Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கிரீஸில் பிறந்தநாள் கொண்டாடிய டாப்சி!

Posted:

'ஆடுகளம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வெள்ளாவி பொண்ணு டாப்சி. அதன்பின் வந்தான் வென்றான், ஆரம்பம் படங்களில் நடித்தவர் இப்போது லாரன்ஸ் இயக்கி வரும் முனி-3-யான கங்காவில் நடித்து வருகிறார். இவைதவிர வை ராஜா வை, இந்தியில் ஒருபடம் என்று பிஸியாக இருப்பவர், தற்போது ஓய்வுக்காக தனது சகோதரியுடன் கிரீஸ் சென்றுள்ளார். அப்படியே ...

மாங்கா விற்பனைக்கு ரெடி

Posted:

அண்ணன் இயக்கும் படங்களில் காமெடியனாக நடித்து வந்த பிரேம்ஜி, சோலோ ஹீரோவாக நடிக்கும் படம் மாங்கா. அவருக்கு ஜோடியாக அத்வைதா நடிக்கிறார். இவர்கள் தவிர லீமா, இளவரசு, ரேகா, ஆகியோரும் நடிக்கிறார்கள். பிரேம்ஜியே இசை அமைத்துள்ளார். ஆர்.எஸ்.ராஜா இயக்கி உள்ளார். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் தற்போது முடிவடைந்து ரிலீசுக்கு ...

மகாபலிபுரத்தை வாங்கியது ஸ்டூடியோ 9

Posted:

கிளாப் போர்ட் மூவீஸ் என்ற புதிய நிறுவனத்தின் உரிமையாளர் வினாயக் தயாரித்துள்ள மகாபலிபுரம் படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. படத்தை எடுத்த நிறுவனத்தால் அதனை வெளியிட இயலவில்லை. அதனால் படத்தை ஸ்டூடியோ 9 நிறுவனத்திற்கு கைமாற்றி விட்டு விட்டனர். ஸ்டூடியோ 9 நிறுவனம் வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இறங்கி ...

ரத்தக்கண்ணீரை தொடரும் எம்.ஆர்.ராதாவின் 5 வது வாரிசு!

Posted:

எம்.ஆர்.ராதாவின் புகழ்பெற்ற நாடகம் ரத்தக்கண்ணீர். 1940களில் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் நடத்தப்பட்ட நாடகம். சீர்திருத்த கருத்துக்களை தாங்கி வந்த இந்த நாடம்தான் திராவிட சீர்திருத்த நாடகங்கள், மற்றும் திரைப்படங்களுக்கு முன்னோடி. இந்த நாடகம் 1954ம் ஆண்டு திரைப்படமாக வந்தது. அதிலும் எம்.ஆர்.ராதா நடித்தார். ரத்த கண்ணீர் திரைப்படமாக ...

ராமேஸ்வரத்தில் உருவாகும் வருஷநாடு

Posted:

சரத்குமார் நடித்த மாயி படத்தை இயக்கிய சூர்ய பிரகாஷ் நீண்ட இடைவெளிக்கு பிறகு வருஷநாடு என்ற படத்தை இயக்கி வருகிறார். குமரன், சிருஷ்டி டாங்கே, மயில்சாமி, சிங்கமுத்து, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். யத்தீஷ் மகாதேவ் இசை அமைக்கிறார். டி.பாஸ்கர் ஒளிப்பதிவு செய்கிறார்.

"இது முழுக்க முழுக்க ராமேஸ்வரத்தின் காதல் கதை. ...

ஒரு காட்சியில் நடித்தவர்கள் ஹீரோ, ஹீரோயின் ஆனார்கள்

Posted:

வழக்கு எண் படத்தில் மனீஷாவின் காதலனாக வருபவரின் நண்பராக ஒரு காட்சியல் நடித்தவர் ரங்கயாழி, அதேபோல மூடர்கூடம் படத்தில் ஓவியாவின் தோழியாக ஒரு காட்சியில் நடித்தவர் தேஜஸ்வீ. இப்போது இவர்கள் இருவரும் திருட்டு கல்யாணம் என்ற படத்தின் ஹீரோ, ஹீரோயின் ஆகிவிட்டார்கள். இவர்கள் தவிர ஆடுகளம் நரேன், பசங்க செந்தி, தம்பி ராமையா, தேவதர்ஷினி ...

ஜீ தமிழில் ஜேம்ஸ்பாண்ட் படங்கள்

Posted:

ஒரு காலத்தில் தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு இணையாக வலம் வந்தவர்கள் ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட்டுகள். டப்பிங் காலம் தொடங்கும் முன் ஜேம்ஸ் பாண்டுகள் ஆங்கிலம் பேசிய காலத்திலும் ஜேம்ஸ் பாண்டின் சூப்பர் ஆக்ஷன் காட்சிகளையும், லிப் லாக் கிஸ்சுகளையும், ஹீரோயினின் பிகினி டிரஸ்சையும் பார்த்து விசிலடித்து ரசித்தான் தமிழ் ...

முதல்வர் ஜெயலலிதா பற்றி சர்ச்சை கட்டுரை! இலங்கை அரசை கண்டித்து தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்!

Posted:

முதல்வர் ஜெயலலிதா பற்றி சர்ச்சை கட்டுரையை வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்து தமிழ் திரையுலகினர் சார்பில் ஆகஸ்ட் 4ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழக மீனவர் விவகாரம், இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம், கச்சத்தீவு விவகாரம் போன்றவை குறித்து, இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ...

'ஆயிரத்தில் இருவர்' ஆக மாறிய செந்தட்டி காளை செவத்த காளை

Posted:

அஜித் நடித்த 'அமர்க்களம்', 'அசல்', விக்ரம் நடித்த 'ஜெமினி', கமல்ஹாசன் நடித்த 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' உட்பட பல படங்களை இயக்கியவர் சரண். கே.பாலசந்தரின் சிஷ்யரான சரண், காதல் மன்னன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து வசூல் சாதனை படைத்த படங்களை இயக்கியவராக, வெற்றிப்பட இயக்குநராக வலம் வந்தார். ஏவிஎம் ...

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை...இன்னொரு மதகஜராஜா படமா?

Posted:

சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்த பேய்ப்படம் - அரண்மனை. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்குத் தயார்நிலையில் உள்ளது. கடந்த மாதம் வெளியாகவிருந்த படங்களின் பட்டியலில் அரண்மனை படத்தின் பெயரும் இருந்தது. ஆனால் ஏனோ அப்படம் வெளியாகவில்லை. அரண்மனை படத்தின் இயக்குநரான சுந்தர்.சியோ விஷாலை வைத்து அடுத்தப் ...

தன்ஷிகா, அமலாபால் நடிக்கும் சமுத்திரக்கனியின் கிட்னா!

Posted:

நிமிர்ந்து நில் படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கும் புதிய படத்திற்கு கிட்னா என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் தந்தையாக சிறப்பாக நடித்திருந்தார் சமுத்திரக்கனி. இதற்கு முன் சுப்பிரமணியபுரம் உட்பட வேறு சில படங்களிலும் நடித்துள்ள அவர் தற்போது தமிழ் மட்டுமின்றி, ...

"இதய சாக்கடை சுத்தமாக படியுங்கள் - புத்தக திருவிழாவில் இளையராஜா பேச்சு!

Posted:

""நம் அனைவரது இதயத்தில் இருக்கும், சாக்கடையை அகற்ற, புத்தகம் படிப்பது ஒன்றே சிறந்த வழி, என, புத்தக திருவிழாவில், இசையமைப்பாளர் இளையராஜா பேசினார். ஈரோடு, வ.உ.சி., பூங்காவில், மக்கள் சிந்தனை பேரவை சார்பில், புத்தகத்திருவிழா நேற்று துவங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது.

புத்தக திருவிழாவை துவக்கி வைத்து, இசையமைப்பாளர் இளையராஜா ...

இளம் பெண்களை ஊக்கப்படுத்தும் தனிஷாவின் தற்பாதுகாப்பு!

Posted:

தனிஷாவை ஞாபகம் இருக்கிறதா...? தமிழில், வினய்-சதா நடித்த ''உன்னாலே உன்னாலே'' படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடித்தவர். தமிழில் இவர் நடித்தது இந்த ஒருபடம் தான். அதன்பிறகு அவருக்கு தமிழில் படங்கள் எதுவும் அமையவில்லை, இதனால் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஒன்றிரண்டு படங்களில் நடித்து வந்தவர் இப்போது டி.வி. தொடர்களில் நடித்து ...

சிங்கம் ரிட்டன்ஸ்! அஜெய் தேவ்கன் - கரீனா செம ஆட்டம்!

Posted:

ஹரி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சிங்கம். இதை அப்படியே இந்தியிலும் ரீமேக் செய்தனர். அஜய் தேவ்கன் நடித்தார். ரோகித் ஷெட்டி இயக்கியிருந்தார். அங்கும் இப்படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சிங்கம்-2வும் வெளியாகி வெற்றி பெற்றன. அதேப்போல் இப்போது சிங்கம்-2வை, இந்தியில் சிங்கம் ரிட்டர்ன்ஸ் ...

ஜப்பானில் சாதனை புரிந்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்'

Posted:

பல வருட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதேவி நடித்து வெளிவந்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' இந்தித் திரைப்படம் உலக அளவில் நல்ல வசூலைப் பெற்று சாதனை புரிந்து வருகிறது. இந்தப் படம் ஜப்பான் மொழியிலும் 'டப்' செய்யப்பட்டு 'மேடம் இன் நியூயார்க்' என்ற பெயரில் கடந்த ஜுன் மாதம் 28ம் தேதியன்று ஜப்பான் முழுவதும் வெளியானது. 33 திரையரங்குகளில் ...

தனுஷ் புகைப்பிடிக்கும் போஸ்டர்கள் கிழிப்பு!

Posted:

சமீபகாலமாக படங்களை ஓட வைக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது சர்ச்சைகளை ஏற்படுத்துவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளாக படங்கள் திரைக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு, படத்தின் சில காட்சிகள் இணையதளங்களில் வெளிவந்து விட்டது என்று சொல்லி கமிஷனர் ஆபீசுக்கு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் புகார் மனு அளித்து வந்தனர். ...

குட்டி ராதிகாவின் குடும்ப வாழ்க்கையில் பிரச்னையா?

Posted:

தமிழில் இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்பட சில படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா. கர்நாடகத்தைச் சேர்ந்தவரான இவர், அங்கு முன்னணி நடிகையாக இருந்தவர். ஆனால், சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்தபோது, கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரான குமாரசாமிக்கும், குட்டி ராதிகாவுக்குமிடையே காதல் ஏற்பட்டது. அதனால் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து ...

எனது சென்னை தோழிகளை ரொம்பவே மிஸ் பண்றேன்! - சமந்தா பீலிங்ஸ்

Posted:

சமந்தா சினிமாவில் அறிமுகமானது மாஸ்கோவின் காவிரி என்ற தமிழ்ப்படத்தில்தான் அதையடுத்து, விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார். பின்னர் தெலுங்கிலும் நடித்தார். ஒரு கட்டத்தில் தெலுங்கில் அதிகமான படங்கள் கிடைத்ததால் அங்கே முன்னணி நடிகையாகி விட்டார்.

இந்நிலையில், ஆந்திராவிலேயே தனது தலைமை ...

ஒரே படத்தில் இணைந்தும் சேர்ந்து நடிக்காத த்ரிஷா-அனுஷ்கா!

Posted:

இதுவரை சினிமாவில் பெரும்பாலும் சிங்கிள் ஹீரோயின் கதைகளிலேயே அதிகமாக நடித்திருக்கிறார் த்ரிஷா. அப்படியே சில படங்களில் மற்ற நடிகைகளுடன் நடித்திருந்தாலும் அதில் இவர்தான் முக்கிய நாயகியாக இருந்திருக்கிறார்.

அதேபோல் அனுஷ்காவும் தெய்வத்திருமகள் உள்ளிட்ட சில படங்களில் மற்ற நடிகைகளுடன் சேர்ந்து நடித்தபோதும், அவருக்கே முக்கிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™