ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தூங்குவதை விட அதிக நேரம் டி.வி, மொபைல் போனில் பொழுதை கழிக்கும் மக்கள்
- சில பயனுள்ள தகவல்கள்
- அழகாய் இருக்கிறேன்.. பொறாமையாய் இருக்கிறது!
- பச்சடி வகை சமையல் குறிப்புகள்
- ஆவியில் வேகவைத்த உணவு வகைகள்
- வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது?
- சல்மான் கானின் கிக் 200 கோடியை கடந்து சாதனை!
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- உலகச் செய்திகள்!
- ஜான்ஸிராணியின் இயற் பெயர் என்ன? - பொது அறிவு கேள்விகள்
- தமிழகத்தில் எபோலா நோய் பாதிப்பு இல்லை: அரசு விளக்கம்
- பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?
- இந்தியாவே சொர்க்கம்
- கின்னஸ் புத்தகம் எந்த ஆண்டில் முதலில் வெளியாயிற்று? - பொது அறிவு கேள்விகள்
- கலையுலக இமயம் சிவாஜி கணேசன்
- SHARE MARKET
- பல் டாக்டரை பார்க்க போனேன்
- ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி
- லீவு வாங்க பொய் சொல்வது எப்படி..?!
- மாப்பிள்ளை, நீங்கள் பத்திரமாக உங்களை பார்த்துக்கோங்கோ "
- பிடித்த மதம்
- ருத்ராட்சம்
- கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான் - விடுகதைகள்
- மனிதன் உயர்வதெப்போது?
- இன்றைய சிந்தனைத் துளிகள்
- சாண்டில்யனின் நாவல்கள் கிடைக்குமா ?
- இந்த வார சினிமா துளிகள்!
- விஷால் நடிக்கும் ஆம்பள!
- பாக்யராஜ் படத்தில் அரசியல் நய்யாண்டி!
- தாய்மொழியில் கால்பதிக்கும் லட்சுமி மேனன்!
- பொது -கலாச்சாரம்-பண்டாடு
- லோக்சபாவில் அமைச்சர் பேச்சு...
| தூங்குவதை விட அதிக நேரம் டி.வி, மொபைல் போனில் பொழுதை கழிக்கும் மக்கள் Posted: 10 Aug 2014 03:21 PM PDT லண்டன்இன்றைய நவீன யுகத்தில் மக்கள் தூங்குவதை விட அதிகமான நேரத்தை டிவி பார்ப்பதற்கும், மொபைல் போனிலும் கழிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் அந்நாட்டு மக்கள் பொதுவாக அதிக நேரத்தை டிவி, மொபைல், டேப்லட் ஆகியவற்றில் கழிக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. சாதாரணமாக, ஒரு இங்கிலாந்து சிறுவன் இது போன்ற நடவடிக்கைகளில் 11 மணி நேரம் 7 நிமிடத்தை கழிக்கிறான். கடந்த 2010ல் ஆய்வு செய்த போது இது 8 மணிநேரம் 48 நிமிடங்களாக இருந்தது. தற்போது இது அதிகரித்துள்ளது. இங்கிலாந்து வாசிகளில் ... |
| Posted: 10 Aug 2014 03:16 PM PDT தெரிந்து கொள்ள வேண்டிய சில பயனுள்ள தகவல்கள் 1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கைநடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" ...யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள். 2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/பார்க்கவும். 3. விசேஷ வைபவங்களில் ... |
| அழகாய் இருக்கிறேன்.. பொறாமையாய் இருக்கிறது! Posted: 10 Aug 2014 03:14 PM PDT குழந்தைகளை ஸ்கூல்ல இருந்து அழைச்சுட்டு வீட்டுக்குள்ள நுழையும்போதே என் முகத்துல அப்படி ஒரு சந்தோஷம். என் எதிர்பார்ப்பை வீணாக்காம, ''என்ன இவ்வளவு சந்தோஷம்?''னு என் கணவர் கேட்கவும் கேட்டுட்டார். ''இன்னிக்கு ஸ்கூல்ல என் ஃப்ரெண்ட் லட்சுமிய ரொம்ப நாள் கழிச்சு பார்த்தேன். என்னைப் பார்த்த உடனே என்ன சொன்னா தெரியுமா? நான் குஷ்பு மாதிரி இருக்கேனாம்!''னேன். அதுக்கு அவர் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிச்சார் பாருங்க.. பொசுபொசுனு கோவம் வந்துடுச்சு எனக்கு. ''என்ன.. என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு?''னு கேட்டேன். ''அவ ... |
| Posted: 10 Aug 2014 03:10 PM PDT தக்காளி - தேங்காய் பச்சடி தேவையானவை: புளிக்காத தயிர் - 1 கப், தேங்காய் துருவல் - அரை கப், தக்காளி (நல்ல சிகப்பு நிறம்) - 2, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறு துண்டு, உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன். செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து தயிருடன் ஒன்றாகக் கலந்து, எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து சேருங்கள். விருப்பமுள்ளவர்கள், மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். ... |
| Posted: 10 Aug 2014 02:48 PM PDT முளைகட்டிய பச்சைப்பயறு டோக்ளா தேவையானவை: முளைகட்டிய பச்சைப்பயறு - ஒரு கப், பச்சை மிளகாய் - 2 (விழுதாக்கவும்), இஞ்சி - ஒரு சிறிய துண்டு (விழுதாக்கவும்), ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, சர்க்கரை நீர் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு. தாளிக்க: எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2. அலங்கரிக்க: நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட், தேங்காய்த் துருவல் - தலா ஒரு டீஸ்பூன். செய்முறை: முளைகட்டிய பச்சைப்பயறு, ... |
| வாஜ்பாய், சுபாஷ் சந்திர போஸிற்கு பாரத ரத்னா விருது? Posted: 10 Aug 2014 02:26 PM PDT இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு வழங்கப்படலாமென தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசு பாரத ரத்னா பதக்கங்கள் தயாரிக்கும் பிரிவிடம், 5 பதக்கங்கள் செய்து தருமாறு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், 5 பாரத ரத்னா பதக்கங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதால், ஐந்து பேருக்கு விருது அளிக்கப்படும் என அர்த்தம் இல்லை எனக் குறிப்பிட்டார். முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா ... |
| சல்மான் கானின் கிக் 200 கோடியை கடந்து சாதனை! Posted: 10 Aug 2014 02:19 PM PDT சல்மான் கான் நடிப்பில் வெளியான கிக் 11 தினங்களில் 200 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது. சல்மான் கானின் முந்தைய படமான ஜெய்ஹோ 117 கோடி அளவுக்கே இந்தியாவில் வசூல் செய்தது. அதன் காரணமாக அதுவொரு தோல்விப் படமென சல்மான் கானால் அறிவிக்கப்பட்டது. ஆனால் கிக் நல்ல வசூலை பெற்றுள்ளது. சென்ற மாதம் 25 -ம் தேதி வெளியான படம் 11 தினங்களில் (ஆக.04) இந்திய திரையரங்குகளின் மூலம் 200 கோடியை தாண்டி வசூலித்தது. உலகளாவிய வசூல் கிட்டத்தட்ட 270 கோடிகள். அமீர்கானின் தூம் 3 படமே குறைந்த தினங்களில் 200 கோடியை ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 10 Aug 2014 02:17 PM PDT ![]() |
| Posted: 10 Aug 2014 02:17 PM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| ஜான்ஸிராணியின் இயற் பெயர் என்ன? - பொது அறிவு கேள்விகள் Posted: 10 Aug 2014 02:12 PM PDT 1) கவிஞர் கண்ணதாசனுக்கு 'சேரமான் காதலி' நூலுக்கு கிடைத்த விருது எது? - 2) புகழ் பெற்ற சுசீந்திரம் கோயில் எங்குள்ளது? - 3) காந்தி படத்துக்கு இசையமைத்தவர் யார்? - 4) ராமகுண்டம் அணுமின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது? - 5) மகாபாரத போர் எத்தனை நாட்கள் நடைபெற்றது? - 6) ரவிசங்கர் எந்த கருவியை இசைப்பதில் பிரபலமானவர் ? - 7) எப்பறவையின் சேவல் முறையாக அடைகாத்து குஞ்சு பொறிக்கும்? - 8) ஜான்ஸிராணியின் இயற் பெயர் என்ன? - 9) ஜான்சிராணி ஆண்வாரிசாக தத்தெடுத்துக்கொண்ட சிறுவனின் பெயர் ... |
| தமிழகத்தில் எபோலா நோய் பாதிப்பு இல்லை: அரசு விளக்கம் Posted: 10 Aug 2014 02:06 PM PDT சென்னை: தமிழகத்தில் எபோலா நோயின் பாதிப்பு இல்லை என்று தமிழக அரசின் சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் எபோலா அறிகுறிகளுடன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேனி மாவட்ட வாலிபர் பார்த்திபனும் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரை 21 நாட்களுக்கு கண்காணிக்குமாறு தேனி அரசு மருத்துவமனைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பார்த்திபன் தேனி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். சரிவர தடுப்பு மற்றும் நோய் குணமாக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நோயான எபோலா உலகையே அச்சுறுத்தி ... |
| பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ? Posted: 10 Aug 2014 11:37 AM PDT கீதை 15 : 13 எனது சக்தியால் பூமியையும் அதில் உயிர் வாழ்பவைகளையும் நானே தாங்கிக்கொண்டுள்ளேன் . மேலும் சந்திரனின் ஒளியால் பூமியில் மன நலம் தரும் மருந்தாகிய ரசத்தை வழங்குகிறேன் . மேலும் ஆத்மாக்களின் மனதினுள் நுழைந்து நானே செம்மையும் படுத்துகிறேன் . கீதை 15 : 14 பூமியில் வாழ்கிறவைகளின் உடலுக்குள் ஜீரணிக்கும் நெருப்பாக நானே நிலைபெற்று உட்சுவாசம் மற்றும் வெளிசுவாச காற்றை சமப்படுத்தி நான்கு விதமான உணவுகளையும் செரிக்கச்செய்கிறேன் . கீதை 15 : 15 எல்லோருடைய இதயத்திலும் மனமாக நானே வீற்றுள்ளேன் . அவர்களுக்கு ... |
| Posted: 10 Aug 2014 11:27 AM PDT ஒரு அமெரிக்க நாட்டவர் உலக கோவில்களை அறிந்துகொள்ள சுற்றுப்பயணம் கிளம்பினான். முதலில் சீனாவில் உள்ள ஒரு ஆலயத்திற்கு சென்று அதனை பற்றி தெரிந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பும்போது ஒரு தங்க தொலைபேசியை கண்டன். அதனருகில் 1 கால் 10000 டாலர் என்று எழுதி இருந்தது. அந்த கோவில் ப்ரீஸ்ட் இடம் இதை பற்றி கேட்டான். அதற்கு அவர் இது சொர்கத்திற்கு நேரடி தொடர்புள்ள போன். அதனால் அந்த ரேட் என்றார். அடுத்ததாக அவன் ஜப்பான் சென்றான். அங்கும் அவன் ஒரு ஆலயத்திற்கு சென்றான். ஆலயத்திற்கு சென்று அதனை ... |
| கின்னஸ் புத்தகம் எந்த ஆண்டில் முதலில் வெளியாயிற்று? - பொது அறிவு கேள்விகள் Posted: 10 Aug 2014 11:23 AM PDT - 1) முகம்மது நபிகள் பிறந்த இடம் எது? - 2) மனிதகுல ரட்சகர் - என்றழைக்கப்பட்ட முகலாய மன்னர் யார் ? - 3) நடிகர் திலகம் சிவா|ஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்த திரைப்படம் எது? - 4) கின்னஸ் புத்தகம் எந்த ஆண்டில் முதலில் வெளியாயிற்று? - 5) உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது எது? - 6) லெனின் விருது பெற்ற இந்தியர் யார்? - 7) மலரின் எந்த பகுதி விதையாகிறது? - 8) குருபகவான் தந்தை யார்? - 9) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எங்குள்ளது? - 10) சோமாலியா இத்தாலியிடம் இருந்து எப்போது ... |
| Posted: 10 Aug 2014 09:47 AM PDT இயற் பெயர்: விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் பிறப்பு: அக்டோபர் 1 1927 தமிழ்நாடு, சீர்காழி, இந்தியா இறப்பு: ஜூலை 21 2001 (வயது 74) சென்னை தாய்: ராஜாமணி அம்மாள் தந்தை: சின்னையா மன்றாயர் துணைவியார்: கமலா அம்மாள் குழந்தைகள்: சாந்தி, தேன்மொழி, ராம்குமார், பிரபு. அண்ணன்: ... |
| Posted: 10 Aug 2014 09:29 AM PDT ஷேர் மார்க்கெட் புக்ஸ் லிங்க் ஷேர் செய்யவும் ப்ளீஸ் ... |
| Posted: 10 Aug 2014 07:46 AM PDT காலையிலே செம கடுப்பு , பல் டாக்டரை பார்க்க போனேன் , அங்க லேடி டாக்டர் இருந்தாங்க திரும்பி வந்துட்டேன். ஏன் என்றால் நாம் எந்த பொண்ணுகிட்டயும் #பல்லை காட்டி நிற்க கூடாது !!! பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான். "தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான். "சொல்லுங்க அங்கிள் ... தெரிஞ்சிக்கிறேன்" "தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க ..." "ம்ம்ம்ம்" "முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்" "ம்ம்ம்" "இரண்டாவது ... |
| ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Posted: 10 Aug 2014 07:10 AM PDT ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில் ரமணி 01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம் (இணைக்குறள் ஆசிரியப்பா) எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம் தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு. நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும் நகையென மின்னும் தகைசால் தெய்வீகத் துறவி ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே. மராட்டிய மாநில மூதூர் ஒன்றில் விராட்டுரு முனியின் வீதியோர முகாம். யானைமேல் அமர்ந்து நாலுபேர் சாலைவழிப் போவதைப் பார்த்தார் பெரியவர். அவர்களை உடனே அழைத்து உசாவினார்: இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ? நாங்கள் ... |
| லீவு வாங்க பொய் சொல்வது எப்படி..?! Posted: 10 Aug 2014 06:53 AM PDT * முதலாளிக்கு வந்த எஸ்.எம்.எஸ். - நான் இன்றைக்கு ஆபிஸ் வரமாட்டேன். நான் சரியா வேலை செய்யலைன்னு, வேலையை விட்டுத் துரத்தினாரே… அந்த பழைய முதலாளியை அடி பின்ன போறேன்! - ------------------- |
| மாப்பிள்ளை, நீங்கள் பத்திரமாக உங்களை பார்த்துக்கோங்கோ " Posted: 10 Aug 2014 06:10 AM PDT - வடநாட்டவர் திருமணப்படி விதாயி என்ற ஒரு முறை உண்டு. அதன் படி பெண்கள் வீட்டை விட்டு அனுப்பும் போது மிகவும் உணர்ச்சிபூர்வமாக எல்லாரும் அழுவதை பல படங்களில் பார்த்து இருப்போம். விஷாகா வின் தம்பி திருமண வீடியோ சீடீ எடுத்து வந்து காட்டினாள். அதில் அந்த விதாயி சமயத்தில் ஒரே உணர்சிமயமாய எல்லாரும் அழுதுகொண்டு இருந்த போது என் கணவர் மதிய உணவு அருந்த வீட்டுக்கு வந்து இருந்தார். விஷாகா அந்த காட்சியை பார்த்து சோகமாக இருப்பதை பார்த்து விட்டு என் கணவர் சொல்கிறார். "விஷாகா , எங்கள் கல்யாணத்தின் ... |
| Posted: 10 Aug 2014 04:41 AM PDT பிடித்த மதம் மதுரையில் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு சொற்பொழிவாற்ற கவிஞர்கண்ணதாசன் அழைக்கப்பட்டிருந்தார். விழா அரங்கு முழுவதும் மாணவர்கள். குறித்த நேரத்தில் கவியரசர் வரவில்லை. மாணவர்கள் விசிலடித்து சப்தம் போட ஆரம்பித்தனர். ஒரு வழியாய் ஒரு மணி நேர தாமதத்தில் வந்து சேர்ந்தார் கவிஞர். கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தியபோது கூட மாணவர்களிடையே சலசலப்பு குறையவில்லை. பின் கண்ணதாசன் பேச ஆரம்பித்தார்,''ஒரு சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமும்,சிலருக்குகிறிஸ்துவ மதமும் பிடிக்கும். ... |
| Posted: 10 Aug 2014 04:09 AM PDT |
| கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான் - விடுகதைகள் Posted: 10 Aug 2014 12:02 AM PDT 1) கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? 1) வெங்காயம்2) தோடம்பழம்3) கரும்பு4) தேசிக்காய் - 2) உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன? 1) நீர்2) இளநீர்3) கடல்4) மாம்பழம் - 3) வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ அது என்ன? 1) ரோஜாபூ2) மல்லிகைப்பூ3) பூ4) சிரிப்பு - 4) எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன? 1) மீன்2) சிலந்தி3) நண்டு4) வாத்து - 5) ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல ... |
| Posted: 09 Aug 2014 09:50 PM PDT ----- ஆசையால் - தெரிந்தே நம் கைவிட்டு உருண்டோடுகின்றன நாணயமின்றி நாணயங்கள்! பேராசையால் - தொலைவிலிருந்து எள்ளி நகைக்கிறது - நம் கை தவறிய வாய்ப்புகள்! அலட்சியம் மனதில் சிம்மாசனமிட்டதால் கைக்கு எட்டி, வாய்க்கு எட்டாத கதையாய் நீளுகின்றன ஏமாந்த பொழுதுகள்! வறட்டு கவுரவத்திற்காக விலக்கி வைத்ததில் விளங்கியதும், விளங்காததும் சேர்ந்து தொலைந்து போயின! பெருமைக்காக தோள் குலுக்கி ஒதுக்கியதில் அவசியங்களுடன், அத்தியாவசியங்களும் தொலைந்து போனதால் மருக வைத்தன இழப்பின் வலிகள்! மூட ... |
| Posted: 09 Aug 2014 09:38 PM PDT இன்றைய சிந்தனைத் துளிகள் உண்மைக்காக எதையும் இழக்கலாமே ஒழிய,எதற்காகவும் உண்மையை இழக்கக்கூடாது. இன்பங்கள் சேர்ந்து வருவதில்லை, துன்பங்கள் தனியாகவும் வருவதில்லை. ஒரு பொய்யை உண்மையாக்க பல பொய்கள் சொல்ல வேண்டி வரும். அறிவும், ஆராய்ச்சியும் எல்லையற்றவை. எத்தனை கற்றாலும், அனுபவம் மட்டுமே அறிவைத்தரும் |
| சாண்டில்யனின் நாவல்கள் கிடைக்குமா ? Posted: 09 Aug 2014 09:30 PM PDT sandilyan kadal pura,kannimadam noolgal kidaikkuma |
| Posted: 09 Aug 2014 06:28 PM PDT - - - * நண்பேன்டா படப்பிடிப்பிற்கு, நயன்தாரா தாமதமாக வந்தாலும், அவருக்காக காத்திருந்து படப்பிடிப்பு நடத்துகிறார் உதயநிதி. - ----------------------------------- |
| Posted: 09 Aug 2014 06:24 PM PDT - தாமிரபரணி படத்தை தொடர்ந்து, ஹரி இயக்கும், பூஜை படத்தில் தற்போது நடித்துக் கொண்டிக்கிறார் விஷால். இப்படத்தை, சிங்கம் படத்துக்கு இணையாக, இயக்குகிறார் ஹரி. கோவை மண்வாசனை கதையில் உருவாகும் இப்படத்தை அடுத்து, சுந்தர்.சி இயக்கும், ஆம்பள படத்தில் நடிக்கிறார் விஷால். இதே தலைப்பில், இருபது ஆண்டுகளுக்கு முன், டாக்டர் ராஜசேகர் ஒரு படத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த, ஆம்பள பழைய, ஆம்பள படத்தை விடவும் அதிரடியான கதையில் உருவாகிறது. அத்துடன், முதன் முறையாக முறுக்கு மீசை ... |
| பாக்யராஜ் படத்தில் அரசியல் நய்யாண்டி! Posted: 09 Aug 2014 06:23 PM PDT - - --- தற்போது, துணை முதல்வர் என்ற படத்துக்கு, கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி நடித்து வருகிறார் பாக்யராஜ். - இப்படம், இன்றைய அரசியலையும், அரசியல்வாதிகளையும் நய்யாண்டி செய்யும் வகையில் தயாராகி உள்ளது. - அதே சமயம், தன் வழக்கமான குடும்ப சமாசாரங்களையும் விட்டு விடக்கூடாது என்பதற்காக, மலையாள நடிகை ஸ்வேதா மேனனை, தன் மனைவி வேடத்தில் நடிக்க வைத்து, 'கிளுகிளு'ப்பு காட்சிகளையும் புகுத்தியிருக்கிறாராம் - -------------------------------------- — சினிமா பொன்னையா. |
| தாய்மொழியில் கால்பதிக்கும் லட்சுமி மேனன்! Posted: 09 Aug 2014 06:22 PM PDT - - தாய்மொழியில் கால்பதிக்கும் லட்சுமி மேனன்! மலையாளத்தில் இரண்டு படங்களில் சிறிய வேடங்களில் நடித்த பின், தமிழுக்கு வந்தவர் லட்சுமி மேனன். அந்த வகையில், கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் மஞ்சப்பை என்று வரிசையாக வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவருக்கு, தன் தாய் மொழியான மலையாளத்திலும் காலூன்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், தற்போது திலீப்புடன், அவதாரம் என்ற படத்தில் வெயிட்டான ரோலில் நடித்துள்ள லட்சுமி மேனன், அப்படம் தனக்கு வெற்றிப்படமாக அமைந்தால், ... |
| Posted: 09 Aug 2014 05:49 PM PDT தொலைகாட்சியில் செய்தி மற்றும் நிகழ்சிகளில் பங்கு கொள்பவர்களும் பொதுஇடங்களுக்கு செல்லும் பெண்களும் இந்திய மற்றும் தமிழர் பண்பாடு ( சேலை ) உடைகளை அணிந்து செல்வது சிறப்புதானே? இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களைப்பற்றி... |
| லோக்சபாவில் அமைச்சர் பேச்சு... Posted: 09 Aug 2014 05:30 PM PDT பெண்களுக்கு எதிரான குற்றங்கள்பற்றி லோக்சபாவில் தெலுங்கு தேசம் எம்.பி.எம்.முரளிமோகன் பெண்களை மதித்து போற்றும் இந்திய பாரம்பரியத்தை நிலைநிருத்த நாகரிகமான முறையில் ஆடை அணியவேண்டும் என்று கூறியதற்கு எதிர்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையைப்பற்றி ... கருத்து.... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
