சாலையோரத்தில் கிடக்கும் மின் வயர்களை சீரமைக்க நகராட்சி நிர்வாகமும், மின்வாரிய அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறங்தாங்கி, பொன்னமராவதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Posted: 31 Aug 2014 12:30 PM PDT

அறந்தாங்கியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் சார்பில் வழிபடப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அறங்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.

பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பப் பயிலரங்கம்

Posted: 31 Aug 2014 12:29 PM PDT

புதுக்கோட்டை அருகே லெனாவிலக்கு மவுன்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான நுண்ணணு மற்றும் கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் தகவல் தொடர்புகளின் இன்றைய நிலை குறித்த 2 நாள் தொழில்நுட்பப் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

"இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸார் இன்று மனு அளிக்கலாம்

Posted: 31 Aug 2014 12:29 PM PDT

புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் பிரச்னையில் பாஜகவும் துரோகம் இழைக்கிறது

Posted: 31 Aug 2014 12:29 PM PDT

தமிழக மீனவர்கள் பிரச்னையில் காங்கிரஸ் அரசைப் போலவே பாஜகவும் துரோகம் இழைக்கிறது என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

புதுகை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 2 பேர் சாவு

Posted: 31 Aug 2014 12:29 PM PDT

புதுக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.

தஞ்சையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Posted: 31 Aug 2014 12:28 PM PDT

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வடவாற்றில் கரைக்கப்பட்டன.

பூதலூரில் 175 பேருக்கு இலவச கண் சிகிச்சை

Posted: 31 Aug 2014 12:28 PM PDT

 தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் லயன்ஸ் சங்கம், அரியலூர் ஜோசப் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து பூதலூர் வித்யா மெட்ரிக் பள்ளி வாளக்தில் இலவச கண் மருத்துவ முகாமை நடத்தின.

கணித ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி

Posted: 31 Aug 2014 12:28 PM PDT

தஞ்சாவூர் டான்போஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், கணித ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்றவர் விபத்தில் சாவு

Posted: 31 Aug 2014 12:27 PM PDT

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்றவர் இரு சக்கர வாகனம் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

விஜய ராகவ நாயக்கருக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்

Posted: 31 Aug 2014 12:27 PM PDT

தஞ்சாவூரில் மன்னர் விஜயராகவ நாயக்கருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட நாயுடு பெருமக்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பிளஸ் 2: தனித்தேர்வர்கள்தட்கல் முறையில் எழுதலாம்

Posted: 31 Aug 2014 12:27 PM PDT

வரும் செப்டம்பர், அக்டோபரில் மேல்நிலைத் தேர்வெழுத தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வு மாணவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ், தட்கல் முறையில் தேர்வு எழுதலாம் என்றார் பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் எஸ். வளர்மதி.

செப்டம்பர் 02 மின் தடை

Posted: 31 Aug 2014 12:27 PM PDT

துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆடுதுறை, எஸ்.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 2) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனிமாணிக்கனார் அறக்கட்டளை,திருவள்ளுவர் தவச்சாலையின் முப்பெரும் விழா

Posted: 31 Aug 2014 12:26 PM PDT

தஞ்சாவூரில் குறளடிகளார் மொ. பழனிமாணிக்கனார் அறக்கட்டளை, திருச்சி திருவள்ளுவர் தவச்சாலை சார்பில் நூல்கள் வெளியீடு, விருது வழங்கல், அறக்கட்டளை நிறுவுதல் ஆகிய முப்பெரும் விழா

இடிக்கப்பட்ட படித்துறைகள், தடுப்புச்சுவரை மீண்டும் கட்ட வலியுறுத்தல்

Posted: 31 Aug 2014 12:26 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஆனந்தகாவிரி ஆற்றுப் பாலம் கட்டுவதற்காக நெடுஞ்சாலைத் துறையினரால் இடிக்கப்பட்ட படித்துறைகள் மற்றும் ஆற்றுத் தடுப்புச்சுவரை மீண்டும் கட்டித்த

திருவாரூரில் விநாயகர்சிலைகள் ஊர்வலம்

Posted: 31 Aug 2014 12:26 PM PDT

திருவாரூரில் சனிக்கிழமை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன.

பொறுப்பின்றி செலவிடப்படும் சமூக பங்களிப்புத் திட்ட நிதி-என்.எஸ். செல்வமுத்துக்குமாரசாமி

Posted: 31 Aug 2014 12:25 PM PDT

ஓஎன்ஜிசி சமூக பங்களிப்புத் திட்டத்தின்கீழ் (இநத) தனி நபர்களுக்கு, சங்கங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்காலை நிர்வாகத் தலைமையிடமாகக்

பள்ளம் தோண்டியபோது 2 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

Posted: 31 Aug 2014 12:25 PM PDT

திருவாரூர் அருகே சனிக்கிழமை இரவு கோயில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டியபோது இரண்டு சுவாமி சிலைகள் கிடைத்தன.

ஆதிகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு

Posted: 31 Aug 2014 12:25 PM PDT

குத்தாலம் வட்டம், பேராவூர் கிராமத்தில் உள்ள பூமிதேவி உடனுறை ஆதிகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிக்கல் அறிவியல் நிலையத்தில் வேளாண் கண்காட்சி

Posted: 31 Aug 2014 12:24 PM PDT

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவர்களின் வேளாண் கருத்துக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

நாகையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Posted: 31 Aug 2014 12:24 PM PDT

நாகையில் ஸ்ரீ சக்தி விநாயகர் குழு சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குத்தாலத்தில்வெற்றி விநாயகர் சிலை ஊர்வலம்

Posted: 31 Aug 2014 12:24 PM PDT

குத்தாலம் மன்மதீஸ்வரர் கோயில் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை வெற்றி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலைக்கு கடந்த இரண்டு நாட்களாக வழிபாடுகள் நடைபெற்றன.

பாகிஸ்தானுடனான பேச்சை தொடர முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு: ஒமர்

Posted: 31 Aug 2014 12:19 PM PDT

"பிரிவினைவாத இயக்கத் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளித்ததற்காக பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ள மத்திய அரசு, மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடர முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது' என ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்: பாகிஸ்தானுக்கு வலியுறுத்தல்

Posted: 31 Aug 2014 12:17 PM PDT

"பாகிஸ்தான் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தியாவுடன் பதற்றத்தை அதிகரித்து வருவதன் மூலம் அந்நாட்டுக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை' என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

கர்நாடகத்தில் அரசு கேபிள் டி.வி. தொடங்கப்படும்: அமைச்சர்

Posted: 31 Aug 2014 12:16 PM PDT

கர்நாடக மாநிலத்தில் அரசு கேபிள் டி.வி. தொடங்கப்படும் என்று அந்த மாநில தகவல், உள்கட்டமைப்புத் துறை அமைச்சர் ரோஷண் பெய்க் தெரிவித்தார்.

சிறுபான்மையினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து: பாஜக எம்.பி.க்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கண்டனம்

Posted: 31 Aug 2014 12:15 PM PDT

உத்தரப்பிரதேச கலவரங்கள் தொடர்பாக, சிறுபான்மையினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை பாஜக எம்.பி. யோகி ஆதித்யானந்த் தெரிவித்துள்ளதாக, காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாட்னா-வாராணசி: சொகுசுக் கப்பல் போக்குவரத்து தொடக்கம்

Posted: 31 Aug 2014 12:14 PM PDT

பிகார் தலைநகர் பாட்னாவில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசிக்கு கங்கை நதி வழியே "எம்வி ராஜ்மஹால்' என்ற சொகுசுக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

பேருந்து-லாரி மோதல்: 10 பேர் சாவு

Posted: 31 Aug 2014 12:13 PM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்தும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் உள்பட பக்தர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.

தில்லி: 1,250 கைதிகளுக்கு தண்டனை குறைப்பு

Posted: 31 Aug 2014 12:13 PM PDT

சுதந்திர தினத்தையொட்டி தில்லி திஹார், ரோஹிணி சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 1,250 கைதிகளின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு தண்டனை குறைப்பு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்சிபி மீது காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி: பிருத்விராஜ் சவாண்

Posted: 31 Aug 2014 12:12 PM PDT

தேசியவாத காங்கிரஸ் கட்சி மீது காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தியிலிருப்பதாக மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

இந்திய-சீன வர்த்தக அமைச்சர்கள் நாளை சந்திப்பு

Posted: 31 Aug 2014 12:10 PM PDT

சீன அதிபர் ஜீ ஜின்பிங் செப்டம்பர் மாதம் இந்தியா வரவுள்ள நிலையில், இந்திய-சீன வர்த்தகத் துறை அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) சீனாவில் சந்தித்துப் பேசவுள்ளனர்.

கோவா ஆளுநராக மிருதுளா சின்ஹா பதவியேற்பு

Posted: 31 Aug 2014 12:09 PM PDT

தொடர் மழையால் இதமான வானிலை!

Posted: 31 Aug 2014 12:05 PM PDT

தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது. இதனால், நகரில் இதமான தட்பவெப்பம் நிலவியது.

செப். 6 முதல் மாநகராட்சிகளில் சிறப்புத் தூய்மை இயக்கம்

Posted: 31 Aug 2014 12:05 PM PDT

பாஜக தலைமையிலான 3 தில்லி மாநகராட்சிகளிலும் இம்மாதம் 6 முதல் 20ஆம் தேதி வரை சிறப்புத் தூய்மை இயக்கம் நடைபெறும் என்று தில்லி பிரதேச பாஜக தலைவரும், தெற்கு தில்லி மாநகராட்சி நிலைக் குழுத் தலைவருமான சதீஷ் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.

"வர்ணம்' வாய்ப்பாட்டுப் போட்டிகள்

Posted: 31 Aug 2014 12:05 PM PDT

தில்லி, ராமகிருஷ்ணாபுரம் சௌத் இந்தியன் சொûஸட்டி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "வர்ணம்' வாய்ப்பாட்டுப் போட்டிகளில் இளம் மாணவ, மாணவியர் பலர் ஆர்வமாக பங்கேற்றனர்.

பிபின் சந்திராகுடும்பத்தினருக்கு பிரணாப் ஆறுதல்

Posted: 31 Aug 2014 12:05 PM PDT

மறைந்த வரலாற்று ஆய்வாளர் பிபின் சந்திராவின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

களியக்காவிளை அருகே கோயிலில் பணம் திருட்டு

Posted: 31 Aug 2014 12:04 PM PDT

களியக்காவிளை அருகே ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி சாவு

Posted: 31 Aug 2014 12:03 PM PDT

கருங்கல் அருகே உள்ள ஆலஞ்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து மூதாட்டி இறந்தார். ஆலஞ்சி பகுதியில் சுமார் 15 ஆண்டுகளாக, 62 வயது மதிக்கதக்க மூதாட்டி பிச்சை எடுத்து அப்பகுதியில்

களியக்காவிளையில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

Posted: 31 Aug 2014 12:03 PM PDT

களியக்காவிளையில் பாஜக சார்பில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தொடர் மழை குலசேகரம் பகுதியில் 2 வீடுகள் சேதம்

Posted: 31 Aug 2014 12:03 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் குலசேகரம் பகுதியில் 2 வீடுகள் சனிக்கிழமை இரவு இடிந்து விழுந்தன.

கருங்கல் அருகே அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: இருவர் மீது வழக்கு

Posted: 31 Aug 2014 12:02 PM PDT

கருங்கல் அருகே உள்ள குப்பியந்தறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்திய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அடையாள அட்டையுடன் பால் அட்டையை இன்று முதல் புதுப்பிக்கலாம்

Posted: 31 Aug 2014 12:02 PM PDT

குமரி ஆவின் பால் அட்டையை திங்கள்கிழமை (செப்.1) முதல் புதுப்பிக்கலாம் என பால்வளத் தலைவர் எஸ்.ஏ. அசோகன் தெரிவித்துள்ளார்.

கிள்ளியூரில் எரியாத தெருவிளக்குகளை மாற்றியமைக்க கோரிக்கை

Posted: 31 Aug 2014 12:02 PM PDT

கிள்ளியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த எரியாத தெருவிளக்குகளை உடனே மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குலசேகரம் அகுஸ்தினார் ஆலயத் திருவிழா நிறைவு

Posted: 31 Aug 2014 12:02 PM PDT

குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

ராஜாக்கமங்கலம் கடலில் 501 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

Posted: 31 Aug 2014 12:01 PM PDT

விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகளில் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ராஜாக்கமங்கலம் கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

வெள்ளிமலை வித்யா ஜோதி பட்டமளிப்பு விழா, சமய வகுப்பு மாநாடு

Posted: 31 Aug 2014 12:01 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யாபீடம் சார்பில் வித்யா ஜோதி பட்டமளிப்பு விழா, 34ஆவது சமய வகுப்பு மாணவர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கேரள அரசுபென்சனர்களுக்கு ஓணம் பண்டிகை படி

Posted: 31 Aug 2014 12:01 PM PDT

குமரி மாவட்டத்தில் உள்ள கேரள அரசு ஓய்வூதியர்களுக்கு ஓணத்தையொட்டி பண்டிகை படி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் கலக்கும் நகராட்சி குப்பைகளால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து

Posted: 31 Aug 2014 12:01 PM PDT

குளச்சல் கடலில் நகராட்சி குப்பைகள் கலப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கடற்கரை மேலாண்மை விதியின் கீழ் கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்குள்

சாமிதோப்பில் இன்று ஆவணித் திருவிழா தேரோட்டம்

Posted: 31 Aug 2014 12:00 PM PDT

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழாவின் 11ஆம் நாளான திங்கள்கிழமை (செப். 1) தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவருள் பேரவை சார்பில் சமய நல்லிணக்க விநாயகர் சதுர்த்தி விழா

Posted: 31 Aug 2014 12:00 PM PDT

நாகர்கோவிலில் திருவருள் பேரவை சார்பில் சமய நல்லிணக்க விநாயகர் சதுர்த்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆவணி ஞாயிறு:நாகர் சிலைக்கு பால் ஊற்றி பக்தர்கள் வழிபாடு

Posted: 31 Aug 2014 12:00 PM PDT

நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா கோயிலில் 3 ஆவது ஆவணி ஞாயிறு விழாவையொட்டி பக்தர்கள் நாகர் சிலைக்கு பால் ஊற்றி வழிபாட்டனர்.

களியக்காவிளையில் பழுதாகி வழியில் நின்ற அரசுப் பேருந்து

Posted: 31 Aug 2014 11:59 AM PDT

களியக்காவிளை பேருந்து நிலைய நுழைவுவாயில் அருகே அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை பழுதாகி நின்றதால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ரப்பர் மரத்தடிகளை பயன்படுத்தி மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் ஆலை தொடங்க வேண்டும்

Posted: 31 Aug 2014 11:59 AM PDT

குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்திலிருந்து கிடைக்கும் ரப்பர் மரத் தடிகளை பயன்படுத்தி மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் ஆலையை இம் மாவட்டத்தில் உருவாக்க வேண்டுமென்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, பெங்களூரு எக்ஸ்பிரஸ்களின் இயக்கத்தில் மாற்றம்

Posted: 31 Aug 2014 11:59 AM PDT

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், பெங்களூரு செல்லும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் இயக்கத்தில் திங்கள்கிழமை முதல் (செப். 1) மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து வெளியூர் செல்ல அலைமோதிய பயணிகள் கூட்டம்

Posted: 31 Aug 2014 11:59 AM PDT

விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து வெளியூர் செல்ல பயணிகள் குவிந்ததால் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் ஞாயிற்றுக்கிழமை பரபரப்புடன் காணப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா ஆக. 29ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி வெளியூர்கள

ராமர் பாதம் கோயில் அருகே உள்ளகெந்தமாதன தீர்த்தம் சீரமைக்கப்படுமா?

Posted: 31 Aug 2014 11:58 AM PDT

ராமேசுவரம் திருக்கோயிலுக்கு சொந்தமான கோயிலுக்கு வெளியில் அமைந்துள்ள புனித தீர்த்தக்குளங்கள் பராமரிப்பு இல்லாமல் அழிந்து வருகின்றன. இந்த தீர்த்தக்குளங்களை சீரமைக்க பக்தர்கள்

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 31 Aug 2014 11:57 AM PDT

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கீழக்கரையில் உணவுத் திருவிழா

Posted: 31 Aug 2014 11:57 AM PDT

கீழக்கரை அரசு மருத்துவமனை மற்றும் தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி உணவு மற்றும் ஊட்டசத்துத் துறை மாணவிகள் இணைந்து 3நாள்கள் நடத்திய உணவுத் திருவிழா மற்றும் விளக்க

ஓரியூர் பகுதியில் ஒடிந்துவிழும் நிலையில் உள்ள மின் கம்பங்கள் சரி செய்யப்படுமா?

Posted: 31 Aug 2014 11:57 AM PDT

திருவாடானை தாலுகா ஓரியூர் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலவச கண் பரிசோதனை முகாம்

Posted: 31 Aug 2014 11:57 AM PDT

பரமக்குடி மேலச்சத்திரம் ஆர்.எஸ்.மஹாலில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், தாலுகா அரசு மருத்துவமனை மற்றும் பார்த்திபனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

இடத்தகராறு: 20 பேர் மீது வழக்குப் பதிவு

Posted: 31 Aug 2014 11:56 AM PDT

முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூரில் இடத் தகராறு ஏற்பட்டதில் 20 பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வழுதூர் விநாயகர் கோயிலில் திருவிளக்கு பூஜை

Posted: 31 Aug 2014 11:56 AM PDT

ராமநாதபுரம் அருகே வழுதூரில் உள்ள அருள்மிகு அருளொளி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும்,108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றன.

ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Posted: 31 Aug 2014 11:56 AM PDT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் அருள்மிகு வழிவிடு முருகன் திருக்கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக கொண்டு செல்லப்பபட்ட விநாயகர் சிலைகள் நொச்சிவயல் ஊரணியில் கரைக்கப்பட்டன.

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் நடைமேடை மேம்பாலம் அமைக்க கோரிக்கை

Posted: 31 Aug 2014 11:56 AM PDT

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் நடைமேடை மேம்பாலம் இல்லாததால், பயணிகள் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர். விபத்துகளை தவிர்க்க நடைமேடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொது நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

108 விநாயகர் சிலைகளுடன் இந்து எழுச்சி ஊர்வலம்

Posted: 31 Aug 2014 11:55 AM PDT

ஆறுமுகனேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 விநாயகர் சிலைகளுடன் இந்து எழுச்சி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை மாலை காயல்பட்டினம் வழியாக

தூத்துக்குடியில் தீக்குளித்த கல்லூரி மாணவர் சாவு

Posted: 31 Aug 2014 11:55 AM PDT

தூத்துக்குடியில் பெற்றோர் கண்டித்ததால், தீக்குளித்த கல்லூரி மாணவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பாரதி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜெகநாதன் (18). இவர், தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்தார். கல்லூரிக்குச் சரியாக செல்லாததால் ஜெகநாதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த

மாணவர், இளைஞர் பெருமன்றத்தினர் போராட்டம்

Posted: 31 Aug 2014 11:54 AM PDT

எட்டயபுரத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் இளைஞர் பெருமன்றம் சார்பில், கல்விப் பிச்சை எடுக்கும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலம்பட்டியில் வைக்கோல் படப்புக்கு தீ: 5 பேர் கைது

Posted: 31 Aug 2014 11:54 AM PDT

கோவில்பட்டியையடுத்த ஆலம்பட்டியில் வைக்கோல் படப்பிற்கு தீ வைத்த 5 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

தீக்குளித்த பெண் சாவு: குழந்தைகள் காயம்

Posted: 31 Aug 2014 11:54 AM PDT

 திருச்செந்தூர் அருகே சனிக்கிழமை தீக்குளித்த பெண் உயிரிழந்தார்.

மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

Posted: 31 Aug 2014 11:54 AM PDT

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகில் மதுபாட்டில்களுடன் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

முத்துலாபுரம் பெருமாள் கோயிலில் மண்டல பூஜை

Posted: 31 Aug 2014 11:53 AM PDT

எட்டயபுரம் வட்டம், வடக்குமுத்துலாபுரம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆனந்த வெங்கடேசப்பெருமாள் கோயில் மண்டல பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் 79 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

Posted: 31 Aug 2014 11:53 AM PDT

தூத்துக்குடியில் 79 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்டு கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

திருச்செந்தூர் கடலில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

Posted: 31 Aug 2014 11:53 AM PDT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் 259 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.

புனித வளனார் ஆலயத்தில் விவிலியத் திருவிழா தொடக்கம்

Posted: 31 Aug 2014 11:53 AM PDT

கோவில்பட்டி புனித வளனார் ஆலயத்தில் ஒரு மாதம் நடைபெறும் விவிலியத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

சேமிப்பு கணக்கு தொடங்கும் முகாம்

Posted: 31 Aug 2014 11:52 AM PDT

ஆறுமுகனேரி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கிளை சார்பில் காயல்பட்டினத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கும் விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

செய்துங்கநல்லூரில் இலவச மருத்துவ முகாம்

Posted: 31 Aug 2014 11:52 AM PDT

செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர், மாணவிகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

மகளிர் கல்லூரி சார்பில் புத்தொளிவு கூட்டம்

Posted: 31 Aug 2014 11:52 AM PDT

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்ட அணி சார்பில் ஒருநாள் புத்தொளிவு கூட்டம் நடைபெற்றது.

84 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

Posted: 31 Aug 2014 11:51 AM PDT

தூத்துக்குடி அருகேயுள்ள குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 84 மாணவர், மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டன.

விளாத்திகுளத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்

Posted: 31 Aug 2014 11:51 AM PDT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகர, ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விளாத்திகுளம், குளத்தூர், நாகலாபுரம், புதூர், அரியநாயகிபுரம் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்

ஸ்ரீராஜகாளீஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா

Posted: 31 Aug 2014 11:51 AM PDT

ஆறுமுகனேரி பெரியான்விளையில் ஸ்ரீராகாளீஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

கோவில்பட்டியில் கல்விக் கடன் ஆலோசனை முகாம்

Posted: 31 Aug 2014 11:51 AM PDT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மாணவர்கள் கல்விக் கடன் பெறுவது குறித்த ஆலோசனை முகாம் நடைபெற்றது.

உடன்குடியில் பாஜக ஆர்ப்பாட்டம்

Posted: 31 Aug 2014 11:50 AM PDT

உடன்குடி பேரூராட்சிப் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், பேரூராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கக் கோரியும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கோவில்பட்டியில் விநாயகர் சிலை ஊர்வலம்கோவில்பட்டியில் விநாயகர் சிலை ஊர்வலம்

Posted: 31 Aug 2014 11:50 AM PDT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

உடன்குடியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Posted: 31 Aug 2014 11:50 AM PDT

உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 46 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளின் ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கால்பந்து போட்டி: நாசரேத் மர்காஷிஸ் அணி வெற்றி

Posted: 31 Aug 2014 11:50 AM PDT

மூக்குப்பீறியில் நடைபெற்ற மாவட்ட கால்பந்து போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் அணி வெற்றி பெற்று ஞானராஜ் நினைவு சுழற்கேடயத்தை தட்டிச்சென்றது.

தென்மண்டல அளவிலான கராத்தே போட்டி

Posted: 31 Aug 2014 11:50 AM PDT

தென்மண்டல அளவிலான கராத்தே போட்டி கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆறுமுகனேரியில் யோகா பயிற்சி முகாம்

Posted: 31 Aug 2014 11:49 AM PDT

ஆறுமுகனேரி காந்தி மைதானத்திலுள்ள வேதாத்திரி மகரிஷியின் மன வளக்கலை யோகா மையத்தில் பத்து நாள்கள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

83 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை

Posted: 31 Aug 2014 11:49 AM PDT

பிற மாவட்டங்களுக்கான முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் 83 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™