மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அரியானாவில் சட்டசபை தேர்தலை சந்திக்க காங். தீவிரம்
- எல்லையில் தொடர்ந்து அத்துமீறல்: 25 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல்-இந்தியா பதிலடி
- கேரளாவில் கனமழைக்கு 7 பேர் பலி
- விஜயவாடாவில் மாணவிகளை நிர்வாண படம் எடுத்த கும்பல் கைது
- திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்: தரிசனத்துக்கு 28 மணி நேரம் காத்திருப்பு
- கள்ளக்காதலியுடன் ஓட்டலில் ஜாலியாக இருந்த கணவரை போலீசில் போட்டுக்கொடுத்த கவுன்சிலர்
- மகாராஷ்ட்டிரா கவர்னரை மிசோரத்துக்கு மாற்றி ஜனாதிபதி உத்தரவு
- பாகிஸ்தான் உளவாளிக்கு உதவிய இந்திய ராணுவ வீரர் கைது
- சாரதா நிதி நிறுவனம் மீது நடவடிக்கை பாயாமல் இருக்க இடைத்தரகராக செயல்பட்டவர் கைது
- விபத்து ஏற்படுத்தியவர்களை பந்தாடிய வீரமங்கைக்கு உ.பி.அரசு ரூ. 1 லட்சம் பரிசு
- பள்ளியில் ஆடையை அவிழ்த்து தண்டித்ததால் 12 வயது மாணவி தற்கொலை
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர் கைது
- இந்திய நிலைகளின் மீது இன்றும் பாகிஸ்தான் படைகள் மீண்டும் தாக்குதல்
- இரும்பு கூட்டில் இருந்து இரும்பு மங்கையை விடுவியுங்கள்: இரோம் ஷர்மிளாவை விடுவிக்க மணல் சிற்பம்
- இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் தோண்டிய ரகசியச் சுரங்கம் கண்டுபிடிப்பு
- ராமர் கோவிலை மறுசீரமைக்க பிரதமருக்கு சுப்ரமணியன் சாமி கடிதம்
- ராஞ்சியில் நாளை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பந்த்
- பீகாரில் அரசுத் திட்டங்களை நிதிஷ் குமார் தொடங்கி வைப்பதா?: முதல்வரிடம் பா.ஜனதா புகார்
- அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒரு வருடத்திற்குள் கழிவறை: ம.பி. முதல்வர் அறிவிப்பு
- எல்லையில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு திறம்பட பதிலடி கொடுக்கிறது இந்தியா: ஜெட்லி தகவல்
| அரியானாவில் சட்டசபை தேர்தலை சந்திக்க காங். தீவிரம் Posted: 23 Aug 2014 11:05 PM PDT அரியானாவில் சட்டசபை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது. அரியானா மாநிலத்தில் முதல்–மந்திரி புபிந்தர்சிங் ஹோடா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபையின் பதவிகாலம் முடிவடைய இருப்பதால் சட்டசபைக்கு தேர்தல் வருகிறது. |
| எல்லையில் தொடர்ந்து அத்துமீறல்: 25 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல்-இந்தியா பதிலடி Posted: 23 Aug 2014 10:51 PM PDT இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 2003–ம் ஆண்டில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் 2003–ம் ஆண்டு முதலே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவருகிறது. காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நிலை கொண்டுள்ள இந்திய ராணுவத்தை குறிவைத்து தாக்கி வருகிறது. இந்திய வீரர்கள் பதிலடி |
| கேரளாவில் கனமழைக்கு 7 பேர் பலி Posted: 23 Aug 2014 10:35 PM PDT கேரளாவில் இந்த ஆண்டு ஜூன் மாதம் பருவமழை தாமதமாக தொடங்கியது. மேலும் ஜூன், ஜூலை மாதங்களில் பருவமழை போதுமான அளவுக்கு பெய்யவில்லை. இதனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கைவிட்டு விடுமோ? என்ற நிலை காணப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் பிறந்தது முதல் கேரள மாநிலத்தில் கனமழை பெய்யத் தொடங்கியது. கடந்த 3 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு நேற்று |
| விஜயவாடாவில் மாணவிகளை நிர்வாண படம் எடுத்த கும்பல் கைது Posted: 23 Aug 2014 10:19 PM PDT விஜயவாடாவில் மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி நிர்வாண படம் எடுத்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். கைதான சாய்ராம், தீபக், அபிலேஸ்குமார், சேக் முன்னா மற்றும் மைனர் இளைஞர் ஆகியோரிடம் 10–க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. |
| திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்: தரிசனத்துக்கு 28 மணி நேரம் காத்திருப்பு Posted: 23 Aug 2014 10:13 PM PDT திருப்பதியில் நேற்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாலை முதல் மாலை 6 மணி வரை 48,216 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதன்பிறகும் வைகுண்டம் நியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட் மெண்டுகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன. தர்ம தரிசனத்துக்கு 28 மணி நேரம் |
| கள்ளக்காதலியுடன் ஓட்டலில் ஜாலியாக இருந்த கணவரை போலீசில் போட்டுக்கொடுத்த கவுன்சிலர் Posted: 23 Aug 2014 02:41 PM PDT உத்தரப்பிரதேசம் மாநிலம், பத்தேபூர் மாவட்ட ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினராக பதவி வகிப்பவர், சுதா பட்டேல். பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இவரது நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்த கணவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தகுந்த சமயத்தை எதிர்நோக்கி காத்திருந்த சுதாவுக்கு அவரது கணவர் வேறொரு பெண்ணுடன் அடிக்கடி ஓட்டலில் அறை எடுத்து தங்கி வருவது தெரிய வந்தது. |
| மகாராஷ்ட்டிரா கவர்னரை மிசோரத்துக்கு மாற்றி ஜனாதிபதி உத்தரவு Posted: 23 Aug 2014 02:29 PM PDT மத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான அரசு அமைந்தபின், முந்தைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட மாநில கவர்னர்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள். மேற்குவங்காள மாநில கவர்னர் எம்.கே.நாராயணன், நாகலாந்து கவர்னர் அஸ்வின்குமார், உத்தரப்பிரதேச மாநில கவர்னர் பி.எல்.ஜோஷி, சத்தீஸ்கர் கவர்னர் சேகர் தத், புதுச்சேரி கவர்னர் வீரேந்திர கடாரியா, மிசோரம் |
| பாகிஸ்தான் உளவாளிக்கு உதவிய இந்திய ராணுவ வீரர் கைது Posted: 23 Aug 2014 02:02 PM PDT உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட்டில் உள்ள டெல்லி கேட் பகுதி அருகே பாகிஸ்தான் உளவுத்துறைக்கு சில ரகசிய தகவல்களை அனுப்பும் ஏஜெண்டாக செயல்பட்டு வந்த ஆசிப் அலி என்பவனை கடந்த 16-ம் தேதி சிறப்புப் படை போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் மூலமாக ராணுவ ரகசியங்களை உளவறிந்து பாகிஸ்தான் உளவு அமைப்பான 'ஐ.எஸ்.ஐ.'க்கு அனுப்பி வந்தது தெரிய வந்தது. |
| சாரதா நிதி நிறுவனம் மீது நடவடிக்கை பாயாமல் இருக்க இடைத்தரகராக செயல்பட்டவர் கைது Posted: 23 Aug 2014 12:59 PM PDT மேற்கு வங்காளத்தை மையமாக வைத்து சாரதா சிட்பண்ட் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் சுதிப்தா சென் இவரும், இவரின் நிறுவனத்தை சேர்ந்தவர்களும், முதலீட்டாளர்களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. சலுகைககள், பரிசுப் பொருட்கள் அளிப்பதாக, பொதுமக்களிடம் சீட்டு பணம் வசூல் செய்து, மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. |
| விபத்து ஏற்படுத்தியவர்களை பந்தாடிய வீரமங்கைக்கு உ.பி.அரசு ரூ. 1 லட்சம் பரிசு Posted: 23 Aug 2014 12:44 PM PDT உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் அருகேயுள்ள ஷதாப்தி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் மமதா யாதவ், கடந்த செவ்வாய்க்கிழமை தனது கணவருடன் கச்சேர்புல் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த ஒரு கார் அந்த வாகனத்தை இடித்து தள்ளியதில் காரில் வந்த இருவருக்கும் மமதாவின் கணவருக்கும் |
| பள்ளியில் ஆடையை அவிழ்த்து தண்டித்ததால் 12 வயது மாணவி தற்கொலை Posted: 23 Aug 2014 12:24 PM PDT உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூரை அடுத்துள்ள நசிபாபாத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவியின் புத்தகப் பையில் செல்போன் இருப்பதை கண்டுபிடித்த வகுப்பாசிரியர், அந்த மானவியின் ஆடைகளை அவிழ்த்து சுமார் 2 மணி நேரம் அப்படியே நிற்க வைத்து தண்டித்துள்ளார். |
| ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர் கைது Posted: 23 Aug 2014 11:32 AM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் உடல்நிலை பாதிப்புக்காக சிட்டெர்குல் கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை பெற வந்தார். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றப்பட்டிருந்த வேளையில் இன்று அந்த இளம்பெண்ணை |
| இந்திய நிலைகளின் மீது இன்றும் பாகிஸ்தான் படைகள் மீண்டும் தாக்குதல் Posted: 23 Aug 2014 11:11 AM PDT காஷ்மீரில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி இந்தியாவை சீண்டி வருகிறது. இந்தியாவுடன் பாகிஸ்தான் மறைமுக போரில் ஈடுபட வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்தார். அதன் பிறகும் பாகிஸ்தான் அத்துமீறல் நீடித்து வருகிறது. |
| இரும்பு கூட்டில் இருந்து இரும்பு மங்கையை விடுவியுங்கள்: இரோம் ஷர்மிளாவை விடுவிக்க மணல் சிற்பம் Posted: 23 Aug 2014 10:33 AM PDT மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் அருகில் உள்ள ஒரு கிராமத்திற்குள் கடந்த 2-11-2000 அன்று புகுந்த அசாம் ஆயுதப்படை பிரிவினர் அப்பாவி மக்கள் 10 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த அநியாய பலிக்கு காரணமான மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இரோம் சானு ஷர்மிளா என்ற இளம்பெண் 4-11-2000 அன்று |
| இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் தோண்டிய ரகசியச் சுரங்கம் கண்டுபிடிப்பு Posted: 23 Aug 2014 10:05 AM PDT இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதி அருகே இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் தோண்டிய ரகசியச் சுரங்கத்தை இந்திய பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். ஜம்முவில் உள்ள பள்ளன்வாலா பகுதியில் இரு நாடுகளுக்கிடையிலான எல்லையோரம் உள்ள சக்லா காவல்சாவடி அருகே நேற்று வழக்கம்போல் இந்திய பாதுகாப்பு படையினர் ரோந்து சென்ற போது, அப்பகுதி தரையில் மண் சற்று உள்வாங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. |
| ராமர் கோவிலை மறுசீரமைக்க பிரதமருக்கு சுப்ரமணியன் சாமி கடிதம் Posted: 23 Aug 2014 09:59 AM PDT பாரதீய ஜனதா கட்சி தேர்தல் வாக்குறுதியில் அளித்தப்படி 2016-ஆம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோவிலை மீண்டும் மறுசீரமைப்பதற்கான திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த 1991-ல் நிதி மந்திரி அருண் ஜெட்லியின் வீட்டில் வைத்து |
| ராஞ்சியில் நாளை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பந்த் Posted: 23 Aug 2014 09:12 AM PDT ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். விழாவில் ஜார்க்கண்ட் முதல்–மந்திரி ஹேமந்த் சோரன் பேசும்போது, கூட்டத்தில் இருந்த ஒரு பகுதியினர் மோடி வாழ்க என்ற கோஷங்களை எழுப்பி அவரை பேச விடாமல் கிண்டல் செய்து தடுத்தனர். |
| பீகாரில் அரசுத் திட்டங்களை நிதிஷ் குமார் தொடங்கி வைப்பதா?: முதல்வரிடம் பா.ஜனதா புகார் Posted: 23 Aug 2014 08:17 AM PDT பீகாரில் அரசுத் திட்டங்களை முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் தொடங்கி வைப்பதாக பா.ஜனதா புகார் அளித்துள்ளது. இதுதொடர்பாக பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி முதல்வர் ஜித்தன் ராம் மன்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அரசு திட்டங்களை முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் தொடங்கி வைப்பது முதல்வர் அலுவலகத்தை இழிவுபடுத்தும் செயல். இது ஜனநாயக மாண்புகள் மீது நம்பிக்கை இழக்கச் செய்வதுடன், முதல்வர் மற்றும் பொதுமக்களை அவமதிப்பதாகும். அவர் தனது செயலை நிறுத்த வேண்டும். |
| அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒரு வருடத்திற்குள் கழிவறை: ம.பி. முதல்வர் அறிவிப்பு Posted: 23 Aug 2014 07:58 AM PDT சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, அனைத்து பள்ளிகளுக்கும் கழிவறை கட்டித் தரப்படும் என்று அறிவித்தார். இதற்காக நிதி உதவி செய்யும்படி பெரிய நிறுவனங்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பை பா.ஜனதா ஆளும் மத்திய பிரதேசத்தில் நடைமுறைப்படுத்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நடவடிக்கை எடுத்துள்ளார். |
| எல்லையில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு திறம்பட பதிலடி கொடுக்கிறது இந்தியா: ஜெட்லி தகவல் Posted: 23 Aug 2014 07:27 AM PDT போர்நிறுத்தத்தை மீறி இதுவரை சர்வதேச எல்லையில் கடுமையான துப்பாக்கி சூடு நடத்தி வந்த பாகிஸ்தான் ராணுவம், இப்போது இந்திய எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் எல்லையோர கிராமங்களை குறிவைத்து தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் எல்லைப் பாதுகாப்பு படையினரின் 22 நிலைகள் மீது நேற்று இரவு கடுமையான தாக்குதல் நடத்தினர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |