Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சினிமாவிலிருந்து ஓய்வு - விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் முடிவு!!

Posted:

"டூரிங் டாக்கீஸ் படத்துடன் சினிமா இயக்குனர் தொழிலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகும் "டூரிங் டாக்கீஸ் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது குறித்து தேனியில் சந்திரசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாட்டில் நடக்கும் ...

கமல் பிறந்தநாளில் உத்தமவில்லன்! திருப்பதி பிரதர்ஸ் முடிவு!

Posted:

சில தினங்களுக்கு முன் கமல் நடிக்கும் பாபநாசம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாபநாசம் படத்தில் நடிக்க தயாரான கமல் அதற்கு முன்பே உத்தமவில்லன் படத்தை முடித்துக்கொடுத்துவிட்டார். கமல் பாபநாசம் படத்தில் பிஸியாக இருக்க, உத்தமவில்லன் படத்தின் போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகளில் பிஸியாக இருக்கிறார் ...

மும்பை நாடக கலைஞர்கள் அரங்கேற்றிய ஆங்கில நாடகம்!

Posted:

அஸ்வின் கிட்வானி புரோடெக்ஷன்ஸ் சார்பில் மும்பை நாடக கலைஞர்கள் பிளேம் இட் ஆன் யாஸ்ராஜ் என்ற ஆங்கில நாடகத்தை சமீபத்தில் மும்பையில் அரங்கேற்றினர். இது இந்நிறுவனத்தின் 50வது மேடை நாடகம் ஆகும். மிகுந்த உற்சாகத்துடன் நாடக கலைஞர்கள் பங்கேற்ற இந்த நாடகம் குறித்து அஸ்வின் கிட்வானி கூறுகையில், இந்த நாடகத்தின் டைரக்டர் பரத் ...

சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் ஸ்ருதிஹாசன்...?!

Posted:

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து 1978ல் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் 'சிகப்பு ரோஜாக்கள்'. இப்படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி ரீமேக் செய்து இயக்க உள்ளாராம். இந்தப் படத்தில்தான் ஸ்ரீதேவி நடித்துள்ள கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் ...

அரசியலுக்கு வருவது பற்றி... பிறந்தநாளில் விஷால் பரபரப்பு பேட்டி!!

Posted:

செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷால். தொடர்ந்து திமிரு, சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்த விஷால், தற்போது ஹரி இயக்கத்தில், ஸ்ருதிஹாசன் உடன் பூஜை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் முனைப்போடு ரெடியாகி வருகிறது.

இந்நிலையில் ...

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வருகிறார் ஸ்ரீ

Posted:

பாலிவுட்டில் ஷாருக்கான், ஜான் ஆப்ரகாம் போன்று கோலிவுட்டில் சமீபத்தில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து புகழ்பெற்றவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வரும் நடிகர், நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது நடிகர் ஸ்ரீயும் பெரிய திரைக்கு வர உள்ளார்.
சின்னத்திரையில் பல ...

பத்திரிகையாளர்களுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

Posted:

சென்னை, கோடம்பாக்கத்தில் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். விநாயகர் சதுர்த்தி விழா காலை 11மணிக்கு துவங்கியது. சொன்னபடி நடிகர் சிவகார்த்திகேயன் நேரம் தவறாமல் 11மணிக்கு வந்தார். ...

சென்சாருக்கு கேள்வி எழுப்பும் ராணி முகர்ஜி...!

Posted:

ராணி முகர்ஜி நடித்து வெளிவந்துள்ள 'மர்தானி' திரைப்படத்திற்கு 'ஏ' சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளதால் அந்தப் படத்தை சிறுவர், சிறுமிகள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மிகவும் கோமடைந்துள்ளார் படத்தின் நாயகியான ராணி முகர்ஜி. இந்தப் படம் சிறுமிகள் கடத்தலைப் பற்றிய கதையை மையமாகக் கொண்ட படம். பத்து, பதினைந்து வயது உள்ள ...

விஷாலுக்காக மீண்டும் படம் இயக்கும் சுசீந்திரன்!

Posted:

சுசீந்திரன் இயக்கத்தில், விஷால், லட்சுமி மேனன் நடித்து வெளிவந்த 'பாண்டிய நாடு' திரைப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் தற்போது விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடிக்க கிரிக்கெட்டை மையமாக வைத்து 'ஜீவா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் விஷால் நடிக்கும் படத்தை இயக்கப் ...

ரஜினிகாந்துடன் ஜோடியாகத்தான் நடிப்பேன்...சரண்யாவின் ஆசை...!

Posted:

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சரண்யா. அதன், பின் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்து பின்னர் இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். பின்னர் மீண்டும் நடிக்க வந்தார். அம்மா வேடங்களில் நடிக்க ஆரம்பித்து சர்ரென உச்சத்திற்குப் போனார். 'தென் மேற்குப் ...

கணவருடன் கேரளாவுக்கு பயணமான அமலாபால்...!

Posted:

சைவம் படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபுவை ஹீரோவாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார் விஜய். விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக முன்னாள் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ராதிகா சரத்குமார் தயாரிக்கும் இப்படத்துக்கு இன்னும் தலைப்பு சூட்டப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்பாக கொச்சிக்கு ...

தோல்வியில் முடிந்த களஞ்சியத்தின் கபட நாடகம்!

Posted:

நடிகை அஞ்சலியின் சித்தி மகனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக திரைப்பட இயக்குனர் களஞ்சியம் சென்றபோது ஆந்திர மாநிலம் ஓங்கால் அருகே அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் அவருடன் சென்ற அப்பாவி உதவி இயக்குநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறு சிராய்ப்புடன் தப்பித்த களஞ்சியம் முதலில் ஓங்காலில் உள்ள ஒரு மருத்துவமனையில் ...

கத்தி கதையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு! அதிர்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ்!

Posted:

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'கத்தி' திரைப்படத்தின் கதை, திருடப்பட்ட கதை என்று குற்றம்சாட்டி, ஏ.ஆர். முருகதாசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூரை சேர்ந்த தலித் இலக்கியப் படைப்பாளி மீஞ்சூர் கோபி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் ...

ஐ படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி!

Posted:

அடுத்த மாதம் நடைபெற உள்ள ஷங்கரின் ஐ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்நேகர் கலந்து கொள்ளவிருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. ஐ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்தினின் தம்பியும், அப்படத்தை இணைந்து தயாரித்து வரும் ரமேஷ் பாபு சமீபத்தில் அமெரிக்கா சென்றார். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அர்னால்டின் ...

சத்யமேவ ஜெயதே சீசன்-3யில் பாலிவுட் பிரபலங்கள்..!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர் கான், தற்போது பி.கே. படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமாவில் பிஸியாக இருந்த அமீர்கான், டி.வி. ரியாலிட்டி ஷோவான சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். மக்கள் பிரச்னையை மையப்படுத்தி இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது. மக்கள் ...

மீண்டும் வெள்ளி விழா கொண்டாடியது ஆயிரத்தில் ஒருவன்

Posted:

1965ம் ஆண்டு வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இணைந்து நடித்த இந்தப் படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கி இருந்தார். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். வெளியான ஆண்டே 175 நாட்களை தாண்டி வெள்ளிவிழா கண்ட படம். இந்த படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி அகன்ற திரையில் மீண்டும் வெளியிட்டார் திவ்யா பிலிம்ஸ் ...

முதலில் குடும்பம் அடுத்துதான் கல்யாணம்: நந்தினியின் சென்டிமெண்ட்!

Posted:

சின்னத்திரை உலகில் மைனா என்றால்தான் நந்தினியை தெரியும். சரவணன் மீனாட்சி தொடரில் இவரது காமெடி அட்டகாசங்களை பார்த்து ரேவதி என்று இருந்த கேரக்டரின் பெயரை மைனா என்றே மாற்றிவிட்டார்கள். யூனிட்டுக்கு வெளியேயும் மைனா என்றே அழைக்கிறார்கள். எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் நந்தினி. தன்னை பற்றியும் வெளிப்படையாக ...

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார் ஸ்ரேயா ரெட்டி

Posted:

விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி அதன் பிறகு திமிரு, வெயில் உள்பட தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்தார். பிரியதர்ஷன் இயக்கிய தேசிய விருது பெற்ற காஞ்சீவரம் படம்தான் அவர் கடைசியாக நடித்தது. அதன் பிறகு நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார். ...

தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களின் துன்பத்தை சொல்லும் படம்

Posted:

"இலங்கையில் தமிழர்கள் படும் துன்பத்தை துடைக்க இங்கிருந்து குரல் கொடுக்கிறோம். அரசியல் கட்சி தலைவர்கள் போராடுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள். மாணவர்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். ஆனால் நாமே கதி என்று நம்பி நம் நாட்டுக்கு வந்த இலங்கை அகதிகளை எப்படி வைத்திருக்கிறோம். இலங்கை அரசை போலவே முகாம்களில் அடைத்து ...

தெரியாத மொழி படங்களில் நடிக்க மாட்டேன்: ஷிவதா அதிரடி

Posted:

நெடுஞ்சாலை படத்தில் அறிமுகமானவர் ஷிவதா. தற்போது ஜீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஷிவதாவைத் தேடி வந்த தெலுங்கு வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இதுபற்றி அவர் கூறியதாவது: நெடுஞ்சாலை படத்துக்காக ஒரு வருடம் சிரமப்பட்டேன். அதற்கான பலன் கிடைத்தது. நெடுஞ்சாலை ஷிவதா என்றே என்னை அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு அந்த படம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™