Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சிவகார்த்திகேயன் ஜோடியாகிறார் லட்சுமி மேனன்

Posted:

சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க இருக்கும் படம் ரஜினி முருகன். இதன் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகராகவும், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் உள்ளூர் வெள்ளை வேட்டி பார்ட்டியாகவும் நடிக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் ...

சதுரங்க வேட்டையில் வென்றது எப்படி..? இயக்குநர் வினோத் பேட்டி!

Posted:

மக்களுக்கான சினிமா எக்காலத்திலும் பேசப்படாமல் போனதில்லை. அந்த வகையில் நிகழ்காலத்தின் கண்ணாடியாக நாட்டு நடப்புகளை வெளிச்சம் போட்டு காட்டி, வெற்றிவாகை சூடியுள்ளது சதுரங்க வேட்டை. முதல்பட இயக்கத்திலே சிகரம் தொட்ட இயக்குனர்களின் வரிசையில் இப்படத்தின் இயக்குனர் வினோத் சேர்ந்துள்ளார். வெற்றிப்படத்தை கொடுத்த மகிழ்ச்சியில் ...

லிங்காவின் அடுத்த ஷெட்யூல் பட்டியல்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்து வரும் லிங்கா படப்பிடிப்புகள் மைசூரில் தொடங்கியது. அங்கு பிரமாண்ட அணைகட்டு செட், மற்றும் 1947க்கு முந்தைய ஒரு நகரத்தின் செட் போட்டு படப்பிடிப்பு நடந்தது. ரஜினி சோனாக்ஷி நடித்த காட்சிகள் படமானது. அதற்கு பிறகு ஐதராபாத்தில் ரெயில் செட்போட்டு படமாக்கப்பட்டது. இதில் அனுஷ்கா கலந்து ...

பொம்மைகளை சேகரிக்கும் ஸ்ருதிஹாசன்...!

Posted:

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு இருக்கும். வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் அப்படிப்பட்ட பொழுதுபோக்கில்தான் அனைவரும் ஈடுபடுவோம். ஆனால், பொழுதுபோக்கையே உருப்படியாக செய்ய வேண்டும் என்று சிலர் நினைப்பவர். அவர்களில் 'கலெக்டர்கள்' என அழைக்கப்படும் பொருட்களை சேகரிப்பவர்கள் முக்கியமானவர்கள். விதவிதமான கலைப் பொருட்களையோ, ...

18ம் தேதி முதல் வீட்டுக்குள் வருகிறார் டாக்டர் அமலா!

Posted:

1980களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை அமலா. டி.ராஜேந்தரின் மைதிலி என்னை காதலி படத்தில் அறிமுகமான அமலா அதன்பிறகு கமல், ரஜினி, கார்த்திக், பிரபு, என அன்றிருந்த அத்தனை ஹீரோக்களுடனும் நடித்தார். தெலுங்கு படங்களில் நடித்தபோது நாகார்ஜூனாவை காதலித்து 1992ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவை விட்டு ...

சோனாக்ஷி வீட்டிற்கு வருவதை தவிர்க்கும் மர்மம் என்ன?

Posted:

கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மும்பையில் உள்ள தனது வீட்டில் ஹாயாக ஓய்வெடுத்த சோனாக்ஷி சின்கா, தற்போது இடைவீடாத டூரில் இருக்கிறார். இது பாலிவுட்டில் பல கிசுகிசுக்களை பரவ செய்துள்ளது. கடந்த சில மாதங்களாக தனது புதிய படங்களை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகள், போட்டோ ஷூட்டுக்கள், டிவி விளம்பர படங்கள் என ஏகத்துக்கும் பிஸியாக இருக்கிறார் ...

நிஜ ஆக்ஷன் ஹீரோயினாக வலம் வரும் ஹன்சிகா

Posted:

நடிகை ஹன்சிகா 20 நாட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஜாலி டூர் சென்றுள்ளார். அவருடன் பள்ளியில் படித்த 7 தோழிகளும் உடன் சென்றுள்ளனர். பாபிலோனா, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே பறந்து கொண்டிருக்கிறார்.

ஸ்பெயின் சென்ற ஹன்சிகா அங்கு பாரா கிளைட் எனப்படும் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் பூமியில் குதிக்கும் சாசக ...

தெலுங்கில் பேசச் சொன்ன சூர்யா...!

Posted:

சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் அஞ்சான் திரைப்படம் சிக்கந்தர் என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இந்த தெலுங்குப் படத்தின் இசை வெளியீடு சில தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பல ரசிகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். விழா மேடையில் இயக்குனர் லிங்குசாமி தெலுங்கில்தான் உரையாற்றினார். நடிகை சமந்தாவும் ...

லிங்குசாமியுடன் இணைகிறார் சதுரங்க வேட்டை வினோத்

Posted:

விஜய் மில்டனிடம் உதவியாளராக இருந்து சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார் வினோத். சமீபத்தில் ரிலீசான படம் மிகுந்த வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் வினோத்திற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சதுரங்க வேட்டை படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. சதுரங்க வேட்டை படத்தை ...

கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: கவர்னர் வழங்கினார்

Posted:

தமிழ் வர்த்தக சங்கம் என்ற அமைப்பும், சோழநாச்சியார் பவுண்டேஷன் என்ற அமைப்பும் இணைந்து உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது. இதற்கான விழா மயிலாப்பூர் ஏவிஎம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது.

விழாவில் தமிழக கவர்னர் ரோசையா கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார். பின்னர் அவர் ...

ஒரே வாரத்தில் 200 கோடி அள்ளிய 'கிக்'

Posted:

ஹிந்தித் திரைப்படங்கள் 100 கோடி வசூல் அள்ளுவது இனிவரும் காலங்களில் சர்வ சாதாரணமாக ஆகிவிடும் என்று தெரிகிறது. சில வருடங்களுக்கு முன்னர் வரை 100 கோடி ரூபாய் என்பது வசூல் சாதனையாகப் பார்க்கப்பட்டது. தற்போது பல படங்கள் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டு வருவதால், இனி 200 கோடி ரூபாய் கிளப் என்று தான் நிர்ணயம் செய்ய வேண்டும்.

சல்மான் ...

மீண்டும் த்ரிஷா, ஜெயம் ரவி கூட்டணி

Posted:

உனக்கும் எனக்கும் படத்தில் அனைவராலும் விரும்பப்பட்ட, பெரிதும் பேசப்பட்ட காதல் ஜோடின ஜெயம் ரவியும், த்ரிஷாவும் தற்போது பூலோகம் படத்தின் மூலம் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். வெகு நாட்களுக்கு பிறகு இந்த ஜோடியின் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் பூலோகம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ...

என்னை உங்களால் ஒதுக்க முடியாது சொல்கிறார் சமந்தா

Posted:

கடந்த 2 வாரங்களில் நடந்த சினிமா நிகழ்ச்சிகளில் சமந்தா முக்கிய புள்ளியாக இருந்தார். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யாவுடன் இவர் நடித்த அஞ்சான் படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன் தெலுங்கு படைப்பான சிகந்தர் படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அஞ்சான் படத்தின் ஆடியோ ரிலீசில் கலந்து கொள்ள ...

தனுஷின் அடுத்த இந்தி படம் தயார்!

Posted:

ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த தனுசுக்கு அப்படம் எதிர்பாராத வெற்றியை கொடுத்தது. அவர் அப்படத்தில் நடித்தபோது பாலிவுட்டின் ஆஜானபாகு நடிகர்களெல்லாம் இவர் என்ன பெரிதாக சாதித்து விடப்போகிறார் என்ற கணக்கில்தான் பார்த்தனர். ஆனால், அப்படம் வெளியானபிறகுதான் தனுசுக்குள் இருக்கும் மெகா நடிகனைப்பார்த்து அசந்துபோய் ...

காமெடி ஸ்கிரிப்ட்டை ஆக்சனாக மாற்றச்சொல்லிய ஆர்யா!

Posted:

ஆர்யா சினிமாவில் அறிமுகமானபோது சில படங்களில் ரொமான்டிக் ஹீரோவாகத்தான் நடிக்க விரும்பினார். ஆனால், அறிந்தும் அறியாமலும், பட்டியல், வட்டாரம் என சில படங்களில ஆக்சனில் இறங்கினார். அந்த படம் ஹிட்டடித்து வந்தநிலையில், நான் கடவுள் படத்தில் அவரை நடிக்க வைத்த பாலா ஆர்யாவின் கெட்டப்பை மாற்றி விட்டார்.

அதனால் அதையடுத்து ஆக்சன் ...

சமந்தாவின் கவர்ச்சி பிரவேசத்தால் எனக்கு ஆபத்தில்லை! - சொல்கிறார் ஹன்சிகா

Posted:

அஞ்சான், கத்தி படங்களில் கவர்ச்சிப்புயலாக உருவெடுத்து நிற்கிறார் சமந்தா. அதோடு அடுத்து தமிழில் முழுக்கவனம் செலுத்தி, ஆந்திராவைப்போலவே தமிழிலும் நம்பர்-ஒன் நடிகை நாற்காலியில் உட்கார்ந்து விட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார். இதனால் கோடம்பாக்கத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட முன்வரிசை ...

கெஸ்ட் ரோலில் நடிக்க ஆசைப்படும் சூர்யா!

Posted:

பெரும்பாலும் முன்னணி ஹீரோ-ஹீரோயின்கள் மற்ற நடிகர்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதிக நெருக்கமான நட்பு வட்டார நடிகர்களோ, இயக்குனர்களோ கேட்டுக்கொண்டால்தான் நடித்துக்கொடுப்பார்கள். அதுவும் உடனே பிடி கொடுக்க மாட்டார்கள். பல மாதங்களாக அவர்களை துரத்திப்பிடிக்க வேண்டும். ...

ஜிகர்தண்டா பற்றி கருத்து சொல்லாத பிரபலங்கள்! அதிர்ச்சியில் சித்தார்த்

Posted:

பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த்-லட்சுமிமேனன் நடித்துள்ள படம் ஜிகர்தண்டா. இப்படத்தில் புதுமுக இயக்குனராக நடித்துள்ள சித்தார்த், தனது முதல் படத்தை நிஜ ரவுடி கதையைத்தான் படமாக்குவேன் என்று சொல்லிக்கொண்டு மதுரைக்கு செல்கிறார். காரணம் அதுதான் ரவுடிகள் ஏரியாவாம்.

அங்கு சென்று சேது என்றொரு ...

ராகினிக்கு உதவும் மோகன்லால்

Posted:

விஜய்யின் தலைவா படத்தில் கெளரி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ராகினி நந்த்வானி. தலைவா படத்தில் நடித்த பிறகு இவரை பற்றி எந்தவொரு செய்தியும் வெளிவராத நிலையில், தற்போது அச்சமுண்டு அச்சமுண்டு பட இயக்குனர் அருண் வைத்தியநாதன் இயக்கும் பெருச்சாழி என்ற மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில், ஜில்லா படத்தில் விஜய்க்கு ...

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்! சச்சு மாற்றம்; தேவா நீட்டிப்பு!

Posted:

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற செயலாளராக இருந்த நடிகை சச்சு மாற்றப்பட்டுள்ளார், தலைவராக தேவா மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக சங்கத்தின் உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுவர். அதன்படி தற்போது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக, இசையமைப்பாளர் தேவா, மூன்று ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™