மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நிலக்கரி சுரங்க ஊழல்: மன்மோகன்சிங் உத்தரவிட்ட 48 ஒதுக்கீடுகளில் முறைகேடு
- பாரதீய ஜனதா ஊர்வலத்தில் தடியடி: போலீஸ் மீது கல்வீச்சு
- காஷ்மீரில் 2 இடத்தில் என்கவுண்டர்: 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
- டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி பிப்ரவரி வரை நீடிப்பு: மத்திய அரசு முடிவு
- ஆந்திர வளர்ச்சிக்கு நிதி: நரேந்திர மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
- சிங்கப்பூரைப் போல் தெலுங்கானாவை உயர்த்துவேன்: சந்திரசேகர் ராவ் சபதம்
- மணிப்பூரில் ரூ.8 கோடி மதிப்புள்ள கொக்கெய்ன் பிடிபட்டது
- 1500 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தை நிறைவு செய்த பெண்கள் குழு டெல்லி வந்தடைந்தது
- விசா இல்லாமல் இந்தியாவுக்குள் ஊடுருவல்: வங்காள தேசத்தை சேர்ந்த 33 பேர் சிக்கினர்
- கள்ளத்தனமாக ஆஸ்திரேலியாவுக்கு ஆள் கடத்தும் கும்பல் ஆந்திராவில் பிடிபட்டது
- ஆதார் அட்டை கிடைக்காத விரக்தியில் 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- மகாராஷ்ட்டிராவில் இன்று முதல் தொடங்கவிருந்த பெட்ரோல் பங்க் ஸ்டிரைக் வாபஸ்
- கங்கையில் மூழ்கி ராஜஸ்தானை சேர்ந்த 3 சகோதரர்கள் சாவு
- குஜராத் இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
- வெல்டிங் செய்த போது டேங்கர் லாரி தீப்பிடித்து இருவர் பலி
- தசரா திருநாளையொட்டி சிம்லாவில் சர்வதேச கொலு திருவிழா
- ரெயில் பாதையில் கிடக்கும் பிணங்களை மீட்க சிறுவர்களை கட்டாயப்படுத்திய காவல்துறை
- ரெயில்வே வாரிய லஞ்ச வழக்கில் செப்டம்பர் 15-ல் விசாரணை ஆரம்பம்
- இடைத்தேர்தலில் காங். கூட்டணி 10 தொகுதிகளில் வெற்றி: பா.ஜனதாவுக்கு பின்னடைவு
- ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள்: முன்பதிவு தொடங்கியது
| நிலக்கரி சுரங்க ஊழல்: மன்மோகன்சிங் உத்தரவிட்ட 48 ஒதுக்கீடுகளில் முறைகேடு Posted: 25 Aug 2014 11:27 PM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளில் நடந்த முறைகேட்டில் அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கடந்த 2012–ம் ஆண்டு கணக்கு தணிக்கை தகவல் வெளியிட்டது. இதையடுத்து இந்த முறைகேடுகள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. 194 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதற்கிடையே காமன்காஸ் என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் 218 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளது. அவற்றின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. |
| பாரதீய ஜனதா ஊர்வலத்தில் தடியடி: போலீஸ் மீது கல்வீச்சு Posted: 25 Aug 2014 10:42 PM PDT கேரளாவில் சமீபத்தில் ஏராளமான பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி வழங்கியது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தகுதி இல்லாத பள்ளிக்கூடங்களுக்கு கூட பிளஸ்-2 வகுப்பு தொடங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் பாரதீய ஜனதா குற்றம் சாட்டி உள்ளது. |
| காஷ்மீரில் 2 இடத்தில் என்கவுண்டர்: 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 25 Aug 2014 10:39 PM PDT காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் படை அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய படைகளின் கவனத்தை திசை திருப்பி விட்டு குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவினார்கள். இதையடுத்து அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. |
| டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி பிப்ரவரி வரை நீடிப்பு: மத்திய அரசு முடிவு Posted: 25 Aug 2014 09:41 PM PDT டெல்லியில் முதல்–மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால பதவி ஏற்ற 49 நாட்களில் ராஜினாமா செய்தார். இதனால் கடந்த பிப்ரவரி மாதம் அங்கு ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டு சட்டசபை செயல்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதே போல் |
| ஆந்திர வளர்ச்சிக்கு நிதி: நரேந்திர மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு Posted: 25 Aug 2014 09:36 PM PDT ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு ஒருநாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். ஏறத்தாழ 1½ மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. ஆந்திர மாநிலத்தில் தற்போது உள்ள பொருளாதார தேக்க நிலையை அவர் பிரதமரிடம் விளக்கினார். மாநில பிரிவினையின் போது ஆந்திர வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்றும், தொழில் |
| சிங்கப்பூரைப் போல் தெலுங்கானாவை உயர்த்துவேன்: சந்திரசேகர் ராவ் சபதம் Posted: 25 Aug 2014 01:54 PM PDT ஆந்திராவில் இருந்து பிரித்து, புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தை சிங்கப்பூருக்கு நிகராக உருவாக்கப் போவதாக அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார். சிங்கப்பூரில் ஒரு வாரம் சுற்றுப்பயணம் செய்துவிட்டு நாடு திரும்பிய சந்திரசேகர் ராவ், 'பல்வேறு இன்னல்களை கடந்து மிகச்சிறிய நாடான |
| மணிப்பூரில் ரூ.8 கோடி மதிப்புள்ள கொக்கெய்ன் பிடிபட்டது Posted: 25 Aug 2014 01:37 PM PDT மணிப்பூரில் இருந்து கொல்கத்தாவுக்கு கடத்த முயன்ற 1.5 கிலோ கொக்கைய்னை போதைப்பொருள் விற்பனை தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் விற்பனை தடுப்பு அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, மணிப்பூர் மாநிலம், சுராசந்த்பூர் நகரில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டதில் 1.5 கிலோ எடையுள்ள கொக்கெய்ன் பறிமுதல் |
| 1500 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தை நிறைவு செய்த பெண்கள் குழு டெல்லி வந்தடைந்தது Posted: 25 Aug 2014 01:30 PM PDT இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் பாவனா மெஹ்ரா தலைமையில் 9 பெண் விமானப்படையினர் கொண்ட குழு கடந்த மாதம் 13-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பத்தான்கோட் மாவட்டத்தில் இருந்து இமய மலை அடிவாரத்தின் வழியாக 1500 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் சைக்கிள் பேரணியை தொடங்கினர். |
| விசா இல்லாமல் இந்தியாவுக்குள் ஊடுருவல்: வங்காள தேசத்தை சேர்ந்த 33 பேர் சிக்கினர் Posted: 25 Aug 2014 01:11 PM PDT குடியுரிமை இல்லாமல் இந்தியாவுக்குள் ஊடுருவி கூலித் தொழிலாலிகளாக வேலை செய்து வந்த 33 பேர் ரெயில்வே போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் விசா போன்ற உரிய அனுமதியின்றி இந்தியாவுக்குள் ஊடுருவி, பெங்களூரை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகின்றது. |
| கள்ளத்தனமாக ஆஸ்திரேலியாவுக்கு ஆள் கடத்தும் கும்பல் ஆந்திராவில் பிடிபட்டது Posted: 25 Aug 2014 12:43 PM PDT குடியுரிமை அதிகாரிகளிடம் விசா பெறாமல் கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு சென்று, அங்கே வேலை தேடிக் கொண்டு வாழ நினைக்கும் நபர்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றனர். கடலின் ஆர்ப்பரிக்கும் பேரலைகளுக்கு இடையில் கள்ளத்தோணியில் பயணம், சரக்குப் பெட்டகத்தில் (கண்டெய்னர்) நாள் கணக்கில் அடைபட்டு |
| ஆதார் அட்டை கிடைக்காத விரக்தியில் 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை Posted: 25 Aug 2014 12:19 PM PDT ஆதார் அட்டை பெற தகுதியில்லாதவனாக ஆகி விட்டோமே.. என்ற விரக்தியில் 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உள்ளூர்வாசிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தை உள்ள திகுவா கோலாபட் கிராமத்தை சேர்ந்தவன், கொர்ரா பாலகிருஷ்ணா(11). அதே மாவட்டத்தில் |
| மகாராஷ்ட்டிராவில் இன்று முதல் தொடங்கவிருந்த பெட்ரோல் பங்க் ஸ்டிரைக் வாபஸ் Posted: 25 Aug 2014 12:05 PM PDT உள்ளூர் வரிகள் மற்றும் வாட் வரியை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மகாராஷ்ட்டிர மாநிலத்தில் உள்ள பெரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று (26-ம் தேதி) நள்ளிரவு முதல் காலவரையற்ற ஸ்டிரைக் நடத்துவதாக அறிவித்திருந்தனர். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையில் தற்போது அம்மாநிலத்தில் ஆட்சி நடத்தி வரும் கூட்டணி அரசு, இந்த ஸ்டிரைக் |
| கங்கையில் மூழ்கி ராஜஸ்தானை சேர்ந்த 3 சகோதரர்கள் சாவு Posted: 25 Aug 2014 11:47 AM PDT உத்தரப்பிரதேசம் மாநிலம், படவுன் மாவட்டத்தின் கச்லா கட் பகுதியில் நேற்று கங்கையாற்றில் குளித்துக் கொண்டிருந்த 3 சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழ்ந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சகோதரர்களான ராஜு(36), வினோத்(30), சுனில்(25) ஆகியோர் கங்கையாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, நீரின் ஓட்டத்தால் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு, மூச்சுத்திணறி |
| குஜராத் இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு Posted: 25 Aug 2014 11:21 AM PDT குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்த வதோதரா பாராளுமன்ற தொகுதி, மற்றும் அவர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்த பவாநகர் தொகுதி உள்ளிட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. |
| வெல்டிங் செய்த போது டேங்கர் லாரி தீப்பிடித்து இருவர் பலி Posted: 25 Aug 2014 10:39 AM PDT உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் மாவட்டம், கவிநகர் பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே ஒரு பெட்ரோல் டேங்கர் லாரியில் ஏற்பட்டிருந்த ஓட்டைகளை சில தொழிலாளிகள் இன்று வெல்டிங் மூலம் பற்றவைத்துக் கொண்டிருந்தனர். |
| தசரா திருநாளையொட்டி சிம்லாவில் சர்வதேச கொலு திருவிழா Posted: 25 Aug 2014 10:31 AM PDT தசரா பண்டிகையையொட்டி சிம்லாவில் சர்வதேச கொலு திருவிழாவை நடத்த இமாச்சலப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. வரும் அக்டோபர் 3 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் இந்த கொலு திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினருடன் அம்மாநில முதல் மந்திரி வீரபத்ர சிங் இன்று ஆலோசனை நடத்தினார். |
| ரெயில் பாதையில் கிடக்கும் பிணங்களை மீட்க சிறுவர்களை கட்டாயப்படுத்திய காவல்துறை Posted: 25 Aug 2014 08:43 AM PDT ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள ரெயில் பாதைகளில், விபத்தில் சிக்கி இறந்து கிடக்கும் நபர்களின் உடல்களை மீட்கும் பணியில் வீடற்ற இரண்டு சிறுவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களை கட்டாக் ரெயில்வே காவல்துறை கட்டாயப்படுத்தி அந்த பணியில் ஈடுபடுத்தி வருவதாக புகார் எழுந்தது. |
| ரெயில்வே வாரிய லஞ்ச வழக்கில் செப்டம்பர் 15-ல் விசாரணை ஆரம்பம் Posted: 25 Aug 2014 08:07 AM PDT ரெயில்வே வாரிய உறுப்பினர் பதவியை பெற்றுத் தருவதற்காக ரூ.10 கோடி லஞ்சம் கேட்ட வழக்கில் முன்னாள் ரெயில்வே மந்திரியின் மருமகன் விஜய் சிங்லா மற்றும் ரெயில்வே வாரிய உறுப்பினர் மகேஷ் குமார் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர். இதுதவிர இடைத்தரகர் உள்ளிட்ட 8 மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. |
| இடைத்தேர்தலில் காங். கூட்டணி 10 தொகுதிகளில் வெற்றி: பா.ஜனதாவுக்கு பின்னடைவு Posted: 25 Aug 2014 07:40 AM PDT மக்களவைத் தேர்தல் முடிந்து 3 மாதம் ஆன நிலையில் பீகார் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில் கடநத 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பா.ஜனதா 7 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம் ஒரு தொகுதியிலும் வென்றது. குறிப்பாக பீகாரில் தேர்தல் நடைபெற்ற 10 தொகுதிகளில் 4 இடங்களை மட்டுமே பா.ஜனதா பிடித்தது. 6 தொகுதிகள் ராஷ்டிரிய ஜனதா-ஐக்கிய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி வசம் |
| ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள்: முன்பதிவு தொடங்கியது Posted: 25 Aug 2014 06:56 AM PDT ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் எர்ணாகுளம் மற்றும் நாகர்கோவிலுக்கு தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. எர்ணாகுளத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செப்டம்பர் 4-ம்தேதி மற்றும் 11-ம் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதேபோல் செப்டம்பர் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |