மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கணவர் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி முன்பு பெண் தற்கொலை
- முன்னாள் மத்திய மந்திரி குமாரி செல்ஜா வீட்டில் ஆண் சடலம் கண்டெடுப்பு
- திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: ரூ.2 கோடி உண்டியல் வருமானம்
- மோடியால் மட்டுமே பாஜக வெற்றி பெறவில்லை: ஆர்.எஸ்.எஸ் தலைவர் பக்வத்
- கேரள முதல்–மந்திரி பற்றி விமர்சனம்: நடிகர் சுரேஷ்கோபி மன்னிப்பு கேட்டார்
- சுதந்திர தினத்தன்று டெல்லியில் இலவசமாக பஸ்சில் செல்லலாம்
- பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: 2 ராணுவ வீரர்கள் குண்டு பாய்ந்து காயம்
- ஆந்திராவில் 4 மாவட்டங்களில் 35 அண்ணா கேன்டீன்
- சுதந்திரதின விழா: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
- திருப்பதி கோவிலில் பக்தர்கள் தலை முடி ரூ.81 கோடிக்கு ஏலம்
- கணவர்களை காப்பாற்ற சிறு நீரகங்களை பரிமாறிய பெண்கள்
- பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனையில் ரூ.58 ஆயிரம் கோடி திரட்ட திட்டம்: அருண்ஜெட்லி
- நவிமும்பையில் சிறப்பு பொருளாதார மண்டலம்: பிரதமர் மோடி 16-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்
- சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத நீர்மின் திட்டங்களுக்கு உலக வங்கி உதவி
- பாரத ரத்னா விருது தந்து நேதாஜியை சிறுமைப்படுத்துவதா? திரிணாமுல் எம்.பி.பாய்ச்சல்
- பாகிஸ்தானை விட்டு ஓடிவிடமாட்டேன்: முஷரப் பேச்சு
- பெண் போலீசை தூக்கி ஷாருக் கான் திடீர் நடனம்: சீருடைக்கு அவமதிப்பு என எதிர்ப்பு
- மம்தாவின் உருளைக்கிழங்கு கொள்கைக்கு பா.ஜ.க. கடும் கண்டனம்
- ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.5 கோடி: குஜராத் அரசு அறிவிப்பு
- நேதாஜிக்கு பாரத ரத்னா தேவை இல்லை: மரணத்தின் மர்ம முடிச்சை அவிழுங்கள்
| கணவர் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி முன்பு பெண் தற்கொலை Posted: 10 Aug 2014 11:17 PM PDT சித்தூர் மாவட்டம் பலமநேரை சேர்ந்தவர் ரவீந்திரா. அவரது மனைவி ஜெயஸ்ரீ. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரவீந்திராவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் திருப்பதி ருயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரவீந்திராவின் 2 சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டதாகவும், தினமும் டயாலசிஸ் சிகிச்சை செய்தால்தான் |
| முன்னாள் மத்திய மந்திரி குமாரி செல்ஜா வீட்டில் ஆண் சடலம் கண்டெடுப்பு Posted: 10 Aug 2014 11:14 PM PDT காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான குமாரி செல்ஜா வீட்டில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 42 வயதான சஞ்ஜய் என்ற அந்த நபர் செல்ஜாவின் வீட்டில் வேலை செய்பவரின் கணவர் என்று கூறப்படுகிறது. காவல்துறையினருக்கு வந்த தொலைபேசி தகவலையடுத்து உள்ளூர் காவல் துறை அதிகாரிகளும், |
| திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: ரூ.2 கோடி உண்டியல் வருமானம் Posted: 10 Aug 2014 11:11 PM PDT கடந்த 2 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அமைந்ததால், ஏழுமலையானை தரிசிப்பதற்காக வந்த பக்தர்களின் கூட்டத்தால் திருமலை நிறைந்தது. தரிசனத்திற்கு செல்லும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்சின் 31 கம்பார்ட்மெண்ட்களும் நிரம்பி, அதற்கு வெளியே சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அதனால், ஏழுமலையான் தரிசனத்திற்கு சுமார் 22 மணி நேரம் வரை ஆயிற்று. எனவே, முக்கிய |
| மோடியால் மட்டுமே பாஜக வெற்றி பெறவில்லை: ஆர்.எஸ்.எஸ் தலைவர் பக்வத் Posted: 10 Aug 2014 11:08 PM PDT ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த ரக்ஷாபந்தன் விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:– மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்கிறார்கள். சிலர் கட்சியால்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது என்கிறார்கள். சிலர் தனிப்பட்ட ஒருவரால் (மோடி) பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்ததாக பேசுகிறார்கள். உண்மையில் நாட்டு மக்கள் காங்கிரஸ் ஆட்சியை மாற்ற வேண்டும் என்று முடிவு எடுத்ததே ஆட்சி மாறியதற்கு காரணமாகும். |
| கேரள முதல்–மந்திரி பற்றி விமர்சனம்: நடிகர் சுரேஷ்கோபி மன்னிப்பு கேட்டார் Posted: 10 Aug 2014 11:03 PM PDT கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ள ஆரான்முளா காட்டுப்பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்– மந்திரி உம்மன்சாண்டி அறிவித்தார். இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் சுரேஷ்கோபியும் அங்கு விமான நிலையம் அமைக்க கூடாது என கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக கேரளாவில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் சுரேஷ்கோபி பேசியபோது, ஆரான்முளா பகுதியில் விமான நிலையம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மாநிலத்தின் முதல்–மந்திரியாக இருப்பவர் இதுபோன்ற திட்டங்களை அறிவிக்கும்போது சமூக ஆர்வலர்களின் கருத்துக்களை கேட்டு இருக்க வேண்டும். உம்மன்சாண்டிக்கு இது தொடர்பாக போதிய ஞானம் இல்லை. அவர் ஞானம் உள்ளவர்களிடம் இதுபற்றி பேசி கருத்துக்களை தெரிந்திருக்க வேண்டும் என்று கூறினார். |
| சுதந்திர தினத்தன்று டெல்லியில் இலவசமாக பஸ்சில் செல்லலாம் Posted: 10 Aug 2014 10:47 PM PDT சுதந்திர தின கொண்டாட்டங்களில் பொது மக்களை அதிக அளவில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். இதையொட்டி டெல்லியில் வரும் 15–ந் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவுக்கு பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் முக்கிய பிரமுகர்கள், பள்ளிக் குழந்தைகளே அதிக அளவில் கலந்து கொள்வார்கள். பொது மக்கள் குறைவாகத்தான் பங்கேற்பார்கள். இந்த நிலையை மாற்றி இந்த தடவை டெல்லி செங்கோட்டையில் சுமார் 10 ஆயிரம் பொது மக்களை கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. |
| பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: 2 ராணுவ வீரர்கள் குண்டு பாய்ந்து காயம் Posted: 10 Aug 2014 10:31 PM PDT பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில தினங்களாக அடிக்கடி இந்திய எல்லையில் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது. கடந்த 2 வாரங்களில் 10–க்கும் மேற்பட்ட தடவை இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் வீரர்கள் வந்து தாக்குதல் நடத்தினார்கள். இந்தியாவில் நாச வேலைக்கு திட்டமிட்டுள்ள தீவிரவாதிகளை ஊடுருவ செய்யவே இத்தகைய தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் செய்கிறது. இதனால் காஷ்மீர் எல்லை நெடுக இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். |
| ஆந்திராவில் 4 மாவட்டங்களில் 35 அண்ணா கேன்டீன் Posted: 10 Aug 2014 10:12 PM PDT தமிழ்நாட்டில் 'அம்மா உணவகம்' செயல்படுவது போல ஆந்திராவில் என்.டி.ராமராவ் பெயரில் மலிவு விலை உணவகம் திறக்க முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு முடிவு செய்து உள்ளார். என்.டி.ராமராவை தெலுங்கு மக்கள் ''அண்ணா'' என்று செல்லமாக அழைப்பதால் மலிவு விலை உணவகத்துக்கு ''அண்ணா கேன்டீன்'' என பெயர் சூட்டப்பட உள்ளது. |
| சுதந்திரதின விழா: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் Posted: 10 Aug 2014 10:06 PM PDT சுதந்திரதினம் வருகிற 15–ந் தேதி கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுகிறார். இந்த ஆண்டு சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடந்த 8–ந் தேதி கடிதம் எழுதி உள்ளது. |
| திருப்பதி கோவிலில் பக்தர்கள் தலை முடி ரூ.81 கோடிக்கு ஏலம் Posted: 10 Aug 2014 09:52 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலை முடி காணிக்கை செலுத்துகிறார்கள். இந்த தலைமுடி தரம் வாரியாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்படுகிறது. வெளிநாடுகளில் தலை முடிகளுக்கு நல்ல கிராக்கி இருப்பதால் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி இணைய தளம் மூலம் ஏலம் விடும் முறையை அறிமுகப்படுத்தினார். கடந்த ஆண்டுகளில் 10 கட்டமாக நடந்த 'இ ஏலம்' மூலம் 1679 டன் தலைமுடி விற்பனையானது. இதன் மூலம் ரூ.658 கோடி வருமானம் கிடைத்தது. |
| கணவர்களை காப்பாற்ற சிறு நீரகங்களை பரிமாறிய பெண்கள் Posted: 10 Aug 2014 09:49 PM PDT இரண்டு பெண்கள் தங்கள் சிறுநீரகங்களை மனமுவந்து பரிமாறி தங்கள் கணவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். மும்பையை சேர்ந்தவர் ஹரீஷ் பண்டாரி. 43 வயதான இவருக்கு கடந்த 2010–ம் ஆண்டு சிறுநீரகம் பழுதடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் டயாலிசிஸ் செய்யப்பட்டு மரண வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். நீண்ட நாள் உயிர்வாழ சிறுநீரக மாற்று ஆபரேசன் தான் ஒரே வழி என்று டாக்டர்கள் அறிவுரை |
| பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனையில் ரூ.58 ஆயிரம் கோடி திரட்ட திட்டம்: அருண்ஜெட்லி Posted: 10 Aug 2014 08:37 PM PDT டெல்லியில் ரிசர்வ் வங்கியின் மத்திய குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பின்பு, நிதி மந்திரி அருண்ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை இலாகா தனது பங்குகளை விற்பனை செய்வதற்கான ஆலோசகர்களை நியமித்துள்ளது. ஓ.என்.ஜி.சி. மற்றும் என்.எச்.பி.சி. போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும் பணிகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்திய உருக்கு நிறுவனத்தின் பங்குகளை 5 சதவீதமும், ராஷ்டீரிய இஸ்பத் நிகாம், |
| நவிமும்பையில் சிறப்பு பொருளாதார மண்டலம்: பிரதமர் மோடி 16-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார் Posted: 10 Aug 2014 08:27 PM PDT நவிமும்பை ஷேவாவில் உள்ள ஜவகர்லால் நேரு துறைமுக பொறுப்பு கழகத்தில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான தொழில் உள்கட்டமைப்பு திட்டம் 277 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைகிறது. இந்த திட்டம் தனியார் நிதி பங்களிப்புடன் செய்யப்படுகிறது. புதிதாக அமைய இருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று |
| சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத நீர்மின் திட்டங்களுக்கு உலக வங்கி உதவி Posted: 10 Aug 2014 08:20 PM PDT சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற சியூடிஎஸ் சர்வதேச அமைப்பின் ஆய்வுக்குழு நடத்திய ஆற்றல் பாதுகாப்பு கருத்தரங்கு ஒன்றில் உலக வங்கியில் காலநிலை மாற்றம் பிரிவில் பணிபுரியும் முன்னணி பொருளாதார வல்லுனரான மைக்கேல் டோமன் பங்கு பெற்றார். இவர் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் குழு மேலாளராகவும் அங்கு பணி புரிந்து |
| பாரத ரத்னா விருது தந்து நேதாஜியை சிறுமைப்படுத்துவதா? திரிணாமுல் எம்.பி.பாய்ச்சல் Posted: 10 Aug 2014 05:11 PM PDT இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தி இந்திய சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்து பல சர்ச்சைகள் நிலவி வருகின்றன. இவர் தைவான் நாட்டில் 18-8-1945 அன்று ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985ல் |
| பாகிஸ்தானை விட்டு ஓடிவிடமாட்டேன்: முஷரப் பேச்சு Posted: 10 Aug 2014 04:47 PM PDT பாகிஸ்தானில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2008 வரை அதிபராக இருந்தவர் பர்வேஸ் முஷரப். ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்த இவர் மீது, 2007-ல் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்காக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முஷரப்புக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர்மீது பல்வேறு |
| பெண் போலீசை தூக்கி ஷாருக் கான் திடீர் நடனம்: சீருடைக்கு அவமதிப்பு என எதிர்ப்பு Posted: 10 Aug 2014 04:42 PM PDT மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற போலீஸ் துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள மாநிலத்தின் விளம்பர தூதராக இருக்கும் இந்தி நடிகர் ஷாருக் கான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். விழா மேடையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றபோது, சில இந்தி பாடல்களுக்கு நடனம் ஆடிய ஷாருக் கான், மேடை ஓரமாக ஓடி வந்து, |
| மம்தாவின் உருளைக்கிழங்கு கொள்கைக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் Posted: 10 Aug 2014 12:34 PM PDT வட மாநிலத்தவர் அதிகமாக விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கின் விளைச்சல் இந்த ஆண்டு சில மாநிலங்களில் கணிசமாக குறைந்தது. இதனையடுத்து, விளைச்சல் அதிகமாக உள்ள மேற்கு வங்காளத்தில் இருந்து அண்டை மாநிலமான ஒடிசாவை சேர்ந்த வியாபாரிகள் உருளைக்கிழங்கை வரவழைத்து ஒடிசாவில் விற்க தொடங்கினர். |
| ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.5 கோடி: குஜராத் அரசு அறிவிப்பு Posted: 10 Aug 2014 11:49 AM PDT குஜராத் முதல் மந்திரி ஆனந்தி பென் பட்டேல் சுமார் 300 மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் நேற்று தனது வீட்டில் 'ரக்ஷா பந்தன்' விழாவினை கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வெல்லும் வீரர்- வீராங்கனைகளுக்கு மாநில அரசு வழங்கவுள்ள ரொக்கப் பரிசுகளை அறிவித்தார். |
| நேதாஜிக்கு பாரத ரத்னா தேவை இல்லை: மரணத்தின் மர்ம முடிச்சை அவிழுங்கள் Posted: 10 Aug 2014 11:29 AM PDT இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தி இந்திய சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்து பல சர்ச்சைகள் நிலவி வருகின்றன. இவர் தைவான் நாட்டில் 18-8-1945 அன்று ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், ஒரு |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |