மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நடிகை திருமண மோசடி புகார்: சதானந்த கவுடா மகனுக்கு பெங்களூர் போலீஸ் சம்மன்
- சத்தீஷ்கர் மாநிலத்தில் இடைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பா.ஜனதாவில் இணைந்தார்
- ஐ.எஸ்.ஐ.எஸ். படையில் சேரும் இந்தியர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி?
- ராஜஸ்தான் வழியாக ஊடுருவி இந்தியாவில் தற்கொலை தாக்குதலுக்கு பாக். தீவிரவாதிகள் சதி
- காஷ்மீர் பிரிவினைவாத கொரில்லாக்களுடனான மோதலில் ராணுவ வீரர் பலி
- உ.பி.யில் இடைத்தேர்தல்: சோனியா–ராகுல் பிரசாரம் இல்லை
- டைட்டானியம் ஊழல் வழக்கில் எந்த விசாரணைக்கும் தயார்: உம்மன்சாண்டி பேட்டி
- தமிழக-இலங்கை மீனவர்கள் கூட்டாக மீன் பிடிப்பது பற்றி ஆலோசனை
- பிரதமர் மோடி ஜப்பான் பயணமானார்
- விசாரணை கைதிகள் தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கெடு
- ஆபாச இணையதளங்களை தடை செய்யாதது ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
- பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த தயக்கம் இல்லை நரேந்திர மோடி பேட்டி
- கழிவறை வசதி செய்து தர மறுத்த கணவரை விவாகரத்து செய்த பெண்
- ரூ.20 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
- மத்திய மந்திரி நஜ்மா ஹெப்துல்லா கருத்தால் சர்ச்சை
- தூண் பூமிக்குள் திடீரென புதைந்ததால் காளஹஸ்தி கோவில் மண்டபம் சரிவு: பக்தர்கள் அதிர்ச்சி
- 2 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காஷ்மீர் பயணம்
- குவைத்தில் கைதான இந்தியர்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: வெளியுறவு அமைச்சகம்
- உ.பி.யில் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் இல்லை: அகிலேஷ் யாதவ்
- அரசியல் கட்சிகள் நிதியை வங்கியில்தான் டெபாசிட் செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு
| நடிகை திருமண மோசடி புகார்: சதானந்த கவுடா மகனுக்கு பெங்களூர் போலீஸ் சம்மன் Posted: 29 Aug 2014 11:22 PM PDT கன்னட நடிகை மைத்திரி, மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா மகன் கார்த்திக் கவுடா மீது திருமண மோசடி மற்றும் கற்பழிப்பு புகார் கொடுத்தார். தாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாகவும், கார்த்திக் தன்னை ரகசிய திருமணம் செய்து உல்லாசமாக இருந்ததாகவும் தற்போது என்னை கைவிட்டு வேறு பெண்ணை மணக்க முடிவு செய்து திருமண நிச்சியதார்த்தம் நடத்தி இருப்பதாகவும் புகாரில் |
| சத்தீஷ்கர் மாநிலத்தில் இடைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பா.ஜனதாவில் இணைந்தார் Posted: 29 Aug 2014 10:52 PM PDT சத்தீஷ்கர் மாநிலத்தில் அந்தாகாட் சட்டசபை தொகுதிக்கு வருகிற செப்டம்பர் மாதம் 13–ந் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இங்கு காங்கிரஸ் வேட்பாளராக மந்துராம் பவார் நிறுத்தப்பட்டு வேட்பு மனுவும் தாக்கல் செய்து இருந்தார். இந்த நிலையில் மந்துராம் பவார் நேற்று திடீர் என்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் பா.ஜனதாவில் இணைந்தார். |
| ஐ.எஸ்.ஐ.எஸ். படையில் சேரும் இந்தியர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி? Posted: 29 Aug 2014 10:46 PM PDT சிரியா மற்றும் ஈராக்கில் பேராதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். படையில் சேர்வதற்காக இந்தியாவின் கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு, மாகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்கள் அண்மையில் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தேசியப் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து புனிதப்பயணம் செல்வதாக ஈராக்கின் கர்பலா நகருக்கு |
| ராஜஸ்தான் வழியாக ஊடுருவி இந்தியாவில் தற்கொலை தாக்குதலுக்கு பாக். தீவிரவாதிகள் சதி Posted: 29 Aug 2014 10:42 PM PDT அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை தூண்டிவிட்டும் எல்லையில் தாக்குதல் நடத்தியும் சீண்டி வருகிறது. சமீபத்தில் எல்லையில் நடந்த தொடர் தாக்குதலை இந்திய வீரர்கள் முறியடித்து பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்தனர். மேலும் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் திட்டத்தையும் இந்திய வீரர்கள் தடுத்து விட்டனர். |
| காஷ்மீர் பிரிவினைவாத கொரில்லாக்களுடனான மோதலில் ராணுவ வீரர் பலி Posted: 29 Aug 2014 10:33 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள குப்வாரா மாவட்டத்தில் இயங்கிவரும் பிரிவினைவாதிகளின் கொரில்லா படைப்பிரிவுனருடன் இந்திய ராணுவத்தினர் மோதி வருகின்றனர். குப்வாரா மாவட்டத்தின் கேரா பகுதியில் எல்லைக்கோட்டின் அருகே பயங்கரமான ஆயுதங்களுடன் இந்திய ராணுவத்துடன் மோதி வரும் கொரில்லா படையினருடன் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் |
| உ.பி.யில் இடைத்தேர்தல்: சோனியா–ராகுல் பிரசாரம் இல்லை Posted: 29 Aug 2014 10:32 PM PDT உத்தரப்பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் சார்பில் பிரசாரம் செய்வோர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் சோனியா, ராகுல்காந்தி ஆகியோர் பெயர்கள் இடம் பெறவில்லை. இது காங்கிரசாரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. |
| டைட்டானியம் ஊழல் வழக்கில் எந்த விசாரணைக்கும் தயார்: உம்மன்சாண்டி பேட்டி Posted: 29 Aug 2014 10:21 PM PDT கேரளாவில் கடந்த 2003–ம் ஆண்டு உம்மன் சாண்டி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது, திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் டைட்டானியம் ஆலையில் நவீன சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கப்பட்டன. இதில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக ஆலையின் முன்னாள் ஊழியர் ஜெயன் ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். |
| தமிழக-இலங்கை மீனவர்கள் கூட்டாக மீன் பிடிப்பது பற்றி ஆலோசனை Posted: 29 Aug 2014 08:54 PM PDT இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது பின்னர் இந்திய அரசின் நடவடிக்கையை தொடர்ந்து விடுவிக்கப்படுவது என்ற அன்றாட செயல்கள் நீடித்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என்றும் இலங்கை பிடியில் உள்ள படகுகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத் |
| பிரதமர் மோடி ஜப்பான் பயணமானார் Posted: 29 Aug 2014 08:32 PM PDT தெற்காசிய கண்டத்தை விட்டு பிற கண்டத்துக்கு முதன்முறையாக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசு முறைப்பயணமாக இன்று ஜப்பான் புறப்பட்டு சென்றார். இந்த பயணம் தொடர்பாக புறப்படுவதற்கு முன்னதாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, 'எனது நல்ல நண்பரான ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-வின் அழைப்பையேற்று இந்தியா-ஜப்பான் இடையிலான வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் ஆவலாக உள்ளேன். |
| விசாரணை கைதிகள் தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கெடு Posted: 29 Aug 2014 05:29 PM PDT மனித உரிமைகளுக்கான போராடும் அமைப்பின் சார்பில், ஜிதேந்திர ஜெயின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் அவர், 'சத்தீஷ்கார், மத்தியபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற நக்சலைட் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான மலைவாழ் பழங்குடியினர் உரிய விசாரணையின்றி விசாரணை கைதிகளாக மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். பல சம்பவங்களில் அவர்கள் எதற்காக கைது செய்யப்படுகிறார்கள் என்பதுகூட |
| ஆபாச இணையதளங்களை தடை செய்யாதது ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் Posted: 29 Aug 2014 04:29 PM PDT மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை சேர்ந்த வக்கீல் கம்லேஷ் வஸ்வானி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கில் அவர், "நமது நாட்டில் ஆபாச வீடியோ காட்சிகளை பார்ப்பது சட்டப்படி குற்றம் அல்ல. ஆனாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு ஆபாச இணையதளங்களும் ஒரு காரணம்தான். |
| பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த தயக்கம் இல்லை நரேந்திர மோடி பேட்டி Posted: 29 Aug 2014 03:59 PM PDT 5 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்கிறார். இதையொட்டி நேற்று அவர் டெல்லியில் ஜப்பான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், இந்தியா–பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் இடையே கடந்த 25–ந் தேதி நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. (பேச்சுவார்த்தைக்கு முன்னதாக காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் டெல்லியில் உள்ள |
| கழிவறை வசதி செய்து தர மறுத்த கணவரை விவாகரத்து செய்த பெண் Posted: 29 Aug 2014 03:38 PM PDT சத்தீஷ்கார் மாநிலம் ஜான்கீர்-சம்பா மாவட்டத்தில் உள்ள கோட்மி என்ற கிராமத்தை சேர்ந்த பார்வதி சிங் (வயது 23) என்ற பெண்ணுக்கும் துலர் சிங் என்பவருக்கும் ஒரு வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. அப்போது துலர் சிங்கின் பெற்றோரிடம், அவர்களுடைய வீட்டில் தனக்கு கழிவறை வசதி செய்து தருமாறு பார்வதி ஒரு நிபந்தனை விதித்தார். ஆனால் திருமணம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் அவர்கள் கழிவறை வசதியை செய்து தரவில்லை. இதன் காரணமாக பார்வதிக்கும் அவரது |
| ரூ.20 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல் Posted: 29 Aug 2014 02:20 PM PDT கொள்முதல் கவுன்சில் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. ராணுவ தளவாடங்களின் இறக்குமதியை குறைத்து, உள்நாட்டில் அவற்றின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து இருந்தார். அதற்கு ஏற்ப இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. |
| மத்திய மந்திரி நஜ்மா ஹெப்துல்லா கருத்தால் சர்ச்சை Posted: 29 Aug 2014 01:42 PM PDT பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசில் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரியாக இருப்பவர் நஜ்மா ஹெப்துல்லா. இவர், "எல்லா இந்தியர்களும் இந்துக்கள்தான்" என அர்த்தம் தொனிக்கும் வகையில் ஒரு பேட்டியில் கூறியதாக தகவல் வெளியானது. இது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், "இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள் என அழைக்கப்படவேண்டும்" என கூறியதை ஆமோதிக்கிற வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெரும் சர்ச்சை எழுந்தது. |
| தூண் பூமிக்குள் திடீரென புதைந்ததால் காளஹஸ்தி கோவில் மண்டபம் சரிவு: பக்தர்கள் அதிர்ச்சி Posted: 29 Aug 2014 01:21 PM PDT ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் உள்ளது. இது கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட 400 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, புகழ்பெற்ற கோவிலாகும். இங்கு ஆந்திர மாநில பக்தர்கள் மட்டுமின்றி தமிழக எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால் ஏராளமான தமிழக பக்தர்களும் சென்று வழிபடுவது வழக்கம். இந்த கோவிலில் அஷ்டோதரலிங்கம் என்ற பிரதான மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தை 6 தூண்கள் தாங்கி பிடித்த வண்ணம் அமைக்கப்பட்டு |
| 2 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காஷ்மீர் பயணம் Posted: 29 Aug 2014 01:13 PM PDT காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 'ஜம்மு பல்கலைக் கழகத்தின்' 14–வது பட்டமளிப்பு விழா வருகிற செப்டம்பர் 1–ந் தேதி நடக்க இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2 நாள் பயணமாக காஷ்மீர் மாநிலத்துக்கு 1–ந் தேதி செல்கிறார். மேலும், அவர் செப்டம்பர் 2–ந் தேதி அங்குள்ள வைஷ்ணவ தேவி குகை கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். |
| குவைத்தில் கைதான இந்தியர்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: வெளியுறவு அமைச்சகம் Posted: 29 Aug 2014 11:14 AM PDT குவைத்தில் இந்திய தொழிலாளர்களுக்கும். எகிப்து தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 எகிப்தியர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 25 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதலில் காயம் அடைந்த இந்தியர்கள் 15 பேர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலை அடுத்து இந்திய தொழிலாளர்கள் |
| உ.பி.யில் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் இல்லை: அகிலேஷ் யாதவ் Posted: 29 Aug 2014 10:32 AM PDT உத்தரபிரதேசத்தில் நிலவி வரும் சிறிய அளவிலான பிரச்சனைகளை கூட பா.ஜ.க. மிகப்பெரிய பிரச்சனைகளாக பூதாகாரமாக்கி விடுகிறது. இங்கு பிரச்சனைகளை உருவாக்குபவர்களை மாநில அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஆகவே உ.பியில் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் தற்போது இல்லை என அம்மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். |
| அரசியல் கட்சிகள் நிதியை வங்கியில்தான் டெபாசிட் செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு Posted: 29 Aug 2014 10:14 AM PDT அரசியல் கட்சிகளின் நிதி செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை வளர்க்கும் வகையில், அரசியல் கட்சிகளின் நிதி வங்கியில் டெபாசிட் செய்யப்படுவதை கட்டாயமாக்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகளின் நிதி மற்றும் செலவினங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த அரசியலமைப்பு சட்டம் (தேர்தல் கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டல்) சரத்து 324-ன்படி இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |