Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கவர்னர் விருந்து: எதிரும் புதிருமாக அமர்ந்திருந்த ஆந்திரா, தெலுங்கானா முதல்-மந்திரிகள்

Posted: 15 Aug 2014 11:08 PM PDT

ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலத்துக்கும் ஒரே கவர்னராக நரசிம்மன் இருந்து வருகிறார். சுதந்திர தின விழாவையொட்டி இரு மாநில முதல்–மந்திரிகளுக்கும் ஐதராபாத்தில் உள்ள தனது மாளிகையில் தேனீர் விருந்து அளித்தார். இதில் ஆந்திர முதல்– மந்திரி சந்திரபாபுநாயு, தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் உள்பட இரு மாநில நீதிபதிகள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். கடந்த சில நாட்களாக சந்திரபாபுநாயுடுவும், சந்திர

காளஹஸ்தி கோவிலில் உண்டியல் காணிக்கையை திருடிய வாலிபர் கைது

Posted: 15 Aug 2014 10:56 PM PDT

சுதந்திர தினவிழா விடுமுறையையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்ததால், நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த வாலிபர் ஒருவர், கோவில் வளாகத்தில் இருந்த ஒரு உண்டியலில் கையை விட்டு காணிக்கையை திருடி கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த கோவில் காவலாளி ஒருவர், அதனை பார்த்து விட்டு விரைந்து சென்று அவரை கையும் களவுமாக பிடித்து ஸ்ரீகாளஹஸ்தி டவுன் போலீசில் ஒப்படைத்தார். அவரிடம் விசாரித்தபோது அவர், நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரியை சேர்ந்த சதீஷ் (வயது 30) என தெரிய வந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.16 ஆயிரத்து 480–யை பறிமுதல் செய்தனர்.

தூங்கிய குழந்தை அருகே நின்ற சிறுத்தையை கொள்ளிக்கட்டையை வீசி விரட்டிய பெற்றோர்

Posted: 15 Aug 2014 10:37 PM PDT

கேரள மாநிலம் மூளியாறு அணை பகுதியில் உள்ள மலை கிராமத்தில் ஏராளமான ஆதிவாசிகள் வசித்து வருகிறார்கள். இங்கு வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் ஆதிவாசி மக்கள் இங்கு தைரியமாக குடியிருந்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜன்–ஷைலா என்ற ஆதிவாசி தம்பதியின் வீட்டுக்குள் ஒரு சிறுத்தைப்புலி புகுந்து விட்டது. வீட்டில் ராஜனும் அவரது மனைவி ஷைலா மற்றும் 3 குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணியளவில் குடிசைக்கு வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதில், கண் விழித்த ராஜன், குடிசைக்குள் தூங்கிக் கொண்டிருந்த

அனைவரையும் கவர்ந்த பிரதமர் மோடி: விருந்தினர்களை சந்தித்து கைகுலுக்கினார்

Posted: 15 Aug 2014 10:36 PM PDT

சுதந்திர தினவிழாவையொட்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை விருந்து நிகழ்ச்சி நடந்தது. அதில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பா.ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி, ஜனாதிபதியின் மனைவி சூர்வா, மகள் ஷாரிமிஸ்தா, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி அருண் ஜெட்லி, முன்னாள் மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் ஆகியோர் அழைக்கப்பட்டு இருந்தனர்.

தேர்தலில் போட்டியிட குற்றவாளிகளுக்கு தடை: புதிய சட்டம் வருகிறது

Posted: 15 Aug 2014 10:32 PM PDT

பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலில் ஈடுபடும் நிலை முன்பு சமூக சேவகர்களிடம் காணப்பட்டது. அந்த நிலை தற்போது மாறி, பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் மட்டுமே அரசியலில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக சமூக நல அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. நாடெங்கும் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கையும் இதை

சுதந்திர விழாவில் இனிப்பு சாப்பிட்ட 47 டாக்டர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 15 Aug 2014 10:25 PM PDT

இந்தியாவின் 68-வது சுதந்திர விழா நேற்று நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையிலும், மாநில முதல் மந்திரிகள் தங்களது தலைமைச் செயலகங்களிலும் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்றினர்.

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: தரிசனத்துக்கு 30 மணி நேரம் ஆகிறது

Posted: 15 Aug 2014 10:23 PM PDT

தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று முன்தினம் மாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வாகனங்கள், பாதயாத்திரையாகவும் பஸ்களிலும் திருமலைக்கு வருகின்றனர். நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. நேற்று மாலை 4 மணி முதல் இலவச தரிசனத்துக்கான வைகுண்ட மையத்தில் உள்ள 31 அறைகள் நிரம்பி சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் தரிசனத்துக்கு 30 மணி நேரம் ஆகனது.

உத்தரகாண்ட்-இமாசல பிரதேசத்தில் பலத்த மழைக்கு 25 பேர் பலி

Posted: 15 Aug 2014 10:20 PM PDT

இமயமலையில் உள்ள உத்தரகாண்ட் – இமாசல பிரதேச மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பிதோராகார், பாவுரி, டேராடூன் மாவட்டங்களில் மழை இடைவிடாமல் பெய்து வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். டேராடூனில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 120 மி.மீ மழை பெய்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ரிஸ்பானா, பிண்டல், ஜகான் நதிகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. ரிஷிகேசில் ஓடும் கங்கை நதியில் அபாய அளவான 340 மீட்டர் உயரத்தில் பாதி அளவுக்கு வெள்ளம்

திருப்பதியில் வியாபாரியின் 7 மாத ஆண் குழந்தை கடத்தல்

Posted: 15 Aug 2014 10:09 PM PDT

திருப்பதியை அடுத்த மங்கலம் பி.டி.ஆர்.காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜுலு. இவர், திருமலையில் வியாபாரம் செய்து வருகிறார். 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை அவர் தனது சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். இவரின் மனைவி சுஜாதா. அவர்களுக்கு 7 மாதத்தில் சைதன்யா என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 13–ந்தேதி சுஜாதா தனது கணவரை பார்ப்பதற்காக

மே.வங்கத்தில் ஜப்பான் மூளையழற்சி நோய் பலி எண்ணிக்கை 221 ஆக உயர்ந்தது

Posted: 15 Aug 2014 09:45 PM PDT

மூளையழற்சி மற்றும் 'ஜப்பான் மூளையழற்சி' எனப்படும் புதிய வகை நோய்க்கு மேற்கு வங்காளம் மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 221 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் மூளையழற்சி என்ற ஜப்பான் மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு நேற்று மேலும் ஒருவர் பலியானார்.

மெட்ரோ ரெயில்களில் இலவச சவாரி: சுதந்திரத்தின் பலனை அனுபவித்த டெல்லிவாசிகள்

Posted: 15 Aug 2014 09:37 PM PDT

இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆகியும் சுதந்திரத்தின் முழுப்பலனும் நாட்டில் உள்ள ஏழை, எளியவர்களை சென்றடையவில்லை என்ற நெடுநாளைய ஏக்கம் மக்களின் உள்ளங்களை விட்டு நீங்கவில்லை. இந்த ஏக்கத்தினை டெல்லிவாசிகள் நேற்று ஓரளவுக்கு தீர்த்துக் கொண்டனர். சுதந்திர திருநாளையொட்டி டெல்லி செங்கோட்டையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியினை ஏற்றி வைக்கும் காட்சியை

நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவை எதிர்த்து வழக்கு: நாரிமன் அறிவிப்பு

Posted: 15 Aug 2014 08:09 PM PDT

சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் தற்போதைய 'கொலிஜிய முறை' ஒழிக்கப்படுகிறது. நீதிபதிகள் நியமன ஆணையம் அமைத்து அதன்மூலம் இனி நியமனங்களை செய்ய பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பிரபல சட்ட நிபுணர் பாலி நாரிமன் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கி உள்ளார்.

காஷ்மீர் சட்டசபை தேர்தல் தேசிய மாநாடு கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் உமர் அப்துல்லா

Posted: 15 Aug 2014 05:27 PM PDT

காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா நேற்று ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார். அங்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது விரைவில் காஷ்மீர் மாநில சட்டசபைக்கு நடக்கவிருக்கும் தேர்தலில், தான் தேசிய மாநாடு கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளராக போட்டியிடப்போவதாக அவர் சூசகமாக தெரிவித்தார்.

சுதந்திரதின விழாவில் பேசும்போது ஜார்கண்ட் கவர்னர் மயக்கம்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Posted: 15 Aug 2014 05:15 PM PDT

நாடு முழுவதும் நேற்று சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநில தலைநகரங்களில் நடந்த விழாவில் கவர்னர் மற்றும் முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். முதல்-மந்திரிகள் தேசிய கொடியேற்றி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தனர். சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு விருதுகளையும் வழங்கினர்.

சுதந்திர தினம்: பிரதமர் நரேந்திர மோடிக்கு நவாஸ்செரீப் வாழ்த்து

Posted: 15 Aug 2014 04:36 PM PDT

இந்திய சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் வாழ்த்து தெரிவித்தார். இந்திய மக்களுக்கு தமது சுதந்திரதின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் நடந்த பாகிஸ்தான் சுதந்திரதின விழாவுக்கு, பிரதமர் மோடி அந்த நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதற்கு முன்னதாக

பிரதமரின் சுதந்திர தின உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை: காங்கிரஸ் கருத்து

Posted: 15 Aug 2014 03:34 PM PDT

நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி வைத்து உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடியின் முதல் சுதந்திர தின உரை இதுவாகும். பிரதமரின் சுதந்திர தின உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என காங்கிரஸ் குறை கூறியுள்ளது.

நீதித்துறை செயல்பாடுகளில் அரசும், பாராளுமன்றமும் தலையிடக்கூடாது: தலைமை நீதிபதி பேச்சு

Posted: 15 Aug 2014 02:26 PM PDT

நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளின் நீதிபதிகள் நியமனத்தில், கடந்த 1993 முதல் பின்பற்றப்பட்டு வந்த 'கொலிஜியம்' முறைக்கு பதிலாக, நீதிபதிகள் நியமன ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவும், இதற்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்கும் வகையில் அரசியல் சட்ட 99–வது திருத்த மசோதாவும் நடந்து முடிந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் அலுவலகத்தில் சோனியா காந்தி தேசிய கொடி ஏற்றினார்

Posted: 15 Aug 2014 02:20 PM PDT

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கட்சியின் தலைவர் சோனியா காந்தி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், துணைத்தலைவர் ராகுல் காந்தி, ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், ஜனார்தன் திவிவேதி, ஷகீல் அகமது, அகமது பட்டேல் மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மோடியின் சுதந்திர தின பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு குவிந்தது

Posted: 15 Aug 2014 01:46 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 26-ந் தேதி பிரதமராக பதவி ஏற்றபின்னர், முதல்முறையாக டெல்லி செங்கோட்டையில் நேற்று நடந்த சுதந்திர தினவிழாவில் பங்கேற்று மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர் ஆற்றிய 65 நிமிட உரை, தயாரித்து வைத்து வாசித்த உரையாக இல்லாமல், நேரடியாக பேசுவதாக அமைந்தது.

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நாளை சிங்கப்பூர் பயணம்

Posted: 15 Aug 2014 01:30 PM PDT

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிங்கப்பூர் செல்கிறார். அவருடன் நிதி மந்திரி அமித் மித்ரா மற்றும் 11 உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் செல்கிறார்கள். தனது ஒரு வார சுற்றுப்பயணத்தின்போது, மேற்கு வங்காள மாநிலத்தில் முதலீடு செய்யுமாறு சிங்கப்பூர் தொழிலதிபர்களுக்கு, மம்தா பானர்ஜி அழைப்பு விடுக்கிறார். சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங்கையும் மம்தா சந்தித்து பேசுகிறார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™